ஒரு சிறப்புப் பயணம்...
திருமலையானை தரிசித்து, வேண்டுதல் நிறைவேற்ற,
திருமலை சென்று வர வண்டி ஏற்பாடு ஆகிவிட்டது.
மதிய உணவுக்கு உடன் வரும் நண்பரையும் அழைத்து
இனிய பயணம் ஆரம்பிக்க எண்ணியதால், சமையல்
வேலை கொஞ்சம் அதிகரிக்க, என்னுடைய வலக்கை
வேலை செய்யச் சகஜ நிலைக்கு வராததால், அன்றும்
'ஸொன்டி சுலோசனா'வாகவே வேலைகளை முடிக்க
வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்! இதனிடையில்,
அடுப்பை அணைக்க என் இடக்கையை உபயோகிக்க,
அடுப்பு அணையாமல் சின்னதாகிவிட, நிமிடங்களில்
பாசத்துடன் பாத்திரத்தோடு ஒட்டிக் கொண்டது, நான்
நேசத்துடன் சமைத்த வெஜிடபள் சாதம்! நல்ல வேளை
உடனே கவனித்து மாற்றியதால், ருசி கெடவில்லை.
உடனே பணம் தந்தேன், வண்டி ஓட்டி உணவகம் போக!
அவனின் பங்குதான் பாத்திரத்துக்கே போய்விட்டதே!
அவன் வந்தவுடன் ஆனந்தமாகப் பயணம் தொடங்கிட,
அந்த ஆனந்தம் நிலைத்தது, சில மணித் துளிகள்தான்!
வந்த புயல்கள் கொண்டு வந்து கொட்டிய மழையினால்,
சிங்காரச் சென்னை வீதிகள், சந்திரனின் குழிகள் போல
அங்கிங்கெனாதபடி எங்கும் பரவலாகக் கொண்டிருக்க,
திருப்பதி செல்லும் வரை இதே நிலைமை நீடித்திருக்க,
ஒரு நன்மை மட்டும் அதில் கண்டு கொண்டேன் நான்!
இந்த நிலைமையில் தெருக்கள் இருந்தால், ஓட்டுகிற
எந்த வண்டி ஓட்டியும் உறங்கிட மாட்டான் அல்லவா?
:car: தொடரும்..............