கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 111
விமானத்தில் கொடுத்த உணவில் பாதியே உண்டதால்
விமானத்தில் டின்னர் கிடைக்குமோ என்று ஏங்கினேன்!
விளக்குகளை அணைத்துவிட்டதாலே வந்தது சந்தேகம்;
விளக்குகள் பளீரெனப் போடப்பட்டன நட்ட நடு இரவில்!
மீண்டும் அதே பாணியில் ஆசிய சைவ உணவு! பசியாற
மீண்டும் அதே பாணியில் உண்டோம் கொஞ்சம் உணவு!
வீட்டில் ரொட்டியும் தயிரும் தயாராக இருக்கும்; தம்பி
வீட்டின் உபயமாக, சாப்பாட்டு மேஜைக்கே வந்துவிடும்!
சரியான சமயம் சிங்காரச் சென்னையில் இறங்கி, மிகச்
சரியாக பாதுகாப்பு, குடியேற்றச் சோதனைகள் முடித்து,
தயாராக இருந்த வாடகை வண்டிக்கு முன்பணம் கட்டி,
தயாள குணமுள்ள பணியாளன் பெட்டிகளை ஏற்றித்தர,
இனிய இல்லம் வந்து சேர்ந்தோம், ஊர் ஜனம் எல்லாம்,
இனிய இரவு கூறிவிட்டு, உறங்கிப் போயிருந்த நேரம்!
புண்ணியவாளன் ஒருவன் பின்கட்டுக் குழாயை எடுத்து,
தண்ணி அடிக்க விற்றுவிட்டதால், மேல் தொட்டி காலி!
இரு வாளிகள் நீர் நிரப்பி வைத்திருந்தாள் பணிப்பெண்;
இருவரும் முகம் கழுவி, தயிர் சாப்பிட்டு உறங்க முயல,
சிறிது நேரத்திலே பளீரென்று ஆதவன் உதித்து வந்திட,
சிறிய பிளாஸ்டிக் பையை குழாய் ஓட்டையில் அழுத்தி,
மேல் தொட்டியில் நீர் ஏற்றி, சோபாக்களைக் காத்திருந்த
மேல் விரிப்புக்களை துவைத்து, பெட்டிகளைச் சரிசெய்து,
குட்டிப் பரிசுகளை விநியோகிக்க எடுத்து வைத்து, கிச்சன்
பெட்டிகளில் நிரப்பப் பொருட்களை வாங்கி வைத்து, என
அன்றைய தினம் முழுதும் வேலை தொடர்ந்து இருந்தது;
என்றோ மழையில் கெட்டிருந்த தொலைபேசி இணைப்பு
அம்மா ஆட்சி மகிமையால் மாலை நேரத்தில் சரியானது!
சும்மா என் கைப்பேசி இருந்ததால், அந்த இணைப்பு அவுட்!
சிங்காரச் சென்னை வாழ்க்கைக்கு இது எல்லாமே ஜுஜுபி;
எங்களுக்குப் பழகிவிட்டது இந்த வாழ்க்கை முறை நன்று!
:ballchain:
தொடரும்.................