கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 102
பனிக் கட்டிகளை என் கைகளிலே எடுக்க ஆவல்;
இனிதே நிறைவேறிவிட்டது, சென்ற விஜயத்தில்!
இறுகிய பனிக் கட்டிகளை Rocky mountainsல் கண்டு,
இரு கைகளில் என்னவர் தந்திட, ஆசை ஈடேறியது!
நான் எதிர்நோக்கிய சனிக்கிழமை வந்துவிட்டது;
என் மனம் காலை எழுந்தவுடனே, குதூகலித்தது!
நான்கடுக்கு உடைகள் உடுத்தித் தயார் நிலையில்,
நன்கு சக்தியேற்றிய காமராவுடன் காத்திருந்தேன்.
இதோ! முதல் பனித் துளிகள் கொட்ட ஆரம்பித்தன!
அது ஆகாயத்திலிருந்து, தேவர்கள் பவுடர் எடுத்துக்
கொட்டுவதுபோல, மெல்லிய வெண் புள்ளிகளாய்;
கொட்டுவது தொடர்ந்தது, பஞ்சுத் துணுக்குகளாய்!
காத்திருந்த நேரம் வந்துவிட்டது; உடனே நான் எதிர்
பார்த்திருந்த பனிப்பொழிவில், நனையச் சென்றேன்!
உடைகள் மேல் வெண் துணுக்குப் பனிகள்; குளிரால்
உடைகள் மேல் அவை நின்றன, சில மணித் துளிகள்!
ஆசை தீர விடியோக்கள், போட்டோக்கள் எடுத்ததும்,
ஆசை தீர கைகளில் பனித் துளிகளைப் பிடித்தேன்!
கையுறைகள் இல்லாது வந்தததால், நிமிடங்களிலே,
கை விரல்கள் உணர்ச்சியே இன்றி மரத்துப் போயின!
சுடுநீர் வரவு எப்போதும் உள்ள ஊரானதால், உடனே
சுடுநீரில் கைகளை நனைத்து, உயிர் வரவைத்தேன்!
லடாக்கில் பனியிலே பணிபுரியும் ஜவான்கள் பலர்,
இடக்குப் பண்ணும் அதிகாரிகளால், தம் கைகளுக்கு
கையுறைகளே இல்லாது வேலை செய்து, அதனால்
கைவிரல்களை இழந்த சோகம், மனதிலே உதித்தது!
:smow: . . . :ballchain:
தொடரும் ...................