பயணக் க(வி)தைகள்...


கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 94

நால்வழிப் பாதைகள் இரு மருங்கும் அமைந்திருக்க,
நல்ல வேகத்தில் அந்த நெடுஞ்சாலையில் பயணம்.

கட்டணம் வசூலிக்கும் இடங்களில், இந்தத் தடவை
கட்டணம் டாலராகவே செலுத்த வேண்டும். E Z Pass

மகன் தன் காரில் வைத்துள்ளான். இந்த இடங்களில்,
அவன் ஓட்டுகிற படு வேகம் குறைந்துதான் போனது!

சில இடங்களிலே நான்கு வழிப் பாதைகள் இருந்தன;
சில இடங்களிலே இரு வழிப் பாதைகளாக இருந்தன.

சில இடங்களிலே போக்குவரத்து மிகக் குறைவுதான்;
சில இடங்களிலே வண்டிகள் அதிகமாகத் தெரிந்தன.

போக வர, வேறு வேறு பாதைகள் அமைத்துள்ளதால்,
போகும் வண்டிகளெல்லாம், போகும் ஒரே திசையில்!

ஒரு வேன் தன் இணைப்பிலே காரை ஏற்றிச் செல்ல,
அது ஒய்யாரமாக, பெட்ரோல் செலவின்றிச் சென்றது!

நான்கு மணி நேரப் பயணத்திலே, இரண்டு முறைகள்
நன்கு அமைந்த ஓய்விடங்களில் நிறுத்தினோம்; பின்

கட்டிடங்கள் வானுயரக் ண்களிலே பட்டு, நாங்கள்
எட்டினோம் நியூயார்க் நகரை என்பதை அறிவித்தன.

அழகிய 'டனல்' வழியாகப் பாதை சென்றது; மின்னும்
அழகிய விளக்குகள் ஒளி காட்ட, மனம் மயங்கியது!

மிகவும் பெரிய உலோகப் பாலம் ஆற்றின் மேலிருக்க,
மிகவும் மெதுவாக, வண்டிகள் அதன் மேல் ஊர்ந்தன.

:bump2: . தொடரும்......................


 
சில இடங்களிலே நான்கு வழிப் பாதைகள் இருந்தன...

DSCN7064.JPG
 
Last edited:
கட்டிடங்கள் வானுயரக் ண்களிலே பட்டு, நாங்கள்
எட்டினோம் நியூயார்க் நகரை என்பதை அறிவித்தன.

DSCN7087.JPG
 
பயணக் க(வி)தைகள் நன்றாக உள்ளது. Photos மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது ...வாழ்த்துக்கள்.
 

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, சண்முகம் சார்.

நான் குறிப்பிட்டதுபோல, சென்ற இரு முறைகளும் இலையுதிர் காலத்திற்கு முன்பே சென்னைக்குத் திரும்பியதால்,

இயற்கை அன்னையின் இந்தப் பரிமாணத்தின் அழகைக் காண இயலாது போனது! இந்த முறை மகன் - மருமகளின்

வேண்டுகோளால், எங்கள் விடுமுறையை அதிகரித்து, இந்தக் காலத்தின் வண்ணங்களைக் கண்டு, எண்ணங்களைப்
பதிக்க முடிகிறது. :typing:
 
அழகிய 'டனல்' வழியாகப் பாதை சென்றது; மின்னும்
அழகிய விளக்குகள் ஒளி காட்ட, மனம் மயங்கியது!

DSCN7078.JPG


Crossing the tunnel very fast... Tail lamps of cars are like arcs!

 
மிகவும் பெரிய உலோகப் பாலம் ஆற்றின் மேலிருக்க,
மிகவும் மெதுவாக, வண்டிகள் அதன் மேல் ஊர்ந்தன.

DSCN7090.JPG


 

ஒரு வேன் தன் இணைப்பிலே காரை ஏற்றிச் செல்ல,
அது ஒய்யாரமாக, பெட்ரோல் செலவின்றிச் சென்றது!

DSCN7089.JPG

 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 95

அழகான நெருக்கடி நகரைக் கடந்த பின்னர், சாலையில்
அழகாக இரு புறமும் அடர்ந்த மரங்கள் நிழலைத் தந்திட,

விரைவில் சூரியனும் ஓய்வுக்குச் சென்றுவிட, நாங்கள்
இரவில் சென்று சேர்ந்தோம், ஓர் அண்ணாவின் வீட்டை.

சூடான உணவைப் பரிமாறி, புன்முறுவலுடன் உபசரித்து,
மேலான தங்கள் அன்பை அவர்கள் நன்றாகக் காட்டினர்.

நடுநிசி வரை அரட்டைக் கச்சேரி; செய்திகள் பரிமாற்றம்;
நடு இரவில் நித்திரா தேவியின் கருணையை நாடினோம்.

மறு நாள் காலை உணவு முடித்து, அடுத்த அண்ணா வீடு;
ஒரு நாள் பொழுதில், அனைவரையும் காணவேண்டும்.

சென்ற முறை இந்த ஊருக்கு வந்தபோது, இரவு நேரமே;
சென்றோம் West Virginia நோக்கிய பயணம், மறு தினமே!

நேரக் குறைவினால் Liberty Bell பார்க்கச் செல்வதற்கு,
நேரம் கிடைக்கவில்லை; எனக்கோ மிகவும் ஏமாற்றம்.

இது பற்றிச் சொன்ன உடனே, ஆர்வத்துடன் புறப்பட்டு
அது உள்ள இடத்திற்கு அண்ணா அழைத்துச் சென்றார்.

நான் நினைத்த அளவுக்குப் பெரிதாக இல்லாவிடினும்,
நாம் அதிசயிக்கும் அளவிலே, கனமாக இருக்கின்றது.

அதை முதல் முறை அடித்தபோதே விரிசல் வந்ததாக
அதைப் பற்றிய செய்தி இருக்கின்றது. எடை 900 கிலோ!

சுற்றளவு பன்னிரண்டு அடி, விரிசல் ஒன்று நடுவிலே;
சுற்றி நிற்கும் எல்லோரும், ஒருவரின் பின் ஒருவராக

அந்த மணியின் முன்பு நின்று போஸ் கொடுக்கின்றார்;
அந்தப் போட்டோவைத் தம் ஆல்பத்தில் சேர்க்கின்றார்.

:photo: . தொடரும்...................
 
Last edited:
அழகாக இரு புறமும் அடர்ந்த மரங்கள் நிழலைத் தந்திட ....

DSCN7084.JPG

 
அதை முதல் முறை அடித்தபோதே விரிசல் வந்ததாக

அதைப் பற்றிய செய்தி இருக்கிறது. எடை 900 கிலோ!


சுற்றளவு பன்னிரண்டு அடி, விரிசல் ஒன்று நடுவில் .....

DSCN7145.JPG
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 96

அதன் உடையாத பகுதி வெளிச்சத்தில் தெரிந்து,
அதன் உயர்வான வார்ப்பைப் பறை சாற்றியது!

இந்த மணியின் உருவை வைத்த பொருட்களை,
இந்த நாட்டில் நிறைய விற்பனை செய்கின்றார்.

சாவி வளையம், கண்ணாடித் தட்டு இவற்றிலும்
மேவியுள்ளது இந்த சுதந்திர மணியின் உருவம்!

உயர்ந்த பல கட்டிடங்கள் அங்கு விரவி இருக்க,
சிறந்த சுற்றுலாத் தலமாக அவ்விடம் விளங்க,

அந்த இடத்தைப் பயணிகளுக்குச் சுற்றிக் காட்ட,
சொந்தமாகக் குதிரை வண்டிகள் வைத்திருக்கும்

பலர் உள்ளனர் அங்கு, தயார் நிலையில். சிறுவர்
சிலர், முதியோர் சிலர் உலா வந்தனர், அவற்றில்!

மதிய உணவு முடித்த பின், அடுத்தவர் வீட்டிற்குப்
புதிய தெம்புடன் செல்ல, குழுமிய எல்லோருமே

அன்புடன் உபசரித்துப் பரிசுகளை வழங்க, அந்த
அன்பிலே திக்குமுக்காடிப் போனோம் நாங்கள்!

அரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் ஓர் அண்ணா;
பெரிய ஆய்வுக் கூடத்தைச் சுற்றிக் காட்டினார்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர் உண்ண மாத்திரை,
சிறு கோலிகள் போல உருவாக்குகிறார், அங்கு.

செல்லப் பிராணிகளுக்காகவே வேறு மாத்திரை;
நல்ல வெற்றி அடைந்ததாகக் கூறி மகிழ்ந்தனர்.

:car: . தொடரும்...............

 
அதன் உடையாத பகுதி வெளிச்சத்தில் தெரிந்து,
அதன் உயர்வான வார்ப்பைப் பறை சாற்றியது!

(we can see the persons clicking photos in front of the Liberty bell...)

DSCN7153.JPG
 
இந்த மணியின் உருவை வைத்த பொருட்களை,
இந்த நாட்டில் நிறைய விற்பனை செய்கின்றார்.

DSCN7143.JPG

 
Last edited:
உயர்ந்த பல கட்டிடங்கள் அங்கு விரவி இருக்க...

(Horse carts can be spotted on the road..)

DSCN7157.JPG



 
சொந்தமாகக் குதிரை வண்டிகள் வைத்திருக்கும்

பலர் உள்ளனர் அங்கு, தயார் நிலையில்....

DSCN7154.JPG
 
சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர் உண்ண மாத்திரை,
சிறு கோலிகள் போல உருவாக்குகிறார், அங்கு.

kibow_biotics_lg.jpg
 

மருத்துவத் துறை ஆராய்ச்சியில் ஈடுபட்ட அண்ணாவின் மகனுக்கு, நவம்பர் முடிவில் திருவ
ந்தபுரத்தில்

திருமணம் விமரிசையாக நடக்க உள்ளது. ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி பற்றி, ஒரு பாடல் எழுதித் தருமாறு

என்னைப் பணித்தார் அந்த அண்ணா. சமீபத்தில் கிடைத்த பெரும் புதையல் பற்றிய விவரங்கள் அதில்

அடங்க வேண்டுமாம்! என் மனதில் உதித்த பாடலை அவருக்கு அனுப்பியிருக்கிறேன். அதை உங்களிடமும்

பகிர்ந்துகொள்ள ஆவல். இதோ பாடல்:


ஸ்ரீ அனந்தபத்மநாபஸ்வாமி பாடல் - Smt. Raji Ram


பல்லவி:

அனந்தபுரி வளர் | அனந்தா | அழகா ||

அனந்த சயனா | ஆனந்த | ரூபா ||

அனுபல்லவி:

அதிசயங்கள் பல | புரியும் | தேவா ||

அதிசய ஸ்ரீ அனந்த | பத்ம | நாபா ||

சரணங்கள்: (இரண்டாம் காலம்)

1.

கரு நிற அழகனாய் தரிசனம் தந்து |
அருள் தர அழகாய் | சயனம் கொண்டு ||
ஒரு நாள் நின் நிஜ தரிசனம் தந்து |
திரு மேனி கனகக் | கவசம் கொண்டு ||

2 .
ரகசியச் சுரங்க அறைகள் பற்பல |
அதிசய நிதிகளைக் | கொண்டிருக்க ||
ரகரகமான மணிகள் பற்பல |
தகதக ஒளியுடன் | அங்கிருக்க ||

3.
பொன்னும் மணியும் நவரத்தினங்களும் |
மின்னும் வரிசையில் | பரிமளிக்க ||
இன்னும் அருமைத் தங்கச் சிலைகளும் |
கண்ணும் கருத்துமாய்ச் | சேர்த்திருக்க ||

4.
தங்கப் பதக்கங்களும் தங்க மாலைகளும் |
தங்கக் காசுகளும் | தங்கக் கிரீடமும் ||
தங்க விஷ்ணுவும் மஹா விஷ்ணுவும் |
தங்க மயமாக | நிறைந்திருக்க ||

5.
தங்கச் சிலைகளாய் சிவனும் நாகமும் |
தங்கக் கிண்ணங்களும் | காசு மாலையும் ||
தங்கக் கிண்டியும் தனுசும் குடையும் |
தங்கத் தட்டும் | வரிசையில் நிற்க ||

6.
இந்த்ர நீலமும் பச்சை மரகதமும் |
எங்கும் காணாத | வைர மணிகளும் ||
மங்கா ஒளியுடன் மாணிக்கங்களும் |
சிந்திக்கவே மிக | விந்தையாய் இருக்க ||

---------------------------------------------------
 
Last edited:

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 97

ஆய்வுக் கூடத்தைச் சுற்றி வந்த பின், இருவரும்
அருகில் உள்ள ஓர் உணவகத்திற்கு அழைத்தனர்.

மிகவும் ருசியான வட இந்திய உணவிற்குப் பிறகு,
மிகவும் மெல்லிய மழைச் சாரலின் அழகிய வரவு!

சாரல் சீசன் மழைபோல மெல்லிய துளிகள் விழ,
சாரலின் அழகை ரசித்தபடி, பாஸ்டன் திரும்பிடப்

பயணம் ஆரம்பித்தோம்; நேரம் செல்லச் செல்ல,
பயணம் கடுமையானது, மழை பெரிதாக மாறிட!

பாதையை மறைத்துத் திரை இட்டது போல வந்து,
பாதையில் போகும் வேகத்தைக் குறைத்தது அது!

இடையில் ஓரிடத்தில் மழை நின்று போனது; சிறு
இடைவெளியும் இல்லாதவாறு, ஒரு பெரிய 'ட்ரக்'

ராக்ஷத அளவில் EZ pass ஐத் தாண்டிச் செல்ல, அது
ராணுவ வண்டிகளை எனக்கு நினைவுபடுத்தியது!

இது போன்ற பெரிய வண்டிகளின் அளவு, தெரியும்
அதனுடன் நிற்கின்ற வண்டிகளுடன் ஒப்பிட்டால்!

நெடுஞ்சாலை மராமத்துப் பணி, பல இடங்களில்;
நெடிய 'கிரேன்கள்' அங்கு வேலைக்காக நின்றன.

Newark விமான நிலையத்தைத் தாண்டும் பொழுது,
FedEx விமானம் மிக அழகாக அங்கு நின்றிருந்தது.

மழைப் பயணத்தை முடித்து, இனிய இல்லம் சேர
மாலை ஏழு மணி ஆனது. பின் உணவு; உறக்கம்!

:hungry: . . . :sleep:

தொடரும் .......................
 
............................................................................ சிறு

இடைவெளியும் இல்லாதவாறு, ஒரு பெரிய 'ட்ரக்'

ராக்ஷத அளவில் EZ pass ஐத் தாண்டிச் செல்ல....

DSCN7179.JPG
 
Back
Top