நாலாயிர திவ்ய பிரபந்தம்

Status
Not open for further replies.
நாலாயிர திவ்ய பிரபந்தம்

நாலாயிர திவ்ய பிரபந்தம்


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமத் வரவரமுந
யே நம:
vishnu1.jpg
நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஞான, பக்திப் பாதைகளில் பல படிகள் இருக்கும் பொழுது, புத்தகங்கள் படித்து அவற்றைப்புரிந்துகொள்வது என்பது ஓர் படி. நமது பெரியோர் சொன்னதுபடி, ஒரு பக்தன் ஓர் ஆச்சர்யனை அல்லது குருவை நாடி, பணிந்து, தனக்கு உபதேசிக்குமாறு கேட்கவேண்டியது. இது பல சூழலில் நாம் ஆசார்யனைப் பணியாமல் ஞானம் பெரும் தருணத்தில் நாம் படிக்கும் புத்தகம் அல்லது அறிவு சரியான இடத்தினின்று வருவதாக இருக்கவேண்டும். போகிற போக்கில் கிடைக்கும் அறிவு சரியானதாக இருக்க வாய்ப்பில்லை.எப்படி ஓர் பொறியைப்பற்றி அல்லது கருவியைப்பற்றி எழுதவேண்டுமென்றால் அதற்கான படிப்பை கற்றவர்களே தகுதியை உடையவராகின்றனர்.

மற்றையோர் எழுத முற்படும்பொழுது ஆழமாக செல்லமுடியாது அல்லது தவறாக பொருள் சொல்லிவிடுவதைத் தவிர்க்கமுடியாது. ஆதலால் இந்த இணைய தளம் பிரத்தியேகமாக ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய விஷயங்களை காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது.இதன் முதற்படியாக நாலாயிர திவ்விய பிரபந்தம் எடுத்துக்கொள்ளபட்டது. ஏனென்றால் சம்பிரதாயத்திற்கு புதிதான ஒரு புது பக்தன் முதலில் நாடுவது திவ்விய பிரபந்தத்தையே. "திராவிட வேதம்" என்று பெயர் பெற்ற இந்த அமிர்தத்தை(முக்திக்கு வித்தை) ஆதி மூலமான ஸ்ரீமன் நாராயணன் அரையர்கள் மூலமாக கேட்டருள்கிறார். அப்படிப்பட்ட பிரபந்தத்தை நாம் கற்றுத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.


இவ்வலை தளத்தில் நாம் பெறுவது,


  • நாலாயிர திவ்விய பிரபந்தம், மூலம், உரை மற்றும் தெளிவுரை

  • தமிழ் உரை: ஸ்ரீ காஞ்சி. பிரதிவாதி பயங்கரம். மஹா மஹிமோபாத்யாய, மகாவித்வான், அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள்

  • ஆங்கில உரை: ஸ்ரீ ராம பாரதி சுவாமி

  • கூடிய விரைவில் பாசுரம் ஓலி வடிவிலும் கேட்கலாம்

இனி மற்றைய சேவைகள்: (உதவிகள் வரவேற்கப்படுகின்றன)

  • தெலுங்கு மொழியிலும் உரை மற்றும் வியாக்கியானம் கொணர ஏற்பாடு.


  • கன்னட உரையாக்கம்


  • ஆங்கில உரையாக்கம்


  • தமிழில் எளிய உரை (ஸ்ரீ. காஞ்சி PBA சுவாமி உரையை அப்படியே பின்பற்றி)
- விக்ருதி, மாசி- புனர்பூசம், குலசேகராழ்வார் திருநக்ஷத்திரம்



Please open the link to read more

??????? ????? ?????????
 
Status
Not open for further replies.
Back
Top