திவ்ய பிரபந்தம்.

Brahmanyan

Active member
திரு "சுஜாதா தேசிகன்",காலம் சென்ற "சுஜாதா ரங்கராஜன்" அவர்களின் தீவிர ரசிகர். அவர் வைணவத்தை பற்றி மிகவும் அற்புதமான கட்டுரைகளை எழுதி வருகிறார். நான் அவைகளை தவறமல் படித்து வருகிறேன். அவர் வைணவ ஆழ்வார்கள் இயற்றியுள்ள "நாலாயிர திவ்யபிரபந்தத்" தொகுப்பை பதம் பிரித்து புத்தகமாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். புத்தகம் ஏப்ரல் 2021ல் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். ஆழ்வார்கள் அருளியுள்ள பிரபந்தம் பக்தியின் உயர்விளைவில் எழுந்தவை. பக்தி இலக்கியத்தின் உயர்வான தமிழ் அழகை அனுபவிக்கலாம்.

பிரஹ்மண்யன்,
பெங்களூர்

 
Back
Top