• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நாலாயிர திவ்ய பிரபந்தம்

நாலாயிர திவ்ய பிரபந்தம்

நாலாயிர திவ்ய பிரபந்தம்
பெரியாழ்வார் திருமொழி
முதற் ஆயிரம் (114 & 115)
(புறம் புல்கல்)


Naalayira thivya prabandam
periyaazhwaar thirumozhi
muthal aayiram (114 & 115)
( Puram pulgal)


114) பொத்த வுரலைக் கவிழ்த்து அதன்மேலேறி,
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணையும்,
மெத்தத் திருவயிறார விழுங்கிய,
அத்தன் வந்தென்னைப் புறம்புல்குவான்,
ஆழியானென்னைப் புறம்புல்குவான்..!!!


* ஓட்டையான உரலை தலை கீழாகப் போட்டு அதன் மீதேறி, உயரே வைத்திருந்த மிடாக்களிலிருந்து சுவையான பாலையும், வெண்ணையையும் எடுத்து வயிறு நிரம்ப நன்றாக உண்ட என் தலைவன் கண்ணன் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக்கொள்வான்! கைகளில் திருச்சக்கரமேந்தியவன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக்கொள்வான் !


114) poththa vuralaik kavizhththu adhan mElERi,
thithiththa pAlum thadAvinil veNNaiyum,
meththath thiruvayiRara vizhungiya,
aththan vandhennaip puRam pulguvAn
AzhiyAnennaip puRam pulguvAn..!!!


* Standing over a defunct inverted mortar, Krishna would gorge to His fill all the sweet milk and butter stored in pots high above the ground. He would come and embrace me from behind, One who holds great discus in His hand, would embrace me from behind!


115) மூத்தவை காண முதுமணற் குன்றேறி,
கூத்து வந்தாடிக் குழலாலிசை பாடி,
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்,
ஏத்தவந்தென்னை புறம்புல்குவான்,
எம்பிரானென்னைப் புறம்புல்குவான்..!!!


* வயதில் முதிர்ந்த இடையர்கள் காணும்படியாகவும், ஒரு பழமையான மணற்குன்றின் மேலேறி ஆடிப் பாடியும், வேணுகானம் இசைத்தும், பிரம்மரிஷிகள் தன்னை வணங்க, தேவர்கள் துதிக்க, மிக்க ஆனந்தமாய் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக்கொள்வான்! எம்பெருமான், என்னைப் பின்புறம் வந்து கட்டிக்கொள்வான் !


115) mooththavaik kANa mudhumaNaR kundrERi,
kooththu vandhAdik kuzhalaalisai pAdi,
vAyththa maRaiyOr vaNanga imaiyavar,
yEththa vandhennaip puRam pulguvAn
embirAnennaip puRam pulguvAn..!!!


* Watched by the elders of the cowherd clan, worshiped by the Maharishis and praised by the Devas, He would play flute and dance standing on an old sand mound. He would then come and embrace me from behind, my lord would embrace me from behind!
 
நாலாயிர திவ்ய பிரபந்தம்
பெரியாழ்வார் திருமொழி
முதற் ஆயிரம் (116 & 117)
(புறம் புல்கல்)


Naalayira thivya prabandam
periyaazhwaar thirumozhi
muthal aayiram (116 & 117)
( Puram pulgal)


116) கற்பகக் காவு கருதிய காதலிக்கு,
இப்பொழுதீவனென்று இந்திரன் காவினில்,
நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள்,
உய்த்தவ னென்னைப் புறம்புல்குவான்
உம்பர்கோ னென்னைப் புறம்புல்குவான்,..!!!


* தன்னுடைய காதலி சத்யபாமாவின் விருப்பத்திற்கு இணங்க இந்திரனுடைய நந்தவனத்திலிருந்த கற்பகச் சோலையை, "இதோ இப்பொழுதே கொண்டு வந்து தருகிறேன் " என்று கூறி அவள் வீட்டு நிலா காயும் முற்றத்தில் இருத்தி மலரச்செய்தவன், கண்ணன், என் பின்னால் வந்து என்னைக் கட்டிக்கொள்வான்! விண்ணோர் தலைவன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக்கொள்வான் !


116) kaRpagak kAvu karudhiya kAdhalikku,
ippozhudheeva nendru indhiran kAvinil,
niRpana seidhu nilAththigazh muRRaththuL,
uyththavanennaip puRam pulguvAn umbarkOn,
nennaip puRam pulguvAn..!!!


* Krishna, who once immediately obliged His lover SatyabAmA's desire to have Karpaga* tree, from lord Indira's garden, by bringing it and planting in her moonlit courtyard, would come and embrace me from behind, lord of celestials would embrace me from behind!
*Karpaga tree is a wish fulfilling heavenly tree, which can grant whatever one desires.


117) ஆய்ச்சியன் றாழிப்பிரான் புறம்புல்கிய,
வேய்த்தடன் தோளிசொல் விட்டுசித்தன் மகிழ்ந்து,
ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர்,
வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே..!!!


மூங்கில் போன்ற அழகிய தோள்களையுடைய யசோதை, சக்ராயுதபாணியான கண்ணன் அன்று புறம் புல்கியதை (பின்புறம் வந்து தன்னை கட்டிக்கொண்டு விளையாடியதைக் கூறியதை), பெரியாழ்வார் தாம் அநுபவித்து உலகத்தாருக்காக தந்த இப்பத்து தமிழ் பாசுரங்களை ஓதவல்லவர்கள் நல்ல மக்களைப் பெற்று மகிழ்ச்சி அடைவர்கள்.


117) AychchiyandrAzhip pirAn puRam pulgiya,
vEyth thadan thOLi sol vittu chiththan magizhndhu,
eeththa thamizhivai eeraindhum vallavar,
vAyththa nanmakkaLaip peRRu magizhvarE..!!!


* In the above ten tamizh pAsurams, PeriAzhwAr recounts the enthralling act of Krishna embracing the beautiful Yasoda from behind. Those who recite them with fervor will beget good children.
 
நாலாயிர திவ்ய பிரபந்தம்
பெரியாழ்வார் திருமொழி
முதற் ஆயிரம் (118, 119 & 120)
(இரண்டாம் பத்து)


Naalayira thivya prabandam
periyaazhwaar thirumozhi
muthal aayiram (116 & 117)
(Second Ten)


118) மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி,
பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்,
பத்தூர் பெறாதன்று பாரதம் கைசெய்த,
அத்தூதனப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்..!!!


* அனைவராலும் போற்றும்படி ஊதும் பாஞ்சஜந்யத்தை இடக்கையில் பிடித்தவனும், நல்ல மூங்கிலால் செய்யப்பட்ட குழலை ஊதியும், முன்பொரு சமயம், பொய்ச் சூதில் பாண்டவர்கள் சொத்துக்களை இழந்து, பத்து ஊர்களை மட்டுமே துர்யோதனாதிகளிடம் கேட்டும் பெற முடியாமல் துன்பப்பட்ட போது, பாண்டவர்களுக்குத் துணையாய் நின்று பாரதப் போர் செய்த அப்பாண்டவத் தூதனான கண்ணன், ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்!


118) mechchoodhu sangamidaththAn nalvEyoodhi
poychchoodhil thORRa poRaiyudai mannarkkAy
paththoor peRaadhandru bAradham kai seidha
aththoodhanappoochi kaattukindraan
ammanE! appoochchi kaattukindraan.


* Holding the celebrated great-sounding panchajanya conch in His left hand, blowing melodies with His good bamboo flute, Krishna who once stood by the Pandavas when the latter was robbed of wealth by deceit and unfair gambling and denied even a limited share of 10 villages by the Duryodhana kings, and went as Pandavas' messenger, now comes playing the frightening game! He frightens!


119) மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்,
பலர் குலைய நூற்று வரும் பட்டழிய பார்த்தன்,
சிலை வளையத் திண்தேர் மேல் முன்னின்ற செங்கண்,
அலவலை வந்தப்பூச்சி காட்டுகின்றான்,
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்..!!!
பாசுர அநுபவம்
மலைக்கு சமமான புஜ பலத்தையுடைய மஹாரதர் என்ற அரசனையும் மற்றும் பல அரசர்களைக் கொன்றும், துர்யோதனாதிகள் நூறு போரையும் உரு தெரியாமல் அழித்தும், அர்ஜுனனுடைய காண்டீவமென்னும் வில் வளைய அவனுடைய வலிமையான தேரில் முன்புறம் தேரோட்டியாக நின்றும் அர்ஜுனனைப் புகழ்பவனான சிவந்த கண்களையுடைய கண்ணன், ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்!


119) malaipuraithOl mannavarum mAradharum maRRum
palar kulaiya nooRRuvarum pattazhiya pArththan
silai vaLaiyath thiNthErmEl munnindra sengaN
alavalai vandhappoochi kaattukindraan
ammanE! appoochchi kaattukindraan.


* Vanquishing enemy kings such as Maharathar, whose strength was comparable to a mountain, pulverizing the hundred Duryodanas in the battle, making Arjuna's gandeeva bow bend as He sat in front on Arjuna's strong chariot and drove it praising Arjuna's valor, O! the red eyed Krishna now plays the frightening game! He frightens!


120) காயுநீர்புக்குக் கடம்பேறி காளியன்,
தீய பணத்தில் சிலம் பார்க்கப் பாய்ந்தாடி,
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற,
ஆயன் வந்தப்பூச்சி காட்டுகின்றான்,
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.!!!


* அன்று கொதிக்கும் மடுவின் நீரில் புகுந்து கடம்ப மரத்தின் மேலேறி, காளியன் என்கிற கொடிய பாம்பின் படமெடுத்த தலை மீது குதித்து தன் திருவடியில் அணிந்திருந்த சலங்கைகள் ஓசை எழுப்பும் படி நடனமாடி, குழலிசைத்து அதிசயமாய் நின்றவன், இன்று ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்!


121) kAyuneer pukkuk kadambERi kALiyan
theeya paNaththil silambArkkap pAyndhAdi
vEyin kuzhaloodhi viththaganAy nindra
Ayanvandhappoochi kaattukindraan
ammanE! appoochchi kaattukindraan.


* Stirring the hot waters of the pond, climbing up the kadamba tree, jumping on the hood of the venomous snake Kaliyan and with the ankle-wear making sweet sounds, He danced on the snake's hood and played flute, O! now He plays the frightening game! He frightens!
 

Latest ads

Back
Top