கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
நாராயணீயம் தசகம் 56
ப4க3வத3னுக்3ரஹ வர்ணனம்

images

Image courtesy krisna.org

ருசிர கம்பித (1)

ஹே கிருஷ்ணா! ஆகாயத்தில் அப்ஸர ஸ்திரீக்களும், தேவர்களும் துந்துபிகளை முழக்கியபடி இனிமையாகப் பாடும்போது, அழகிய குண்டலங்கள் அசையத் தாங்கள் பாம்பின் மேல் வெகு நேரம் ஆடினீர்கள் அல்லவா?
 
Last edited:
நமதி யத்3யத3முஷ்ய (2)

ஹரே ஸ்ரீ கிருஷ்ணா! அந்தக் காளீயனுடைய வணங்கிய தலைகளை விட்டுவிட்டு, மேலே கிளம்புகின்ற தலைகளைத் தங்கள் திருவடி மலர்களால் மிதித்துக் கொண்டு, தாளத்துடன் வெகு நேரம் நர்த்தனம் செய்தீர்கள் அல்லவா?
 
images

Image courtesy ask.com

த்வத3வப4க்ன (3)
ஹே லக்ஷ்மி காந்தா! தங்கள் கால்களால் நசுக்கப்பட்டு தொங்கிய படங்களுடனும், பெருகும் இரத்தத்தால் நதி நீரை சிவப்பாக்கிய காளீயன் சோர்வடைந்த பொழுது, அவன் பத்தினிகள் தங்கள் திருவடிகளை வந்து வணங்கினார்கள் அல்லவா?
 
அயி புரைவ சிராய (4)
ஹே கிருஷ்ணா! வெகு நாட்களுக்கு முன்பே தங்கள் மகிமையைக் கேட்டு அதில் மனத்தை ஈடுபடுத்தி இருந்த அவர்கள் முனிவர்களுக்கும் அரிதாகிய அழகிய தோத்திரங்களால் தங்களைத் தங்கு தடை இன்றி துதித்தார்கள் அல்லவா?
 
ப2ணிவதூ4ஜன (5)
தங்களைச் சரண் அடைந்தவரைக் கை விடாத அச்யுதனே! காளீயனுடைய பத்தினிகளின் பக்தியைக் கண்டு கருணை மேலிட்ட தாங்கள் சர்ப்ப ராஜனை முன்போலவே ஆக்கினீர்கள். அவனும் மதம் ஒடுங்கியவனாகத் தங்களை வணங்கி நின்றான்.
 
நாராயணீயம் தசகம் 56
ப4க3வத3னுக்3ரஹ வர்ணனம்

images

Image courtesy
kalarte.com

ரமணகம் வ்ரஜ வாரிதி4 (6)

"சமுத்திரத்திற்கு நடுவில் இருக்கும் ரமணகத் தீவுக்குப் போவாயாகுக! கருடன் உன்னை விரோதிக்க மாட்டான்" என்னும் தங்கள் வார்த்தைகளை மதித்து காளீயன் தன் பாம்புக் கூட்டத்துடன் கிளம்பிச் சென்றான்.

 
ப2ணிவதூ4ஜன (7)
நாகபத்தினிகள் அளித்த பிரகாசிக்கும் மாலையையும், பட்டுத் துகிலையும் அணிந்து கொண்டு அலங்கரித்துக் கொண்ட நீங்கள்; கரையில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பொழியும் தங்கள் பந்துக்கள் நண்பர்களிடம் சென்று சாயங்காலத்தில் ஒன்று சேர்ந்தீர்கள் அல்லவா?
 
images

Image courtesy exoticindiaart.com

நிசி புனச்'தமஸா (8)
இரவு நேரத்தில் கோகுலத்துக்குத் திரும்புவது கடினம் என்பதால் தங்கள் திருவடிகளையே ஆச்ரயித்துக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர் அனைவரும். இரவு தூங்கும் பொழுது காட்டுத்தீ வந்து நான்கு பக்கங்களையும் சூழ்ந்து கொண்டு விட்டது அல்லவா?

 
ப்ரபு3தி4தானத2 (9)
அப்போது விழித்துக் கொண்டு "காப்பாற்று! காப்பாற்று!" என்று வருந்திக் கூக்குரல் இடும் கோபர்களைக் காக்க அந்தப் பெரும் தீயை விரைந்து தாங்கள் பானம் செய்தீர்கள் அல்லவா? இதில் என்ன அதிசயம் இருக்கிறது? இந்த அக்கினியே தங்கள் திருவாய் அல்லவா?

 
images

Image courtesy media.radiosai.org

சி'கி2னி வர்ணத (10)

"அக்கினி இடத்தில் மட்டும் தான மஞ்சள் நிறம் (பீதத்வம்) பிரகாசிக்கின்றது? இப்போது அதைக் குடித்ததிலும் பீதத்வம் பிரகாசிக்கின்றது அல்லவா? பாவங்களைப் போக்க வல்ல பிரபுவே!"என்று சந்தோஷம் அடைந்த கோபர்கள் தங்களைத் துதித்தார்கள் அல்லவா? இப்படிப் பட்ட தாங்கள் எனது ரோகங்களையும் அதற்குக் காரணமான பாவங்களையும் போக்கடிக்க வேண்டும்.
 
நாராயணீயம் தசகம் 57

ப்ரலம்பாசுர வத வர்ணனம்

images

Image courtesy folknet.in

ராமஸக:க்வாபி தி3னே (1)

பக்தர்களின் இஷ்டதைக் கொடுக்கும், துஷ்டர்களின் இஷ்டதைக் கெடுக்கும் பகவானே! தாங்கள் ஒரு நாள் பலராமனுடன் கூட, ஆபரண
ங்கள் அணிந்து கொண்டு அலங்கரித்துக் கொண்டவராக, கோப குமாரர்களாலும், பசுக்களாலும் சூழப் பட்டவராக காட்டுக்குச் சென்றீர்கள் அல்லவா?
 
Last edited:
ஸந்த3ர்ஷயன் பலாய (2)
நிர்மலமான பிருந்தாவனத்தின் அழகினை பலராமனுக்குக் காட்டியபடியே, கையில் தடி எடுத்துக் கொண்ட சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டு, பாண்டீரகம் என்ற ஆலமரத்தை அடைந்தீர்கள் அல்லவா?
 
Last edited:
தாவத் தாவக நித4ன (3)

அப்பொழுது தங்களைக் கொல்ல விரும்பிய, கருணை அற்ற கொடிய பிரலம்பன் என்னும் அசுரன் நீண்ட கரங்களை உடைய தங்களிடம் வந்தான்
 
Last edited:
ஜானன் அபி அவிஜானன் (4)

தாங்கள் அவனை அறிந்து இருந்த போதிலும் முற்றிலும் அறியாதவர் போல அவனுடன் சிநேகம் செய்து கொண்டு பிறகு ஆலமரத்தடியில் நிபுணத்வம் வாய்ந்த கோபபாலர்களுடன் துவந்த யுத்தம் செய்யத் தொடங்கினீர்கள் அல்லவா?

 

கோபான்விப4ஜ்ய (5)

எல்லாம் அறிந்த பகவானே! கோபர்களை இரண்டு குழுவாகப் பிரித்து ஒரு குழுவுக்கு பலராமனைத் தலைவன் ஆக்கினீர்கள். ஒரு குழுவுக்குத் தாங்களே தலைவராக ஆனீர்கள் அல்லவா? தங்கள் பலத்தைக் கண்டு பயந்த அசுரனைத் தங்கள் குழுவிலேயே சேர்த்துக் கொண்டீர்கள்.
 
images

Image courtesy bsu.edu

கல்பிதவிஜேத்ருவஹனே (6)
ஜெயித்தவர்களைத் தோற்றவர்கள் தோளில் தூக்கிச் செல்லவேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய விளையாட்டுப் போரில் தோற்ற தாங்கள், எதிர் பக்ஷத்தில் இருக்கும் தங்களுக்கு மிகவும் பிரியமான ஸ்ரீதாமா என்பவனைச் சுமந்து சென்று, அதன் மூலம் தாங்கள் பக்தனின் தாசன் என்று நிரூபித்தீர்கள் அல்லவா?

 
images

image courtesy bsu.edu

ஏவம் ப3ஹுஷு விபூ4மன் (7)
எங்கும் நிறைந்து விளங்கும் ஈசா! இவ்விதம்மாக அநேகம் சிறுவர்களை அநேகம் சிறுவர்கள் தூக்கிச் சென்று விளையாடும் பொழுது, பலராமனிடம் தோற்றுப் போன பிரலம்ப அசுரன், தங்களிடம் உள்ள பயத்தால் பலராமனைத் தூக்கிக் கொண்டு வெகு தூரம் சென்று விட்டான் அல்லவா?
 
images

Image courtesy kidsgen.com

த்வத் தூ3ரம் க3மயந்தம் (8)
தங்களிடம் இருந்து தன்னை வெகு தூரம் சுமந்து செல்வதைக் கண்ட பலராமன் தன் உடலின் எடையை அதிகரித்த போது , அசுரனும் தன் சுய வடிவத்தை எடுத்துக் கொண்டான் அல்லவா? அந்த உருவத்தைக் கண்ட பலவான் ஆகிய பலராமன் கூட அஞ்சினான்.

 
images

Image courtesy onlynarayaneeyam.blogspot.com

உச்சதயா (9)
அந்த அசுரனின் உடல் வெகு உயரமாக இருந்தது. அதனால் வெகு தொலைவில் இருந்தும் கூடத் தங்கள் திரு முகத்தைக் கண்ட பலராமன் உடனேயே பயம் நீங்கியவனாக அந்த துஷ்ட அசுரனைத் தன் கை முஷ்டியால் சதைத்து விட்டான் அல்லவா?

 
images

image courtesy harekrsna.com

ஹத்வா தா3னவ வீரம் (10)
அசுர வீரனைக் கொன்று விட்டுத் திரும்பி வந்த பலராமனைத் தாங்கள் அன்புடன் ஆலிங்கனம் செய்து கொண்டீர்கள். அப்போது ஒன்று சேர்ந்து இருந்த உங்கள் இருவர் மீதும் தேவர்கள் பூ மாரி பெய்தார்கள்.

 
images

image copurtesy vaishnavsongs.com

ஆலம்போ3 பு4வநாநாம் (11)
வண்டின் நிறத்துக்கு நிகரான நிறம் உடைய ஸ்ரீ ஹரியே! உலகங்களுக்கு ஆச்ரயம் ஆனவரும் பிரலம்பாசுரனின் வதத்தை செய்வித்தவரும் ஆகிய தாங்கள் தாமதம் செய்யாமல் என் வியாதிகளை இப்போதே போக்க வேண்டும்.
 
நாராயணீயம் தசகம் 58

தாவக்னி மோக்ஷ வர்ணனம்

த்வயி விஹரண லோலே (1)

தாங்கள் கோப பாலர்களுடன் விளையாட விருப்பம் உடையவராகப் பிரலம்பாசுரனைக் கொல்லுவதற்காகத் தாமதித்த பொழுது பசுக்கள் தம் இஷ்டப்படி சஞ்சரித்துக் கொண்டு புல்லை உண்ண விரும்பி வெகு தூரத்தில் உள்ள ஐஷீகம் என்ற பெயர் உடைய ஒரு வனத்தை அடைந்தன.
 
அனாதி4க4த (2)
அந்தப் பசுக்கள், வேனல் காலத்தின் கொடுமை அறியப்படாத பிருந்தாவனத்தில் இருந்து, இந்தக் காட்டை வந்து அடைந்ததால், தங்கள் பிரிவினால் மிகவும் வருந்தியும், மிகக் கடுமையான க்ரீஷ்ம ருதுவின் தாபத்தால் உண்டான தாகத்தால் தம் வசம் இழந்தும், அசைவற்று நின்றன.
 
images

Image courtesy harekrsna.com

தத3னு ஸஹ ஸஹாயை (3)

சூரஸேனகுலத்தில் ஜனனம் எடுத்த ஸ்ரீ கிருஷ்ணா! அப்போது தோழர்களுடன் வெகு தூரம் தேடிப் பிறகு வழி பிழைத்து, முஞ்சிக் காட்டில் கஷ்டப்படுகின்ற பசுக் கூட்டதைக் கண்டு, விரைவாக ஒட்டிக் கொண்டுவரத் தாங்கள் பக்கத்தில் சென்ற பொழுது, நான்கு புறங்களிலும் காட்டுத் தீ பற்றி எரிந்தது. ஹா!ஹா! என்ன கஷ்டம்!
 
Last edited:
ஸகல ஹரிதி தீ3ப்தே (4)
காட்டுத் தீ எல்லா திக்குகளிலும் கோரமான சத்தத்துடன் பயங்கரமாக எரியும் பொழுது, அவர்கள் எல்லோரும் வழி மறிக்கப்பட்டு, பாதி எரிந்தர்வர்கள் போல வருந்தி
"லோக பந்துவே! காப்பாற்ற வேண்டும்! காப்பாற்ற வேண்டும்!" என்று மூன்று வகைத் தாபங்களையும் போக்கடிக்க வல்ல தங்களையே சரணம் அடைந்தார்கள்.
 
Status
Not open for further replies.
Back
Top