கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
தவாவதாரஸ்ய ப2லம் முராரே! (8)

images


Image courtesy krishnasmercy.org

"ஹே முராரியே! தங்கள் திரு அவதாரத்திற்குப் பலன் இப்போது தான் உண்டானது!" என்று தேவர்கள் தங்களைத் துதித்தனர். "உண்மைதான்! இந்த இடத்தில் பலன் (பழம்) சித்தித்தது (கிடைத்தது)" என்று சிரித்துக் கொண்டே கூறினீர்கள். பிறகு மற்ற சிறுவர்களுடன் சேர்ந்துகொண்டு பனம் பழங்களை உண்டீர்கள் அல்லவா?

 
நாரயணீயம் தசகம் 53

தேனுகாசுர வத4 வர்ணனம்.


images

Image courtesy
krishnasmercy.blogspot.com

மது4த்3ரவஸ்ருந்தி (9)

தேனைப் பெருக்குகின்ற
, பெருத்துப் பருத்த, தசைப்பற்றுள்ள அந்தப் பழங்களைத் தின்று திருப்தி அடைந்த பின்னர் பழக் குவியலையும் எடுத்துக் கொண்டு சிறுவர்களுடன் வீடுதிரும்பினீர்கள் அல்லலவா?
 
images

Image courtesy krishna.com

ஹதோ ஹதோ தே3னுக (10)

ஹே குருவாயூரப்பா! தேனுகசுரன் கொல்லப்பட்டான் என்று உற்சாகத்துடன் அருகில் வந்து இனிப்பான பழங்களை உண்ட மக்கள் "தாங்கள் மேன்மை பெற்று வெகு காலம் ஜீவித்து இருக்க வேண்டும்" என்று தங்களை வாழ்த்தினார்கள் அல்லவா? அப்படிப் பட்ட நீங்கள் என்னை வியாதிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
 
This thread will be resumed after I return to India,
clean up and set up my house in order and
get the Internet connection upgraded to unlimited.
The prolonged power cut (16 to 18 hours?) is another threat!
I feel like saying, "Back to the stone-age!"
despite loving my country, state, city and home!
 
நாராயணீயம் 54 வது தசகம்
காளீய மர்த3ன வர்ணனம்

images

image courtesy gayasrikrishna.blogspot.com

வத்ஸே
வோத்க: (1)

தங்களை சேவிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் சௌபரி என்ற முனிவர். முற்காலத்தில் யமுனா நதிக்குள் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் புரிந்து கொண்டு இருந்தபோது அவர் மீன்களிடத்தில் அன்பு கொண்டார். ஒரு நாள் கருடனைத் தன் கண் முன்னே பிரத்தியக்ஷமாகக் கண்டார்.


 
images

Image courtesy vina.cc

தவ்த்3வாஹம் தம் ஸக்ஷுத4ம் (2)
அந்த முனிவர் பசியுடன் கூடியவனும், ஒரு மீனைத் தின்றவனும், தங்கள் வாகனமும் ஆகிய கருடனைப் பார்த்து கோபம் கொண்டார்.
"நீ இங்கே வந்து பிராணிகளை உண்டால் உயிரை இழந்து விடுவாய்!" என்று கருடனையும் சபித்தார்.
 
நாராயணீயம் 54 வது தசகம்
காளீய மர்த3ன வர்ணனம்


images

Image courtesy garudainfo.blogspot.com

காளீயன் என்ற கொடிய விஷப் பாம்பு, கருடனுக்கு வைக்கப் பட்டிருந்த பாகத்தைத் தின்று விட்டான். தங்கள் திருவடிகளை சேவிக்கும் கருடன் கோபம் கொண்டு இறக்கையால் அடித்து விரட்டவும், காளீயன் அந்த கருடன் வரமுடியாத யமுனை நதியை அடைந்தான்.
 
images


Image courtesy moralstories.wordpress.com

கோ4ரே தஸ்மின் ஸூரஜாநிரவாஸே (4)

கொடியவனாகிய அந்தக் காளீயன் யமுனை நதியில் வசிக்கும் போது அவன் விஷத்தின் வீரியத்தால் நதிக் கரையில் இருக்கும் மரங்கள் நாசம் அடைந்தன. ஆகாயத்தில் பறக்கும் பறவைகள் மயங்கி விழுந்தன. உங்கள் மனம் கருணையினால் கனிந்தது.

 
நாராயணீயம் 54 வது தசகம்
காளீய மர்த3ன வர்ணனம்

காலே தஸ்மின் ஏகதா3 (5)

அக்காலத்தில் ஒருநாள் தாங்கள் பலராமன் இல்லாமல் இடைப் பிள்ளைகளுடனும் பசுக்களுடனும் யமுனையின் கரையில் உள்ள காட்டுக்குச் சென்றீர்கள். பொறுக்க முடியாத உஷ்ணத்தினாலும், தாகத்தினாலும் தவித்த பசுக்களும், இடையர்களும் யமுனையின் நீரைப் பருகினார்கள் அல்லவா?

 
நச்'யஜ்ஜீவன் விச்யுதான் (6)

images

Image courtesy exoticindiaart.com

தன்னைச் சரண் அடைந்தவர்களைக் கைவிடாத கிருஷ்ணா! நண்பர்களும், பசுக்களும் விஷ நீரைப் பருகியதால் உயிர் இழந்து தரையில் விழுவதைக் கண்டதும் கருணை கொண்டு அவர்கள் அருகில் சென்று அமிர்தத்தை வர்ஷிக்கும் கடைக்கண் பார்வையால் அவர்களை உயிர்ப்பித்தீர்கள் அல்லவா?

 
நாராயணீயம் 54 வது தசகம்
காளீய மர்த3ன வர்ணனம்

<image removed due to copyright claim by the copyright holder>

கிம் கிம் ஜாதோ (7)

கோபர்கள் "இது என்ன ஆச்சரியம்? உடல் முழுவது ஆனந்தம் பொங்குகிறதே!" என்று சொல்லிக் கொண்டே எழுந்தனர். எதிரில் உங்களைக் கண்டதும் அது உங்கள் கருணையின் வெளிப்பாடே என்று அறிந்து அன்புடன் உங்களை ஆலிங்கனம் செய்து கொண்டார்கள் அல்லவா?
 
Last edited by a moderator:
கா3வச்சை'வம் (8)

images


Image courtesy mgdas.com

அவ்விதமே பசுக்களும் ஒரே நொடியில் உயிர் பெற்று எழுந்தன. எதிரில் தங்களைக் கண்டு ஆனந்தம் பெருகி கண்களில் நீர் வழிய மெதுவாகக் கத்திக் கொண்டு தங்களைச் சுற்றி நின்றன அல்லவா?

 
நாராயணீயம் 54 வது தசகம்

காளீய மர்த3ன வர்ணனம்

ரோமாஞ்சோயம் ஸர்வதோ ந: (9)

"முக்தியைக் கொடுக்கும் ஈசா! எங்கள் தேகங்களில் எங்கும் மயிர் கூச்செரிகிறது. உள்ளத்தில் இனம் தெரியாத ஆனந்தம் பெருகுகிறது. இந்த விஷத்தின் வேகமோ ஆச்சரியமாக இருக்கிறது!" என்று கூறிய கோபாலர்கள் தங்களைக் கொண்டாடி வணங்கினார்கள் அல்லவா?
 
images

Image courtesy hariharji.blogspot.com

ஏவம் ப4
க்தான் முக்தஜீவானபி (10)

இவ்விதம் உயிர் இழந்த தங்களின் பக்தர்களைக் கூடத் தங்களின் கடைக்கண் பார்வையால் உயிர் பெறச் செய்கின்றீர்கள். அப்படிப்பட்ட கருணையை உடைய தாங்கள் என்னையும் வியாதிகளில்இருந்து காப்பாற்ற வேண்டும்.
 
நாராயணீயம் 55 வது தசகம்

காளீய மர்த3ன வர்ணனம்

அத வாரிணி கோ4ரதரம் (1)

ஹே கிருஷ்ணா! அதன் பிறகு யமுனா நதியில் வசிக்கும் கொடிய காளீயனை அங்கிருந்து விரட்ட நிச்சயித்துக் கொண்டீர்கள் நீங்கள். நதிக் கரையில் இருந்த, விஷக் காற்றினால் உலர்ந்த இலைகளைக் கொண்ட, கதம்ப மரத்தில் விரைவாக ஏறினீர்கள் அல்லவா?
 
அதி4ருய்ஹ பதா3ம்புருஹேண (2)

images


Image courtesy howarddavidjohnson.com

இளம் தளிர்களை ஒத்த மிருதுவானதும், அழகான நிறத்தை உடையதும் ஆகிய தாமரை போன்ற கால்களினால் அந்த மரத்தின் மீது ஏறிய நீங்கள் , நீர்ச் சுழிகளும், பயங்கர அலைகளும் நிறைந்த அந்த மடுவில் குதித்தீர்கள் அல்லவா?
 
பு4வனத்ரய பா4ரப்ருதோ (3)

மூவுலகங்களுடைய பாரத்தைச் சுமக்கும் தங்களுடைய அதிகமான பாரத்தால் சலித்து உயரக் கிளம்பிய யமுனை நீர் விரைவாக நூறு வில்லிடை நிலத்தைத் தண்ணீரில் மூழ்கடித்தது அல்லவா?
 
images


Image courtesy southasianist.info

அத2 உரகா3திபதி (4)
அதன் பின்னர் திக்குகளும் விதிக்குகளும் கலக்கப்பட்டு சுழி உண்டாகும்படி செய்யப்பட யமுனை ஜலத்தாலும், அதன் அதிக ஒலியாலும், சினம் அடைந்த காளீயன் தங்கள் அருகில் மெய்மறந்து வந்து அடைந்தான் அல்லவா?
 
பணச்'ருங்க3 ஸஹஸ்ர (5)

Kaliya+Mardan.jpg

Image courtesy aastalapista.blogspot.com

ஆயிரம் படங்களின் நுனிகளில் இருந்து வெளிக் கிளம்பும் ஜ்வலிக்கின்ற தீக்கனலை உடையவனும், கொடிய விஷத்தை உடையவனும், அநேகக் கொடுமுடிகள் கொண்ட கரிய மலை போன்று இருப்பவனும் ஆகிய காளீயனைத் தாங்கள் தங்கள் எதிரில் கண்டீர்கள் அல்லவா?
 
I hope this series will continue smoothly without any further disturbances.

I waited for upgrading the Internet to Unlimited plan and wasted a few days.

It is not yet done but hopefully will done soon.


Even @ five slokas per day, this will take me three more months to complete!
 
நாராயணீயம் 55 வது தசகம்

காளீய மர்த3ன வர்ணனம்

images

Image courtesy templepujari.com

ஜ்வலத3க்ஷி பரிக்ஷர(6)

ஜ்வலிக்கும் கண்களும், விஷ வாயுவாகிய வெப்பமான மூச்சுக் காற்றும், கொண்ட காளீயன் அளவற்ற பலம் கொண்ட தங்களைக் கடித்தான். தாங்கள் அசைவற்று இருப்பதைக் கண்டு தங்களைச் சுற்றிக் கொண்டான் அல்லவா?
 
அவிலோக்ய ப4வந்தம்(7)

அதன் பிறகு யமுனைக் கரையில் இருக்கும் சிறுவர்களும், பசுக் கூட்டமும் தங்களைக் காணமல் வருந்தும் பொழுது கோகுலத்திலும் அனேக அபசகுனங்களைக் கண்ட கோபர்களும் யமுனைக் கரைக்கு விரைந்தார்கள் அல்லவா?
 
images


Image courtesy ebay.com

அகி2லேஷு விபோ4(8)

ஹே கிருஷ்ணா! அவர்கள் தங்கள் நிலையை எண்ணி வருந்தி உயிரை விடத் துணிந்தபோது விரைவாக பாம்பின் கட்டை அவிழ்த்துக் கொண்டு, சிரித்துக் கொண்டே தாங்கள் நீரின் அடியிலிருந்து நீருக்கு மேலே வெளியே வந்தீர்கள் அல்லவா?
 
images

image courtesy hknet.org.nz

அதி4ருஹ்யதத: (9)

அதன் பிறகு சர்ப்ப ராஜனின் படங்களில் எறிக் கொண்டு; அழகான காந்தியுடைய தங்கள் திருவடிகளின் சலங்கைகளின் இனிய ஒலியும், இரு கைகளில் குலுங்கும் வளைகளின் ஒலியும் பின்னிப் பிணைந்து ஒலிக்கும்படி அழகிய நர்த்தனம் செய்தீர்கள் அல்லவா?
 
images

Image courtesy hknet.org.nz

ஜஹ்ருஷு: பசு'பா: (10)

ஹே குருவாயூரப்பா! இங்ஙனம் தங்கள் நர்த்தனம் செய்யும் பொழுது கோபர்கள் ஆனந்தம் அடைந்தனர்; முனிவர்கள் ஆனந்தம் அடைந்தனர்; இந்திராதி தேவர்கள் பூமாரி பொழிந்தனர். அப்படிப்பட்ட தாங்கள் என் வியாதிகளைப் போக்கி அருள வேண்டும்.
 
Status
Not open for further replies.
Back
Top