• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்.

ச்'ருத்வா கர்ணரஸாயனம் (37:6)

காதுக்கு இன்பமான தங்கள் திருவாக்கைக் கேட்டு எல்லோரும் தங்கள்

கருணா அமிருதத்தால் திருப்தி அடைந்து மனக்கவலை நீங்கிச் சென்றனர்.

மிகப் புனிதமான, பிரசித்தி பெற்ற மதுராபுரியின் அரசனான சூரசேனனின்

புதல்வர் வசுதேவர், மஹாபாக்கியசாலியாகிய, தேவகனின் மகளான

தேவகியைத் திருமணம் செய்து கொண்டார்.

 
ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்.

உத்3வாஹாவஸிதௌ (37:7)

விவாஹம் முடிந்தபிறகு, தேவகியின் உடன் பிறந்தவனான கம்சன்

மணமக்களைச் சன்மானிக்க எண்ணித் தானே தேரோட்டியாகி தேரைச் செலுத்தும் போது,

"இவளது எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்லப் போகின்றான்" என்று

விண்ணில் எதிரொலித்த அசரீரியால் அச்சம் அடைந்த கம்சன் உடனே

மரணபயத்தில் அருகில் அமர்ந்திருந்த தேவகியைக் கொல்ல வாளை எடுத்தான்!
 
ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்.

க்3ருஹ்ணாச்'சிகுரே ஷு(37:8)

துஷ்ட புத்தியுடைய கம்சன் அவள் தலை மயிரைப் பிடித்துக் கொண்டு வெகு நேரம்

விடவில்லை! வசுதேவன் சமாதானம் செய்துபிள்ளைகள் பிறந்த உடனே அர்ப்பணம்

செய்வதாக வாக்கு அளித்ததால் திருப்தி அடைந்து வீட்டுக்குச்சென்றான். முதல் மகன்

பிறந்ததும் வாக்களித்தபடி கொண்டு சென்று கொடுத்தபோதும் இரக்கத்தால்
கம்சன்

அவனைக் கொல்லவில்லை. துஷ்டர்களின் புத்தி கூட ஏதோ ஒரு வேளை கருணை

நிறைந்ததாகக் காணப்படுகிறது அல்லவா?
 
ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்.

தாவத்த்வன்மனஸெவ (37:9)

தங்கள் எண்ணம் போலவே
ந்த நாரத முனிவர் கம்சனிடம் இவ்வாறு சொன்னார்.

"ஓ அரசனே! நீங்கள் அசுரர்கள். யாதவர்கள் தேவர்கள் என்பதை அறியாயோ?

மாயாவியாகிய விஷ்ணு தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி உன்னைக்

கொல்வதற்கு அவதரிக்கப்போகின்றான்." இதைக் கேட்ட கம்சன் வசுதேவருடைய

பிள்ளையைக் கொன்றான். யாதவர்களையும் அவர்கள் இடத்தில் இருந்து விரட்டினான்.
 
ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்.

ப்ராப்தேஸப்தமக3ர்ப4 (37:10)

நாகராஜன் ஆகிய ஆதிசே ஷன் தேவகியின் ஏழாவது கர்ப்பத்தில் நுழைந்தான்.

தங்கள் ஆணையால் யோகமாயை அதை ரோஹிணிக்கு மாற்றி விட்டாள்.

சச்சிதானந்த ரூபியாகிய நீங்கள் தேவகியின் எட்டாவது கர்ப்பத்தில் பிரவேசித்தீர்.

தேவர்களால் துதிக்கப்பட்டவரும், தேவகியின் கர்ப்பத்தில் வசித்தவரும்

ஆகிய தாங்கள் எனக்குச் சிறந்த பக்தியைத் தந்தருள வேண்டும்.
 
ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்.

ஸாந்த்3ரானந்த3தனோ (37:1)

பூர்ண ஆனந்த ஸ்வரூபியாகிய ஸ்ரீ கிருஷ்ணா! முன்னொரு காலத்தில், தேவ அசுர யுத்தத்தில், தங்களால் கொல்லப்பட்ட அசுரர்கள், புண்ணிய பாப கர்மங்களுக்கு வசப்பட்டு இருந்ததால் முக்தி அடையவில்லை. பூலோகத்தில் ஜனித்த அந்த கொடியவர்களின் பாரத்தல் பூமிதேவி மிகவும் துன்புற்று, சத்தியலோகத்தில் இருக்கும் பிரமதேவனிடம் சென்றாள்.

ஹா ஹா து3ர்ஜன (37:2)

"கஷ்டம்! கஷ்டம்! துஷ்டர்களின் பாரத்தால் வருந்துகின்ற, சமுத்திரத்தில் விழப்போகும் என்னை காப்பாற்றுங்கள்! என்னுடைய இந்த நிலையை நீர் தான் போக்க வேண்டும்!" என்று புலம்பிய பூமிதேவியைக் கண்ட பிரமதேவன்; சுற்றிலும் உள்ள தேவர்களின் முகங்களைப் பார்த்துவிட்டு தங்களைக் குறித்து தியானித்தார் அல்லவா?

ஊசே சாம்பு3ஜபூ4ரமூனயி (37:3)

"ஹே தேவர்களே! பூமி தேவி கூறியது அனைத்தும் உண்மையே! இந்த பூமியையும், உங்களையும் காப்பாற்றுவதில் சமர்த்தன் லக்ஷ்மிபதி ஒருவனே ஆவான். நாம் எல்லோரும் பரமசிவனை முன்னிட்டுக் கொண்டு இங்கிருந்து சீக்கிரமாக
பாற்கடலுக்குச் சென்று அவரை வணங்கித் துதிப்போமாகுக!" பிரமன் கூறியதும் அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு உங்கள் வாசஸ்தலமாகிய வைகுண்டத்தை அடைந்தனர்.

தே முக்3தா4நிலசா'லி (37:4)

மந்தமாருதம் வீசும் மனோஹரமான பாற்கடல் கரையை அடைந்து, ஒன்று சேர்ந்து உங்கள் திருவடிகளை தியானிப்பதில் மனத்தை ஈடுபடுத்தினர். உங்கள் திருவாக்கை உள்ளத்தில் உணர்ந்த பிரமன் கூறினான், "பரமாத்மா எனக்கு உரைத்ததை உங்களுக்கு நான் உரைப்பேன்".

ஜானே தீ3னத3சா'மஹம் (37:5)

"கொடிய அசுரர்களால் பூமிக்கும், தேவர்களுக்கும் உண்டாகும் கஷ்டத்தை அறிவேன். இவற்றைப் போக்குவதர்க்குப் பூரண கலைகளுடன் நான் யாதவ குலத்தில் அவதரிப்பேன். தேவர்கள் தங்கள் அம்சங்களுடன் வ்ருஷ்ணீ குலத்தில் பிறக்கட்டும். தேவப் பெண்களும் என்னை சேவிப்பதற்காக பூமியில் ஜனிக்கட்டும்" என்னும் தங்கள் திருவாக்கை பிரமன் எல்லோருக்கும் எடுத்து உரைத்தான்.

ச்'ருத்வா கர்ணரஸாயனம் (37:6)

காதுக்கு இன்பமான தங்கள் திருவாக்கைக் கேட்டு எல்லோரும் தங்கள்
கருணா அமிருதத்தால் திருப்தி அடைந்து மனக்கவலை நீங்கிச் சென்றனர்.
மிகப் புனிதமான, பிரசித்தி பெற்ற மதுராபுரியின் அரசனான சூரசேனனின் புதல்வர் வசுதேவர் மஹா பாக்கியசாலியாகிய, தேவகனின் மகளான தேவகியைத் திருமணம் செய்து கொண்டார்.

உத்3வாஹாவஸிதௌ (37:7)

விவாஹம் முடிந்தபிறகு, தேவகியின் உடன் பிறந்தவனான கம்சன் மணமக்களைச் சன்மானிக்க எண்ணித் தானே தேரோட்டியாகி தேரைச் செலுத்தும் போது, "இவளது எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்லப் போகின்றான்" என்று விண்ணில் எதிரொலித்த அசரீரியால் அச்சம் அடைந்த கம்சன் உடனே மரணபயத்தில் அருகில் அமர்ந்திருந்த தேவகியைக் கொல்ல வாளை எடுத்தான்!

க்3ருஹ்ணாச்'சிகுரே ஷு(37:8)

துஷ்ட புத்தியுடைய கம்சன் அவள் தலை மயிரைப் பிடித்துக் கொண்டு வெகு நேரம் விடவில்லை! வசுதேவன் சமாதானம் செய்துபிள்ளைகள் பிறந்த உடனே அர்ப்பணம் செய்வதாக வாக்கு அளித்ததால் திருப்தி அடைந்து வீட்டுக்குச்சென்றான். முதல் மகன் பிறந்ததும் வாக்களித்தபடி கொண்டு சென்று கொடுத்தபோதும் இரக்கத்தால் அவனைக் கொல்லவில்லை. துஷ்டர்களின் புத்தி கூட ஏதோ ஒரு வேளை கருணை நிறைந்ததாகக் காணப்படுகிறது அல்லவா?

தாவத்த்வன்மனசைவ (37:9)

தங்கள் எண்ணம் போலவே அந்த நாரத முனிவர் கம்சனிடம் இவ்வாறு சொன்னார்.
"ஓ அரசனே! நீங்கள் அசுரர்கள். யாதவர்கள் தேவர்கள் என்பதை அறியாயோ? மாயாவியாகிய விஷ்ணு தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி உன்னைக் கொல்வதற்கு அவதரிக்கப்போகின்றான்." இதைக் கேட்ட கம்சன் வசுதேவருடைய பிள்ளையைக் கொன்றான். யாதவர்களையும் அவர்கள் இடத்தில் இருந்து விரட்டினான்.

ப்ராப்தேஸப்தமக3ர்ப4 (37:10)

நாகராஜன் ஆகிய ஆதிசே ஷன் தேவகியின் ஏழாவது கர்ப்பத்தில் நுழைந்தான். தங்கள் ஆணையால் யோகமாயை அதை ரோஹிணிக்கு மாற்றி விட்டாள். சச்சிதானந்த ரூபியாகிய நீங்கள் தேவகியின் எட்டாவது கர்ப்பத்தில் பிரவேசித்தீர். தேவர்களால் துதிக்கப்பட்டவரும், தேவகியின் கர்ப்பத்தில் வசித்தவரும் ஆகிய தாங்கள் எனக்குச் சிறந்த பக்தியைத் தந்தருள வேண்டும்.
 
ஸ்ரீ கிருஷ்ண அவதார வர்ணனம்

ஆனந்த3ரூப (38:1)

ஆனந்த ரூபியாகிய பகவானே! தங்கள் திரு அவதார சமயம் நெருங்கியபோது,

தங்கள் திருமேனியில் இருந்து வெளிப்படும் கிரணக் கூட்டங்களை ஒத்த

மேகக் கூட்டங்கள், வான வெளியை மறைத்துக் கொண்டு இருக்கும் மழைக் காலமாக இருந்தது.
 
ஒன்பது வித பக்தி.




அன்பர் செய்யும் பக்தியின் வகைகள்
ஒன்பது ஆகும் என்பது பிரசித்தம்,
ஐம்பொறிகளையும், புலன்களையும்,
ஐயனை வழிபட அமைப்பதாலே!

இறைவனின் பெருமைகளைக் காதால்
இடை விடாமல் கேட்பது “சிரவணம்”;
சாபத்துக்கு உள்ளான மன்னன் பரீக்ஷித்து
தாபங்கள் தீர்ந்தான் பாகவதம் கேட்டு!

இறைவனின் பெருமைகளை வாயால்
இடை விடாமல் பாடுவது “கீர்த்தனம்”;
சுக முனி பாடிய பாகவதக் கதையால்
சுகம் அடைந்தனர் கேட்டவர் எல்லோரும்!

மனதுக்குள் இடையறாது இறை நாமத்தை
மனனம் செய்வதை “ஸ்மரணம்” என்பார்;
எத்தனை துன்பங்கள், இடர்கள் வந்தபோதும்
பக்த பிரஹலாதன் மறக்கவில்லை ஹரியை.

குறையாத பக்தியுடன் இறை பாதங்களுக்கு
நிறைய சேவை செய்வதே “பாத சேவை”;
பாத சேவை செய்யும் மகத்தானதொரு
பாக்கியம் பெற்றவள் லக்ஷ்மி தேவியே.

மாசற்ற மனத்துடன் மலர்களைக் கொண்டு
ஈசனுக்கு பூஜை செய்வதே “அர்ச்சனை”;
பிருது மகாராஜா அர்ச்சனை செய்தவர்களில்
பிரசித்தி வாய்ந்து, இறை அருள் பெற்றவர்.

எட்டு அங்கங்களும் நன்கு நிலத்தில் படும்படி
எண் குணத்தானை வணங்குவது “வந்தனம்”;
கண்ணனை வணங்கித் தனிப் பெருமையை
கண் கூடாகப் பெற்றவர் பக்த அக்ரூரர்.

தாசானு தாசனாகத் தன்னையே எண்ணி,
நேசத்துடன் தொண்டுகள் புரிவது “தாஸ்யம்”;
“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதில்
அனுமனை யாரால் மிஞ்சிவிட முடியும்?

சரி நிகர் சமமாகத் தன்னை எண்ணிக்கொண்டு
இறைவனிடம் நட்புக் கொள்ளுவது “சக்யம்”;
உண்டு , உறங்கி, பேசிப் பழகிய அர்ஜுனன்
கண்ணனிடம் கொண்ட பக்தியே சக்யம்.

தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும்
தயங்காமல் அர்ப்பணிப்பது “ஆத்மநிவேதனம்”;
அனைத்தையும் அளித்ததால் அழியாப் புகழ்
அரசன் மகாபலி செய்த ஆத்ம நிவேதனத்துக்கு!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
NAVA VIDHA BHAKTI.

lakshmi_narayan_py94_l.jpg


NAVA VIDHA BHAKTI.

There are nine different form of loving God – namely the nine forms of Bhakti.
They vary depending on which of our ‘Indriams’ we employ in doing Bhakti.

The first form of the ‘nava vidha bhakti’ is ‘Sravanam’ or listening to the glories of our dear Lord. King Pareekshit attained mukthi by his sravnam of BhAgavata MahA purAnam sung by Suka muni in just seven days.

The second form of bhakti is ‘Keerthanam’ or singing the Lord’s glory.
Suka muni sang the glory of Lord in BhAgavadam and everyone who listened to it benefited immensely.

The third form of bhakthi is ‘Smaranam’ the continual remembrance of God’s names and form. Bhakta PrahlAd is the best example for this form of Bhakti. In spite of the dire threats and cruel punishments imposed on him by his father, he never failed to utter the name of Sri Hari even for a second!

The fourth form of bhakti is ‘pAda sEvA’ . Lakshmi Devi is the most blessed in this form of bhakti as She is continuously doing pAda SEvA to Lord Vishnu.

The fifth form of bhakti is ‘Archanai’ to God with pure and fresh flowers. Pruthu maharAj was famous for doing Archanai to his dear Lord.

The sixth form is ‘Vandanam’ or do saAshtAnga namaskAram. AkrUrar got Lord’s blessings by doing Vanadanam.

The seventh form of bhakti is ‘DAsyam’ – to be a humble servant of the Lord. None can beat HanumAn in his spirit of DAsyam and the services rendered to Lord.

The eighth form of bhakti is ‘Sakhyam’ or friendship with Lord – based on equality with Him. PandavAs and especially ArjunA is the most famous for Sakhya bAvam to Lord.

The ninth form of bhakti is ‘Atma nivEdhanam’ or total surrender to the Lord’s lotus feet. MahA Bali became the best example for this kind of Bakti, by offering to God everything he possessed including his bloated ego!
 
ஸ்ரீ கிருஷ்ண அவதார வர்ணனம்

ஆசா'ஸு சீ'தல தராஸு (38:2)

மழைநீரால் எல்லா திசைகளும் நன்கு குளிர்ந்து,

நல்லோர்கள் தாங்கள் விரும்பிய காரியம் கைகூடியதால்

ஆனந்த பரவசம் அடைந்தபோது, நடு நிசியில்,

சந்திரன் உதிக்கும் வேளையில், மூவுலகங்களின்

துயர்களைத் துடைக்க வந்த தாங்கள் திரு அவதாரம் செய்தீர்கள்
 
ஸ்ரீ கிருஷ்ண அவதார வர்ணனம்

images


பா3ல்வஸ்ப்ருசா' அபி (38:3)


பால பாவத்தை அடைந்திருந்தாலும் ஐஸ்வர்யங்களைத் தரிக்கின்றதும்;

ஜொலிக்கின்ற கிரீடம், கை வளைகள், தோள் வளைகள், முத்துமாலைகள்

இவற்றால் காந்தியுடன் விளங்குவதும்; சங்கம், சக்கரம், பத்மம், கதை

இவற்றுடன் விளங்குவதும்; மேகம் போன்ற நீல நிறத்தை உடையதும் ஆன

திருமேனியுடன் பிரசவ அறையில் தாங்கள் விளங்கினீர்கள்.
 
Last edited:
ஸ்ரீ கிருஷ்ண அவதார வர்ணனம்

images


வக்ஷ:ஸ்த2லீஸு2க நிலீன(38:4)

ஹே வாசுதேவனே ! உங்கள் மார்பில் சுகமாக வாசம் செய்யும் அழகுடைய லக்ஷ்மி தேவியின்

வெட்கம் கலந்த கண் பார்வையால், அந்த அறையில் துஷ்டனான கம்சனால் உண்டு பண்ணப்பட்ட

அலக்ஷ்மியை நாசம் செய்தீர்கள் நீங்கள்.
 
ஸ்ரீ கிருஷ்ண அவதார வர்ணனம்

images


சௌ'ரிஸ்து தீ4ரமுனிமண்ட3ல (38:5)

வசுதேவர்,ஞானிகளாகிய முனிவர்களின் புத்திக்கு எட்டாமல்

வெகு தூரத்தில் இருக்கும் தங்கள் திருவடிகளைத் தன் கண்களால் தரிசித்து;

ஆனந்தக் கண்ணீர், மயிர்க் கூச்சம், குரல் தழுதழுப்பு இவற்றால் கனிந்து;

கண்களுக்குப் பூந்தேன் போன்று இருக்கும் தங்களைத் துதித்தார்.

 
Last edited:
ஸ்ரீ கிருஷ்ண அவதார வர்ணனம்.

தே3வ ப்ரஸீத (38:6)

ஸ்வயம் பிரகாசரூபியே! பரபிரம்ம ஸ்வரூபியே!

துன்பத் த
ளைகளை அறுப்பதில் கத்தி போன்றவரே!

எல்லோரையும் அடக்கி ஆளுகின்ற, தனது அம்சமான மாயைக் கொண்டு

சிருஷ்டி முதலியவற்றைச் செய்கின்ற ஈசா! அருள்வேண்டும்.

கருணை நிறைந்த கடைக்கண் பார்வையால் வருத்தங்களை அகற்றவேண்டும்"

என்றெல்லாம் வசுதேவர் மகிழ்ச்சியுடன் உங்களைத் துதித்தார்.
 
ஸ்ரீ கிருஷ்ண அவதார வர்ணனம்.

மாத்ரா ச நேத்ர (38:7)

கண்ணீரால் நனைந்த கொடி போன்ற சரீரத்தை உடைய தாயாலும் புகழ் வசனங்களால் துதிக்கப்பட்டீர்.

கருணாநிதியாகிய தாங்கள் முந்தைய இரண்டு பிறவிகளிலும் அவர்களின் மகனகப் பிறந்ததைக் கூறினீர்.

பின்னர் தாயின் சொற்படி மானிடக் குழந்தையின் வடிவை எடுத்துக் கொண்டீர்.

(முந்தைய பிறவிகளில் பிருச்னி சுதபஸ் என்பவர்களுக்குப் பிருச்னிகர்ப்பனாகவும்,

அதிதி கச்யபர்களுக்கு வாமனனாகவும் விஷ்ணு அவதரித்து இருந்தார்.)

 
ஸ்ரீ கிருஷ்ண அவதார வர்ணனம்

தத்ப்ரேரிஸ்தத3னு (38:8)

images


அதன் பிறகு
தாங்கள் வசுதேவரை ஏவினீர்கள்

நந்தகோபனுடைய பெண்ணுடன் இடம் மாற்றுவதற்கு.

யோகிகளால் மனத்தில் தரிக்க தகுந்தவரும்,

தாமரை மலரில்
வீற்றிருக்கும்ஹம்சக் குஞ்சு போன்ற

தங்களை
க் கைகளில் எடுத்துக் கொண்டார்.
 
ஸ்ரீ கிருஷ்ண அவதார வர்ணனம்

images


ஜாதா ததா3 பசு'பசஸத்3மனி (38:9)

அப்போது தங்களுடைய ஏவுதலால் நந்தகோபர்
வீட்டில் அவதரித்திருந்த யோகமாயை பட்டணத்து

ஜனங்களை நித்திரையில் ஆழ்த்தினாள். அறிவற்றவைகளும், நன்கு பூட்டப்பட்டு இருந்தவைகளும் ஆகிய

கதவுகளும் தாமாகவே திறந்து கொண்டன! என்ன ஆச்சரியம்!
 
ஸ்ரீ கிருஷ்ண அவதார வர்ணனம்

images
images


சேஷேண பூ3ரிப2ண (38:10)

அநேகம் படங்களைக் கொண்ட ஆதிசே ஷேன் மழைக்குக் குடை பிடித்தது.

தன் தலைகளில் உள்ள ரத்தினங்களால் வழி காட்டியது. மஹாபாக்கியவனாகிய வசுதேவர், எந்தத் தடையும்

இன்றித் தங்களை எடுத்துக் கொண்டு சென்றார்.

Figure 1 suggests that Vasudeva was allowed to live like a king since Kamsa was afraid on his eighth child and not him.

The figure 2 suggests that in the prison Vasudeva lived as a common prisoner with an unshaven beard!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top