• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என்னுடைய தமிழ்க் கவிதைகள்

Status
Not open for further replies.
Siva Sir!

தங்கள் கருத்துக்களில் எனக்கு முழு உடன்பாடு இல்லை!

மாற்றுக் கருத்துக்களைச் சொல்ல ஒப்புதல் அளித்தால், என் கருத்துக்களை முன்வைக்கிறேன்!

நட்புடன்,
ராஜி ராம் :amen:


I am not sure whether you meant my poem. If so, you don't have to hesitate to register your (opposite) views.
 
கவிதை மிகவும் அருமை.
மனமார்ந்த பாராட்டுக்கள் ..
கடைசி நான்கு வரிகளை...
நான்கு சீர் உள்ளதாக அமைத்து
எழுதியிருந்தால் இன்னும் நன்றாக
இருக்கும். இது என்னுடைய தாழ்மையான
கருத்து ..
அன்புடன் சிவஷன்முகம்

Thank you for your compliments. I thought I maintained uniformity of word structure in my poem. You are welcome to point out mistakes.

I am also happy to note that you get attached to people with the name 'Sivakumar'. I have also lived in Madurai and had my entire schooling there.
 
Tharkala Kavithaigal..

Sir, I am very happy to know that you are also lived in Madurai and had your schooling there.
I am sure you are maintaining uniformity of word structure in your poems.There is no doubt in
this juncture. As i stated in my previous threads , No need to grammar perception in this
Tharkala Kavithaigal..

sivashanmugam
 
Last edited:
1. எம்மதமும் நம் மதம்


மதங்களின் பெயரால்
ஏனிங்கே போராட்டம்?
வீணான ஆர்ப்பாட்டம்?

காளியிடம் சென்று
தொழுகை நடத்தினால்
கருமாரிக்கொன்றும் கோபம் வராது.

நபிகளிடம் சென்று
நாமமிட்டுக்கொண்டால்
நமாசில் எந்தப் பிழையும் வராது

குருத்வாராவிற்க்குச் சென்று
குரான் ஓதினால்
கிரந்தசாகிப் ஒன்றும் கிழிந்து விடாது.

கீதையும் பைபிளும்
நாணயத்தின் இரு பக்கங்கள்
நம்பிக்கையின் சின்னங்கள்..

மனிதனுக்காக மனம்; மனதிற்காக மதம்
எனவே மனிதனுக்காக மதமன்றி
மதங்களுக்காக மனிதனல்ல.

ஆதாம், ஏவாள்
எந்த மதம்?
அனைவரும் இங்கே அந்த மதம்.

எம்மதமும் நம் மதம்
என்ற தத்துவத்துக்கு
என்றென்றும் சம்மதம்.



Lokah samasthaa sukhino bhavantu.

மதத்திற்கு மதம் பிடித்தால்
மனிதனுக்கு அங்கே ஆபத்து!
 
நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
அஞ்சி யஞ்சி சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே

பாரதியார்
 
மதுரைமா நகர் வாழும் என்
நண்பா சிவ குமார ????

Yaar, Yaar, Yaar, avar yaaaro?
:noidea:

உறவு சொல்ல ஒருவர் இன்றி வாழ்பவன்
அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
 
//இங்கு துள்ளல் ஓசை மிகுந்து நான்கு சீர் கொண்டு
நான்கு நான்கு அடிகளாக கலிப்பா வகையில் அமைந்து
இருந்தாலும் ..கடைசியில் ஐந்து சீர் கொண்டு எழுதியது
மாற்றி நான்கு சீர் வைத்து எழுதி இருந்தால் இன்னும்
சிறப்பாக இருக்கும்..

''என்கடமை ...... தயங்க வேண்டாம்''
(என்ற அடிகள் பார்க்கவும் ... )
தற்கால கவிதை உரை வீச்சிற்கு(இலக்கணம்)பொருந்துமா
என்பதை தமிழ் ஆய்வாளர்கள் தான் கூறவேண்டும் //​
அது நான்கு சீர்தான் ஐயா! "உதவிவேண்டாம்" என ஒரே சீராகத்தான் அமைத்தேன்.
பதிவிடும்போது பிரிந்துவிட்டது. நன்றி.
 
.............

'பெரியபெருமாள்' என்று வந்தது பதில்.

Dear Sir,

பெரிய பெருமாளைக் கண்டதும் எனக்கு இன்னொரு ஜோக் நினைவு வருகிறது!

தமிழ் ஆசிரியரிடம் மாணவன் கேட்டான் சந்தேகம்:

ஐயா! 'மா மரம்' என எழுத, பெரிய 'ற' போடணுமா சின்ன 'ர' போடணுமா?

ஆசிரியார்: ' அடே! இதுகூடத் தெரியாதா? பெரிய மரத்துக்கு பெரிய 'ற'; சின்ன மரத்துக்கு சின்ன 'ர' !! :cool:

Regards...........
 
I am not sure whether you meant my poem. If so, you don't have to hesitate to register your (opposite) views.
Yes Sir!

Wanted to get your permission before submitting my views ( needless to say, opposite!!)

since it is your thread!

Shall do it soon...........

Raji Ram
 
பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணா,
காலை வணக்கம் ..
தங்களின் 2. நெஞ்சு பொறுக்குதில்லையே கவிதை மிகவும்
நன்றாக உள்ளது. நன்றி.
''நடந்து செல்லும் தொலைவிற்கும் வாகனத்தில் சென்று
நாட்டு எண்ணெய் வளங்களை வீண் செய்கிறார்
நாலாப் புறமும் புகை விட்டு இயற்கை
நலன்களை எல்லாம் இவர் பாழ் செய்கிறார்''
காலத்திற்கு ஏற்ற கருத்துக்களை கவிதையாய் இங்கு
யாத்துள்ளீர்கள் நன்றி ..
என்றும் அன்புடன்
சிவஷன்முகம்.
 
Last edited:
அன்புள்ள் அண்ணனுக்கு,
உங்களிடம் சில கருத்துகளை
கேட்கவேண்டும்.
நான் ஒருமுறை தமிழ் நையாண்டி பாடல்கள்
என்று பழைய திரைப்படம் ஒன்றில் வந்த
''இம்மாம் பெரிய சபையினிலே இன்னத்த நா பாடுறது ...''
என்ற எடுத்துக்காட்டுடன் குறிப்பிட்டு இருந்தேன்..
அதுவும் என் நண்பர் ஒருவரை போற்றி எழுதியதை
சிலர் '' இது போன்று தனி நபர் ''துதி'' பாடக்கூடாது
என்ற ரீதயில் என்னை சாடியிருந்ததால்தான் எழுதி
இருந்தேன் ..மேலும் அதே பக்கத்தில் நகைச்சுவை
ரீதியில் ...
ஆக்கியோன் : சிவஷன்முகம் .
தலைப்பு : தமிழ்சங்கம் ..
புனைப்பெயர் : காதல் கவிராயன்.
நோக்கம் : நகைச்சுவை பாடல்கள்

தமிழ் பெண்ணே !
உன் பார்வை பட்டதானால் தோன்றியது
அங்கே முதல்சங்கம் ..நம் காதல் சங்கம்
உன்னிடை பார்த்ததனால் தோன்றியதோ
இடைசங்கம் .
உன் கடைக்கண் பார்வை வேண்டி கடைவிரித்தேன்
கடைசங்க வீதி தனிலே!
என்று எழுதியிருந்தேன்..
இதில் நான் எந்த இடத்திலும் தரம் தாழ்ந்தோ
ஒருவர் மனத்தை புன்படுதியோ எழுதவில்லை..
உங்களின் பார்வைக்கு இதை கொண்டுவருகிறேன் ..
தரம் தாழ்ந்து எந்த இடத்திலாவது எழுதியிருந்தால்
சொல்லுங்கள் ...திருத்திகொள்கிறேன்.
 
...

தமிழ் பெண்ணே !
உன் பார்வை பட்டதானால் தோன்றியது
அங்கே முதல்சங்கம் ..நம் காதல் சங்கம்
உன்னிடை பார்த்ததனால் தோன்றியதோ
இடைசங்கம் .
உன் கடைக்கண் பார்வை வேண்டி கடைவிரித்தேன்
கடைசங்க வீதி தனிலே!
...


பொன்னம்பலத்தில் ஆடுவோன் மகனே!!

சபாஷ்.

இனிய தமிழிலில் மிக எளிதாக என்னைப்போல் பாமரனுக்கு விளங்கும்படி மேலும் இதன் போன்று (நகை)சுவையான காதல் கவிதைகள் எழுதுமாறு வேண்டுகிறேன்.

நன்றி.

:) :) :) :)
 
Last edited:
அன்புள்ள் அண்ணனுக்கு,
உங்களிடம் சில கருத்துகளை
கேட்கவேண்டும்.
............. '' இது போன்று தனி நபர் ''துதி'' பாடக்கூடாது
என்ற ரீதயில் என்னை சாடியிருந்ததால்தான் எழுதி
இருந்தேன் .. ...

"முடிந்தவரை தனி மனிதப் பாராட்டுக் கவிதைகளைத் தவிர்ப்பது நல்லது, எல்லோருக்கும்!

ராஜி ராம்"


இதைச் 'சாடுதல்' என்று எண்ண வைத்தது என் தவறல்ல!

நான் போட்டது விண்ணப்பம்!! :amen:
 
''பட்டி மன்றத்துப் பாம் புலி'' என்று எங்களால் போற்றிப் புகழப்பட்ட பேராசிரியர் திரு. அ.வ. இராசகோபலனார் ..காவிரி நாடன் என்று
போற்றப்பட்ட பேராசிரியர் திரு.இராசேந்தனார்..(நேரு நினைவுக்கல்லுரி ..
புத்தனாம்பட்டி ..திருச்சி மாவட்டம் ) போன்ற தமிழ் பேராசிரியர்களிடம் தமிழ் பயின்ற எனை பார்த்து '' தரம் தாழ்ந்து எழுதிவிட்டாய் என்று சொன்னது தான் இன்னும் எனக்கு வருத்தமாக இருக்கிறது
. நிறைவாக ..
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
--குறள்
என்று கூறி முடித்துக்கொள்கிறேன் ..
நன்றி .
என்றும் உங்கள் அன்பு வேண்டி
சிவஷன்முகம்
 
பெண்ணின் இடையைப் பார்த்தவர் பலர்
தெருக் கடையில் நின்ற கதை அறிவீரோ?

:nono:

Just joking as well.....
 
தவறான விசாவா தவறான விசுவாசமா?


நாங்கள் கணினியில் வைத்த chip -ஐ
எங்கள் காலில் இன்று வைத்தனர்
இந்தியன் என்றால் cheap என்று
இன்னொரு முறை சுட்டிக் காட்டினர்

Call centre -ல் கால் வைக்கலாம்
அமெரிக்க மண்ணில் வைக்க முடியாது
Knowledge outsource செய்வாரே அன்றி
Human rights மதியார் அவரே

தவறான விசா தருவது குற்றமில்லை
அறியாமல் அதைப் பெறுவது குற்றமா?
கல்வி கற்கச் சென்ற எம்மை
கைதிகள் போல் ஆக்கியது நியாயமா?

விலங்கிற்கு கட்டும் அடையாளச் சின்னத்தை
விடலைப் பையன்களுக்கு இங்கு கட்டினர்
விடுதலை பெற்று ஆண்டுபல ஆயினும்
விதேசி மோகத்தால் சுதந்திரம் இழந்தனர்

எத்தனை அவமானம்? எத்தனை அநியாயம்?
எதையும் தாங்குமோ இந்தியனின் இதயம்?
எல்லை தாண்டிச் சென்று வீணே
எல்லோரிடமும் நாளும் படும் சிரமம்.
 
Last edited:
எனது பெரும் மதிப்பிற்கும் பேரன்புக்கும் உரிய
திரு. ஹரிதாச சிவா அண்ணா,

இங்கு சிலேடை அமைத்து எழுதியுள்ளேன்

''உன்னிடை'' என்பதற்கு நான் வணங்கும்
உமையாள் - சிவனிடை வாழ்கிறாளே
அந்த உமையாளை குறிப்பிட்டேன் ..

நன்றி.

சிவஷன்முகம்.
 
''விடுதலை பெற்று ஆண்டுபல ஆயினும்
விதேசி மோகத்தால் சுதந்திரம் இழந்தனர்''

பக்கம் பக்கமாய் எழுதி புரிய வைக்க வேண்டியதை அழகான இருவரிகளில் உணர்த்திவிட்டீர்
நன்றி
 
நன்றி.

பொன்னம்பலத்தில் ஆடுவோன் மகனே!!

சபாஷ்.

இனிய தமிழிலில் மிக எளிதாக என்னைப்போல் பாமரனுக்கு விளங்கும்படி மேலும் இதன் போன்று (நகை)சுவையான காதல் கவிதைகள் எழுதுமாறு வேண்டுகிறேன்.


:) :) :) :)


உங்களைப் போன்ற நல்ல இதயம் கொண்டவர்களால்தான்
இன்னும் நான் உயிர்வாழ்கிறேன்...கவிதையில் ..
 
எனது பெரும் மதிப்பிற்கும் பேரன்புக்கும் உரிய
திரு. ஹரிதாச சிவா அண்ணா,

இங்கு சிலேடை அமைத்து எழுதியுள்ளேன்

''உன்னிடை'' என்பதற்கு நான் வணங்கும்
உமையாள் - சிவனிடை வாழ்கிறாளே
அந்த உமையாளை குறிப்பிட்டேன் ..

நன்றி.

சிவஷன்முகம்.

நீங்கள் சொன்னது உன்னதம்.
நான் சொன்னது உன்மத்தம்.
ஏனென்றால் நான் கொஞ்சம் மந்தம்
தொடரட்டும் நம் (கவிதை) பந்தம்.
 
1. எம்மதமும் நம் மதம்
.............................
Lokah samasthaa sukhino bhavantu.

எம்மதமும் நம் மதம்

(இருக்க முடியாது! நமக்கென ஒன்று தேவை!)

மதங்களின் பெயரால்
ஏனிங்கே போராட்டம்?
வீணான ஆர்ப்பாட்டம்?

(ஆர்ப்பாட்டம் உள்ளது நிஜமே!)

காளியிடம் சென்று
தொழுகை நடத்தினால்
கருமாரிக்கொன்றும் கோபம் வராது.

(இடம் பொருள் ஏவல் என்பது கிடையாதா?
இடம் உண்டு ஒவ்வொரு இல்லத்திலும்கூட, ஒவ்வொரு வேலைக்கும்!
கருமாரி உருமாறி வரமாட்டார் என்ற தைரியமா?)

நபிகளிடம் சென்று
நாமமிட்டுக்கொண்டால்
நமாசில் எந்தப் பிழையும் வராது

(ந, நா சொல்லழகு நன்று! நாமம் இட்டுச் சென்று பாருங்கள்! தெரியும்!)

குருத்வாராவிற்குச் சென்று
குரான் ஓதினால்
கிரந்தசாகிப் ஒன்றும் கிழிந்து விடாது.

(கிரந்தசாகிப் கிழியாது! சென்று ஓதும் மனிதர்தான்.....)

கீதையும் பைபிளும்
நாணயத்தின் இரு பக்கங்கள்
நம்பிக்கையின் சின்னங்கள்..

(அவரவர் வேண்டியதை ஏற்கலாம்........ இரண்டையும் முடியாது!)

மனிதனுக்காக மனம்; மனதிற்காக மதம்
எனவே மனிதனுக்காக மதமன்றி
மதங்களுக்காக மனிதனல்ல.

(மனிதனுக்கு மதம் வேண்டும் என்ற ஒப்புதல் நன்று!)

ஆதாம், ஏவாள்
எந்த மதம்?
அனைவரும் இங்கே அந்த மதம்.

(சொல்லாதீர்கள் சார்! பின் உலகில் திருமணங்களே நடக்காது போகும்!)

எம்மதமும் நம் மதம்
என்ற தத்துவத்துக்கு
என்றென்றும் சம்மதம்.

('எம்மத மனிதரையும் நட்புடன் நோக்குவோம்' எனச் சொன்னால் அதுவே நல்வழி!)

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் :pray:
 
எம்மதமும் நம் மதம்

(இருக்க முடியாது! நமக்கென ஒன்று தேவை!)

மதங்களின் பெயரால்
ஏனிங்கே போராட்டம்?
வீணான ஆர்ப்பாட்டம்?

(ஆர்ப்பாட்டம் உள்ளது நிஜமே!)

காளியிடம் சென்று
தொழுகை நடத்தினால்
கருமாரிக்கொன்றும் கோபம் வராது.

(இடம் பொருள் ஏவல் என்பது கிடையாதா?
இடம் உண்டு ஒவ்வொரு இல்லத்திலும்கூட, ஒவ்வொரு வேலைக்கும்!
கருமாரி உருமாறி வரமாட்டார் என்ற தைரியமா?)

நபிகளிடம் சென்று
நாமமிட்டுக்கொண்டால்
நமாசில் எந்தப் பிழையும் வராது

(ந, நா சொல்லழகு நன்று! நாமம் இட்டுச் சென்று பாருங்கள்! தெரியும்!)

குருத்வாராவிற்குச் சென்று
குரான் ஓதினால்
கிரந்தசாகிப் ஒன்றும் கிழிந்து விடாது.

(கிரந்தசாகிப் கிழியாது! சென்று ஓதும் மனிதர்தான்.....)

கீதையும் பைபிளும்
நாணயத்தின் இரு பக்கங்கள்
நம்பிக்கையின் சின்னங்கள்..

(அவரவர் வேண்டியதை ஏற்கலாம்........ இரண்டையும் முடியாது!)

மனிதனுக்காக மனம்; மனதிற்காக மதம்
எனவே மனிதனுக்காக மதமன்றி
மதங்களுக்காக மனிதனல்ல.

(மனிதனுக்கு மதம் வேண்டும் என்ற ஒப்புதல் நன்று!)

ஆதாம், ஏவாள்
எந்த மதம்?
அனைவரும் இங்கே அந்த மதம்.

(சொல்லாதீர்கள் சார்! பின் உலகில் திருமணங்களே நடக்காது போகும்!)

எம்மதமும் நம் மதம்
என்ற தத்துவத்துக்கு
என்றென்றும் சம்மதம்.

('எம்மத மனிதரையும் நட்புடன் நோக்குவோம்' எனச் சொன்னால் அதுவே நல்வழி!)

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் :pray:

தங்கள் கருத்துக்கு நன்றி.
நீங்கள் சொல்லி இருப்பது தற்போதைய நிலை.
நான் சொல்லிருப்பது இருக்க வேண்டிய நிலை.

Just imagine a person is sitting in his/her home in front of Kali vigraha, wearing a cross and chanting Sikh scriptures. None of the religions is disrespected by his/her act. But we are not able to do it in public because people of each religion think they are the ‘saviours’ of their religion.

Yes. We all need a religion – Humanity.
 
பக்தி


கோபுரமும், உண்டியலும்
கொள்ளையிடும் வசூலும்
கோவே உன் தர்பாரோ?

அப்பாவி உயிர்களை அடித்துப் பலியிடுவதும்
ஆட்டத்தில் உளறுவதை அருள்வாக் கென்பதுவும்
ஆண்டவன் இட்ட கட்டளையோ?

ஒலி பெருக்கி ஓசை
திரைப்பட இசை
இதுதான் தெய்வத் திருவிழாவோ?

அர்ச்சனைக்கும் அபிஷேகத்திற்கும் கட்டணம்
அதிகார வர்க்கத்திற்குத் தனி தரிசனம்
அத்தனையும் உன் ஆடல்களோ?

'ஆம்!' என்று உந்தன் அரசில் முடிவானால்
ஆண்டவன் என்பது ஏழையின் சிரிப்பும்
என் இதயமும் மட்டும் தான்
 
திருவிளையாடல்களோ?

அன்புள்ள அண்ணா பக்தி அருமையான கவிதை
அத்தனையும் உன் ஆடல்களோ?
என்பதில் .....உன் திருவிளையாடல்களோ? என்று
இருந்தால் சரியாக இருக்கும்:music:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top