என்னுடைய தமிழ்க் கவிதைகள்

Status
Not open for further replies.
நாடு விட்டு நாடு போனவர் எல்லோரும் :bolt:

கேடு எவர் கெட்டால் நமக்கு என்ன என;

மேட்டுக்குடி மக்களாக வாழும் பொழுது,

வெட்டியாகக் கண்ணீர் மாலை சிந்தாதீர்!
:Cry:


videshi honeke baavajood, mera dil bharat keliye hamesha dhadkta hai. kyonki "mera bharat mahan". So, I was not shedding crocodile tears. I remain extremely close to India in every aspect.
 
அனுபவம்


ஆற்ற லெனனிட மட்டுமில்லை
ஏற்ற மேல்லோரிடமும் உண்டென்ற
தேற்றத் தெளிவு கொண்டு - சூழ்நிலைக்
கேற்ற விதத்தில் நடந்தேன்.

இதம் கலந்த வார்த்தை
நிதம் பகன்ற போதிலும்
வதம் செய்வது போல் -சிலர்
வாதம் வந்து சேருகிறது.

விவாத மென்றால் பரவாயில்லை
வீண்வாத மென்னா லியலாது
வாதத்திற்கு முண்டு மருந்து - பிடி
வாதத்திற்கு அது கிடையாது


அர்த்தம் புரிகிறதோ இல்லையோ
தர்க்கம் செய்யத் துணியும்
வர்க்கம் நான் உணர்ந்தேன் - அவர்
பக்கம் நான் செல்லேன்


நன்நெறி பெற வந்தேன்;
நல்லறிவு பெற வந்தேன்;
கல்லெறி கிடைக்கப் பெற்றேன் - எனினும்
அல்லவை புரிய மாட்டேன்


பகிர்வு பலருக் குதவும்;
மகிழ்வு வாழ்வில் கொணரும்;
புரிவும் உடன் சேர்ந்தால் - நம்
உறவு இனிதே பலப்படும்
 
But, they add flavor to the sweet!!
One should learn to taste everything!

Mr. Siva, Pl. check for typos before posting.

//ஆற்ற லெனனிட மட்டுமில்லை
ஏற்ற மேல்லோரிடமும் உண்டென்ற //
 
Life is neither a chocolate with nuts nor sweet with flavours. It has got more than arusuvai. More often, people around us influence our life with their tastes??!!:(

Thanks for pointing out the typo errors. I would do my best.
 
மனுஸ்ம்ருதி மாந்தரின் மனு

முன்தலை முடிஎடுத்து குடுமி முடிவேன்
முழுநேர தொழிலாய் வேதம் ஓதுவேன்
முணுமுணுக்காமல் கேட்கும்படி மந்திரம் சொல்வேன்
முழமெட்டு வேஷ்டியில் பஞ்சகச்சம் உடுத்துவேன்

உபவாசம் ஒவ்வொரு விஷேச தினத்திற்கும்
உறங்காத ராத்திரி பலமுறை வருடத்தில்
உதவி எல்லோருக்கும் அத்தனை தினமும்
உரக்க உச்சரிப்பு அத்தனை ஸ்லோகங்களும்

ஆளுக்கேற்ற பூஜை செய்ய மாட்டேன்
அர்ச்சனைத்தட்டை பல்லிளித்து ஏந்த மாட்டேன்
அதிகாரிகளுக்கு வளைந்து கொடுக்க மாட்டேன்
ஆகம விதிகளை காற்றில் விடமாட்டேன்

அமாவாசைக்கு வீடுவீடாய் ஏற மாட்டேன்
அடாவடியாய் தட்சணை கேட்க மாட்டேன்
அத்தனை முறையும் நேரத்திற்கு வருவேன்
அடுக்கடுக்காய் பிராமணார்த்தம் இருக்க மாட்டேன்

இத்தனையும் எப்போதும் பின் பற்றுவேன்
இனிமையாய் புன்முறுவல் பூத்து இருப்பேன்
இம்மியளவும் நெறி தவற மாட்டேன்
இந்தியா கீழே சொன்னபடி இருந்துவிட்டால்

ஊழல் இல்லாத அரசியல்; பணத்தை
உறிஞ்சி எடுக்காத பொருளாதார நிலை
உண்மைக்கு உகந்த மதிப்பு மற்றும்
உரிய முறையில் நாட்டு நடப்பு
 
அன்பு நண்ப
மிடுக்கான உன் கவிதை கண்டேன்
துணுக்குற்றேன்.. களிப்புற்றேன் ..
மீண்டும் ஒருமுறை படிக்க தூண்டும்
அழகிய தமிழ் நடை அதுதான் உனது
தனி நடை ..
தவறுதலாக நினைத்துவிட்டேன் -ஐயா
தங்களுக்கு தமிழ் தெரியாதென்று ..
தெரிந்துகொண்டேன் உங்கள் விரல்
அசைவில் தமிழ் வித்தைகள் பல
செய்யுமென்று..
தேமதுர தமிழ் ஓசை திக்கெட்டும் ஒலிக்க
துறை சார்ந்த வால்லுநராய் நீவிர் இருந்தாங்கே
செம்மொழியாம் எம் தமிழ் மொழி சிறக்க
சேவை புரிந்திடுவீர் ...புரிந்திடுவீர்..
 
நாடென்ன செய்ததெனக் கேட்க வேண்டா
நானென்ன செய்வேனெனச் சொல்வாய் மனிதா
தீதெல்லாம் அகன்றபின்னர் திருந்துவேன் எனச்சொன்னால்
மூதோர்கள் சொன்னநெறி இதுவல்ல எனவுணர்வாய்


அலையோய்ந்து கடலினிலே குளித்தலு மில்லை
நிலைதிருந்தி நானிங்கு மாறுவது மில்லை
பலவகையாய்ப் பலநிலைகள் பாரிலெனை வருத்திடினும்
நிலைகுலையா மனத்துடனே என்நெறியைப் போற்றிடுவேன்


ஒருவிரலைச் சுட்டுகையில் நாலுவிரல் காட்டிடுமே
நமக்குள்ளே இருக்கின்ற குறைகளையே செம்மையாய்
குற்றமிங்கு பார்த்துவாழின் சுற்றமென ஏதுமில்லை
குறைகளையே நிறையாக்கிக் குணம்காண்பாய் மானுடா


என்கடமை யானாற்ற எனக்கெதுவும் உதவி வேண்டாம்
மன்னுலகில் என்நெறியை நான்செய்யத் தயங்க வேண்டாம்
பொன்னுலகம் ஆனபின்னே பூணூலும் தானெதற்கு
இன்னுலகில் என்நெறியை ஆற்றுவதே சிறப்பு
 
Author:sivashanmugam.
Title: sivakumara.

மதுரைமா நகர் வாழும் என்
நண்பா சிவ குமார உன்
முத்தான புத்தாண்டு வாழ்த்து
பார்த்தேன் சுவைத்தேன் மகிழ்தேன் !

கற்றது பெருக்கி நற்றமிழ் வளர்க்கும்
சைவத் திருமறை யோ(ன்) நீ !
உற்றது வேண்டி பெற்ற(து) நன்
சைவத் திருமறை யாம்கேட்டு நாளும்
நலம் விளைந்திடும் அருட் பாவே!

நவில் கூறும் நடை அழகில்
சுவை ஊரும் தமிழ் அமுதே !
சைவ நெறி உன் உயிர்
(உன்)னுயிர் போயினும் நெறி வழுவா
ஏந்தலே! அய்யனே! நீவிர் நலம்
பல பெற்று சைவம் காத்து நிற்க
அருள் புரிவானே அந்த ஆறுமுகனே!
 
Siva Sir!

தங்கள் கருத்துக்களில் எனக்கு முழு உடன்பாடு இல்லை!

மாற்றுக் கருத்துக்களைச் சொல்ல ஒப்புதல் அளித்தால், என் கருத்துக்களை முன்வைக்கிறேன்!

நட்புடன்,
ராஜி ராம் :amen:
 
Author:sivashanmugam.
Title: sivakumara.
மதுரைமா நகர் வாழும் என்
நண்பா சிவ குமார ...............

சிவஷண்முகத்தின் கவிதை, சிவாவின் 'நூலில்' சென்றது ஏன்?

'என்னுடைய தமிழ்க் கவிதைகள்' என்ற நூலின் தலைப்பினாலா?
 
மதிப்பிற்குரிய திருமதி ராஜி ராம்
அவர்களுக்கு ..நான் வேறு ஒரு
தளத்தில் எழுதியதை இங்கு
பதிந்துளேன் ..சிவா என்று இருந்தாலே
அவர்களை தேடிச்சென்று நட்பு பாரட்டும்
குணம் எனக்கு உண்டு.
இது நான் எழுதியது ..

என்னுடைய தமிழ் கவிதை என்று இருந்ததால்
இங்கு பதிந்துவிட்டேன் ..
நன்றி
 
கவிதை மிகவும் அருமை.
மனமார்ந்த பாராட்டுக்கள் ..
கடைசி நான்கு வரிகளை...
நான்கு சீர் உள்ளதாக அமைத்து
எழுதியிருந்தால் இன்னும் நன்றாக
இருக்கும். இது என்னுடைய தாழ்மையான
கருத்து ..
அன்புடன் சிவஷன்முகம்
 
மதிப்பிற்குரிய திருமதி ராஜி ராம்
அவர்களுக்கு .............சிவா என்று இருந்தாலே
அவர்களை தேடிச்சென்று நட்பு பாரட்டும் குணம் எனக்கு உண்டு.
இது நான் எழுதியது ..

என்னுடைய தமிழ் கவிதை என்று இருந்ததால்
இங்கு பதிந்துவிட்டேன் ..
நன்றி
சிவஷண்முகம் அவர்களுக்கு ஓ போடுகிறேன்!

ஒரு சின்ன விஷயம்!

என் பெயர் கொண்ட பலர், திறமைசாலிகள்; என் சுற்றம் நட்பில்! ஆனால்,
என் பெயர் உள்ளவரை, நான் பணிப்பெண்ணாக அமர்த்துவதில்லை!

ராஜி ராம் :bump2:
 
கவிதை மிகவும் அருமை.
மனமார்ந்த பாராட்டுக்கள் ..
கடைசி நான்கு வரிகளை...
நான்கு சீர் உள்ளதாக அமைத்து
எழுதியிருந்தால் இன்னும் நன்றாக
இருக்கும். இது என்னுடைய தாழ்மையான
கருத்து ..
அன்புடன் சிவஷன்முகம்
ஒரு சின்ன விண்ணப்பம்:

'Reply with quote' என்ற option எடுத்து, மேற்கோள் காட்டினால், எந்தக் கவிதை என்று எளிதாக விளங்கும்!

'Go advanced' என்பதைச் சொடுக்கினால்தான், தமிழ் எழுத்துக்கள் தெரியும். இல்லையேல், நமக்கே புரியாது!

Best wishes,
Raji Ram
 
reply to # 36

My dear Raji Ram,
It is a case of Siva Vs Siva.
:boxing:

May I know whom you are addressing as Siva sir?

Is it ----Siva or Siva---?? :decision:

with best wishes,
V.R.akka.
 
நாடென்ன செய்ததெனக் கேட்க வேண்டா
நானென்ன செய்வேனெனச் சொல்வாய் மனிதா
தீதெல்லாம் அகன்றபின்னர் திருந்துவேன் எனச்சொன்னால்
மூதோர்கள் சொன்னநெறி இதுவல்ல எனவுணர்வாய்


அலையோய்ந்து கடலினிலே குளித்தலு மில்லை
நிலைதிருந்தி நானிங்கு மாறுவது மில்லை
பலவகையாய்ப் பலநிலைகள் பாரிலெனை வருத்திடினும்
நிலைகுலையா மனத்துடனே என்நெறியைப் போற்றிடுவேன்


ஒருவிரலைச் சுட்டுகையில் நாலுவிரல் காட்டிடுமே
நமக்குள்ளே இருக்கின்ற குறைகளையே செம்மையாய்
குற்றமிங்கு பார்த்துவாழின் சுற்றமென ஏதுமில்லை
குறைகளையே நிறையாக்கிக் குணம்காண்பாய் மானுடா


என்கடமை யானாற்ற எனக்கெதுவும் உதவி வேண்டாம்
மன்னுலகில் என்நெறியை நான்செய்யத் தயங்க வேண்டாம்
பொன்னுலகம் ஆனபின்னே பூணூலும் தானெதற்கு
இன்னுலகில் என்நெறியை ஆற்றுவதே சிறப்பு
 
இங்கு துள்ளல் ஓசை மிகுந்து நான்கு சீர் கொண்டு
நான்கு நான்கு அடிகளாக கலிப்பா வகையில் அமைந்து
இருந்தாலும் ..கடைசியில் ஐந்து சீர் கொண்டு எழுதியது
மாற்றி நான்கு சீர் வைத்து எழுதி இருந்தால் இன்னும்
சிறப்பாக இருக்கும்..

''என்கடமை ...... தயங்க வேண்டாம்''
(என்ற அடிகள் பார்க்கவும் ... )
தற்கால கவிதை உரை வீச்சிற்கு(இலக்கணம்)பொருந்துமா
என்பதை தமிழ் ஆய்வாளர்கள் தான் கூறவேண்டும்
 
Last edited:
சிவஷண்முகத்தின் கவிதை, சிவாவின் 'நூலில்' சென்றது ஏன்?

'என்னுடைய தமிழ்க் கவிதைகள்' என்ற நூலின் தலைப்பினாலா?
Is it not clear even after this post, akka?

The one who started the thread is Siva Sir!!
 
'நாடென்ன செய்தது' என்பது
திரு v .s .k அவர்களின் கவிதை.
:dance:

திரு ஹரிதாஸ சிவாவின் மீது
நண்பர் சிவா அதை ஏற்றுவது ஏன்?
:smash:

இரவு ஒருமணி வரைக் கண் தூக்கம்
இன்றி v.s.k பட்ட பாடெல்லாம் வீணா?
:ranger:
 
மதுரைமா நகர் வாழும் என்
நண்பா சிவ குமார ????

Yaar, Yaar, Yaar, avar yaaaro?
:noidea:
தனி மனிதப் பாராட்டுக் கவிதைகளைத் தவிர்க்கலாம் என இன்னொரு 'நூலில்' எழுதியுள்ளேன்!
 
யார் என்று தெரிந்தால் பாராட்டையாவது
யாரவது ஒருவேளை ரசித்து இருக்கலாம்!
:tea:
 
...

என் பெயர் உள்ளவரை, நான் பணிப்பெண்ணாக அமர்த்துவதில்லை!

ராஜி ராம் :bump2:

ராஜி, எனக்கு தெரிந்த ஒரு ஐயங்கார் நண்பருக்கு பெருமாள் என்ற ஒரு எடுபடி ஆள் இருந்தான். அவனுக்கு சாமி பெயர் இருந்ததுனாலே என் நண்பருக்கு அந்த ஆளே திட்ட முடியல்லே.

ஒரு நாள் அவனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து, 'டே பெருமாள் ஒன் பேரே மாத்திட்டு வான்னு சொன்னார்.

சிறிது நாள் பிறகு, சிரித்துக்கொண்டு வந்தான் ஐயங்காருடைய எடுபடி ஆள்.

'பேரே மாத்திட்டேன் சாமி'

'என்னடா ஒன்னோடு புது பேர்?'

'பெரியபெருமாள்' என்று வந்தது பதில்.
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top