Raji Ram
Active member
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 46
அன்பு தருமே நட்பு.
அன்பு பற்றிப் பெருமையாகப் பேசும் வள்ளுவர்,
அன்பு தரும் சிறந்த ஒன்றைப் பற்றிக் கூறுகிறார்.
உலகில் மிகச் சிறந்த உறவுகளில் ஒன்றுதான்,
எளிதில் கிடைக்காத, நல்லோரின் சிறந்த நட்பு!
அன்பு நெஞ்சமே பிறரிடம் ஆர்வம் கொள்ளும்;
அன்புப் பெருக்கினால், நட்பும் மலரச் செய்யும்.
'அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு', இது குறள்.
அன்பு இல்லா வாழ்க்கை பயனின்றிப் போய்விடும்;
அன்பு காட்ட எவரும் உடனில்லாதும் போய்விடும்.
பாலைவனத்தில் பட்டுப் போன மரம் துளிர்க்குமா?
பாலைவனத்தில் அது துளிர்த்தாலும் பயன் தருமா?
அன்பு மனத்தில் இல்லாதவர் வாழ்க்கை, அதுபோல
என்றும் பயன் இல்லாததாக, வெறுமை ஆகிவிடும்.
'அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று', என ஓர் அழகிய குறள்!
:tea: