இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.
அறிவொளி - 30

அவளைப் பிடியுங்கள்!
___________________________


ஜனத்தொகைப் பெருக்கம்

பற்றி மிக நீண்ட


சொற்பொழிவு ஆற்றிய


குடும்பக் கட்டுப்பாடு அதிகாரி,


இந்தியாவில்


ஒவ்வொரு பத்து வினாடிக்கும்


ஒரு பெண்


ஒரு குழந்தையைப்


பெறுகின்றாள்


என்று சொன்னதும்,


துள்ளிக் குதித்த


அறிவொளி சொன்னான்


மிகவும் ஆவேசமாக,


உடனே அவளைப் பிடியுங்கள்!


:spy: . . . :fish2:
 

அறிவொளி - 31

அர்த்தம் என்ன?

_________________

மருத்துவமனையில் இருந்த

சீன நண்பனைக்


காணச் சென்ற அறிவொளி,


அவனருகில் நின்றபோது,


அவன் பல முறை


CHIN YU YAN
என்று


கத்திக் கத்தி,


இறந்துவிட்டான்.


அதற்கு அர்த்தம்


தெரிந்துகொள்ள


சீன மொழி தெரிந்த


நண்பனை நாட,


அதன் பொருளை


அவன் சொன்னான்,


ஆக்சிஜன்


குழாய்மேல்


நிற்கிறாய்!

:help:

 

அறிவொளி - 32

ஐயோ பாவமே!
___________________


அறிவொளியிடம்

நண்பன் சொன்னான்,


எனக்கு இருபது வயது,


என் அம்மாவுக்கு


நாற்பது வயது என்று.


உடனே அறிவொளி,


ஐயோ பாவமே!


உனக்கு வயது


ஐம்பது ஆகும்போதே,


உன் அம்மாவுக்கு


நூறு ஆகிவிடுமே!


:eek:


 
அறிவொளி - 33

நாய்க்குடை..
_______________________


அறிவொளி ஒரு முறை

ஆழ்ந்து யோசித்து


ஒரு விடை கண்டான்.


மழைக் காலத்தில்


ஈரத்தில் முளைப்பதால்,


நாய்க்குடை,


குடை வடிவத்தில்


இருக்கிறது என்று!

:rain:
 

அறிவொளி - 34

காது கேட்காது...
______________________

அறிவொளி சென்று


தன் நண்பனிடம்


சோகமாகச் சொன்னான்,


அதோ! போகிறாளே,


அந்தப் பெண்ணுக்குக்


காது கேக்காது!


எப்படிக் கண்டுபிடித்தான்


என்று நண்பன் வினவ,


பதில் சொன்னான்,


நான் அவளைக்


காதலிக்கிறேன்


என்று சொன்னவுடன்,


சம்பந்தமே இல்லாமல்,


என் செருப்பு புதுசு


என்று சொல்கிறாள்!

:horn:

 

அறிவொளி - 35


முதுகெலும்பு!
______________________


ஆசான் வகுப்பில்


உங்கள் முதுகெலும்பு


பற்றி எழுதுங்கள்


என்று கேட்டவுடன்,


அறிவொளி இவ்வாறு


எழுதினான்:


முதுகெலும்பு


பல எலும்புகளின்


கோர்வையே ஆகும்.


முதல் எலும்பின் மேல்


என் தலை உட்காரும்;


கடைசி எலும்பின்மேல்


நான் உட்காருவேன்!

:peace:
 

அறிவொளி - 36

உள்ளே இருக்கிறது!
__________________________


மருத்துவக் கல்லூரியில்

காது மூக்கு தொண்டை

நிபுணர் வந்து,


டார்ச் அடித்து,


ஒருவரைப் பரிசோதித்து,


இப்போது பார்த்ததில்


என்ன தெரிகிறது?


என்று கேட்டவுடன்,


அறிவொளி சொன்னான்,


எனக்குத் தெரியுமே!


உங்கள் டார்ச்சின் உள்ளே


பாட்டரி இருக்கிறது!

:bump2:


 
அறிவொளி - 37

பாவம் புற்கள்!
__________________

புல்வெளியில் நடந்தபோது


அறிவொளியிடம், நண்பன்


பனித் துளியைக் காட்டி,


எத்தனை அழகு இது,


என்று சொல்ல, அவனோ,


பாவம் இந்தப் புற்கள்


என்றான் சோகமாக!


ஏனென்று கேட்டதும்


வந்தது பதில்,


வெய்யில் சூடு


தாங்க முடியாமல்,


புற்களுக்கு வியர்க்கிறதே!


:ballchain:
 

அறிவொளி - 38


ஏன் இல்லை?
_________________


அமெரிக்காவில் வந்து

இறங்கிய அறிவொளி


ஒரு அணிலைக்
கண்டான்;


அதன்
முதுகில்


கோடுகள் இல்லை!


உடனே காரணம்

கண்டுபிடித்தான்,


ராமர் இந்த ஊருக்கு வந்து


அணில் முதுகைத்


தடவவில்லையே!

:decision:

 

அறிவொளி - 39

நாய்க்குத் தெரியாதே!
_______________________

நண்பன் வீட்டுக்குச்

சென்ற அறிவொளி,


பெரிய அல்சேஷன்


நாயைக் கண்டான்!


பயந்து ஓடியவனிடம்


நண்பன் சொன்னான்,


நாயிடம் கடிக்கக்


கூடாது என்று


தான் சொன்னதாக!


அறிவொளி சொன்னான்,


நமக்குத் தமிழ் தெரியும்;


நாய்க்குத் தெரியாதே!

:fear: . . . :bolt:

 

அறிவொளி - 40

காத்திருக்கிறேன்!

_______________

அமெரிக்காவின்


சில பகுதிகளில்,


இலையுதிர் காலத்தில்


இலைகள் நிறம் மாறும்


என்று அறிந்த அறிவொளி,


ஒரு மரத்தடியில் அமர்ந்து,


சோகம் நிறைந்தவனாய்


இலைகளையே


நோக்கிக் கொண்டிருக்க,


நண்பன் ஏனெனக் கேட்க,


எத்தனை நேரமாகக்


காத்திருக்கிறேன்!


ஒரு இலையும்


நிறம் மாறவே இல்லையே


என்று வருந்தினான்!


:pout:
 

அறிவொளி - 41


முன்பா, பின்பா?
__________________

உடல் பருமனால்


வருந்திய அறிவொளி


மருத்துவரை நாட,


அவர் கூறினார்,


இரவு

இரண்டு


சப்பாத்திகள் உண்டால்


உடல் இளைக்கும் என்று!


உடனே அறிவொளி கேட்டான்,


இரவு உணவுக்கு

முன்பா, பின்பா?

:hungry:
 

அறிவொளி - 42

எது கனம் அதிகம்?
_____________________


ஒரு வினாடி வினா

நிகழ்ச்சியில்


கேட்டனர் ஒரு கேள்வி.


எது கனம் அதிகம்,


ஒரு கிலோ பஞ்சா,


ஒரு கிலோ இரும்பா,


என்று.


அறிவொளி வியந்தான்,


இரும்புதான்


கனம் எ
ன்று

சிறுவன்கூட
அறிவானே!

:decision:

 

அறிவொளி - 43


விளையாட்டு தேவை!
_______________________

உடல் மெலிய


விரும்பிய அறிவொளியை,

தினமும் மாலையில்


ஏதேனும் விளையாட்டு


விளையாடச் சொன்னார்


குடும்ப வைத்தியர்!


உடனே கடையிலிருந்து


Carrom Board ஒன்றை


வாங்கி வந்தான் அவன்! :dance:



41qyExfQnNL._SL500_AA300_.jpg
 

அறிவொளி - 44


பார்வை நேரம்!
_________________

தன் கண்களைப்

பரிசோதிக்க வேண்டி


மருத்துவரை அணுகிய


அறிவொளி,


அவரைப் பார்க்காமலே


வந்துவிட்டான்!


ஏனென்று கேட்க,


பதில் வந்தது,


'அந்த மருத்துவர்,


வெளியில் உள்ள


அறிவிப்புப் பலகையில்,


பார்வை நேரம்


காலை 9 முதல் 12
வரை


என்று போட்டிருக்கிறார்;


பாவம்!
அவருக்கே


மூன்று மணி


நேரம்தான் பார்வையாம்!'


:sad:

 

அறிவொளி - 45


ஏன் இல்லை?

___________________

உணவகத்திற்குச்

சென்ற
அறிவொளி


மிகவும் கோபமாகக்


கத்திக்கொண்டு இருக்க,


உரிமையாளர் வந்து


என்ன காரணம்


என்று விசாரிக்க,


பதில் வந்தது,


'பேப்பர் ரோஸ்ட்'


என்று சொல்லி


எடுத்து வந்து


வைத்த தோசையில்,


செய்திகள் ஒன்றும்


காணவில்லையே?


:hungry: . . . :rant:


 
அறிவொளி - 46

ஏன் தாமதம்?
_________________

குடும்ப வக்கீலிடம்


சென்ற அறிவொளி,


தன் நண்பன் மீது


கேஸ் போடவேண்டும்


என்றான், கோபமாக!


காரணம் கேட்டதும்,


அவன் தன்னை


நீர்யானை என்று


பத்து ஆண்டுகளுக்கு


முன்பு, ஒருநாள்


திட்டியதாகச் சொன்னான்!


ஏன் இத்தனை


தாமதமாகக் கேஸ்?


என்று கேட்டதும்


பதில் வந்தது,


நேற்றுத்தான் நான்


மிருகக்காட்சிசாலைக்குச்


சென்று, நீர்யானை


எப்படி இருக்குமென்று


அறிந்துகொண்டேன்!


:decision: . . . :rant:
 

அறிவொளி - 47
_______________________

கிரிக்கெட் விளையாட்டு


பற்றிய


ஒரு பக்க


விமர்சனத்தை


எழுதுமாறு


ஆசான் பணிக்க,


அறிவொளி


ஒரே நிமிடத்தில்


அதை எழுதி


முடித்துவிட்டான்!


என்ன எழுதினான்


தெரியுமா?


மழையின் காரணமாக


அன்றைய விளையாட்டு


ரத்து செய்யப்பட்டது!

:peace:
 

அறிவொளி - 48

ஒப்புக்
கொண்டார்களே!

----------------------------------------------

அறிவொளியின் தந்தையும்


அவனைப் போலவேதான்!


அகால மரணம்


அடைந்த அவருக்குக்


கோலாகலமாக


இறுதி ஊர்வலம்!


ஆச்சரியித்த நண்பன்


ஏன் இந்தக் கொண்டாட்டம்


எனக் கேட்க,


பதில் வந்தது,


அவர் மூளைக் கட்டியால்


இறந்தார்! அவருக்கு


மூளை இருக்கிறதென்று


ஒப்புக்
கொண்டார்களே!


:decision: . . . :dance:

 
Last edited:
அறிவொளி - 49

மறதியோ மறதி!
________________


எல்லாவற்றையும்

உடனுக்குடன்

மறந்துவிடுவதால்,

அறிவொளி சென்றான்

நல்ல மருத்துவரிடம்!

'எனக்கு மிகவும்

மறதி, டாக்டர்!'

என்று சொல்ல,

'எத்தனை நாளாக

இந்தப் பிரச்சனை?',

என்று அவர் வினவ,

'எந்தப் பிரச்சனை?'

என்று கேட்டான் அவன்!

:becky:
 
அறிவொளி - 50
_______________________

ஹோட்டலில் உணவு


உண்ணச் சென்றபோது,

கண்ணாடித் தம்ளர்களைக்

கவிழ்த்து வைத்திருக்க,

அதைப் பார்த்த

அறிவொளி வியந்தான்!

மூடின தம்ளரில்

எப்படி நீர் ஊற்றுவது?

ஒரு வேளை ஒரு

ஓட்டை போட்டு

ஊற்றிவிட்டாலும்,

அடிப்பகுதி திறந்த

இந்தத் தம்ளரில்,

தண்ணீர் எப்படி நிற்கும்?

:noidea:

 
அறிவொளி - 51

காதல் வலை...
_________________

அறிவொளி

காதல் வலையில்


விழுந்தான்!


காதலியிடம்,


'அன்பே! என்னுடைய


சம்பளப் பணம்


உனக்குப் போதுமா?'


என்று கேட்க,


அவள் சொன்னாள்,


'எனக்குப் போதும்!


ஆனால்
ன் செலவுக்கு

நீ என்ன செய்வாய்?'

:twitch:
 
அறிவொளி - 52

உடல் வலி!
_____________________


உடல் எங்கும் வலி

என்று நினைத்து

அறிவொளி சென்றான்

மருத்துவரிடம்;

எங்கெல்லாம் வலி

என்று கேட்க,

அறிவொளி

தன் உடலின்

ஒவ்வொரு பகுதியாகத்

தொட்டுத் தொட்டுக்

கத்தினான்! பின்பு

மருத்துவர் கண்டார்,

அவன் விரல்
ஒடிந்ததை!

:bump2:
 

அறிவொளி - 53


விமானத்துக்குமா?

_______________________

அறிவொளி சென்னைக்கு

வந்தான் முதல் முறை!


அலைபேசியின்


உயரமான டவரில்


சிவப்பு விளக்கு


எரிவதைக் கண்டு,


ஆச்சரியித்துச் சொன்னான்,


'அடடா! சென்னையில்


விமானத்துக்கும்கூட


சிக்னல் விளக்கை


வைத்துவிட்டார்களே!'

:peace:

 

அறிவொளி - 54


சரி செய்தேன்!
___________________


அறிவொளி

அப்பாவிடம் கேட்டு

கம்ப்யூட்டர் வாங்கி


நீண்ட நேரம் அதை


தோண்டிக்கொண்டு


இருந்தான்!


என்னவென்று


அப்பா பதற,


சாவதானமாகச்


சொன்னான்,


'அப்பா! இ
திலுள்ள


ஆங்கில எழுத்துக்கள்


வரிசைப்படி இல்லை!


அதனால் அதைத்


தோண்டிச் சரி செய்தேன்!'

:pound:
 
Status
Not open for further replies.
Back
Top