இந்திய விஞ்ஞான மரபு

Status
Not open for further replies.

saidevo

Active member
இந்திய விஞ்ஞான மரபு

இந்திய விஞ்ஞான மரபு
1. கும்பமுனி தந்த கும்ப மின்சாதனம்

(வெண்பா)

மேல்விவரம்:
'India's Glorious Scientific Tradition' by Suresh Soni
India'S Glorious Scientific Tradition - Suresh Soni - Google Books

மட்பானை ஒன்றில் மயில்துத்தத் தூள்வைத்தே
மட்டமாய் மேலொரு தாமிரப் பட்டை
அதன்மேல் நனைந்த மரத்தூள் பரப்பியே
பாதரசப் பூச்சுள்ள நாகத் தகடிட்டால்
சாதனம்மின் சக்தி தரும். ... 1

[மயில்துத்தம் = copper sulphate; நாகம் = துத்தநாகம் = zinc]

மேனாட்டார் மின்சக்தி மின்கலம் காணுமுன்னே
ஞானி அகத்தியர் ஞாலம் அறியத்தம்
சம்ஹிதையில் மின்கல சாதனம் தந்தது
நம்பெருமை என்றுணர்வோம் நாம். ... 2

இந்தியவிஞ் ஞானியர் இவ்வுண்மை ஆய்ந்தக்கால்
அந்தமுனி சொன்ன ’மயில்கழுத்தைத்’ தேடிப்பின்
ஆயுர்வே தத்தால் மயில்துத்தம் என்றறிந்தே
ஆய்வில் சயம்பெற் றனர். ... 3

[’மயில்கழுத்து’: மூலச் செய்யுளில் உள்ளா ’ஶிகிக்ரீவ’ என்னும் பதம்]

ஒன்றுடன் புள்ளியில் முப்பத்து எட்டென ... [1.38 volt]
நன்கமைந்த வோல்டேஜ் நலனால் - கலனவை
நூறானால் மின்சக்தி யூற்றெனச் சொன்னதை
மாறாமல் கண்டறிந்த னர். ... 4

அறுவகை மின்சக்தி ஆய்ந்தனர்நம் முன்னோர்
புறணியோ பட்டோ உரசத் தடித்சக்தி
கண்ணாடி ரத்னமு ராய்வில்சௌ தாமனி
விண்முகில் மோதவரும் மின்னலது வித்யுத்தாம்
மட்கலன் நூறில் சதகும்ப சக்தியாம்
மட்கலன் ஒன்றில் வருமே ஹிருதனி
காந்தம் அசனி தரும். ... 5

[புறணி = தோல்]

கும்பத் துதித்த குறுமுனி செய்திபோல்
நம்மூல நூல்களில் நானா விதமுண்டு
முன்னோர் மொழியை முழுமூச்சாய்க் கற்றாய்ந்தால்
நன்மைபல உண்டே நமக்கு. ... 6

--ரமணி, 11/07/2014, கலி.27/03/5115

*****
 
The good news is lots of individuals and groups have developed deep respect for the knowledge base and are making serious efforts to retrieve, archive and popularize scientific material scattered in the form of manuscripts in samskrit and regional languages. With the tradition respecting new government, hope more resources will be allotted.
 
namaste Sarang.

I am glad about your reply that our scientific tradition is in the process of being recognized by our research people. I would request you to post here specific references with some description of or links to the research in this area.

Regards,
ramaNi (saidevo)
 
இந்திய விஞ்ஞான மரபு
2. போஜராஜாவுக்கு ப்ரெய்ன் சர்ஜரி!

(வெண்பா)

கல்வியும் கேள்வியும் ஆல மரமாக
வல்லிதின் நாட்டில் வளர்த்தே அரசாண்ட
மன்னவன் போஜன்தன் மண்டையுள் கட்டியால்
துன்பமிக வுற்றான் துடித்து. ... 1

மூளையுள் கட்டியை முற்றும் குணமாக்க
ஆளெனப் பற்பல வைத்தியர் வந்தும்
நலிவது தீராது நைந்தே அரசன்
வலியால் துடித்தானோர் ஆண்டு. ... 2

மருத்துவத்தில் நம்பிக்கை மாய்ந்தே அரசன்
மருத்துவர் நாட்டில் வசித்தல் தடுத்தான்
மருந்தெலாம் ஆட்கொண்டே ஆற்றில் எறிந்தான்
இருந்தான்தன் அந்தம் என. ... 3

வந்தார் இருவராய் வைத்திய அந்தணர்
எந்தவோர் நோயையும் தீர்க்கும் மருத்துவம்
தம்மிடம் உண்டு தலைவனே என்றனர்
சம்மதம் தந்தான் தலை. ... 4

மோகச்சூர் ணம்தர போஜனும் மூர்ச்சையுற்றான்
ஆகத் தரசனாம் மண்டை திறந்தே
கயலள வோங்கிய கட்டியை நீக்கத்
துயரமும் நீங்கிய து. ... 5

[ஆகம் = உடல், மனம்;]

சந்தா னகரணியால் தைத்ததில் மண்டையும்
முந்துபோ லானதே முற்றும் குணமுற்றே
சஞ்ஜீ வினிமூலம் தன்நினை வுற்றபதி
சஞ்சலம் தீரமகிழ்ந் தான். ... 6

பொதுசகாப் தம்பதி னொன்றாம் சதகம்
பதிவுற்ற போஜன் அறுவை சிகிச்சை
பொதுசகாப் தம்முன் முதலாம் சதகம்
வதிந்தசுஷ்ரு தர்சொன்ன தாம். ... 7

[பொதுசகாப்தம் = B.C.--before Christ, A.D.--Anno Domini என்ற சுருக்கங்கள்
இன்று B.C.E.--before Common Era, C.E.--Common Era எனும் வழக்கு.]

அறுவை சிகிச்சையில் சுஷ்ருதர் நூலில்
அறுவை வகைகளாய் ஆறொ(டு) இரண்டும்
கருவிகள் நூறின் அதிகமும் என்று
விரிவாய் விளக்குவ ரே. ... 8

அறுவையின் முன்னும் அறுவையின் போதும்
அறுவையின் பின்னுமென் றாய்ந்தவர் சொன்ன
குறிப்புகள் இன்றும் உறுதுணை யாகப்
பெறுவது மன்பதைப் பேறு. ... 9

பெருவகை மூலிகை யேமருந் தாகி
மருங்கினில் ஏதும் விளைவுகள் அற்றதாம்
ஆயுர்வே தத்தின் மருந்தினில் வேரொடு
நோயகல் நன்மை நுகர்வு. ... 10

ஆயுர்வே தங்கொள் அருமை மருத்துவ
ஆய்வினை இன்று அகிலமே செய்திட
வாயளவில் நாமதன் மாண்பினைப் போற்றுதல்
தூய மடிமையின் ஊற்று. ... 11

--ரமணி, 14/07/2014, கலி.30/03/5115

*****
 
இந்திய விஞ்ஞான மரபு
3. பரத்வாஜ மாமுனியின் ஸ்பெக்ட்ரோமீட்டர்

(வெண்பா)

சூரிய வெண்கதிர் உள்ளுறை ஏழ்நிறம்
பாரில் முதன்முதல் ஆய்ந்தார் நியூட்டன்;
நிறம்பிரி மானிபிரான் ஹோஃபெர் காணப்
புறக்கதிர் செம்மையின் ஊதாவின் பின்னுறும்
கட்புல னாகாக் கதிர்கள் இருப்பதன்
உட்பொருள் கண்டே உரைத்தனர் மற்றவர்;
அன்றேநம் முன்னோர் அறிந்தார் இவையென
இன்றுநாம் காணல் எவண்? ... 1

உலகின் மிகப்பழ நூலாம்ரிக் வேதம்
நலம்தரும் ஏழ்நிறம் ஞாயிறின் பாய்மா ... [பாய்மா = குதிரை]
உருவகம் தந்தே உடலுள் மனத்துள்
சுரப்பதன் உண்மை சொலும். ... 2

உருவகந் தன்னை உலகின் வழக்கில்
பரிசோ தனைக்கொரு யந்திரம் சொல்லியே
இன்றுநாம் காணும் நிறப்பிரி மானியின்
பன்மடங் காற்றல்கொள் யந்திரம் என்றே
பரத்துவர் தந்த பனுவலிற் காணும்
திறத்தில் உறுமே திகைப்பு. ... 3

துவாந்தப் ரமாபக யந்திரம் பேரென்
றவாவும் கருவியை தாங்ரேயாம் விஞ்ஞானி
சித்திரம் மூலம் சிறப்பினை ஆய்ந்ததன்
வித்தகம் கண்டறிந்தா ரே. ... 4

கட்புல னாகாக் கதிராய்வில் நம்முன்னோர்
நுட்பம் பொருண்மையின் நுண்செயல் பாட்டினைச்
சொல்லினில் தந்ததைச் சோதனை யும்செயும்
வல்லமை பெற்றிருந் தார். ... 5

பரத்துவர் யந்த்ரப் பயன்பாட்டில் உள்ள
பொருள்தொழில் நுட்பம் உருவமைப் பெல்லாம்
அறிவியல் இன்றும் அறிந்திலை யென்றே
சிறப்புறும் யந்த்ர மிது. ... 6

பற்பல யந்த்ரம் பகரும் பனுவலாய்ப்
பற்பல உண்டென் றறிந்தே இளைஞர்
அவையெலாம் ஆய்ந்தே கருவிகள் செய்தால்
அவனியில்நாம் முன்னுற லாம். ... 7

--ரமணி, 16/07/2014, கலி.32/03/5115

மேல்விவரம்:
dhvAnta pramApakaM yantraM (Spectrometer): MN Dongre
http://www.new.dli.ernet.in/rawdataupload/upload/insa/INSA_1/20005afc_611.pdf

Spectroscopy in Ancient India: MN Dongre
http://www.new1.dli.ernet.in/data1/upload/insa/INSA_2/20005a5f_229.pdf

*****
 
இந்திய விஞ்ஞான மரபு
4. கோத்திரத்தின் பின் மரபணு விஞ்ஞானம்!

(வெண்பா)

[குறிப்பு:
இந்த வெண்பாக்களில் ஆங்கில எழுத்துகள் X,Y இரண்டையும் பொருள் தெளிவுக்காக
அவற்றின் ஆங்கில உருவிலேயே அமைத்துள்ளேன். இவற்றை முறையே எக்ஸ், ஒய் என்று
தமிழ்ப்படுத்தி அலகிட்டால் பாட்டின் இலக்கணம் சரியாக அமையும்.]

கோத்திரம் மற்றும் குலத்தினைப் பற்றிய
சாத்திரம் பொய்யல சாலத் தகைந்திடும்
உண்மைகள் பின்புலம் உள்ளன என்றொருவர்
வண்மையுடன் ஆய்ந்துசொல் வார். ... 1

அத்ரி பிருகுகௌத மாங்கிரச காச்யப
குத்ச வசிஷ்ட பரத்வாஜர் என்றெண்மர்
கோத்திரம் பின்னுள மூல முனியெனச்
சாத்திரம் சொல்லுவ தாம். ... 2

ஆவினம் கோவெனில் காப்பே திரமென
ஆவாம் உயிர்களின் ஆத்துமக் காப்பென
மேவிடும் கோத்திரம் மேனி மரபணு
பாவிடும் வண்ணம தாம். ... 3

பிரவரம் என்பது பின்னுறும் மூலர்
மரபுத் துறவியர் மாண்பினைச் சொல்லுவதாம்
மூவரோ ஐவரோ மூலமுனி வர்க்கமென்
றாவதன் சொல்பிரவ ரம். ... 4

கோத்திரம் ஆராய்ந்தே கொள்ளும் திருமணத்தில்
கோத்திரம் ஒன்றெனில் கொள்ளார் திருமணம்
கோத்திரம் ஒன்றெனில் ஓருதரத் தெச்சமெனச்
சாத்திரம் கொள்ளுவ தால். ... 5

இருபத்து மூன்று இணையிழை என்றே
குரோமோசோம் உள்ள உடற்கூ றணுவினில்
அன்னையின் X-உடன் தந்தையின் Y-என்றே
பின்னும் இழைகள் இவை. ... 5

பிள்ளையது ஆணெனில் XY உடற்கட்டும்
பிள்ளையது பெண்ணெனில் XX உடற்கட்டும்
ஆணுடல் இங்ஙன் இருவகை தாங்கிடப்
பெண்ணுடல் ஓர்வகை யே. ... 6

ஆணால் பெருகும் மனித வினத்தினில்
ஆணே குடும்ப மரமூல வேரென்றே
ஆனதுவி யப்பென்றே ஆவதிலை யென்றாலும்
ஊனமொன் றுள்ளவிழை Y. ... 7

வீரியம் குன்றும் இழையென்றே Y-யது
வேறோரு தக்க வெளியிணை யின்றியே
தன்னுள் நகலினை வைத்தே குறைகளைத்
தன்னுள் சரிசெய்வ தாம். ... 8

இதனால் குறையென் றிழையில் நிலைத்தால்
வதுவினம் அக்குறை வாங்கிடும் சாத்தியம்
ஆணிழை கொள்ள அவனியில் ஓர்தினம்
ஆணினம் அற்றிட லாம்! ... 9

பெண்ணுறும் XX இழையில் இதுபோல
நண்ணும் குறையற நன்கு பெருகியே
மண்ணில் மகளினம் மட்டுமெனும் சாத்தியம்
பெண்ணுறும் சக்தியின் மாண்பு! ... 10

ஒரேகோத் திரத்தில் உறுமணம் இங்ஙன்
குறையுறும் ஆண்பிள்ளைக் கூறினால் இத்தடை
கோத்திரம் வேறால் குறையுறும் ஆணிழைச்
சாத்தியம் குன்றிடு மாம். ... 11

அட்ட ரிஷிகள் அயன்புத் திரரெனில்
அட்டகோத்ரம் ஓரினம் ஆகாதோ என்றால்
மலரோன் மனவழி மக்களிவ ராக
இலையெனவாம் இந்தக் குறை. ... 12

இன்றைய சூழலில் இத்தகு கட்டுகள்
நன்றல வென்றேதான் நானிலம் தள்ளினும்
முன்னோர் நெறியினில் முந்துறும் விஞ்ஞான
நன்மைகள் நோக்குதல் நன்று. ... 13

--ரமணி, 16/07/2014, கலி.32/03/5115

மேல்விவரம்:
http://www.hitxp.com/articles/veda/...u-gotra-y-chromosome-male-lineage-extinction/

*****
 
Last edited:
இந்திய விஞ்ஞான மரபு
5. பூஜ்யத்தால் வரும் ராஜ்ஜியம்!

(வெண்பா)

ஒன்றுமுதல் ஒன்பதும் பூஜ்யமும் உள்ளடக்கி
அன்றேநம் முன்னோர்கள் அண்டம் அளந்தே
பிரம்மத்தின் உண்மையே பின்புலமாய் உள்ள
உருவுயிர் கண்டனர் உற்று. ... 1

வேதியின் செங்கற்கள் எண்ணிக்கை பற்றியோர்
வேதம் உரைசொல்லாம் வேள்விப் பயனென
ஓதுதல் கீழுளவா று. ... 2

ஒருபசு வாக உதித்துப் பெருகி
ஒருபத் தெனும்தசம் ஓர்நூ றெனும்சதம்
ஓராயி ரம்சகஸ்ரம் ஓங்கி யதன்பின்
அயுதம் எனச்சொல்பத் தாயிரம் ஆகி
நியுதம் எனுமோர் இலட்சமாய்ப் பின்-பி
ரயுதமாம் பத்துலட்ச மாக வளர்வதே
அர்புதமாம் கோடியென் றாகி யதுவே-நி
யர்புதப் பத்துகோடி யாகி அதுவும்
சமுத்ரமாம் நூறெனும் கோடியாய் மத்யமாம்
ஆயிரம் கோடியும் அந்தமாம் ஓர்பதி
னாயிரம் கோடி பரார்த மெனுமோர்நூ
றாயிரம் கோடியாய்ப் பல்கி அழற்றேவ
என்செல்வம் ஆனிரை யென்றே அருள்புரிவாய்
இம்மை மறுமையி லே. ... 3

[101 முதல் 1012 வரை எண்களின் பெயர்களைக் குறிக்கும் வேதமந்திரம்.
--சுக்ல யஜுர்வேதம் 17.2]

சூன்யம் எனவரும் சொல்குறிக்கும் பூஜ்யமே
ஆன்று வலம்வரும் அத்தனை எண்மொழியில்
சூன்யமெனும் பேர்வரும் சொல்லில்லை! நம்முன்னோர்
சூன்யமெனும் எண்ணறியா ரோ? ... 4

இதுவே எழுத்தெண் ணிடைவே றுபாடு
சதமெனும் எண்ணதே தாங்கிடும் பூஜ்யம்
சதமெனும் வேதச்சொல் தாங்கிலை யேனெனில்
வேதம் எழுத்துருவில் ஏடுறும் கல்வியல்ல
காதுறும் கேள்வியென்ப தாம். ... 5

அந்நாள் கணிதமும் வானியலும் பூஜ்யத்தைப்
பன்மொழியில் சுட்டுதற்(கு) ஆகாசம், அம்பரம்,க
என்ற துளையாம், ககனம் எனும்சொற்கள்
ஒன்றின்நே ரொன்றாய்ச் சொலும். ... 6

பிந்துவெனும் புள்ளி, இரந்திரம் சித்ரமென
வந்தே சிறுவட்ட மாகும் குறிகளை
இந்தவெண் பூஜ்யம் பெறும். ... 7

தசமெனும் எண்ணே அடிநிலை யென்றே
தசத்தினால் முன்மதிப்பின் தாக்கென ஓங்கும்
கணிதமுறை நம்முன்னோர் கட்டியே செய்து
கணித்தனர் உண்மை களை. ... 8

[அடிநிலை = base; தாக்கு = பெருக்கல்]

வலமிடம் ஏறும் மதிப்பைக் குறித்தே
நலமிகச் சொல்லுவர் ஆரிய பட்டர்
தசகுணத் தாக்கினில் தானம்-ஒவ் வொன்றும்
வசமாய் விலையில் வலமிடம் ஏறவே
ஒன்றுபத் தாகியே நூறாகும் ஆயிரம்
என்றாமத் தானத் திலே. ... 9

[ஆர்யபட்டீயம் 2.2]

எண்ணிரண்டே ஆதாரம் என்றுவரும் பைனரி
எண்ணத்தை அந்நாளில் பிங்களர் சொன்னார்
பிரம்மி முறையிலே இல்லாத பூஜ்யம்
உருவட்டம் கொள்ளும் முறைநா கரியிலே
கல்வெட்டும் செப்பேடும் காலம் வெகுமுன்னே
சொல்வெட்டி யெண்ணாற் சொலும். ... 10

எண்களின் பேருடன் பின்னமும் அத்துடன்
எண்களால் ஆகும் பெருக்கல் வகுத்தல்
கழித்தலுடன் கூட்டல் கணக்கினைச் செய்யும்
வழிகளும் நான்மறை அங்கமாம் சூத்திர
நூல்களிலும் பின்வந்த நூல்களிலும் உள்ளதை
நால்வகை நாம்கற்றல் நன்று. ... 11

[நால்வகை = கல்வி, கேள்வி, விவாதம், ஆராய்ச்சி]

பூஜ்யமோ சூன்யமாம் பூரணம னந்தமாம்
ராஜ்யமாய்ப் பல்வகை ஞானம் இடையிலே!
சூன்யம் கணக்கிலும் பூர்ணம் வெளியிலும்நம்
ஆன்றார் அறிந்தனர் அன்று. ... 12

--ரமணி, 22/07/2014, கலி.06/04/5115

மேல்விவரம்:
Snippets of Hindu Science - Hindu Dharma Forums

*****
 
இந்திய விஞ்ஞான மரபு
6. உலக உயிரினம்: தொகையும் வகையும்

(வெண்பா)

உயிரினக் கூறாய் உலகினில் இன்று
இயலும் வகையெண் இலட்சம் பதின்மூன்
றெனவே அறிவியல் எண்ணிட் டுரைக்கும்;
வினவே மனித வியல்பு. ... 1

ஒவ்வொரு நாளும் புதுவகை கண்டறிந்தே
செவ்விதம் கூறிடச் செப்பிடும் எண்ணிது
மாறியே ஒவ்வொரு ஆண்டிலும் ஆயிரம்
ஏறிடும் பத்தைந் தென. ... 2

உலகில் உறையும் உயிரன மொத்த
இலக்கமாய் எண்பதின் ஏழு இலட்சமென்(று)
இன்றைய ஆய்வொன்(று) இயம்பிடும் இவ்வெண்ணை
அன்றறி வோமேநாம் நன்று. ... 3

பதும புராணத்தில் பல்வே றுயிரின்
தொகையென ஓரெண் உரைப்பது காணலாம்
எண்பத்து நாலு இலட்சம் எனும்தொகையில்
பண்பட்டு நிற்கும் உயிர். ... 4

நீர்வாழும் ஒன்ப(து) இலட்சம் பதினொன்றாம்
ஊர்வன தாவரம் மொத்தம் இருபது
புள்ளினம் பத்தெனில் முப்பது மாவினம்
உள்ளறிவு மானிடர் நான்கு. ... 5

இத்தனை யோனி யிழிந்தபின் மானுட
மெத்தகு சன்மம் எனவாகும்; இன்று
அறிவியல் ஆய்வதை அன்றேநம் ஆன்றார்
அறிந்தாய்ந்தே சொன்ன(து) அழகு! ... 6

--ரமணி, 11/08/2014, கலி.26/04/5115

மேல்விவரம்:
Hinduism and the Total Number of Species or Life Forms on Planet Earth | HitXP by Gurudev

*****
 
Status
Not open for further replies.
Back
Top