'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
1851. ப்ரக்ஞா =அறிவு, புத்தியின் சக்தி, பகுத்தறிவு, சரஸ்வதியின் ஒரு பெயர்.

1852. ப்ரணதி: = நமஸ்கரித்தல், வணங்குதல், அடக்கமாக இருத்தல்.

1853. ப்ரணவ: = ஓம் என்னும் பிரணவம்.

1854. ப்ரணாம: = வணங்குதல், நமஸ்கரித்தல், வளைதல்.

1855. ப்ரணால: = ப்ரணாலீ = வாய்க்கால், தொடர்ச்சி.

1856. ப்ரணிபதனம் = ப்ரணிபாத: = சாஷ்டாங்க நமஸ்காரம்.

1857. ப்ரணிஹித= வைக்கப்பட்ட, பரப்பப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட,
நிலை நாட்டப்பட்ட.

1858. ப்ரணேத்ரு = தலைவன்.

1859. ப்ரததி: = பரவுதல், விரிவு, கொடி.

1860. ப்ரதான: = முளை, பூமியில் படரும் கொடி.
 
1861. ப்ரதாப: = உஷ்ணம் , சூடு, பிரகாசம், ஒளி, காந்தி, மேன்மை, வலிமை, சக்தி, வீரம், ஆண்மை,

1862. ப்ரதிகார: = ப்ரதீகார: = கைம்மாறு, பரிஹாரம், பழி வாங்குதல், பதிலுக்குக் கொடுத்தல்.

1863. ப்ரதிகாச': = ப்ரதீகச': = ப்ரதிச்ச2ந்த3: = பிரதி பிம்பம், நிழல், தோற்றம், சமானமானத் தன்மை.

1864. ப்ரதிகூல = விரோதமான, எதிரிடையான, எதிர்மறையான.

1865. ப்ரதிக்ரியா = பழிக்குப்பழி, பதில் செய்கை, மாற்றுச் செயல்,
கைம்மாறு, பரிஹர்ரம், அலங்காரம் செய்து கொள்ளுதல்.

1866. ப்ரதிக3த = முன்னும் பின்னும் பறக்கும், சுற்றித்திரியும்.

1867. ப்ரதிக்3ருஹித = எடுத்துக்கொள்ளப்பட்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட, திருமணம் செய்து கொள்ளப்பட்ட.

1868. ப்ரதிக்ஞா = சபதம் செய்தல், விரதம் பூணுதல், வாக்குக் கொடுத்தல், சத்தியம் செய்தல், அங்கீகரித்தல், தீர்மானித்தல், அறிவித்தல்.

1869. ப்ரதிதி3னம் = ஒவ்வொரு நாளும்.

1870. ப்ரதித்4வனி = ப்ரதித்4வான: = எதிரொலி.
 
1871. ப்ரதிநிதி4: = பிரதிநிதி, உதவி செய்பவன், ஜாமீன் கொடுப்பவன், படம், பிம்பம்.

1872. ப்ரதிபத்தி : = அறிவு, பெறுதல், கவனித்தால், நிறைவேற்றுதல், ஆரம்பம், அனுஷ்டானம், சங்கல்பம், உபாயம், கீர்த்தி, புகழ், துணிவு, நம்பிக்கை, புத்திவலிமை.

1873. ப்ரதிபத3ம் = ஒவ்வொரு காலடி சுவட்டிலும் / சொல்லிலும் / இடத்திலும்.

1874. ப்ரதிபன்ன = அடைந்த, நிரூபிக்கப்பட்ட, செய்யப்பட்ட, ஒப்புக்கொள்ளப்பட்ட, ஒரேவித எண்ணங்கொண்ட.

1875. ப்ரதிபக்ஷ = எதிர்பக்கம், பிரதிவாதி,விரோதி, எதிரி.

1876. ப்ரதிப3ந்த4: = தடி, கட்டுதல், எதிர்ப்பு, முற்றுகை, தொடர்பு.

I877. ப்ரதிபி3ம்ப3ம் = பிரதிமை, படம், பிம்பம், நிழல்.

1878. ப்ரதிபோ3த4னம் = விழித்தல், எழுப்புதல், புகட்டுதல்,
தெரிவித்தல், உபதேசித்தல்.

1879. ப்ரதிபா4 = தோற்றம், தரிசனம், பிம்பம், காந்தி, ஒளி, புத்தி,
மேதை, கற்பனை, அறிவு.

1880. ப்ரதிபா4ஷா = பதில் சொல்லுதல்.
 
1881. ப்ரதிபா4ஸ : = மனதில் திடீரென்று பிரகாசிப்பது / தோன்றுவது, தோற்றம், மாயை, பிரமை.

1882. ப்ரதிமா = பொம்மை, ஒரே போன்றது, ஒரே வித உருவம் உள்ளது.

1883. ப்ரதிலிபி: = சரியான நகல்.

1884. ப்ரதிவாத3: = பதில், விடை.

1885. ப்ரதிஷ்டா = திடத்தன்மை, நிலை, வீடு, பதவி, இடம், புகழ், கீர்த்தி, பூமி, பிரதிஷ்டை செய்தல்.

1886. ப்ரதிஷ்டி2த = ஸ்தாபிக்கப்பட்ட, கெட்டிப்படுத்தப்பட்ட, கட்டப்பட்ட, புகழுடன் கூடிய.

1887. ப்ரதிஸரம் = தாயத்து, ரக்ஷை, மஞ்சள் கயிறு, கங்கணம்.

1888. ப்ரதிஹதி: = பதிலடி, சோர்வு அடைதல், சினம்.

1889. ப்ரதிக்ஷணம் = ஒவ்வொரு நொடியும்.

1890. ப்ரதிக்ஷிப்த = தள்ளப்பட்ட, எதி
ர்க்கப்பட்ட, நிந்திக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட.
 
1891. ப்ரதிகம் = விக்ரஹம், வாய், முகம், வாக்கியத்தின் முதல் சொல்.

1892. ப்ரதீசீ = மேற்கு திசை.

1893. ப்ரதீசீன் = மேற்கத்திய, மேற்கிலிருந்து, பின்தொடரும்,

1894. ப்ரதீத = புறப்பட்ட, புகழ் பெற்ற, கற்று அறிந்த, திருப்தி அடைந்த.

1895. ப்ரதீதி: = நம்பிக்கை, அறிவு, நிச்சயித்தல், சந்தோஷம், அருகே
செல்லல்.

1896. ப்ரதீக்ஷணம் = ப்ரதீக்ஷா = எதிர்பார்த்தல், ஆசை, விருப்பம்,
பார்த்தல்.

1897. ப்ரத்யேகம் = ஒவ்வொன்றிலும் தனித்தனியாக.

1898. ப்ரத்யபி4ஞானம் = நினைவு படுத்திக் கொள்ளல், நினைவு படுத்தும் பொருள்.

1899. ப்ரத்யய: = நம்பிக்கை, சிரத்தை, காரணம், ஆதாரம், புகழ், அனுபவம், தொளை, அப்யாசம்.

1900. ப்ரத்யவாய: = குறைவு, ஆபத்து, தடை, மாறுபட்ட வழி, பாவம்.
 
1901. ப்ரத்யர்பித = திருப்பிக் கொடுக்கப்பட்ட.

1902. ப்ரத்யக்ஷ = எதிரேயுள்ள, பார்க்கக்கூடிய, விளக்கமான, கண் எதிரே உள்ள.

1903. ப்ரத்யாதே3ச' : = கட்டளை, மறுப்பு, அறிவிப்பு, பிரகடனம், எச்சரிக்கை.

1904. ப்ரத்யாசா' = அதிக ஆசை, பேராசை, விருப்பம், நம்பிக்கை.

1905. ப்ரத்யாஹார : = திரும்பி வருதல், பின் வாங்குதல், புலன்களை அடக்குதல், பிரளயம், உலகின் அழிவு.

1906. ப்ரத்யுத்தரம் = பதில், பதில் அளித்தல்.

1907. ப்ரத்யுத்பன்ன = மறுபடியும் உண்டாக்கபட்ட, தயாராக உள்ள.

1908 . ப்ரத்யுத்3யம: = எதிர் முயற்சி, நிறுத்துதல், சமானம்மான எடை.

1909. ப்ரத்யுபகார: = பதில் உபகாரம்.

1910. ப்ரத்யுபஸ்தித = அருகில் வந்துள்ள, இருக்கின்ற.
 
1911. ப்ரத்யுஷஸ் = ப்ரத்யூஷஸ் = ப்ரத்யூஷம் = காலை, விடியற்காலை.

1912. ப்ரத்யூஷ: = சூரியன்.

1913. ப்ரத்யூஹ : = இடையூறு, தடை.

1914. ப்ரதம = முதல், முதலான, முக்கிய
மான, முன் காலத்திய.

1915. ப்ரதா2 = புகழ், பிரசித்தி.

1916. ப்ரது2: = விஷ்ணு.

1917. ப்ரது2க : = அவல்.

1918. ப்ரத3ர்சனம் = தோற்றம், காண்பித்தால், கற்பித்தல்.

1919. ப்ரதா3த்ரு = கொடுப்பவன், தாராளமானவன், இந்திரன்.

1920. ப்ரதா3னம் = தானம் செய்தல், கொடுத்தல், திருமணம் செய்து கொடுத்தல்.
 
1921. ப்ரதீ3ப : = விளக்கு, விரிவுரை, பிரகாசப்படுத்து.

1922. ப்ரதே3ச' : = இடம், நாடு, மாகாணம், சுவர், உதாரணம்.

1923. ப்ரதோ3ஷ : = குற்றம், பாவம், அந்தி
ப் பொழுது, சூரியன் அஸ்தமனத்துக்கு முன்னும் பின்னும் ஆன காலம்.

1924. ப்ரத்3யும்ன : = கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் பிறந்தவன், மன்மதன்.

1925. ப்ரத4னம் = போர், அழிவு, பிளத்தல், போரில் கொள்ளை அடிக்கப்பட்ட பொருள்.

1926. ப்ரதா4ன = முக்கியமான.

1927. ப்ரதா4னபுருஷ: = முக்கியமானவன்.

1928. ப்ரபஞ்ச : = உலகம், விஸ்தாரத்தன்மை, விவரித்தல், குவியல், கூட்டம், தோற்றம், மாயை, தெளிவு, வஞ்சனை.

1929. ப்ரபன்ன = ஓரிடத்தை அடைந்த, வாக்கு அளிக்கப்பட்ட, அடையப் பட்ட, சரணடைந்த, பெற்ற, உடைய, எளிமையான, துன்பதில் உள்ள.

1930. ப்ரபாட2க: = பாடம், விரிவுரை, புத்தகத்தின் ஒரு பகுதி.
 
1931. ப்ரபாத: = செல்லுதல், வீழ்ச்சி, நீர் வீழ்ச்சி, செங்குத்தான மலை அல்லது பாறை.

1932. ப்ரபிதாமஹ: = முப்பாட்டன், பாட்டனின் தந்தை, பிரமன்.

1933. ப்ரபிதாமஹீ = பாட்டனின் தாய்.

1934. ப்ரபௌத்ர: = பேரனின் மகன்.

1935. ப்ரபௌத்ரீ = பேரனின் மகள்.

1936. ப்ரகுல்ல = மலர்ந்த, விரிந்த,முழுமையான, சந்தோஷமான.

1937. ப்ரபந்த4: = கட்டுரை, கற்பனை, இலக்கியப் படைப்பு, ஒழுங்கு.

1938. ப்ரப3ல = வலியுள்ள, சூரத்தனமான, தீவிரமான, முக்கிய.

1939. ப்ரபுத்3த4 = விழித்த, விழித்தெழுந்த,புத்தி கூர்மையுள்ள, அறிவு
படைத்த, மலர்ந்த, பரந்த.

1940. ப்ரபோ3த4: = விழிப்பு, விழித்தல், விழித்திருத்தல், கண்காணித்தல், புரிந்து கொள்ளுதல், விளங்கச் செய்தல்.
 
1941. ப்ரப4வ : = மூல காரணம், உண்டாக்குபவன், உண்டாகும் இடம், வலிமை, வல்லமை, சூரத்தனம், ஒரு ஆண்டின் பெயர்.

1942. ப்ரபா4 = ஒளி, பிரகாசம், காந்தி.

1943. ப்ரபாகர: = சூரியன், சந்திரன், நெருப்பு, அக்னிதேவன், கடல்.

1944. ப்ரபி4ன்ன = வெட்டப்பட்ட, துண்டிக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட, சேதமடைந்த, தூளாக்கப்பட்ட.

1945. ப்ரபு4: = எஜமானன், அதிகாரி, ஆளுபவன், பிரபு, விஷ்ணு, சிவன்.

1946. ப்ரபூ4த = உண்டான, அதிகமான, அநேகமான, பூரணமான, உயரமான, மேலான.

1947. ப்ரப்4ருதி: = ஆரம்பம்.

1948. ப்ரமத்த = ப்ரமத3 = குடிபோதையில் உள்ள, பைத்தியம் பிடித்த, அலக்ஷியமான.

1949. ப்ரமத2னம் = கடைதல், அடித்தல், காயப்படுத்துதல், கொலை செய்தல்.

1950. ப்ரமாணம் = அளவு, பரிமாணம், உருவம், எல்லை, சா
க்ஷி, அனுமானம், காரணம்.
 
1951. ப்ரமாத3 : = அசட்டை, கவனக் குறைவு, போதை, வெறி, அபாயம், துன்பம், பயம்.

1952. ப்ரமுக2 =முக்கியமான, முதலான, மேன்மையான.

1953. ப்ரமுக: = மரியாதைக்கு உரியவர்.

1954. ப்ரமோத3: = சந்தோஷம், மகிழ்ச்சி, ஒரு ஆண்டின் பெயர்.

1955. ப்ரயத்ன: = ப்ரயாஸ: = முயற்சி, உழைப்பு .

1956. ப்ரயாக3: =யாகம், குதிரை, இந்திரன், திரிவேணி சங்கமம்.

1957. ப்ரயாணம் = பயணம், யாத்திரை, புறப்படுதல்.

1958. ப்ரயுக்த = பூட்டப்பட்ட, இணைக்கப்பட்ட, சேர்ந்த, செயல்பட்ட.

1959. ப்ரயோக3: = பிரயோகித்தல், உபயோகிதல், வழக்கம், அப்யாசம்,
செயல், சாதனம், கர்மம், ஆரம்பம்.

1960. ப்ரயோஜனம் = உபயோகம், எண்ணம், குறிக்கோள், லாபம்.
 
1961. ப்ரரூட4 = முழுமை அடைந்த, வளர்ந்த, மலர்ந்த, பிறந்த.

1962. ப்ரலபனம் = பேசுதல், பிதற்றுதல், அழுகை, மழலைப் பேச்சு.

1963. ப்ரலம்ப3 = கீழே தொங்கும், மேலான, பெரிய, தாமதமான.

1964. ப்ரவசனம் = பேசுதல், கற்பித்தல், ஓதுதல், விவரித்தல், சொற்பொழிவு.

1965. ப்ரவர: = வம்சம், பரம்பரை, குலம், கோத்திரம், சந்ததியர்.

1966. ப்ரவர்தக: = நடத்திச் செல்லுபவன், ஊக்கம் அளிப்பவன்.

1967. ப்ரவர்தனம் = ஈடுபடுதல், தூண்டுதல், ஆரம்பித்தல்.

1968. ப்ரவர்த4னம் = வருதல், வளர்த்தல், மேன்மை.

1969. ப்ரவாஸ : = வெளி நாட்டுப் பயணம்.

1970. ப்ரவாஹ : = பெருகுதல், பெருக்கு, ஆறு, ஓடை, வெள்ளம், குளம், ஏரி, இடைவிடாத வரிசை
 
1971. ப்ரவிஷ்ட= உள்ளே சென்ற, நுழையப்பட்ட, ஈடுபட்டுள்ள, ஆரம்பிக்கப்பட்ட.

1972. ப்ரவீண = கெட்டிக்கார, அறிந்த, சாமர்த்தியம் உள்ள.

1973. ப்ரவ்ருத்தி: = தோற்றம், உதயம், மூலம், பெருக்கு, பிரயோகம், முயற்சி, நடத்தை, தொடக்கம், அதிருஷ்டம்.

1974. ப்ரவ்ருத்3த4 = விருத்தி அடைந்த, முதிர்ந்த, விசாலமான, விஸ்தாரம் அடைந்த.

1975. ப்ரவேச' : = உட்புகுதல், நுழைவு வாயில், வருவாய், லாபம், அரசாங்க வருமானம்.

1975. ப்ரச'ம்ஸா = துதி, புகழ், நன்கு அறியப்படுதல்.

1976. ப்ரசஸ்தி : = கவிதை, வர்ணனை, துதி, புகழ்ச்சி.

1977. ப்ரசா'ந்தி: = அமைதி, ஓய்வு, ஒழிவு.

1978. ப்ரச்'ன = கேள்வி, விசாரணை, விவாதத்துக்கு உரிய பிரச்சனை.

1979. ப்ரச'க்தி: = ஆசை, பற்றுதல், தொடர்பு, சேர்க்கை, சம்பவம், சமயம், தருணம், ஈடுபாடு.

1980. ப்ரசங்க3: = ஆசை, பற்றுதல், தொடர்பு, சேர்க்கை, முடிவு, தலைப்பு, அனுமானம்.
 
1981. பிரசன்ன = மகிழ்ச்சியடைந்த, திருப்தியடைந்த, தூய்மையடைந்த, சுத்தமான, தெளிவாக்கப்பட்ட.

1982. ப்ரஸப4ம் = பலாத்காரமாக, மிக அதிகமாக.

1983. ப்ரஸவ : = ஈன்றல், பிறப்பு, சந்ததி, குழந்தை, ஆரம்பம், மூலம் , பழம் , பூ, மொக்கு.

1984. ப்ரஸர: = முன் செல்லுதல், பரவுதல், விஸ்தரிப்பு, பரப்பு, கூட்டம், சண்டை, ஓட்டம், பெருக்கு, வெள்ளம்.

1985. ப்ரசாத3: = அ
னுக்ரகம், கருணை, தயை, தெய்வத்துக்கு படைத்த பிரசாதம், காணிக்கை, தூய்மை, தெளிவு.

1986. ப்ரசித்3த4 : = புகழ் பெற்ற, அலங்கரிக்கப்பட்ட.

1987. ப்ரசூதி: = பிரசவம், பிறப்பு, உண்டு பண்ணுதல், சந்ததி, விளைவு, பயன், மலர்ச்சி.

1988. ப்ரஸ்தர: = ப்ரஸ்தார: = படுக்கை, கட்டில், சமபூமி, சமதளம், ரத்தினம்.

1989. ப்ரஸ்தாவ: = முன்னுரை, தொடக்கம், சமயம், தருணம். சந்தர்ப்பம்.

1990. ப்ரஸ்தாவனா = புகழ்தல், ஆரம்பம், முகவுரை, முன்னுரை.
 
1991. ப்ரஸ்துத = புகழப்பட்ட, செய்யப்பட்ட, ஆரம்பிக்கப்பட்ட, முயற்சி செய்யப்பட.

1992. பரஸ்தானம் = செல்லுதல், பிரயாணம் செய்ய, முறை, மாதிரி, இறப்பு.

1993. ப்ரஸ்ரவணம் = ஓடுதல், வழிந்தோடுதல், நீர்ப் பெருக்கு, நீர்வீழ்ச்சி, வியர்வை, வாய்க்கால், தண்ணீர் வடியும் குழாய் அல்லது நாசி, சிறுநீர் கழித்தல்.

1994. ப்ரஹரணம் = அடித்தல், வெளியே தள்ளுதல், ஆயுதம், சண்டை.

1995. ப்ரஹஸனம் = பரிகாசம், ஏளனம், சிரிப்பு, தமாஷ், ஒரு வகை நாடகம்.

1996. ப்ரஹார : = அடி கொடுத்தல், காயம் ஏற்படுத்துதல், காலால் உதைத்தல்.

1997. ப்ரஹி: = கிணறு.

1998. ப்ரஹ்ருஷ்ட = மகிழ்ச்சியடைந்த,
மயிர் கூச்செறியும்.

1999. ப்ரஹேலி: = ப்ரஹேலிகா = விடுகதை, கற்பனைக் கதை.

2000. ப்ரஹ்லாத3: = அதிக மகிழ்ச்சி, சப்தம், ஒரு விஷ்ணு பக்தன்.
 
2001. ப்ராக் = முன்னாள், முதலில், கிழக்கில், எதிரில்.

2002. ப்ராக்ருத = ஸ்வபாவமான, இயற்கையான, நாகரீகம் அற்ற, நாட்டு
ப்புறத்திய, படிக்காத.

2003. ப்ராங்கணம் = முற்றம், அங்கணம், ஒரு பேரிகை.

2004. ப்ராச் = ப்ராஞ்ச் = முந்திய, முன்னதான, முன் காலத்திய, கிழக்கு திசை தொடர்புள்ள.

2005. ப்ராசீன் = கிழக்கு நோக்கிய, பழமையான, முன்காலத்திய.

2006. ப்ராசேதஸ : = மனு, தக்ஷன், வால்மீகி.

2007. ப்ராஜாபத்ய: = விஷ்ணு, பிரயாகை.

2008. பராக்ஞா = அறிவாளி, கற்று அறிந்தவன்.

2009. ப்ராண: = மூச்சு, காற்று, வலிமை, சக்தி, ஆன்மா, பிராணன்.

2010. ப்ராணநாத: = கணவன், காதலன், யமன்.
 
2011. ப்ராணந்தி = பசி, விக்கல், விம்மி அழுதல்.

2012. ப்ராணீன் = பிராணி, மனிதன்.

2013. ப்ராதர = விடியற்காலை.


2014. ப்ராதமிக = முதலான, ஆரம்பிக்கும்.

2015. ப்ராந்த: = மூலை, முடிவு, எல்லை, புள்ளி, ஓரம், அருகாமை.

2016. ப்ராப்த = அடையப்பட்ட, கிடைக்கப்பட்ட, சம்பாதிக்கப்பட்ட, பொருத்தப்பட்ட, அனுபவிக்கப்பட்ட, முடிக்கப்பட்ட.

2017. ப்ராப்தி: = பெறுதல், அடைதல், காணுதல், கூடுதல், லாபம், அதிர்ஷ்டம், பங்கு, குவியல், சேர்க்கை, பயனுள்ள முடிவு.

2018. ப்ராமாண்யம் = மேற்கோள், நிரூபணம், சாட்சியம், நம்பகத்தன்மை.

2019. ப்ராய: = புறப்பாடு, போதல், மிகுதி, வயது, சாகும்வரை உண்ணாவிரதம்.

2020. ப்ராயச்'சித்தம் = தவறு நீக்கல், தவறிலிருந்து விடுபட செய்யும் சடங்கு.
 
2021. ப்ராயஸ் = பொதுவாக, சாதரணமாக.

2022. ப்ராரப்3த4ம் = தலை விதி, ஆரம்பிக்கப்பட்ட வேலை.

2023. ப்ராரம்ப: = ஆரம்பம்.

2024. ப்ரார்தனம் = ப்ரார்தனா = பிரார்த்தனை, வேண்டல், விருப்பம், தெரிவித்துக் கொள்ளுதல்.

2025. ப்ராலேயம் = மூடுபனி, பனி.

2026. ப்ராவ்ருத = சூழப்பட்ட, மூடப்பட்ட, மறைக்கப்பட்ட.

2027. ப்ராவ்ருஷ் = மழை, மழைக் காலம்.

2028. ப்ராச'னம் = ருசி பார்த்தல், சாப்பிடுதல், உணவு, சாப்பாடு.

2029. ப்ராஸாத3: = மாளிகை, அரண்மனை, கோபுரம்.

2030. ப்ரிய = பிடித்த, பிரியமான, விரும்பத்தக்க, நேசமுள்ள.
 
2030. ப்ரிய: = காதலன், கணவன்.

2031. ப்ரியம் = அன்பு, ஆசை, கருணை, இன்பம், தொண்டு.

2031. ப்ரியா = மனைவி, பெண், செய்தி, ஒரு வகை மல்லிகை.

2033. ப்ரியதம = மிக அதிக அன்புடன் கூடிய.

2034. ப்ரியதர = ஒன்றைக் காட்டிலும் அதிகப் பிரியம் உள்ள.

2035. ப்ரீதி = மகிழ்ச்சி, திருப்தி, ப்ரியம், அனுகிரஹம், கருணை, நட்பு, அன்பு.

2036. ப்ரேத: = பிணம், பூதம், பிசாசு.

2037. ப்ரேயஸ் = காதலன், கணவன்.

2038. ப்ரேயஸீ = மனைவி.

2039. ப்ரேரணம் = ப்ரேரணா = அனுப்புதல், தூண்டுதல்,
உத்தரவிடுதல், எறிதல்.

2040. ப்ரேக்ஷணம் = பார்த்தல், பார்வை, தோற்றம், கண்.
 
2041. ப்ரேக்ஷா = பார்த்தல், கவனித்தால், தோற்றம், பார்வை, காட்சி, ஆலோசித்தல், ஆராய்ச்சி, மரத்தின் கிளை.

2042. ப்ரோக்த = சொல்லப்பட்ட, நிச்சயிக்கப்பட்ட.

2043. ப்ரோத்ஸாஹ : = உற்சாகம், உற்சாகம் ஊட்டுதல்.

2044. ப்ரோக்ஷணம் = தெளித்தல்.

2045. ப்ரௌட4 = முழுவதும் வளர்ந்த, நன்கு பழுத்த, பக்குவம் அடைந்த, வயது வந்த, முற்றின, கெட்டிக்காரனான, திருமணம் ஆன.

2046. ப்ரௌடி4: = முழு வளாச்சி, முழு மலர்ச்சி, கெளரவம், பெருமை, ஊக்கம், உத்சாஹம், துணிச்சல்.,

2047. ப்ளவ = நீந்துதல், மிதத்தல், வெள்ளம், குதித்தல், தெப்பம், படகு, தோணி, ஆடு, தவளை, எதிரி, குரங்கு, சரிவான இடம், மீன் பிடிக்கும் வலை.

2048. ப்ளவங்க3: = குரங்கு, மான், அத்திமரம், ஒரு ஆண்டின் பெயர் .
2049. ப்லவங்க3ம : = குரங்கு, தவளை.

2050. ப்ளவனம் = நீந்துதல், மூழ்குதல், குதித்தல், வெள்ளம், பிரளயம் , சரிவு.
 
2051. ப்ளு = மிதக்க, பறக்க, ஊசலாட, நீந்த, பிதுங்கி வெளிவர, மூழ்க, படகில் அக்கரை சேர.

2052. ப2ட: = பாம்பின் விரிந்த படம், வஞ்சகன், பல்.

2053. ப2ண:= பணா = பாம்பின் விரித்த படம்.

2054. ப2ல் = பழம் தர, பழம் உண்டாக, விளைவு தர, பழுக்க.

2055. ப2லம் = பழம், முடிவு, பயன், வெகுமானம், சன்மானம், உத்தேசம், குறிக்கோள், லாபம், பலகை, ஜாதிக்காய், கணிதத்தில் கூட்டல் அல்லது பெருக்கலின் பலன்.

2056. ப2லகம் = பலகை, சிலேட்டு, வழவழப்பான கற்பலகை,
மட்டமான தடம், புட்டம், இடுப்பு மூட்டுப்பகுதி, உள்ளங்கை.

2057. ப2லவத் = பழம் தரும், பயன் தரும், லாபம் தரும்.

2058. பல்2கு3 = சாரம் இல்லாத, சிறிய, அற்பமான, பலமற்ற, உபயோகம் அற்ற,

2059. ப2ல்கு: = வசந்த காலம், ஒரு நதியின் பெயர் பெயர், ஒரு மரத்தின் பெயர்.

2060. பா2ல: = பா2லம் = கலப்பையின் கொழு, தலை வகிடுப் பிரதேசம், நெற்றி.
 
2061. பா2ல்குன: = ஒரு மாதத்தின் பெயர், அர்ஜுனன், மருத மரம்.

2062. பு2ல்ல = மலர்ந்த, பரவிய, விஸ்தாரம் அடைந்த,
புன்சிரிப்புடன் கூடிய.

2063. பே2ண: = பே2ன: = நுரை, எச்சில், கோழை.

2064. பே2ர: = பே2ரவ: = பே2ரு: = நரி.

2065. ப3க: = கொக்கு, போக்கிரி, ஒரு அசுரன், கபடம் உள்ளவன், குபேரனின் ஒரு பெயர்.

2066. ப3குல = மகிழ மரம்.

2067. ப3குளம் = மகிழம்பூ.

2068. ப3த = துக்கம் / துயரம் / சந்தோஷம் / கருணை / ஆச்சரியம் / அழைத்தல் / கூப்பிடுதல் போன்றவற்றைக் குறிக்கும் சொல்.

2069. ப3த3ர: = ப3த3ரிகா = ப3த3ரி: = இலந்தை மரம்.

2070. ப3த3ரம் = இலந்தம் பழம்.
 
2071. ப3த்3த3 = கட்டப்பட்ட, விலங்கிடப்பட்ட, பிடிக்கப்பட்ட, தடுக்கப்பட்ட, இணைக்கப்பட்ட, சேர்க்கப்பட்ட.

2072. ப3தி3ர = செவிடன்.

2073. ப3ந்த4: = கட்டு, முடிச்சு, கை விலங்கு,ரிப்பன், கயிறு, பிடித்தல், கட்டுதல், சிறையிடுதல், சிந்தித்தல், சேர்க்கை, விளைவு, கலவை, நிலை.

2074. ப3ந்த4னம் = முடிச்சு, கட்டு, கை / கால் விலங்கு, தசை, பாட்டி, நாடா, பாலம், அணை.

2075. ப3ந்து4: = உறவினன், நெருங்கியவன், உடன் பிறந்தவன், தாய், தந்தை.

2076. ப3ப்4ரு: = நெருப்பு, பழுப்பு நிறம், பொன் நிறம், சிவன், கீரி, சுத்தம் செய்பவன், பழுப்பு நிற தலை முடி உடையவன், விஷ்ணு.

2077. ப3ர்ஹ: = ப3ர்ஹம் = வால், இலை, தோகை, பரிவாரம்.

2078. ப3ர்ஹி: = நெருப்பு.

2079. ப3ர்ஹிண: = ப3ர்ஹின் = மயில்.

2080. ப3ர்ஹிஸ் = தர்ப்பைப்புல், நெருப்பு, காந்தி , யாகம்.
 
2081. ப3லம் = சாமர்த்தியம், சக்தி, பலம், வீர்யம், சேனை, ரத்தம், உடல், உருவம், பருமன், கொழுத்த தன்மை, கோந்து , ருசி, ரசம், வாசனை, முளை.

2982. ப3ல: = காகம், பலராமன்.

2083. ப3லவத் = பலமுள்ள, சக்தி வாய்ந்த, படை பலம் உள்ள.

2084. ப3லாத்கார: = ஹிம்சிதல், பிடிவாதம், அடம், பலாத்காரம் செய்தல், நியாயம் இல்லாதமுறையில் பலப் பிரயோகம் செய்தல்.

2085. ப3லி: = தேவதைகளுக்கு அர்பணிக்கப்படும் உணவு, காணிக்கை, அக்னியில் இடப்படும் பொருள், யாக பலி, அரசன் மஹா பலி.

2086. ப3லிஷ்ட: = ஒட்டகம்.

2087. ப3லியஸ் = அ
திக பலம் பொருந்திய, அதிக மகிமையுடைய.

2088. ப3ஹிஷ்கார: = வெளியே தள்ளுதல், விலக்குதல், ஜாதியிலிருந்து விலக்குதல்.

2089. ப3ஹு = அதிக, ஏராளமான, அனேக, பல, எண்ணற்ற, பெரிய, நிறைந்த.

2090. ப3ஹுதா4 = பலவிதமான, தனித்தனி வகையில்.
 
2091. ப3ஹுல = அதிகமான, ஏராளமான, பல, கருப்பான.

2092. ப3ஹுவசனம் = பன்மைச் சொல்.

2093. ப3ஹுச': = மிக அதிகமாக, அடிக்கடி, மறுபடியும் மறுபடியும், சாதரணமாக,

2094. பா3ட4ம் = நிச்சய
ம் அன்றோ! உண்மைதான், நல்லது, அப்படியா இருக்கட்டும்.

2095. பா3ண: = அம்பு, பசுவின் மடி, ஒரு கவிஞனின் பெயர், ஒரு அசுரனின் பெயர்.

2096. பா3த4: = பா3தா4 = கஷ்டம், வேதனை, அடி, ஆபத்து, பயம், தடை, கெடுதி, நஷ்டம், ஆட்சேபணை.

2097. பா3ந்த4வ: = உறவினன், சுற்றத்தான்.

2098. பா3லக: = சிறுவன், முட்டாள், மோதிரம்.

2099. பா3ல: = குழந்தை, சிறுவன், இளம் பையன், மயிர், வால், மூடன்.

2100. பா3லா = பா3லிகா = சிறுமி, கன்னிப் பெண்.
 
Status
Not open for further replies.
Back
Top