• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"yAmaRindha kavidhaikaLilE....."

Status
Not open for further replies.
யாமறிந்த கவிதைகளிலே.....! [1]

அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கம்!
இந்தத் தலைப்பில், என் மனதைக் கவர்ந்த பன்மொழிக் கவிதைகளைத் தமிழாக்கி, எனக்குப் புரிந்த அளவில் தர எண்ணுகிறேன்.
முதன் முதலாக, ஒமர் கய்யாம் எழுதிய ஒரு கவிதையுடன் !!

நானறிந்தக் கதவுக்குச் சாவியும் இல்லை;
நேர்விரிந்த திரைவழியே தெரியவும் இல்லை;
ஏனென்றே அறியாமல் பேசினோம் நீயும் நானும்
யாரெனவேத் தெரியவில்லை; இப்போது... நீயில்லை; நானுமில்லை!


இதன் ஆங்கில மூலம்:

There was a Door to which I found no Key:
By Omar Khayyam
(11th Century)

English version by Edward FitzGerald
There was a Door to which I found no Key:
There was a Veil through which I could not see:
Some little Talk awhile of Me and Thee
There seemed -- and then no more of Thee and Me


எனக்குப் புரிந்த அளவிலான விளக்கம்!::

இருவர் எனும் இரட்டை நிலையில், நானும், இறையும் பிரிந்து நிற்கிறோம்!
திறந்து உள்ளே போனால் பிடித்துக் கொள்ளலாம் என நினைக்கையில், அந்தக் கதவுக்குக்கானச் சாவி எங்கே என எனக்குத் தெரியவில்லை!

எதிரே ஒரு திரை மறைக்கிறது; என்னையும், இறையையும்! விலக்கினால் அவனைத் தெரிந்து கொள்ளலாமே என நினைக்கையில், அவன் எங்கே என எனக்குத் தெரியவில்லை!

தெரிந்தும் தெரியாமலும் இருந்துகொண்டு, இப்படிப் போக்கு காண்பிக்கின்ற அவனை நினைந்து நினைந்து என் உள்ளம் உருகுகிறது!.... வலிக்கிறது!
துடிக்கிறேன்! துவள்கிறேன்! ஏதுமறியாமல் தவிக்கிறேன்! ஏதேதோ பிதற்றுகிறேன்!

சற்று நேரம் பொறுத்தே எனக்குப் புரிய வருகிறது.....
என்னுடன் அவன் பேசிக் கொண்டுதான் இருக்கிறான் ....
கதவுக்கு அப்பாலிருந்தல்ல.....
திரையின் மறுபக்கத்திலிருந்தல்ல....


என் பக்கத்தில் இருந்துகொண்டே நானும், அவனும் பேசிக் கொண்டிருக்கிறோம் என....
எனது புலம்பல்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்லிக் கொண்டே என.....

இது என் மனப் பிரமையா?....
......என நான் நினைக்கும் அந்த நொடியே.....
கதவு தானே திறக்கிறது......!
திரை தானே கழன்று விழுகிறது!......


பூட்டிய கதவென நான் நினைத்ததுதான் பிரமை!
மறைக்கும் திரையென நான் நினைத்ததுதான் பிரமை!

அவன் என்னை விட்டு விலகவே இல்லை!
எனது ஆணவமே,... கதவென்றும், திரையென்றும் கருத வைத்தது!
இப்போது நானுமில்லை; அவனுமில்லை!
எல்லாமே ஒன்றாகி!..........
 
காதல் கனிரசத்துக்குப் பெயர்போன
ஓமர்காயத்தின் கவிதையை வைத்து,

த்வைத, அத்வைதக் கருத்துக்களை
திவ்வியமாகத் தந்துளீர்கள்! சபாஷ்!!

மேலும் மேலும் புதிய கருத்துக்களையும்
மேலும் மேலும் புதிய கோணங்களையும்

ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் நான்!
ஆவன செய்வீரா அதற்கு வேண்டியவை? :first:
 
ஆர்வமுடன் பதித்தமைக்கு அன்புடனே பதில்நல்கி
தேர்ந்தெடுத்த அன்பினையே திண்மையுடன் காட்டிவிட்டீர்


ஆர்த்தபல கருத்துகளை அள்ளிவரும் கவிதைகளை
அனுதினமும் படைத்துவரும் அன்புருவாம் விசாலாக்ஷி!


கூர்த்தபெரும் மதியுடனே கூறிட்ட நன்மொழிகள்
வார்த்தைகளில் மனமகிழ்ந்தேன் மேலும்சில கவிகள் வரும்!


வணக்கம்.
 
dear Mr. V.S.K,

Welcome to the Forum! You have entered the Forum with a 'Big bang'-

creating favorable ripples.
Everybody sees everything, everyday - but it

takes originality and keen observation to draw unusual results from the usual

things!

Keep up your good work!
:clap2:

with best wishes and warm regards,
V.R.
 
Your continued show of affection with loving words makes me happy and
humble at the same time.
I have been reading you posts with awe!
Thank you Mrs. Ramani.
 
dear Mr. V.S.K,

Thanks for the compliments.

In any case, let us NOT start another M.A.S (Mutual Admiration Society)!
:becky:

with best wishes and regards,
V.R.
 
.... இப்போது... நீயில்லை; நானுமில்லை!

-- and then no more of Thee and Me


இப்போது நானுமில்லை; அவனுமில்லை!
எல்லாமே ஒன்றாகி!..........
Dear VSK, your தமிழாக்கம் is very nice, I appreciate it.

From the English version, which you have faithfully followed in your Tamil rendering, in the end, there is no "Thee and Me", i.e. "நீயில்லை; நானுமில்லை".

Given this, your final "
எல்லாமே ஒன்றாகி" is striking discordant note. When there is no "Thee" and there is no "Me", how can the two no's merge into some "one" as you say. To me it seems Omar Khyam, who is known to be an agnostic, is saying there is nothing when you die, that is it, all gone.

Please bring us more Omar Khayam, that would be wonderful.

Cheers!
 
Dear Nara,
Thank you fo your comments.
With regards to your querry, here is what I feel.

khayyam never said there is NO thee nor me !
Instead, he has said There is NO MORE!

There was water in two seperate vessels.
Now they are slowly getting mixed. [Some little Talk awhile of Me and Thee]
At last, they are in the same vessel.
At that stage, 'then no more of Thee and Me'.. both are together.

Again, as I have said, I tried to say what I felt.

On a different note, Omar's this poem is NOT an agnostic one.
Actually, it is a Love Poem.
'Veil' is the common demarker in Muslim world.
Read the poem, in those lines as if betwen a man and a woman[with a veil].
You may get a different meaning altogether.

I tried to reason it out in my style.
Pl. bear with me
Thank you!

 
FYI, I will be bringing different English poems from different poets to add flavor to this thread.
Thanks again.
 
Exactly!
Again, as said earlier, I am NOT saying what I say is final.
Every verse may kindle the readers' inquiry and they are welcome to share it with us!

ருத்தை விதைப்பதே கவிதை!!
 
...khayyam never said there is NO thee nor me !
Instead, he has said There is NO MORE!
Thank you VSK sir, great poetry is such that it reveals only very little on the surface.

BTW, I have a dear Persian friend. I sent the poem to him and asked for word-for-word literal translation. Here is what I got from him.


e-mail from my Persian friend said:
That poem is one of Omar Khayam’s most famous verses and many songs have been written using the poem. The last line is saying “both Thee and Me are gone.” The translation that you have is poetic translation to keep the rhyme. The literal translation line by line would be as follows.
Neither you nor I know the secrets of eternity
Neither you nor I know the solution to this puzzle
Beyond the curtain (veil) there is talk of you and me
Once the veil drops, neither you nor I remain
Of course, the poetic translation is much more beautiful.

It would be wonderful if you can render more of Khayam in Tamil.

Thank you....
 
Thank you very much Nara sir for giving the above translation.

I only reverberated what I felt once I read the verse.

Also, the following verse was an inspiration to me and may throw more light on this!

சிவவாக்கியரின் இந்தப் பாடல் இந்த நிலையை நன்கு விளக்குகிறது.

'கடவுளின் உண்மை கூறல்'

இல்லை இல்லை என்றுநீர் இயம்புகின்ற ஏழைகாள்
இல்லையென்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லையல்ல ஒன்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே. [15]


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


Omar Qyam may also be coming once in a while here but generally
I want this thread to be a mixture of variou poets and my take on spirituality based on them.
Thank you.
 
தவம் + செய்பவள் = தவள்.
கருத்து + விதை = கவிதை.

என்னும் எத்தனை சமன்பாடுகள்
உண்டு இன்று உங்கள் கைவசம்?
:juggle:
 
Thank you very much Nara sir for giving the above translation.

I only reverberated what I felt once I read the verse.

Also, the following verse was an inspiration to me and may throw more light on this!

சிவவாக்கியரின் இந்தப் பாடல் இந்த நிலையை நன்கு விளக்குகிறது.

'கடவுளின் உண்மை கூறல்'

இல்லை இல்லை என்றுநீர் இயம்புகின்ற ஏழைகாள்
இல்லையென்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லையல்ல ஒன்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே. [15]

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

Omar Qyam may also be coming once in a while here but generally
I want this thread to be a mixture of variou poets and my take on spirituality based on them.
Thank you.



Wonderful! I am impressed with your skill. Can't wait to read your other (intrepreted) poems. Keep up.
 
2. "எங்கு நான் திரியினும்!"

யாமறிந்த கவிதைகளிலே.....!-- 2

அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கம்!
இந்தத் தலைப்பில், என் மனதைக் கவர்ந்த பன்மொழிக் கவிதைகளைத் தமிழாக்கி,
எனக்குப் புரிந்த அளவில் தர எண்ணுகிறேன். தாங்கள் புரிந்துகொண்ட செய்தியையும்
அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

உமர் கய்யாம் கவிதையைப் பாராட்டிக் கருத்துச் சொன்ன அனைவருக்கும்
எனது பணிவான வணக்கங்கள்! அவ்வப்போது அதையும் இதில் தொடருவேன்னு
இப்போதைக்கு பயமுறுத்தி வைக்கிறேன்! உங்கள் பார்வைக்கு அடுத்த கவிதை... இதோ!:))

"எங்கு நான் திரியினும்!"

எங்கு நான் திரியினும் -- நீ!
எதை நான் நினைக்கினும் -- நீ!
எங்கணும் நீ மட்டுமே, நீ,, எப்போதும் நீ!
நீ, நீ, நீ.
நான் களிக்கையில் -- நீ!
நான் வருந்துகையில் -- நீ!
நீ மட்டுமே, எங்கணும் நீ!
நீ, நீ, நீ.
வானும் நீ!
நிலனும் நீ!
மேலும் நீ! கீழும் நீ!
ஒவ்வொரு வடிவிலும், ஒவ்வொரு முடிவிலும்
நீ மட்டுமே, எங்கணும் நீ!

இறை மட்டுமே எங்கணும் பரவியிருப்பதைக் கண்டு ஆனந்தித்து
மகிழ்ச்சிக் கூச்சலிட வைக்கும் ஒரு கிழக்கு ஐரோப்பியக் கவிதை இது!
போலந்து நாட்டிலிருக்கும் 'பெர்டிட்ஷோவ்'எனும் ஊரைச் சேர்ந்த

'லீவை இட்ஸ்ஷாக்' என்பவர் எழுதியதன் தமிழாக்கம் இது!

எங்கும் எதிலும் மகிழ்வொன்றையே காணும் ஒரு தத்துவத்தைச் சொன்ன

யூத சார்பாளர் இவர்!
கண்ணெதிரே தெரியினும், காணாது மறையினும் எல்லா இடங்களிலும்

இறையன்பே நிறைந்திருக்கிறது என்பதை இக்கவிதையைப் படித்தாலே புரிந்துவிடும்!

அழகிய, எளிமையான இக் கவிதையை இங்கு இடுவதன் மூலம் நாம் அனைவரும்

அதே மகிழ்வை நமக்குள்ளும் உணர்வோம் எனச் சொல்லுவதைத் தவிர,
வேறொன்றும் சொல்ல இயலவில்லை!

"எங்கெங்கு காணினும் சக்தியடா!" என முழங்கிய பாரதியின் வரிகளுடன் இக் கவிதை மிகவும் ஒத்துப் போகிறது அல்லவா!
யாவினும் அவனே/ அவளே/ அதுவே!

இதன் ஆங்கில மூலம்!

Where I wander -- You!
By Levi Yitzchak of Berditchov
(1740 - 1810)
English version by Perle Besserman

Where I wander -- You!
Where I ponder -- You!
Only You everywhere, You, always You.
You, You, You.
When I am gladdened -- You!
And when I am saddened -- You!
Only You, everywhere You!
You, You, You.
Sky is You!
Earth is You!
You above! You below!
In every trend, at every end,
Only You, everywhere You!


அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!
அனைவரில்லங்களிலும் 'அன்புப் பொங்கல்' பொங்கட்டும்!
 
dear mr. Haridasa Siva,

A person needs nobility of mind to admire another person without

becoming a green eyed monster (jealous monster).

I am glad you too have that rare trait in you.

with best wishes to you and Mr. V.S.K :thumb:
V.R.
 
யாமறிந்த கவிதைகளிலே.....! --3

3."காகத்தின்"......

காகத்தின்
விட்டொழித்த கூடு
ஒரு கனி மரம்.

'ஹைக்கூ' கவிதைகளின் தந்தை எனப் போற்றப்படும் பாஷோ என்னும் ஜப்பானியக் கவிஞரின்
அற்புத வரிகள் இவை!

பொதுவாக, 'ஹைக்கூ' கவிதைகளை ரொம்பவே ஆராயக்கூடாது! தான் கண்ட ஒரு காட்சியை

அப்படியே ஒருசில சொற்களில் வெளிக்கொணர்ந்து தருவதே 'ஹைக்கூ' கவிதையின் மாண்பு!
ஒரு நிகழ்வு, அது நிகழும் காலம், இவற்றை முதல் இரு வரிகளில் 3, 5 என்னும் கணக்கில்
சொல்லி, மூன்றாவது வரியில், 3 சொற்களில்[ஜப்பானிய எழுத்துகளில்] ஒரு தாக்கத்தைச்
சொல்லி நம்மை நிமிரவைத்து உலுக்குவதே 'ஹைக்கூ'வின் இலக்கணம்! [??!!]

அவற்றை அப்படியே படித்து, அதச் சொற்கள் நமக்குள் என்ன நிகழ்த்துகிறது என அமிழ்வதே

நாம் செய்யக்கூடியது! ஒவ்வொருவருக்கும் ஒரு புதுக் கருத்து தோன்றக்கூடும்! எதுவும்
தவறில்லை!

அப்படி இந்தச் சொற்கள் எனக்குள் விளைத்ததை வழக்கம்போலவே கிறுக்கி வைக்கிறேன்!

காகம்!
இரை தேடி இங்குமங்குமாய் அலையும் ஒரு பறவை! இலக்கென அதற்கு ஏதும் கிடையாது... பொதுவாக!
ஒரு குறிக்கோளே இல்லாமல், இங்குமங்குமாய் அலையும் எனது மனம் போல!
எவற்றாலும் அமைதியடையாமல் எப்போதும் 'கா..கா'வெனப் பறந்தபடியே!

இந்தக் காகம் இப்போது தனது கூட்டை விட்டுப் பறக்கிறது!
அதிலிருந்த குஞ்சுகள் பெரிதானவோ?
இல்லை, முட்டைகளைப் பாம்பு விழுங்கிவிட்டதோ?
வசந்தம் வந்துவிட்டதால், இனி அக்கூட்டில் இருப்பதில் பலனில்லையோ?
எப்படியோ... இப்போது அந்தக் கூட்டில் ஒன்றுமில்லை!
காலிக் கூடு!
இனி அதில் உணர்ந்து அனுபவிக்க ஏதுமில்லை!
அதிலேயே இருப்பதிலும் பலனில்லை!
காலியான கூட்டை விட்டொழித்து, இந்தக் காகம் இப்போது பறந்துவிட்டது!
என் மனதும் இப்போது ஒன்றுமில்லாமல் போய்விட்டது!
இனி மனம் என எதுவுமில்லை!
நிரம்பி வழிந்த மனம் இப்போது தானே அமைதியாகிப் போகிறது!
இது இரண்டாம் வரியில் சொல்லப்படுகிறது!

அடுத்து,
இவ்வளவு நேரமாய், ஒரு காகம் தனது கூட்டில் அமர்ந்து இப்போது அந்தக் கூட்டைவிட்டுப்

பறக்கும் காகத்தைப் பார்த்த பாஷோ, திரும்பவும் அது இருந்த இடத்தைப் பார்க்கிறார்!

இதுவரை ஒரு காகத்தையும்,அதன் கூட்டில் மட்டுமே கவனம் செலுத்திய பாஷோவுக்கு....
இப்போது தெரிவது....
கனிகள் நிரம்பிய ஒரு ப்ளம் மரம்!
உடனே கூவுகிறார்!
ஒரு கனி மரம் என மூன்றாம் வரியில்!
காகம், அதன் கூடு என மட்டுமே ஒரு குறுகிய பார்வையைக் கண்டிருந்தவருக்கு இப்போது

தெரிவதோ பரந்து விரிந்த ஒரு காட்சி!
ஏதுமில்லாமல் ஆகிப்போன மனம் அழிந்த பின்னர் நமக்குத் தெரிவதும் அதுவே!
பரந்து விரிந்த அகிலத்தில் இருக்கும் அனைத்துமே இப்போது நாமாகிப் போகிறோம்!

படித்ததும் விளையும் கருத்தைச் சொல்லாமல் இருக்க இயலவில்லை!


இதன் ஆங்கில மொழியாக்கம் கீழே!

Crow's
By
Matsuo Basho
(1644 - 1694)
English version by Lucien Stryk and Takashi Ikemoto

Crow's
abandoned nest,
a plum tree.


அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கம் .
 
vsk சார்!

இன்றுதான் உங்கள் நல்ல 'நூல்' கண்டேன்;
நேற்றுவரை என் இனிய கணினி இல்லை!

எனக்கு இன்னொரு விஷயம் தெரிகிறது;
தனக்குள் வைக்காது, பகிர்ந்துகொள்கிறேன்!

பழம் நிறைந்த மரமாயின், காக்கை கொத்திப்
பழம் பல கீழே விழச் செய்துவிடுமே! அந்தக்

கனிகள் 'ப்ளம்' மரத்தில் நிறைவது, காக்கை
கனி மரத்தை விட்டு விலகியதால்தானோ?

குறிப்பு:

எங்கள் மாமரத்தின் விளைச்சலில் சரி பாதியைத்
தங்கள் கூரிய மூக்கால் பதம் பார்க்கும், காக்கைகள்!

வணக்கம்,
ராஜி ராம்
 
Last edited:
நீங்கள் சொல்வது உண்மையே எனினும், இதனைப் 'பாஷோ'(basho]வின் பார்வையிலிருந்து பார்க்க வேண்டும் என எண்ணுகிறேன்.
முதலில் தெரிந்தது ஒரு வெறும் கூடு. அது ஒரு காக்கைக் கூடு எனப் புரிகிறது அவருக்கு.
இதனைப் பற்றியே நினைத்தவர் பின்னர் பார்ப்பது ஒரு பெரிய கனிமரத்தை.

காகத்தின் குறி பழமாக இருப்பின், அது விட்டுவிட்டுப் போயிருக்காது.
அந்தக் கூடு வெறுமையானதும் அங்கிருந்து பறந்து விட்டது.

அதேபோல, மனம் என்னும் ஒன்று அழிந்துபோனதும், அதற்கும் அங்கு வேலையில்லை எனவே சொல்ல வருகிறார்.
இப்போது இந்தக் கனிமரத்தை,..... எங்கும் பரந்திருக்கும் இயற்கையை... ரசிக்கிறார்.

கணநேரம் ஒரு வெறுமையைப் பார்த்தாலும், மனமழிந்து போகின், இயற்கையுடன் ஒன்றிவிடுகிறோம் எனவே அவர் சொன்னதாக எனக்குப் பட்டது.
கருத்துக்கு நன்றி.
 
:laser:Basho must be Arjun reborn!

When his other brothers/ cousins could see the sky, the clouds, the tree, the

branch etc Arjun saw only the eye of the bird he had to aim at!

Basho is doing very much the same and then comes down to the level of normal

men and is able to see the other things there!
 
Thats a different perspective from you, Ms. Raman!
But the only difference is, instead of coming down to normal human level, he transcends to a higher plane, I think. Thanks.
 
"யாமறிந்த கவிதைகளிலே....!" - 4

"ஓடையிலே"

ஓடையிலே
ஓடுகின்ற
துகள்களிலே
ஓடிடும் என்னுருவம்
பிரதிவிம்பம் பதிப்பதில்லை.


In the stream
By Dogen
(1200 - 1253)
English version by Steven Heine

In the stream,
Rushing past
To the dusty world,
My fleeting form
Casts no reflection.


அன்றாட உலகினிலே ஆயிரமாயிரம் மனிதர்கள்.

மாறுபட்ட சிந்தனைகள், கருத்துக்கள், செயல்பாடுகள் இவற்றால் இந்த உலகினைத் துகள்களாய் நிரப்பிக்கொண்டே
இருக்கின்றனர்.

இந்தத் துகள்களால் தூசு படிந்த இந்த உலகத்தின் அந்தராத்மா இப்போது கண்ணுக்குத் தெரிவதில்லை.

நாமனைவருமே இந்தத் தூசுபடிந்த மேலோட்ட உலகினை மட்டுமே எப்போதும் பார்த்துக் கொண்டு
காலத்தைக் கழிக்கிறோம்.

'இவர் ஏன் அப்படிச் செய்தார்? அவர் ஏன் அப்படிப் பேசினார்? இவரது இந்தக் கருத்து சரிதானா? அவரது அந்தச்
செயல்பாடு நல்லதா? கெட்டதா?' எனும் சிந்தனைகளாலேயே நாளைக் கடத்துகிறோம்.

இதில் நானும் ஒரு அங்கம்.
தூசு.
துகள்!
என்னாலும் இது மாசுபடுகிறது; மறைக்கப்படுகிறது; அடுத்தவரை இதுபோலச் சிந்திக்கச் செய்கிறது.


உள்ளிருக்கும் ஆத்மாவின் ஓலத்தைக் கேட்கவிடாமல் செய்துவிடுகிறது!
அந்த ஒலியைக் கேட்காமலேயே, நாமனைவருமே அவரவர் விருப்பம்போலச் செயலாற்றி, இந்த உலகமெனும் ஓடையிலே

ஓடி மறைகிறோம்........எந்தவொரு பிரதிவிம்பத்தையும் விட்டுச் செல்லமுடியாமலேயே!

நிலைத்து நிற்கும் அந்தராத்மாவைப் புரிந்தால் மட்டுமே, இந்தத் துகள்களையெல்லாம் தூரத் தள்ளி, 'நான் யார்' எனும்
கேள்விக்கு ஒரு விடை உள்ளிருந்தே கிடைப்பதை உணர இயலும்.

அது நிகழாதவரையில், இந்த 'ஓடை'யின் ஓட்டம் ஓடிக்கொண்டேதான் இருக்கும்..... மேலெல்லாம் தூசு படிந்து.....
உள்ளிலிருப்பதை மறைத்து.... எந்தவொரு பாதிப்பையும், பிரதிபிம்பத்தையும் பார்க்க முடியாமலேயே!

அப்படியெனில், இருப்பதும், இப்போது நாம் செய்வதும் எல்லாமுமே இல்லாது போகக்கூடியதுதானா?

அனைத்தையும் கடந்து, உள்ளினை நோக்கிட எம்மாலான முயற்சிகளைச் செய்யத் துவங்காதவரைக்கும் இதற்கான பதில்..........
'ஆமாம்' என்பது மட்டுமே!

************

"டோஜென்'[1200 - 1253] என்னும் ஜப்பானிய 'ஜென்' கவிஞர் எழுதிய இந்தக் கவிதையை இங்கே பகிர விரும்புகிறேன்.
என்றுமில்லாமல் இன்றுதான்,... எத்தனையோ முறை அதைப் பார்த்திருந்தும்,..... எனது நண்பர் ஒருவர்
அவர்களது கையொப்பத்துடன் எப்போதும் அடியில் வரும்,... 'பிரபஞ்சத் துகளில் நான் யார்?' எனும் கேள்வி என்
சிந்தனையைத் தூண்டியது.

அனைத்திற்கும் விடையளிக்கும் என் முருகன், உடனே இந்தக் கவிதையை எனக்கு
அடையாளம் காட்டி அருளினான்.

அதனைத் தொடர்ந்து எழுந்த சில சிந்தனைகளையே இங்கே பகிர்ந்தேன்.
அடியார் அனைவருக்கும் என் அன்புகலந்த பணிவான வணக்கங்கள்!

*************
 
"யாமறிந்த கவிதைகளிலே....!" - 4

"ஓடையிலே"

ஓடையிலே
ஓடுகின்ற
துகள்களிலே
ஓடிடும் என்னுருவம்
பிரதிவிம்பம் பதிப்பதில்லை.

**********
அரும் குறும் கவிதை...

(பிரதிபிம்பம் என்ற சொல், விளக்கத்தில் சரியாக உள்ளது.
கவிதையிலும் திருத்திவிடுங்கள்!) :typing:

Regards ............
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top