யாமறிந்த கவிதைகளிலே.....! [1]
அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கம்!
இந்தத் தலைப்பில், என் மனதைக் கவர்ந்த பன்மொழிக் கவிதைகளைத் தமிழாக்கி, எனக்குப் புரிந்த அளவில் தர எண்ணுகிறேன்.
முதன் முதலாக, ஒமர் கய்யாம் எழுதிய ஒரு கவிதையுடன் !!
நானறிந்தக் கதவுக்குச் சாவியும் இல்லை;
நேர்விரிந்த திரைவழியே தெரியவும் இல்லை;
ஏனென்றே அறியாமல் பேசினோம் நீயும் நானும்
யாரெனவேத் தெரியவில்லை; இப்போது... நீயில்லை; நானுமில்லை!
இதன் ஆங்கில மூலம்:
There was a Door to which I found no Key:
By Omar Khayyam
(11th Century)
English version by Edward FitzGerald

There was a Veil through which I could not see:
Some little Talk awhile of Me and Thee
There seemed -- and then no more of Thee and Me
எனக்குப் புரிந்த அளவிலான விளக்கம்!::
இருவர் எனும் இரட்டை நிலையில், நானும், இறையும் பிரிந்து நிற்கிறோம்!
திறந்து உள்ளே போனால் பிடித்துக் கொள்ளலாம் என நினைக்கையில், அந்தக் கதவுக்குக்கானச் சாவி எங்கே என எனக்குத் தெரியவில்லை!
எதிரே ஒரு திரை மறைக்கிறது; என்னையும், இறையையும்! விலக்கினால் அவனைத் தெரிந்து கொள்ளலாமே என நினைக்கையில், அவன் எங்கே என எனக்குத் தெரியவில்லை!
தெரிந்தும் தெரியாமலும் இருந்துகொண்டு, இப்படிப் போக்கு காண்பிக்கின்ற அவனை நினைந்து நினைந்து என் உள்ளம் உருகுகிறது!.... வலிக்கிறது!
துடிக்கிறேன்! துவள்கிறேன்! ஏதுமறியாமல் தவிக்கிறேன்! ஏதேதோ பிதற்றுகிறேன்!
சற்று நேரம் பொறுத்தே எனக்குப் புரிய வருகிறது.....
என்னுடன் அவன் பேசிக் கொண்டுதான் இருக்கிறான் ....
கதவுக்கு அப்பாலிருந்தல்ல.....
திரையின் மறுபக்கத்திலிருந்தல்ல....
என் பக்கத்தில் இருந்துகொண்டே நானும், அவனும் பேசிக் கொண்டிருக்கிறோம் என....
எனது புலம்பல்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்லிக் கொண்டே என.....
இது என் மனப் பிரமையா?....
......என நான் நினைக்கும் அந்த நொடியே.....
கதவு தானே திறக்கிறது......!
திரை தானே கழன்று விழுகிறது!......
பூட்டிய கதவென நான் நினைத்ததுதான் பிரமை!
மறைக்கும் திரையென நான் நினைத்ததுதான் பிரமை!
அவன் என்னை விட்டு விலகவே இல்லை!
எனது ஆணவமே,... கதவென்றும், திரையென்றும் கருத வைத்தது!
இப்போது நானுமில்லை; அவனுமில்லை!
எல்லாமே ஒன்றாகி!..........