• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"yAmaRindha kavidhaikaLilE....."

Status
Not open for further replies.
'விம்பம்' என்பதே சரியான சொல் ராஜி அவர்களே! 'பிம்பம் என்பது அதன் திரிபு!
வங்காளம், பங்க்ளா, என்பது போல!!

அதனால்தான் இரண்டையுமே பயன்படுத்தினேன்.
அகராதி இருந்தால் சரி பாருங்கள்!
 
Dear Shri.VSK, (I am also VSK - V.SivaKumar)!

தங்கள் புலமை மற்றும் சிந்தனையை எண்ணி எண்ணி வியக்கிறேன். நீங்கள் ஒரு மிகச் சிறந்த கவிஞர். உங்கள் திறமையைப் பாராட்டும் இந்த நேரத்தில் அதற்கான அங்கீகாரம் உங்களுக்கு இதுவரை கிடைத்திருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன். ஆமெனில் அதன் விபரத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இல்லையெனில் விரைவில் கிடைக்க என் மனப் பூர்வமான வாழ்த்துக்கள்.
 
உங்கள் கவிதையைப் படித்தவுடன்
என் மனத்தில் தோன்றிய கருத்து
அடியார் = யாரையும் அடிக்காதவர்.
இது எப்படி இருக்கு? :eyebrows:
 
பிரதி பிம்பங்கள் அத்தனையும்
பிரதி போலப் பதிந்துவிட்டால்,

பார்ப்பவர்களின் கண்களின்
பரிதாப நிலைமையைப் பற்றி

கிஞ்சித்தேனும் சிந்திதீரா? அவை
:fear:
மிஞ்சிப்போனால் என்னவாகும்? :eek:
 
'விம்பம்' என்பதே சரியான சொல் ராஜி அவர்களே! 'பிம்பம் என்பது அதன் திரிபு!
வங்காளம், பங்க்ளா, என்பது போல!!

அதனால்தான் இரண்டையுமே பயன்படுத்தினேன்.
அகராதி இருந்தால் சரி பாருங்கள்!
I am not aware of the word 'விம்பம்'!

So, one more word in my vocabulary... Thank you Sir!

Regards.......
 
உங்கள் கவிதையைப் படித்தவுடன்
என் மனத்தில் தோன்றிய கருத்து
அடியார் = யாரையும் அடிக்காதவர்.
இது எப்படி இருக்கு? :eyebrows:

நீங்கள் அப்படி இருந்தால் ரொம்பவுமே நல்லதே!:))
 
பிரதி பிம்பங்கள் அத்தனையும்
பிரதி போலப் பதிந்துவிட்டால்,

பார்ப்பவர்களின் கண்களின்
பரிதாப நிலைமையைப் பற்றி

கிஞ்சித்தேனும் சிந்திதீரா? அவை
:fear:
மிஞ்சிப்போனால் என்னவாகும்? :eek:

கண்களுக்கொன்றும் ஆகாது கவிதாமணியே
விசாலமான கண்களவை!
பார்ப்பது மட்டுமே அதன் வேலை!
பதிவது, பதிப்பது மூளையே!
அங்கே நிறையவே இடமிருக்கிறது!:))
 
Dear Shri.VSK, (I am also VSK - V.SivaKumar)!

தங்கள் புலமை மற்றும் சிந்தனையை எண்ணி எண்ணி வியக்கிறேன். நீங்கள் ஒரு மிகச் சிறந்த கவிஞர். உங்கள் திறமையைப் பாராட்டும் இந்த நேரத்தில் அதற்கான அங்கீகாரம் உங்களுக்கு இதுவரை கிடைத்திருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன். ஆமெனில் அதன் விபரத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இல்லையெனில் விரைவில் கிடைக்க என் மனப் பூர்வமான வாழ்த்துக்கள்.


Thank you for your kind words sir! I long for only one recognition and
that is from my MURUGAN!

I get it in plenty!

In this connection, please se the following lines that came to me this morning!
Thanks.
 
"யாமறிந்த கவிதைகளிலே....!" - 5

This time I am posting my own lines on a thought that came up this morning!
Thank you!

"எங்கே அவன்?!"

கண்ணெதிரே நின்பிம்பம் மின்னலென ஆடிடுதே
என்னைவிட்டுச் சென்றதெங்கே சொல்லிவிடு என்னிறைவா
அன்புடனே எனைநோக்கி ஆசிதந்த முகமெங்கே
இன்னலுற்று வாழும்நிலை புரிகிறதா என்னிறைவா


கரம்பற்றித் தடுத்தாண்டு கனிமொழிகள் சொன்னமுகம்
வரம்தந்து வாழ்த்தியெனை மகிழ்வித்த அன்புமுகம்
சுரம்பிரித்துச் சுந்தரமாய்ப் பாட்டிசைத்த வட்டமுகம்
விரைந்தென்னைக் காத்திடவே வந்திடாதோ என்னிறைவா


நீபேசும் அழகிலெல்லாம் மனமுருகி நின்றதெல்லாம்
நீராவி போலின்று காணாமல் போயிற்றே
சீராக எனைத்தேற்றி ஆறுதலைச் சொன்னமுகம்
கூறாமல் சென்றதெங்கே கூறிவிடு என்னிறைவா


காணாத முகந்தேடிக் காலமெலாம் காத்திருக்க
வீணான நாட்களிதே என்றுமனம் பதைபதைக்க
தேனான மொழிசொல்லும் தங்கமுகம் காணாமல்
வாணாளைக் கழித்திருந்தேன் வாடியதோர் பறவைபோல


நேராக என்முன்னே ஓடிவந்தான் என்முருகன்
கூரான வேல்தாங்கி குறுநகையை இதழ்தாங்கி
சீரான மயில்மீது இருவருடன் சேர்ந்துவந்து
மாரோடு எனைத்தாங்கி சிலமொழிகள் சொல்லிட்டான்


வேராக யானிருக்க வேறென்ன பயமுனக்கு
ஆறாக யானிருந்து அதிலுன்னை நனைத்திருப்பேன்
பாராத நேரமென பகவனுக்கு இருப்பதில்லை
தேராக என்றுமுனைச் செலுத்துபவன் யானன்றோ


காணாத நேரமென்றோ வாராத பொழுதென்றோ
வீணாக நீயலைந்து வேதனையும் படவேண்டாம்
கோணாது என்பணியை நித்திலத்தில் நீநடத்த
நாணாக யானிருந்து எப்போதும் உடனிருப்பேன்


அழகனவன் சொன்னமொழி ஆனந்தத் தேன்வார்க்கப்
பழகிவரும் பாலனைப்போல் பரிவுடனே சிரித்திட்டான்
கழலிணையை யான்பிடித்து கண்மலரை அதில்பதித்து
குழவியைப்போல் நீருகுத்து இணையடியில் சரணடைந்தேன்!


முருகனருள் முன்னிற்கும்!
**************
 
எல்லோரையும் அடிப்பதற்கு நான் ஒரு
போலிசோ, தண்டபாணியோ அல்லவே !
:high5:

நல்ல விஷயங்களைக் கூறின அவ்வைகூட
பொல்லாத பாட்டியா உங்கள் பார்வையில்?
:nerd:
 
.......................
முருகனருள் முன்னிற்கும்!
முருகனருள் முன்னிற்கும்! உண்மை சார்! கவிதை மிக நன்று... :clap2:
 
நாம் அனுப்பும் விஷயங்களைத்தான் :ranger:

நம் மூளை உணரமுடியும் அறியீரா?

ஆயிரம் பிம்பங்கள் பதிவானால் அது

பார்பதற்கு எப்படி இருக்கும் அறியீரோ?
:confused:

அனுமதி மறுப்பு என்று பிறரைப்போலவே

அறிவித்துவிட்டதால் நூலில் நுழையேன்!
:argue:

எழுதித் தள்ளுங்கள்! ஜமாயுங்கள்!
என்றும் என் நல்வாழ்த்துக்கள் உண்டு! :tea:

என் கண்கள் மட்டும் அல்ல, என் பெயரும்

என் மனமும் கூட விசாலமானவையே!
 
பாம்பின் கால் பாம்பறியும்.
பாம்பால் தான் பாம்பை அறியமுடியும்.

ஒரு நல்ல மனத்தால் தான் இன்னொரு
ஒரு நல்ல மனதைக் கண்டு கொள்ள முடியும். :wave:
 
Dear VSK,


களிப்புற்றது இங்கே என்முகம்
காரணம் எந்தன் ஷண்முகம்

You have made this point very clear in your post no.36. Very true.
 
Dear VSK,

களிப்புற்றது இங்கே என்முகம்
காரணம் எந்தன் ஷண்முகம்

You have made this point very clear in your post no.36. Very true.
ஷண்முகம் = ஆறுமுகம், என்ற குறிப்பு அவசியம் அல்லவா?

Just kidding....:bowl:
 
என்னுள் சில கேள்விகள் அவைகளை இங்கு கவி பாடும் களத்தில் எழுப்புகிறேன். விடைகள் கிடைக்கும் என்னும் நோக்குடன்.
௧. முருகன் எனும் பெயர் தமிழ்பெயரா? அதன் பொருள்? அழகு என்று அறிவேன். அது சரியா? ஹிந்தியில் முருகா என்றால் சேவல். சேவல்கொடி முருகனுடையது. வேறு விளக்கம் உண்டா?
௨. கவி ஆண்பாலா அல்லது பெண்பாலா?
 
1. முருகு என்றால் அழகு என்று பொருள். அழகு வடிவினால் முருகன் என்ற பெயர் பெற்றான்.

இதை, திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் பலமுறை சொல்லக் கேட்டுள்ளேன்.

2. கவிஞர் என்பது ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானதே.

கவிஞி என்று கேட்டதே இல்லையே!

அதுபோலவே, கவி என்பதற்கு, கவிதைகள் எழுதுபவர் எனப் பொருள் கொள்ளலாம்.

கவிதாயினி என்று பெண் கவிகளைச் சொல்லுவதும் உண்டு.

(தங்களின் 1, 2 இரண்டும் ௧, ௨, என்று தமிழ் எண்களாக வந்துள்ளன!)
 
உங்கள் பதிலுக்கு நன்றி. முர்காவும் முருகாவும் தொடர்புடையாதா என்று தெரியவில்லை.
 
இதென்ன அபாண்டம்?)))))
'அனுமதி மறுப்பு' என எப்போது நான் சொன்னேன்?:))

புரியலியே!!!!!!!!!!
 
"யாமறிந்த கவிதைகளிலே....!" - 6

அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கம்!
இந்தத் தலைப்பில், என் மனதைக் கவர்ந்த பன்மொழிக் கவிதைகளைத் தமிழாக்கி, எனக்குப் புரிந்த அளவில்

தர எண்ணுகிறேன். கூடவே, தாங்கள் புரிந்துகொண்ட செய்தியையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

"நின்னிதயம் என்னுடனே...."

நின்னிதயம் என்னுடனே சுமக்கின்றேன்
[என்னிதயம் தனிலதையே சுமக்கின்றேன்]

அதுவின்றி ஒருபோதும் இருப்பதில்லை
[எங்கேநான் சென்றாலும் நீயுமங்கே,
எதுவிங்கே நான்செயினும் நின்செயலே என்னன்பே]

விதிகண்டு நானொன்றும் அஞ்சுவதில்லை
[நீயேயென் விதியென்பதால், இனியவளே]

உலகென்று ஒன்று வேண்டேன்
[அழகுலகும் நீயேயென்பதால், என் மெய்யே]

மதிகாட்டும் பொருள்யாவும் நீதானே
பரிதிபாடும் பாட்டனைத்தும் நீதானே
எவருமறியா ஆழ்மறை ஒன்றுரைப்பேன்
[வேரின் வேராக, மொட்டின் மொட்டாக,
வானின் வானாக வளருமொரு வாழ்வெனும் மரம்;
ஆன்மாவின் விருப்பினையும் தாண்டியது உயரும்;
மனதின் மறைப்பினையும் மீறியது வளரும்]

இந்தவொரு அதிசயமே தாரகைகளைத்
தனித்தனியே இருக்கச் செய்கிறது;

நின்னிதயம் நான் சுமக்கிறேன்
[என்னிதயம் தன்னிலதைச் சுமக்கிறேன்]

ஒரு ஆழ்ந்த காதல் கவிதை போலத் தோன்றிடினும், அதற்கும் மேலாக, ஒரு தெய்வீக உணர்வு
இதனுள்ளிருந்து ஒளிர்வதை ரசிக்க முடியும்.

'சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை' என்பதை மெய்யாக்குவது போல,

மனம்விட்டுச் சொல்லிய வரிகளுக்கும் மேலாக, அடைப்புக் குறிகளுக்குள் இருக்கின்ற அந்தச் சொல்லாத வரிகள்
பல உண்மைகளை நமக்கு விளங்கச் செய்யலாம்!

என் சிற்றறிவுக்குத் தோன்றியதை உளறிக் கொட்டுவதைவிட, அவரவர் புரிதலுக்கு விடுவதே சிறந்தது என்பதால்,

மேற்கொண்டு ஏதும் சொல்லாமல் இதன் ஆங்கில மூலத்தைக் கீழே அளிக்கிறேன்.

i carry your heart with me
By e. e. cummings
(1894 - 1962)

i carry your heart with me(i carry it in
my heart)i am never without it(anywhere
i go you go,my dear;and whatever is done
by only me is your doing,my darling)
i fear
no fate(for you are my fate,my sweet)i want
no world(for beautiful you are my world,my true)
and it's you are whatever a moon has always meant
and whatever a sun will always sing is you
here is the deepest secret nobody knows
(here is the root of the root and the bud of the bud
and the sky of the sky of a tree called life;which grows
higher than soul can hope or mind can hide)
and this is the wonder that's keeping the stars apart
i carry your heart(i carry it in my heart)

[ஈ.ஈ.கம்மிங்ஸ் என்பவர் ஒரு அமெரிக்கக் கவிஞர். மாஸசூஸட்ஸ் மாநிலத்தில் பிறந்தவர். ]

-- from E.E. Cummings: Complete Poems 1904-1962, by e. e. cummings
*********
 
இறைவன் மீது பக்தன் கொள்ளுவதும் காதல் எனத்தானே சொல்லுகின்றார்!

My cousin, a leading plastic surgeon, Dr. A. Krishnan uses a lot of colours in his e-mails.

I remember him whenever I see Sri VSK Sir's posts... :becky:
 
அவரவர் புரிதலுக்கு அதனால்தான் விட்டுவிட்டேன் இக்கவிதையை!
எண்ணற்ற வண்ணத்தன் 'அவன்' மீது காதல் கொண்டவர் வண்ணத்தை விரும்புவது இயல்பே!
 
அண்ணனின் கவிதை ண்ம்,

எண்ணங்கள் தூண்டும், திண்ணம்!! :ranger:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top