Why do you ask people to extend the plate and touch it before performing the Archana?

அர்ச்சனை செய்வதற்கு முன்பு தட்டை நீட்டி தொட்டுக் கும்பிட சொல்வது ஏன் ??


அர்ச்சனை என்றால் என்ன?

அர்ச்சனை என்றால் அர்ச்சிப்பது எனப் பொருள்.

கோயில் சென்று ஒருவர் தனது கோத்திரம் பெயர் நட்சத்திரத்தை கூறி சங்கல்பம் செய்து இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

ஒருவருக்கு இந்த இடத்தில், இந்தக் காலத்தில், இப்படி ஒரு வேண்டுதலை முன்னிட்டு இன்ன பூஜை செய்யப்படுகிறது என்று சொல்லி பூஜை செய்வதே சங்கல்பமாகும்.

இப்படியான சங்கல்பத்தின் பொருட்டே அர்ச்சனை தட்டை தொட்டுக் கும்பிடச் சொல்வார்கள்.

அர்ச்சனை செய்வது இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இருக்கலாம்.

அல்லது வாழ்வில் இன்னும் மேம்பட இறைவனை வேண்டுவதற்காக இருக்கலாம்.

துன்பங்களை தாங்கும் மன உறுதி கேட்கலாம்.

கோயிலில் அர்ச்சனை செய்வது வீட்டில் பூசை செய்வதை காட்டிலும் சக்திவாய்ந்தது.

அங்கிருக்கும் தெய்வம் மந்திர உச்சாடனாங்களாலும் , பூஜை வழிபாடுகளாலும் மிகவும் சக்தி பெற்றதாக திகழ்கிறது.

ஆலயங்களில் பக்தர்கள் தனித்தனியாக அர்ச்சனை செய்வது காம்ய பூஜை ஆகும். அதாவது நாம் ஒன்றை வேண்டிக் கொண்டு நம்முடைய பிரார்த்தனையைக் கடவுளிடம் சமர்ப்பிப்பது காம்ய பூஜை.

சுவாமியின் பெயரில் அர்ச்சனை செய்தல் கூடாது.

தாங்கள் தனியாக ஆலயத்திற்குச் சென்று வழிபட்டாலும் கூட்டத்துடன் சேர்ந்து வழிபட்டாலும் இறைவனின் அருள் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மையே செய்யும்.

அதன் பொருட்டே ஆலயங்களில் அர்ச்சகர் பெருமக்களால் ஆகம முறைப்படி இன்றளவும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அவர்கள் அனுதினமும் சங்கல்பம் செய்து கொண்டு பூஜைகளைத் தொடங்குவார்கள்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் அர்ச்சனை செய்ய விரும்பினால் தட்டிலுள்ள புஷ்பத்தையோ, குங்குமத்தையோ அவர்களின் பெயர், நட்சத்திரத்தைக் கூறி தொடச் சொல்வது மரபு.

இந்தச் செயல் ஒரு ஆத்ம தொடர்பை ஏற்படுத்தும் அற்புதமான செயல்பாடாக கருதப்படுகிறது..
 
தொன்றுதொட்டு வரும் மரபு முறைப்படி திருமணம் போன்ற தனிப்பட்ட நிகழ்வின் மந்திரங்கள் உட்பட அனைத்துமே அவரவர் தங்களுக்காகச் சொல்லி வழிபடும் விதமாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. அவரவர் விருப்பங்களைச் சொல்லி இன்ன நன்மை வேண்டுமெனச் சொல்வதே முறை நமக்காக பிறிதொருவர் மந்திரங்களைச் சொல்வது பலன் தராது ஆனால் நாளடைவில் மந்திரங்களை நாம் கற்கவில்லை முறையாகச் சொல்லத்தெரியவில்லை அதனால் நமக்காக வேறு யாரேனுமொருவர் " என் எஜமானனுக்காகச் செய்கிறேன்" என்று சொல்ல வேண்டிய நிலையில் அர்ச்சனை செய்வோர் நமக்காகப் பிரார்த்தனை செய்கிறார். (என்று நாம் நம்பவேண்டிய நிலையில் இருக்கிறோம்). நாமும் அதனை ஆமோதித்து அவர் கையில் உள்ள தட்டத்தையாவது தொடுகிறோம்.

பல கோவில்களில் சங்கற்பமே முறையாகச் செய்வதில்லை அதிலும் தமிழ் அர்ச்சனை என்ற புரட்சி காரணமாக நம்மையே சங்கல்பம் செய்து கொள்ளச்சொல்கிறார்கள் பல கோவில்களில் குறிப்பாக கூட்டம் அதிகமாகும் கோவில்களில் அர்ச்சகருக்கு அஷ்டோத்ரம் என்பதே மறந்து போய் விட்டதோ என்று தோன்றுகிறது எனவே சங்கல்பத்தையாவது நாமே சொல்லிக் கொள்வது சிறப்பு.
 
hi

sankalpam on behalf of yajaman/devotee...now a days....some small temples do properly....sankalapam


should be for the family...not for whole names in the home...sankalpam also mahasankalpam/laghu

sankalpam...
 
In a community puja, we ask people to touch the plate of flowers, or Thali in weddings to get participation. There is no sankalpam or any thing involved.
 
Back
Top