For those who can read Tamil and do not read 'வண்ண வண்ண மனிதர்கள்', in the literature section!
இடி ராஜாக்களும் ராணிகளும்!
இவர்களைக் கண்டு இவர்களின் கொடுமைகளைத் தாங்க விருப்பமா? வைகுண்ட ஏகாதசி முடிந்தவுடன் வரும்
சனிக்கிழமை திருப்பதிக்குச் சென்று பெருமாளை தரிசியுங்கள்! க்யூவில் நிற்கும்போது, அது நகராமல் இருக்கும் சமயமும்,
இடித்துக் கொண்டே நிற்பது இவர்களின் வழக்கம். ஒரு நூலிழை தள்ளி நின்றால் பிடிக்காதோ என்னவோ! முதுகில் இருமித்
தள்ளுவார்கள் சிலர், வாயை மறைக்கக் கைக்குட்டையே வைக்காமல்! அதிர்வேட்டுத் தும்மல் போட்டு, நம் தலையில்
'ஸ்ப்ரே' செய்வார்கள் சிலர். தன் கைத்தைடியைக் குத்திக் குத்திச் சத்தம் எழுப்பி, நம் காலைப் பதம் பார்க்க விழைவார்கள்
சிலர். என் பின்னே நின்ற பெண்மணி (!) வித்தியாசமானவள்! தன் இடது கையால் என் இடுப்பை உந்திக்கொண்டே, அவள்
போலீஸ் தொப்பையால் என்னை இடித்துத் தள்ளினாள்! நான் கார்ட்டூனில் வருவதுபோல் வில் போல முன்னே
வளைந்தால், அந்த இடத்தையும் தன் தொப்பையால் நிரப்ப முயன்றாள்! இத்தனையும் சகித்து நின்றபோது, தன் காலில்
வளர்த்தி வைத்திருந்த ஈட்டி போன்ற நகங்களால், என் குதிகால்களைப் பதம் பார்த்தாள்! இனி சமாளிப்பதே கடினமென்ற
நிலை எனக்கு சில நொடிகளிலேயே வந்துவிட, அவளை முன்னே செல்லச் சொன்னேன். முன்னேற அவளின் 'டெக்னிக்'
இதுதான் போல! அடுத்து வந்த மொட்டை மனிதன், தன் கைகளைத் தூக்கி அருகில் உள்ள கம்பியில் வைத்து, துர்மணம்
பரப்பி, மூக்கைப் பொத்திக்கொள்ள வைத்தான்! நரகத்தைத் தாண்டித்தான் வைகுண்டம் செல்ல வேண்டுமோ என்னவோ!
ஆறு அடிக்கு மேல் உயரம்; நூறு கிலோவுக்கும் மேல் எடை என்று நூற்றுக் கணக்கில் இடி ராஜாக்கள், கொஞ்சம் குறைந்த
அளவுகளில் இடி ராணிகள் கர்ப்பக் கிரஹத்து நுழை வாயிலில் எங்களை இடித்து நசுக்க, அந்த ஏழுமலையானின் தயவால்
உடற் சேதம் இல்லாமல் தரிசனம் கண்டு வந்தோம்! நல்ல வேளையாக இறைவனின் அருகாமை வரை பக்த கோடிகளை
விடவில்லை! இல்லையென்றால், அங்கு இருக்கும் 'செக்யூரிட்டி' மனித, மனிதிகளின் உந்தலையும் எங்கள் நொந்த உடம்பு
அனுபவித்திருக்கும். ஆண்டவன் தயவால் தப்பித்தோம்!
இடிக்காமல் செல்லும் வழக்கத்தை என்றேனும் நம்மவர்கள் கற்றுக் கொள்ளுவார்களா? மிகவும் சந்தேகமே. ஏனென்றால், காலி பஸ் வந்தால்கூட, நிற்கும் ஐந்து பேர்கள் இடித்துக் கொண்டுதானே ஏறுவதுதானே வழக்கம்! :bump2: