நேற்றைய சங்கீத வகுப்பில் நடந்த நிகழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்! 'ஸ்ரீ ராம பாதமா' பாடலை
இப்போது மாணவிகளுக்குக் கற்பிக்கிறேன். நேற்று ஒரு மாணவியிடம், 'புதிய பாடல் என்ன?' என்று கேட்க, அவள்,
'ஸ்ரீ ராம பாதமே!' என்று அதைத் தமிழாக்கினாள்! நான் உடனே 'ஸ்ரீ ராம பாதமே நின் க்ருபை வேண்டுமே;
சிந்தையில் வருவாயே - எ............... ' என்று பாட, இருவரும் நீண்ட நேரம் சிரித்து, ரசித்து அனுபவித்தோம்! :music: