• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

# 363. அலமாரி.

கல்யாணத்தின் போது முன்பெல்லாம் பையன் வீட்டார்
முகமூடி அணியாத கள்வர் ஆகி விடுவது வழக்கம். ?

(இப்போதெல்லாம் பையன் வீட்டாரே நகை போட்டுத்
திருமண செய்து கொள்ள வேண்டி இருக்கிறது.
இது இன்றைய நிலைமை! அது அன்றைய நிலைமை.)

"உங்க பெண்ணுக்குத் தானே கொடுக்கறீங்க நீங்க!"
என்று சொல்லியே வீட்டுக்கு வேண்டியது எல்லாமே
மொத்தமாக வசூல் செய்துவிடுவார்கள்.

கட்டில், மெத்தை, பீரோ, grinder, மிக்சி, ஸ்கூட்டர், கார்
எதுவானாலும் "வேண்டாம்!" என்ற சொல் வாயில் இருந்து வராது.

அந்தக் கல்யாணத்தில் கட்டில் + மெத்தை கிடைத்தது.

கோத்ரேஜ் அலமாரி வேண்டும் என்று ஒற்றைக்காலில்
மாமனார், மாமியார் நின்றார்கள்.

"பிறகு வாங்கித் தருகின்றேன்!" என்றால் சம்மதிக்க வில்லை.

"உங்கள் ஊரிலேயே வந்து வாங்கித் தருகின்றேன்!"
என்றாலும் அவர்கள் நம்ப மறுத்தனர்.

வேறு வழி இல்லாமல் பெரிய சைஸ் கோத்ரேஜ் பீரோ
பெண்ணின் சீர் வரிசையில் வந்து சேர்ந்தது.

அத்தனை பொருட்களையும் "கடத்த" வேண்டுமே!
அதற்கு ஒரு குட்டி பஸ் ஏற்பாடு செய்தனர்.

திருமணம் முடிந்து செல்லும்போது கட்டில் & பீரோ
பஸ்சின் டாப்பில் வைத்துக் கட்டினார்கள்.

ஒரே குதூகலம் சம்பந்திகளுக்கு.
பெண்ணுடன் எத்தனை பொருட்கள் வசூல்!

செல்லும் வழியில் தாழ்வாக இருந்த மின்கம்பியை
பஸ்சின் மேல் இருந்த பீரோ தொட்டது.

HIGH VOLTAGE மின்சாரம் மெடல் பஸ்ஸில் பாய்ந்தது.
அநியாயமாக இறந்து போயினர் அத்தனை பேரும்!

இருவரின் பேராசை பலரின் மரணத்தில் முடிந்தது!
 
# 364. ஐஸ்வர்யா.

சிங்காரச் சென்னையில் மங்காத புகழ் வாய்ந்த
ஒரு பெரிய கடையின் புது பிரான்ச்!

கண்ணாடிகளும், tileகளும் பளபளத்தன. :love:

அது போன்ற வழுக்கும் தரையில் எல்லாராலுமே
skating செய்யமுடியும்... ஸ்கேட்ஸ் அணியாமலேயே!

மேலே போகும்போது நேராக லிஃப்டில் போனோம்.
கீழே தரைத்தளம் வரை லிஃ ப்ட் வராமல் முதல் மாடியுடன் முடிந்து விட்டது. அதற்குப் பிறகு படி இறங்கிச் செல்ல வேண்டும்.

தரையே முகம் பார்க்கும் கண்ணாடி போல.
படிகட்டின் ஒரு புறம் முழுவதும் mirrors.
கைப்பிடிச் சுவர் கூட அங்கு இல்லை.

கூட வந்தவர்கள் எப்போதும் செய்வது போல
"அம்போ!" என்று விட்டு விட்டுப் போய்விட்டார்கள் .

படி இறங்கிப் போய் சேருவேனா ???
வழுக்கிக் கொண்டு போய் சேருவேனா???

கடை வாசலில் அல்லது வீட்டு வாசலில் rough லேண்டிங் செய்வேனோ அறியேன்

தேவதை போல ஒரு பெண் வெண்ணிற ஆடையில் வந்தாள்."ஆன்ட்டி! என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்!"என்றாள்.

என்னை விழாமல் பத்திரமாக தரைவரை கொண்டு சேர்த்தாள்.
அந்த சுந்தரத் தெலுங்குப் பெண்ணின் பெயர் ஐஸ்வர்யாவாம்.

"ஐஸ்வர்யத்தோடு நீண்ட நாள் வாழட்டும் அவள்!"

கூடவே இருப்பவர்களுக்கும், கூடவே நடப்பவர்களுக்கும்
தெரியாத என்னுடைய அப்பட்டமான தேவை,

நான் வாய் விட்டுச் சொன்னாலும் அவர்கள்
நினைவில் நில்லாத என்னுடையவை தேவை,

எங்கிருந்தோ வந்த அந்த சின்னப் பெண்ணுக்கு
மட்டும் சொல்லாமலேயே எப்படித் தெரிந்தது???
 
இரு வகை மகளிர்.

இரு நண்பர்கள் சந்தித்தனர்.

ஒருவன் சொன்னான் மற்றவனிடம்,
"என் மனைவி எப்போதும் ஏதாவது வாங்கித்
தரச் சொல்லி என் உயிரை எடுப்பாள்!''

மற்றவன் சொன்னான் இவனிடம்,
"என் மனைவி வாங்கித் தரச் சொல்லமாட்டாள்.
எல்லோரையும் போல நான் இது வேணம்னு கேட்டேனா?
அது கேட்டேனா? என்று சொல்லியே உயிரை எடுப்பாள்!"

கேட்பதிலும் இரு வகை உண்டு.
நேரிடை ஒன்று; எதிர் மறை ஒன்று!
 
கேள்வியும் பதிலும்!

"வேண்டுமா?" என்று கேட்டால்
"வேண்டும்!" அல்லது "வேண்டாம்!"
என்று சொல்ல முடியும்!

"வேண்டாம் தானே?" என்று கேட்டால்
"இல்லை! இல்லை! எனக்கு வேண்டும்"
என்று அவ்வளவு எளிதாகச் சொல்ல முடியாது!

கேள்வியிலேயே தெரிந்துவிடும் அவர்கள்
எந்த பதிலை எதிர்பார்க்கின்றார்கள் என்று
 
About the singing sisters, from Wikipedia:

Aishwarya was born to Geetha Shrinivasan and V. Shrinivasan into the family of M.S. Subbulakshmi and Radha Viswanathan. She has a younger sister named S.Saundarya, who is also a musician herself and accompanies her in concerts and tours.

Aishwarya was initiated into music at the young age of four by her great-grandmother M.S.Subbulakshmi and her grandmother Radha Viswanathan. She has also been training under Karnataka Kalashree Vidushi Jambu Kannan for the past 16 years.

She also learns Hindustani vocal from Pandit Nagaraja Rao Havaldar and Sri Omkarnath Havaldar. Aishwarya is also a vainika and learnt the veena from Vidwan Sri.A.Shankararaman and presently under Smt.B.Nagalakshmi (Karaikudi Bani). Aishwarya also learns western classical and plays the piano.

On February 4, 2018, S.Aishwarya got married to Dr.R.S.Muthukumaran.
 
Krishna Nee Begane Baaro..
the singer is requesting Sri Krishna to come quickly
OK my doubt is why the singer is elaborate that sentence??
Raji Madam can you explain??
 
The singers have the liberty to sing variations for any line of the song. These are known as "sangathi"s.

Basic sangathis are set by the composer and proficient singers add some more, according to their capacity and imagination!
 
Krishna forgets Himself in the enchanting music and delays his arrival. So the requests gets repeated umpteeen times.
Or may be He wants to more entreating sangadhis and delays wantonly. So the request gets repeated umpteen times!
In either case the listeners get a musical feast. What more can we ask for?
 
# 365. "Please may I..?"

இவருக்கு "ரூல்ஸ் ரமணி" என்றே
பெயர் வைத்திருக்கலாம்.

எதற்கும், எப்போதும், எல்லோரிடமும்,
ரூல்ஸ்! ரூல்ஸ்!! ரூல்ஸ்!!!

"உன் சாமானை நீயே தூக்கு!
முடியவில்லையா? கொண்டுவராதே!"

கூலி வைக்கும் வழக்கமே கிடையாது.

இள வயதில் சரி. நடை தளர்ந்த பிறகும்
இதேபோல ரூல்ஸ் பேசினால்....
நம் உடல் ஒத்துழைக்க வேண்டாமா?

அது சென்னை வழியாக அமெரிக்க பயணம்.
Bag on wheel என்று ஒன்று உண்டு.

கீழே இரண்டு பெரிய சக்கரங்கள்.
மூன்றடி உயரம் இருக்குமா ???

தரையில் நடக்கும்வரையில் ஓ. கே!
படிக்கட்டு வந்ததும் நின்றுவிட்டேன்!

"Please may I ?" கற்கண்டுக் குரல் ஒலித்தது!
திரும்பினால் மந்தஹாசத்துடன் ஒரு இளைஞன்.

நான் வரையும் கிருஷ்ணனின் அதே நீலக் கலர் ஷர்ட்!

என் பதிலுக்குக் கூடக் காத்திராமல்
பையை எடுத்துக் கொண்டு விடு விடு வென்று
நொடியில் மேல் ஏறிவிட்டார். அங்கேயே நின்றார்.

நான் வந்தவுடன் சிரித்துக் கொண்டே பையைத் தந்தார்.
"தேங்க்ஸ்!" சொல்வதற்குள் எங்கோ போய்விட்டார்.

முன்பின் தெரியாதவரிடம் பையைக் கொடுத்ததற்கு
நல்ல பூஜையும், 108 அர்ச்சனையும் நடந்தது.

கண்களில் தெரிந்துவிடும் ஒருவன்
கண்ணனா அல்லது கள்வனா என்று.

அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றால்
அது அவர்கள் பாடு! நான் ஏன் கவலைப் படவேண்டும்?
 
# 366. கிருஷ்ணன் உண்ணி.

என் பல் டாக்டர் பாலக்காட்டில் இருப்பவர்.
என் physiotherapist பாலக்காட்டில் இருப்பவர்.

என் யோகா டீச்சர் பாலக்காட்டில் இருப்பவர்.
இப்படிப் பாலக்காட்டுடன் நெருங்கிய தொடர்பு.

அவர்கள் அதிசயிப்பார்கள் ஒரு போலவே!

எல்லோரும் அங்கிருந்து கோவை வருவார்.
நான் இங்கிருந்து அங்கே போவதால்.

பல் டாக்டர் கிளினிக் தாழ்வான பகுதியில்.
சாலை நன்கு உயரமாக இருக்கும்.

கடக்க வேண்டும் ஒட்டக முதுகு போல
ஒரு வளைவான பகுதியை.

கைத்தடி இருந்தாலுமே இந்த வளைவு பயமுறுத்தும்.

தடியைச் சரியாக ஊண முடியாது...
நழுவி விடும் அல்லது நகர்ந்து விடும்.

பிறகு அந்தர் பல்டி தான் ....
அருகில் உள்ள பெரிய பள்ளத்தில்.

இந்தமுறை சென்றபோது வெளியே யாருமே இல்லை.
"முருகா! எப்படி விழாமல் இறங்கப் போகிறேன்?"

ஒரு இளைஞன் வேகமாக வெளியே வந்தான்.
"அம்மைக்கு சகாயம் வேணமோ?"

ஓடி வந்து இறங்க உதவி செய்தான்.
நன்றி கூறி அவனிடம் அவன் பெயர் கேட்டேன்.

" கிருஷ்ணன் உண்ணி!" வாயெல்லாம் பல்லாக.

உன்னிக் கிருஷ்ணன்களும், கிருஷ்ணன் உண்ணிகளும்
நினைத்த மாத்திரத்தில் வெளிப்படும்போது

"இறைவன் என்று ஒருவன் இல்லை!" என்று
சொல்பவர்களை எண்ணி பரிதாபப்படுகிறேன்!

"உண்டு!" என்றால் இறைவன் உண்டு!
"இல்லை!" என்றால் இறைவன் இல்லை!

உருவம் என்றால் உண்டு உருவம்!
அருவம் என்றால் உண்டு அருவம்!

நாம் விரும்புவதுபோல அவன் உருவெடுப்பன்!
நாம் விரும்பி அழைத்தால் அவன் வெளிப்படுவான்!

வெளிப்பட விரும்பித் தயாராக இருப்பவனை
விளிக்காதது நம் மடமை! அவன் குறை அன்று!!
 
Another time I requested the auto driver to help me down the camel-back-curve.
He winked his left eye and said that I will have to pay extra for the help!
I winked both my eyes and asked seriously, "Is this enough?"
He burst out laughing and helped me down the slope!
 
oh it was a joke , I know about sangathis and the musicians elaborate on a particular line of a kruti to show his / her beauty about the raaga.
another one was அழகு உள்ள துரை இவர் யாரடி is to be portrayed by a dancer. She having studied in English Medium Schools has little knowledge about the meaning.
Her அபிநயம் for அழ குள்ள துரை இவர் ஆறு அடி first she showed short and for 6 feet lamba she showed extended hand above her head
 
A visual oxymoron at its best ! :)

If the 'குள்ள துரை' is 'ஆறு அடி' tall
how tall will be the 'uyarndha Dhurai' ???

I bet she also pretended to shed tears for 'அழ' :)

I and another friend presented a humorous skit without any rehearsal, during a Tamil Sangham program.

I was about to dance for the song " மாலைப் பொழுதினிலே ஒரு நாள் மாலைப் பொழுதினிலே ...."

It actually means "during the evening time when the flowers blossom giving out their fragrance..."

My friend suddenly appeared on the stage as a dance teacher and told me that மாலைப் பொழுதினிலே meant 'when a person is garlanded' and மாலைப் பொழுதினிலே meant that 'he was also presented a bouquet'

I retorted that I would not learn from a guru who taught students everything wrong. t was followed by my dance and the impact it made was more than usual!
 
Here is the real joke!!

My naughty nephew Ram said that even Lord Krishna is advised to "Borrow", several times!

So, we humans don't have to feel bad to borrow anything from others!!
 
yes ... the best example for oxymoron.
Shri Subbudu once wrote about a singer,
Her singing was enough to raise the living dead.
oh great that was an example of oxymoron , no doubt
ha ha Great Smt Visalakshi ji
 
Precisely what I had meant by jumping back to life!
The shock of hearing the 'music' must have worked like an electric shock bringing them back to life with a startled jump!
 
# 367. தோசையோ தோசை!

ஒரு வீட்டுக்குச் சென்றால் முடிந்த உதவிகள் செய்ய வேண்டும்

எல்லோரும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு
வம்பளந்து கொண்டு இருந்தால் வீட்டு எஜமானி பாடு திண்டாட்டம்.

அங்கு அன்று தோசை டிபன்.

"நான் சுடுகிறேன்!" என்று சுட ஆரம்பித்தேன். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஆயிற்று.

"போதுமா?" என்றால் "இன்னம் வேணம்!"

அடுத்து நான்கு தோசைகள்... மேலும் நான்கு!

அத்தனை பேர் தோசையையும்
இவன் ஒருவனே single-handed ஆகக்
கபளீகரம் செய்து விடுவானோ???
அவன் அம்மா சொன்னார்,

"அவனுக்கு வயிற்றின் அளவு தெரியாது!
நீயாகவே சுடுவதை நிறுத்திவிடு!"

இனி எங்கே எதை நிறுத்துவது?
இனிக் கேட்டாலும் கிடையாது. மாவு காலி!

சொல்வதை அரை மணிக்குமுன்னால் அல்லது
ஒரு டஜன் தோசைகளுக்கு முன்னால்
சொல்லி இருக்கக் கூடாதா?

"To have a Skeleton in the cupboard!"
என்று கேள்விப்பட்டுள்ளேன்!

" To have a cupboard in the skeleton!"
என்ற ஒரு கதை ஆகியது இது!
 
# 368. உடல் , உணவு, உள்ளம், உணர்வு.

அமெரிக்காவில் உள்ள இந்தியக் கோவில்கள் நல்ல
Cultural Centers என்பதில் ஐயமில்லை.

வாரக் கடைசியில் கூட்டம் அலை மோதும்.
இறைவனின் தரிசனம் கண்ணுக்கு விருந்து;

சுவையான இந்திய சமையல் நாவுக்கு விருந்து.
நண்பர்களுடன் சந்திப்பு உள்ளத்துக்கு விருந்து.

அங்கு கற்பிக்கப்படும் சமயம் சார்ந்த விஷயங்கள்
அறிவுக்கும், உணர்வுக்கும் விருந்து.

பட்டுப் பாவாடையில் வருவர் குட்டிப் பெண்கள்,
நகைகள் அணிந்து, நம் கலாசாரத்தை மறக்காமல்!

சமஸ்க்ருதம், ஸ்லோகங்கள், சங்கீதம், இசைக் கருவிகள்
எல்லாம் கற்கலாம் அங்கே ஒரே இடத்தில்!

'வயோதிக' அன்பர்கள் 'கொட்டம் அடிக்காமல்'
உருப்படியான வேலைகளைச் செய்கின்றார்கள்.

சுத்தமாக, சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளை
அங்கேயும் "ஒரு கை பார்த்து விட்டு" காகிதப் பைகளில்
வீட்டுக்கும் வாங்கிச் செல்கிறார்கள் அவர்கள்.

இரண்டு டாலருக்கு பூந்தி லட்டு எங்கே கிடைக்கும்?

இங்கே நிச்சயம் கிடைக்கும் .......
எவ்வளவு வேண்டுமானாலும் !!!!

இன்றும் நாவில் நீர் ஊறுகின்றது அன்று ரசித்து ருசித்து உண்ட
எலுமிச்சை சாதம், புரியோதரை இவற்றை நினைவ கூர்ந்தால்
 

Latest ads

Back
Top