• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

One must know how to convert a curse into a blessing.

I cut a sari into two tops, one churidhar and one dhuppatta.

Usually there will be enough cloth for two sets of sleeves. But one sari was very short and the material would not suffice for the two pairs of sleeves for the two tops.

Wearing sleeveless tops is out of question. Luckily I could find a blousebit from my collection which was of the same shade at the sari and had thread work done in golden color.

I cut off the two pairs of sleves from that. I bet these two tops are going to be the best among all my dresses - in spite of ( or is it because of ?) the 'ottu-soothram-work' done by me! :)
 
Remembering Pythagoras Theorem with due reverence!

The legs of the pyjama appeared to be super long even while I was stitching them. I thought it was due to the design and border of the material that this optical illusion was created.

But lo and behold! The legs were 3 " longer than the usual pyjama. I had not cut the leg pieces extra LONG, then how come they grew longer?

It was a puzzle and it would not let me relax until I found the solution. Then I drew a rough sketch of the usual measurement and the measurements of this particular one. Then It dawned on me!

Since I had more materia available, I took an extra WIDE piece for cutting the two trapezium pieces I would need to make the pyjama loose and comfortable.

The extra WIDE pieces had yielded extra LONG hypotenuse in the trapezium pieces - increasing the length of the leg by a solid 3"!

Knowing is one thing ! Employing what we know in real life is quite another thing! Knowledge becomes useful only when it is followed by its application!
 
Every person knows what every other person in the house likes and dislikes.

They hand out 'the likes' to those whom they like and
'the dislikes' to those whom they dislike!

The lucky people find their paths strewn with rose petals and the unlucky ones find their paths paved with thorns!

So it is NOT the lack of 'knowledge about the likes and dislikes' that cause the actual problem.

It is the 'extensive knowledge about the likes and dislikes' that cause the problems.

Call it weird or wild but it is true!
 
Smile is also like yogurt. :)

since you need some of it :)

to make more of it! :)

Smile at strangers and you will be surprised

how many of them actually smile back at you and feel relaxed!

Scowl is also like yogurt.

When you see one your face

automatically becomes sour!
 
# 321. A clothes shop.

அந்தக் கடையில் பிராக் மிகவும் விலை குறைவாக இருந்தது.
சைஸ் படி அழகாக டிஸ்ப்ளே செய்திருந்தார்கள்.

என்னால் என் கண்களையே நம்பவே முடியவில்லை !
அவ்வளவு குறைந்த விலைக்கு அவ்வளவு நல்ல ஆடைகளா? நாலு, ஐந்து செலக்ட் செய்தும் விட்டேன்.

பிறகு மகன் கூறினான் அது used clothes shop என்று.
ஏழை, பாழைகள் வாங்கிக் கொள்வார்களாம்.

நான் அதன்பின் அவற்றை வாங்கவில்லை.
ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது இது தான்!

அவை புதியவை என்று ஏமாளிகள் தலையில் கட்டாமல்
உண்மை கூறி அவைகளை குறைந்த விலைக்கு விற்றது!
 
# 322. சகாய விலையில் கேன்டீன்!

கேன்டீனில் சகாய விலையில் சாப்பாடு போடுவார்கள்.
வொர்கர்களுக்கு மாதத்துக்குத் தேவையான கூப்பன்களுடன்.

பல்லைத் தேய்த்துவிட்டோ ( தேய்க்காமலோ)
ஆபீஸ் சென்றால் போதும்! ?
மற்றதெல்லாம் அங்கேயே கிடைக்கும்.

எல்லோரும் பெரிய, பெரிய காரியருடன் செல்வார்கள்.
பாவம் மனைவிகள்! அதிகாலையிலேயே எத்தனை வித சமையல்?

பிறகு தெரிந்தது அவர்கள் கொண்டு செல்வது காலிக் காரியர் என்று!

கேன்டீனில் உண்பவர்கள் காலிக் காரியர் எடுத்துச் செல்வது ஏன்?

சாயங்காலம் அவை நிரம்பித் திரும்பி வரும் அதற்காக!

குரங்கும், முதலையும் கதையில் முதலை குரங்கிடம் தன்
ஆசை மனைவிக்கும் நாவல் பழம் கேட்குமே அதே கதை!

தானும் உண்டு விட்டு, பெண்டு பிள்ளைகளுக்கும்
மலிவு விலையில் தினமும் ஒரு வித டிபன்
வாங்கிச் செல்லும் சாமர்த்தியம் நமக்கு வருமா?
 
# 323. Food spraying Dirty Baby!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது உணவை துப்புவது
அல்லது அம்மா / அப்பா முகத்தில் spray செய்வது!

வாய்க்குள் போகும் உணவைவிட
வெளியில் வருவது தான் அதிகம்!

ஏமாற்றி உள்ளே உணவைத் தள்ளவேண்டும்.

"Dirty Baby!" என்ற கோபித்துக் கொண்டால்
அதுவே பெரிய பட்டமளிப்பைப்போல
எண்ணிக் கொண்டு துப்பிவிட்டு சிரித்துக் கொண்டே
"Dirty Baby " என்று சொல்லி மீண்டும்... மீண்டும்...!

அதுவே ஒரு புது விளையாட்டாகிவிடும் குழந்தைக்கு.

சிந்தித்துப் பார்த்தால் பல பெரியவர்களும் உண்மையில்
இதையே செய்கின்றோம் நம் வாழ்விலும்.

ஒரு தவறு செய்துவிட்டு "சாரி" சொல்லிவிட்டு
மீண்டும் அதே தவற்றைச் செய்கின்றோம்.

நமக்கும் இரண்டு வயதுக் குழந்தைக்கும்
உண்மையில் என்ன வேறுபாடு???
 
# 324. Air hostess.

ஒரு air hostess எதிர் வீட்டுக்கு வந்தாள்.
கையில் சிறு குழந்தையுடன், தனியாக.

"குழந்தையின் தந்தை யார்?" என்றால்
ஒரு மங்கின போட்டோவைக் காட்டினாள்.

கல்யாண போட்டோ என்று எதுவும் இல்லை.
இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டது கூட இல்லை

அதிசயமாக இருந்தது.
நம்ப முடியவில்லை.

பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டும் முன்பே
டிஜிட்டல் கேமராவில் படம் எடுக்கும் காலம் இது.

குழந்தையை அவள் படுத்தும் பாடு நம்மை உறுத்தும்.
தலை கீழாகத் தொங்கும்படி பிடித்துக் கொள்வாள்.

அவனை படுக்க வைத்து கால்களையும், கைகளையும்,
எலாஸ்டிக் பாண்டை இழுப்பது போல நன்றாக
இழுத்து, மடித்துச் சுருட்டி..என்ன ட்ரைனிங் இது?

மாலையில் பெரிய கார் வரும். ஏறிப் போவாள்.
காலையில் தான் திரும்பி வருவாள்.

திடீரென்று உடம்பு முழுக்க HAIR REMOVER CREAM
பூசிக்கொண்டு குட்டி பனியன், ஜட்டியைப்
போட்டுக் கொண்டு நிற்பாள். அயோமயம்!!! :(

வேலைக்காரி சங்கிலியைத் திருடினாள் என்று கசமுசா ஆனது! பிறகு வீட்டைக் காலி செய்துகொண்டு போய்விட்டாள்.

அவளும் அந்தக் குழந்தையும் என்ன ஆனார்கள்
எங்கே இருக்கிறார்கள் எதுவுமே தெரியவில்லை.

அவள் காலி செய்தபோது நாங்கள் ஊரில் இருக்கவில்லை.

ஒரு நாள் ஒரு நண்பி கூறினாள்,

"வரும் வழியில் பெரிய ரகளை!
கூட்டத்தின் உயிர்நாடி யார் என்று தெரியுமா???
நம்ம AIR HOSTESS!"
 
# 325. Feeding the baby.

Air hostess குழந்தைக்கு உணவு கொடுப்பதை வெறுத்தாள்.

வயிற்றில் ஒரு ஜிப் வைத்துக் கொடுத்திருந்தால்,
சந்தோஷமாக கலக்கிய உணவை உள்ளே கொட்டி,
ஜிப்பைப் போட்டுவிட்டு, போய்க்கொண்டே இருந்திருப்பாள் போல!

தினமும் குழந்தை "வீல் வீல்" என்று அலறுவான்.
இவள் திட்டும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

என்ன தான் நடக்கிறது என்று சென்று பார்த்தால்,
தொடைக்கு அடியில் அவனை இடுக்கிக் கொண்டு,
அவன் மூக்கைப் பிடித்துக் கொண்டு
வாயில் ஊற்றி விழுங்க வைக்கிறாள்.

ஒரு நாள் என்னிடம் வந்தாள்,
"இன்று மட்டும் நீங்கள் கொடுங்கள்!"

கையில் ஒரு பெரிய கிண்ணம் அல்லது சின்ன பௌல் .
அதில் பீட்ரூட் கலரில் மைதாப் பசை போல ஒரு சாதனம்.

"இது என்ன?" என்றால் அவள் சொல்கிறாள்,

" காய்கறிகளை அரைத்து அதில் சோற்றையும் குழைத்தது!

நான் கேட்டேன் அவளிடம்,
"உன்னால் இதைச் சாப்பிட முடியுமா?"

'நான் ஏன் இதைச் சாப்பிட வேண்டும்?" என்றாள்.

" குழந்தை ஏன் இதைச் சாப்பிட வேண்டும்?" நான் கேட்டேன்

"உணவு உண்பது ஒன்று தான் ஆயுள் முழுக்க நடக்கும் ஒன்று. அந்த நேரத்தை இனிமையானதாக, சுவையானதாக enjoyable ஆக்க வேண்டும்"

என் வீட்டில் இருந்த சாதத்தில் பருப்பும், நெய்யும்,
போட்டுப் பிசைந்து கொஞ்சம் தெளிவாக
ரசம் கலந்து கொடுத்தால் கபகப என்று உண்கின்றான்!

"நீங்களே இனி தினமும் சாப்பிட வைத்து விடுங்கள்!"
என்றாள்.

"உன் வேலையை நீதான் செய்ய வேண்டும் பெண்ணே!
அம்மா என்று அவன் உன்னிடமே உண்ண விரும்புவான்!"

அவளுக்கு மனதே இல்லை,
Off load பண்ணலாம் என்று இருந்தாள்!

அப்பாவின் அறிவுரை நினைவுக்கு வந்தது!
"உதவி செய்யலாம் ஆனால் ஏமாளி ஆகக்கூடாது!"
 
# 326. The chain borrowing aunty.

கல் பதித்த ஒரு டாலர் செயின் அணிவேன் விசேஷ நாட்களில்.

ஒரு ஆன்ட்டிக்கு அதன் மேல் எப்போதும் ஒரு கண் (இரண்டு??)

ஒரு நாள் அதை தருமாறு கேட்டார். "எதற்கு?" என்றால்

"என் தட்டானிடம் சொல்லி அந்த டாலர் டிசைன் காபி
செய்யவேண்டும்!"

"அவனை இங்கே வரச் சொல்லுங்கள்!" என்று கூறிவிட்டு வந்து விட்டேன்.

அவர் விடுவதாக இல்லை! வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.

பிறகு சொன்னேன், "அவர்களிடம் டிசைன் புத்தகம் இருக்கும். அதில் இந்த டிசைன் இருக்கும். நான் வேண்டுமானால் புத்தகத்தில் அதைத் தேடி எடுத்துத் தருகின்றேன்'

அவர் முகம் தொங்கிப் போயிற்று.

பிறகு பேச்சு வாக்கில் ஒரு நண்பியிடம் சொன்னபோது

"நல்லவேளை தப்பித்தாய்! அந்த ஆன்ட்டிக்கு இதே வேலை தான். செயினில் ஒரு துண்டை வெட்டி எடுத்துவிடுவார்! அளந்தால் தான் நமக்கே தெரியும் அவ்வளவு நீட்டாக."

24 inches, 24 grams செயினில் ஒன்று அல்லது இரண்டு
அங்குலம் வெட்டி எடுத்தால் என்ன ஆயிற்று???

தட்டான் துணை இருந்தால் தகிடு தத்தம் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும்.

எந்த மாதிரி மனிதர்கள் எல்லாம் உலகில் இருக்கிறார்கள்!!!
 
# 327. Collector of old newspapers!

இவருக்கு தூரத்து சொந்தம் அந்த மாமா.

அவர் வீட்டுக்குள் நுழைந்தது கண்ணில் பட்டது
எங்கு நோக்கினும் ஒரே ஒரு சாமானம் தான்

அடுக்கு அடுக்காக கட்டப்பட பழைய newspaper.

எத்தனை ஆண்டுகள் சேகரித்தாரோ தெரியவில்லை.

இருக்கும் கொஞ்டம் இடத்திலும் இப்படி அடுக்கி
தூசும் தும்பும் வீடு நிறைய இருப்பதை மற்றவர்கள்
எப்படி சகித்துக் கொள்ளுகிறார்கள்! பாவம்!

ஆனால் ஒரு அதிசயம் நடந்தது!

அவர் இருக்கும் போது விற்க முடியாததை
'அவர் இல்லாத போது' அவர்கள் விற்றார்கள்

பழைய பேப்பரில் அவ்வளவு பணம் கிடைக்குமா??

அப்போது இருந்த பல செலவினங்களுக்கு
அந்தப் பணம் மிகவும் உதவியாக இருந்ததாம்!

முன் ஜாக்கிரதையாக தீர்க்க தரிசனத்துடன்
வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்திருப்பாரோ?
 
It is a riddle. I do not get a taxi for the onward trip UNLESS I book it the previous night. But for the return trip I am able to get the taxi from anywhere in less than 10 minutes!
How and Why do these happen?
 
I guess the spiritual practices, singing and writing Sree RAma jayam daily are adding a spiritual dimension to me!

Why else do strangers touch my feet and wish to be blessed!
I wish these would reduce my intolerance to wanton taunts and foul language as well.

But I who adore the Meesaith Thamizh kavignan can not but follow his message "Roudhram pazhagu!"
 
# 328. தினமும் பாட்டும், கூத்தும், குடியும்!

திரைப் படங்களில் நிறையப் பார்த்திருக்கின்றோம்!
கையில் சுற்றிய மல்லிகைச் சரத்துடன் ஹீரோ /வில்லன்!

கதக் நடன உடை அணிந்து கதாநயகி ஆடிப் பாடுவாள்
எல்லோரும் "வா ரே வா!" என்று நோட்டுக்களை அள்ளி வீசுவார்கள்.

இது உண்மையிலேயே நடக்கும் ஒன்று, சில பெரிய நகரங்களில்!

பணக்காரர்கள் பணத்தையும், நேரத்தையும்
ஒருசேர வேறு எங்கே, எப்படிச் செலவழிப்பதாம் ?

அந்த சேற்றில் ஒருவன் மாட்டிக் கொண்டான்.

மனைவி இங்கே பூஜையும், விரதமும், உபவாசமும்
செய்துகொண்டிருக்க
அவன் அங்கே நடன மணியைப் பூஜை செய்து கொண்டிருந்தான்.

நண்பர்கள் எல்லோருக்கும் தெரியும்

ஆனால் அந்தப் பெண்ணிடம் உண்மையைச் சொல்லும் துணிச்சல் இல்லை! என்ன ஆவாளோ?

கணவனே கண்கண்ட தெய்வம் பதிவிரதை அவளுக்கு!
கண்டதே காட்சி கொண்டதே கோலம் கோவலன் இவனுக்கு!

உண்மை அங்கே ஊமை ஆனது.
அதுவும் நன்மைக்கே என்பேன்!
 
# 329. Lord Emsworth and Mr. Jeeves!

அப்பாவுக்கு P.G.Wodehouse Novels மிகவும் பிடிக்கும்

கிடைக்கும் கொஞ்சம் நேரத்தில் அதைப் படித்துவிட்டுக்
குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருப்பார்.

அவர் சிரிப்பதை பார்த்தாலே நமக்கும் சிரிப்பு வரும்.

அதில் இரண்டு மெயின் கதா பாத்திரங்கள் இவர்களே!
Lord Emsworth and Mr. Jeeves!

அப்பாவின் அதீத I. Q. வின் காரணமாக
அம்மா அவருக்கு வைத்த செல்லப்பெயர் Jeeves.

அம்மாவின் பெயர் M என்ற தொடங்குவதாலும்
Lord Emsworth போலவே சிரிக்க வைப்பதாலும்
அம்மாவுக்கு அப்பா வைத்த பெயர் Emsworth!

எங்கள் எல்லோருக்கும் இருக்கும் நகைச் சுவை உணர்வுக்கு இவர்களே மூல காரணம்
மற்றும் ஒரே காரணம்.

அம்மா எப்போதுமே அப்பாவை " Jeeves" என்றே அழைப்பார்.

"ஏன்னா?" "கொஞ்சம் வரேளா?" என்றெல்லாம் அழைப்பதைவிட
இது கேட்க இனிமையாக இருக்கிறது அல்லவா?

நான் இவரை அழைப்பது எப்போதுமே,
A.P. ஸ்டைலில் மிகவும் மரியாதையோடு "aiyya gaaru!"
 
# 330. எங்கும் ஈகோ! எதிலும் ஈகோ!

"தாய் தந்தையர்" என்பார்கள்;
"அன்னையும் பிதாவும்" என்பார்கள்;

"மாதா பிதா குரு தெய்வம்" என்பார்கள்;
"அன்னை தந்தையர்" என்பார்கள்;

தாயை முதன்மைப்படுத்தியே கூறுவது வழக்கம்.
"Ladies first!" என்பது மேலை நாடுகளிலும் நிலவும் ஒன்று.
Mrs & Mr. என்று அழைப்பது தான் வழக்கம்.

"நீ "Mrs" என்று முதலில் போட்டதால் அது எனக்கு
நீ அனுப்பின இன்விடேஷேன் அல்ல!" என்று

சினந்து கொண்டு உங்களால் யாரிடமாவது
பதினான்கு ஆண்டுகள் பேசாமல் இருக்க முடியுமா???

Research thesis ஐ வழக்கம்போல 'அன்னை, தந்தை'க்கு
dedicate செய்த மகனிடம் எகிறி குதித்துச் சாட முடியுமா?

வாங்கிக் கொடுத்த புதிய உடைகளைத் தானும் அணியாமல் பிறருக்கும் கொடுக்காமல் மொத்தமாக வீணாக்க முடியுமா?

எதிலும், எப்போதும், தன்னையே எல்லோரும்
முதன்மைப்படுத்த வேண்டும் என்று
ஆசைப் படுவதில் ஒரு தவறும் இல்லை.

அப்படிச் செய்யாதவர்களை பரமவைரிகளாக எண்ணலாமா?
அப்படிச் செய்தால் நண்பர் / உறவினர் ஒருவரேனும் மிஞ்சுவாரா?

முண்டியடித்துக் கொண்டும், முரண்டு பிடித்துக் கொண்டும் இருப்பதுவும் ஒரு வாழ்க்கையா?

அத்தனை ஈகோ ஒருவருக்கு எதற்கு???
Your Ego will make You go, Me go and everybody go away!
 
Some are made to be /become difficult family members.
Some nuts add to the taste while some others break the teeth.
So discretion is the better part of valor and root of survival!
 
# 331. Night watchmen.

மூன்று watchmen; பகலில் இருவர்; இரவில் ஒருவர்.
மூவரில் ஒருவர் மிகவும் வயது முதிர்ந்தவர்!

பெரியவரைக் கஷ்டப் படுத்த வேண்டாம் என்று
அவருக்கு எப்போதும் பகல் ட்யூட்டி தான்.

ஆனால் விதி வேறுவிதமாக இருந்தது.
அந்தத் தாத்தாவின் மனைவி கருத்தரித்தார்.

அவளும் வயது முதிர்ந்தவள் தான்.
இயற்கை எப்படி விளையாடுகிறது!!!

குழந்தைக்காக ஏங்கி முயற்சி செய்பவர்களுக்குத் தோல்வி.
தொண்டுக் கிழங்களுக்குக் கேட்காமலேயே குழந்தை.

கிழவருக்குப் பெருமையாகவும் இருந்தது,
வெட்கமாகவும் இருந்தது.

"பெரியவரு பெரிய வேலை எல்லாம் செய்யறாரு!"
என்று கூறி அவருக்கும் நைட் ட்யூட்டி போடலாயினர்.

அவர் அடித்த ஒரு நாள் (ஒரு ராக்) கூத்து O.K. தான்!

ஆனால் வாரக் கணக்கில் இராக் கண் முழித்தது
தாத்தாவின் உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை.

சில மாதங்களிலேயே கிழவியையும், குழவியையும்
விட்டு விட்டு ஒரே அடியாக மறைந்துபோனார்.
 
# 332. மனைவியைத் தேடி...

ராமன் மட்டும் தான் மனைவியைத் தேடினானா?

நிறையப் பேர்கள் தினம் தினம் ஓயாமல்
மாலை நேரத்தில் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்!

ஒருவர் ஆபீசில் இருந்து வந்தவுடன் வீடு வீடாகச் சென்று
"மா பார்யா மீ இன்ட்லோ உன்னாரா?" என்று கேட்பார்

("Is my wife in your house by any chance?" )

எனக்கு நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாமா என்று தோன்றும்.

தினமும் கணவன் திரும்பி வரும் நேரம் தெரியும்.
"மாட்லாடி" , "போட்லாடி" எல்லாம் முடித்துக் கொண்டு
அவன் வருவதற்கு முன்பே வீடு திரும்பவேண்டாமா?

என்ன மனைவி இவள்?
என்ன பொறுமை இந்தக் கணவனுக்கு?
இவ்வளவு பொறுமை தேவைதானா?

வீட்டில் பெரியவர் ஒருவர் இருந்தால் இப்படித்
திரிய முடியுமா அவிழ்த்து விட்ட கன்றுக் குட்டிபோல ?

அவள் பெண்கள் இதையே கற்றுக் கொள்வார்கள்.
அவர்களும் நாளைக்கு இதையே செய்வார்கள்.

இங்கும் அதுவே நடக்கிறது, வேறு விதத்தில்.
அவன் போவதில்லை. ஒரு பெண்ணை அனுப்பித்
தேடுகின்றான் தினமும் அவளை!

நல்ல மனைவிகள்!!! நல்ல கணவன்கள்!!!!
 
# 333. சுடும் பாலும், அழும் குழந்தையும்!

சில தாய்மார்கள் பால் கலந்து கொடுப்பதுக்குள் குழந்தை அழுது, வீரிட்டு, மூச்சுத் திணற ஆரம்பித்து விடும்; கொடுமை!

கொதிக்கக் கொதிக்க நீரில் பால் பவுடரைப் போட்டு
சாயாக் கடையில் ஆற்றுவதுபோல கவலைப்படாமல்
விஸ்தாரமாக அதை ஆற்றிக்கொண்டு இருப்பார்கள்.

இங்கே குழந்தை மூச்சு விடாமல் அழுது, அழுது, அழுது
நீலமாக மாறி இருக்கும்.

பால் பவுடர் கரையச் சுடுநீர் தேவை.
இது மறுக்கமுடியாத உண்மை.

கொஞ்சம் சுடுநீரில் பால் பவுடரைக் நன்கு குழைத்து விட்டு அதில் காய்ச்சி ஆற வைத்த நீரை ஊற்றினால்
நொடியில் பால் தயார்.

இந்த அளவுக்குக் கூட சிந்திக்கத் தெரியாதவர்கள் எல்லாம் ஏன் பிள்ளை குட்டிகளைப் பெற்றுத்
தள்ளுகிறார்கள்???

இதில் குழந்தைக்குத் திட்டு வேறு தாராளமாகக் கிடைக்கும்!!!

"சனியன்! எப்படி அழுவுது பாரு!
பட்டினி போட்டுக் கொல்லுற மாதிரி!"

யார் இங்கே சனியன்?
கொல்லுகிறாளா இல்லையா?
உங்கள் நெஞ்சைத் தொட்டு தைரியமாகச் சொல்லுங்கள்!!
 

Latest ads

Back
Top