சிரிக்க! :decision: சிந்திக்க!
கடவுள்.
அலகில்லா விளையாட்டுடையான் = கடவுள்.
குழந்தை ஏன் மணல் வீடு கட்டுகின்றது ?
ஏன் அதை வைத்து நிஜவீடு போல் விளையாடுகிறது?
ஏன் அதை உதைத்துத் தள்ளிவிட்டு போகின்றது ?
அதனால் அதற்கு என்ன லாபம்? என்ன நஷ்டம்?
ஒரு லாபமும் இல்லை, ஒரு நஷ்டமும் இல்லை.
அது குழந்தைக்கு ஒரு பொழுது போக்கு.
ஒரு விளையாட்டு. ஒரு டைம் பாஸ்.
கடவுளைப் பொறுத்த வரையில் நாம்
வெறும் மணல் துகள்கள் தாம்.
அவன் பொழுது போக நம்மை வைத்து
விளையாடுகின்றான். அவ்வளவே!
போர் அடித்தால் உதைத்துத் தள்ளிவிட்டு
இன்னும் ஒரு புது வீடு மீண்டும் கட்டுவான்!
