சிரிக்க! :decision: சிந்திக்க!!
செத்தும் கெடுத்த ஒருவன் கதை
“செத்தும் கொடுத்தான்!” வள்ளல் சீதக்காதி!
அத்தனை பேரும் அறிவார் இக்கதையை.
செத்தும் கெடுத்தவன் ஒருவன் கதையை
மெத்தப் படித்த குரு எங்களுக்குக் கூறினார்!
ஒரே ஒரு கிராமம், அதில் ஒரு ஜமீந்தார்!
ஒரு மாதிரிப் புரிந்திருக்கும் உங்களுக்கும்!
கேட்க ஆள் இல்லாததால், எல்லோருக்கும்
வேட்கைப் படித் தொல்லைகள் செய்தாராம்.
இறக்கும் தருவாயில் அனைவரையும் அழைத்துச்
சிறந்த மழை போலக் கண்ணீர் பொழிந்தாராம்.
“என் வாழ்நாட்களில் நான் செய்த பாவங்களுக்கு,
என்னை யாராலுமே மன்னிக்க முடியாது அறிவேன்!
நான் இறந்த பிறகு என் உடலுக்குச் செருப்புமாலை
ஒன்று அணிவித்துத் துடைப்பத்தால் அடியுங்கள்!”
“மாட்டோம்! மாட்டோம்!” என்று மறுத்தவர்களிடம்
மன்றாடினார்! தன் ஆத்ம சாந்தியை வேண்டினார்!
வேறு வழியில்லாமல் அவர்கள் ஒத்துக் கொண்டனர்.
மறு நாள் உடலுக்குச் செருப்பு மாலை அணிவித்தனர்.
துடைப்பத்தால் அடித்துக் கொண்டு செல்லும் போது….
அடுத்து வந்து நின்றன நிறைய போலீஸ் ஜீப்புகள்!
அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்!
அனைவருக்கும் தண்டனை கிடைக்கக் காரணம்…..???
இறக்கும் முன் போலீசுக்கு எழுதியிருந்தார் ஒரு கடிதம்! :evil:
“இறந்த என் உடலை அவமதிக்கப் போகின்றார்கள்” என! :heh: