அன்றும்.... இன்றும்.....
அன்று வரன் பார்க்க வருவார்கள் பையனின்
பெற்றோர்கள், உற்றோர்கள், நண்பர்கள் புடை சூழ.
பெண்ணின் உயரம், எடை, அளவு முதல் கொண்டு
அத்தனை data வையும் தரவேண்டும் அவர்களுக்கு.
நம்பாமல் தோள் அருகில் நின்று செக் செய்வார்கள்.
பாடச் சொல்லி, ஆடச் சொல்லி, ஓடச் சொல்லி,
டிபன் காபி தரச் சொல்லி, நமஸ்காரம் பண்ணச் சொல்லி,
இடுப்பையே ரிப்பேர் செய்துவிடுவார்கள் வெளியேறுமுன்!
இத்தனைக்கும் 'கேஸ்' தேறுமா தேறாதா என்றே தெரியாது.
அதற்குள் அத்தனை லூட்டி அடிப்பார்கள் வந்திருக்கும் அவர்கள்.
இரண்டு பக்கங்களிலும் ஓகே ஆகிவிட்டால்....
பிறகு நகை, நட்டு, கையில் ரொக்கம், செலவுக்குப் பணம்
ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட், flight டிக்கெட் இத்யாதிகள் ...!
பிறகு தங்குவதற்கு எந்த இடத்தில ஏற்பாடு செய்ய வேண்டும்;
எப்படி, எப்படி, யார், யார், வரவேற்க வேண்டும் இத்யாதிகள் ...!
சீர் வரிசைகள் என்ன என்ன ...சைஸ், நம்பர் முதலியன
பருப்புத் தேங்காய் dimensions (base radius & height உள்பட.)..
மூச்சு வாங்குகிறது.... எனவே பிறகு தொடரும்.