தியான ஸ்லோகங்கள்
தியான ஸ்லோகம் (1)
சூர்யஸ்பர்தி4 கிரீடம் ஊர்த்4வதிலக –
ப்ரோத்3பா4ஸி ப2லாந்தரம்
காருண்யாகுல நேத்ரமாத்ர –
ஹஸித்தோல்லாஸம் ஸுநாஸாபுடம்|
க3ண்டோ3த்3யன் மகராப4 குண்ட3லயுக3ம்
கண்டோ2ஜ்வலத் கௌஸ்துப4ம்
த்வத்3ரூபம் வனமால்ய ஹாரபடல-
ஸ்ரீவத்ஸ தீ3ப்தம் ப4ஜே||(2:1 )
சூரியனுக்கு நிகராகப் பிரகாசிக்கும் கிரீடத்தையும்; திலகத்தால் அழகூட்டபட்டநெற்றியையும்; கருணை வழியும் கண்களையும்; கனிந்த புன்னகையையும்;அழகிய நாசியையும்; கன்னங்களில் பிரகாசிக்கும் இரு மகர குண்டலங்களையும்; வனமாலை, முத்து மலை, ஸ்ரீ வத்சம் இவைகளுடன் விளங்கும் தங்கள் தோற்றத்தையும் நான் சேவிக்கின்றேன்.
தியான ஸ்லோகம் (2)
கேயூராங்க3த3 கங்கனோத்தம –
மஹாரத்னாங்கு3லி யாங்கித
ஸ்ரீமத்3பா3ஹு சதுஷ்க ஸங்க3த
க3தாச2ங்கா2ரி பங்கேருஹாம் |
காஞ்சித் காஞ்சன காஞ்சி லாஞ்சித
லஸத் பீதாம்ப3ராலம்பி3னீம்
ஆலம்பே3 விமலாம்பு3ஜ த்3யுதிபதா3ம்
மூர்த்திம் த்வார்த்திச்சி2த3ம்||( 2:2)
தோள்வளைகள், கைக்கட்டு வளையல்கள், மணிக்கட்டு வளையல்கள், சிறந்த ரத்தினங்கள் பதித்த மோதிரங்கள், இவைகளால் அலங்கரிக்கப்பட்ட காந்தி பொருந்திய நான்கு கைகளில் இருக்கின்ற கதை, சங்கு, சக்கரம், தாமரைப் பூ இவைகளையும்; தங்க அரை நாணால் அலங்கரிக்கப் பட்ட பிரகாசிக்கும் பட்டுப் பீதாம்பரத்தையும்; நிர்மலமான தாமரைப்பூ போன்ற காந்தியுடைய திருப்பாதங்களையும்; துக்கங்களைப் போக்கடிக்கும் திருமேனியையும் நான் வணங்குகிறேன்.