• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sahasra nAma AvaLi

ஸ்ரீ ஹனுமான் ஸ்தோத்ரம்

ஸர்வாரிஷ்ட நிவாரகம் சு'ப4கரம் பிங்கா3க்ஷமக்ஷாபஹம்
ஸீதான்வேஷண தத்பரம் கபிவரம் கோடீந்து3 ஸூர்யப்ரப4ம் |
லங்காத்3வீப ப4யங்கரம் ஸகலத3ம் ஸுக்3ரீவ ஸம்மானிதம்
தே3வேந்த்3ராதி3 ஸமஸ்த தே3வவினுதம் காகுத்ஸ்த2 தூ3தம் ப4ஜே || (1)

க்2யாதா: ஸ்ரீ ராமதூ3த : பவனதனுப4வ பிங்களாக்ஷ: சி'கா2வான்
ஸீதா சோ'காபஹேரி தச'முக2 விஜயீ லக்ஷ்மண ப்ராணதா3தா |
ஆநேதா பே4ஷ ஜாத்3ரே லவண ஜலதி3தே4 லங்க4னே தீ3க்ஷிதோ ய:
வீர: ஸ்ரீமான் ஹனுமான் மம மனஸி வஸன் கார்ய ஸித்3தி4ம் தனோது || (2)

மனோஜவம் மாருத துல்ய வேக3ம் ஜிதேந்த்3ரியம் புத்3தி4மதாம் வரிஷ்ட2ம் |
வாதாத்மஜம் வானரயூத3 முக்2யம் ஸ்ரீ ராம தூ3தம் சி'ரஸா நமாமி || (3)

பு3த்3தி4ர் ப3லம் யசோ' தை4ர்யம் நிர்ப4யத்வம் அரோக3தா |
அஜாட்4யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத்3 ப4வேத் || (4)
 
1613428171666.png
 
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்

நமஸ்தேத்ஸு மஹாமாயே ஸ்ரீபீடே2 ஸுரபூஜிதே |
ச'ங்கசக்ர க3தா3ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || (1)

நமஸ்தே கருடா3ரூடே4 கோலாஸுர ப4யங்கரி |
ஸர்வபாபஹரே தே3வி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || (2)
 
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்

ஸர்வக்ஞே ஸர்வவரதே3 ஸர்வ து3ஷ்ட ப4யங்கரி |
ஸர்வ துக்க2 ஹரே தே3வி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || (3)

ஸித்3தி4 பு3த்3தி4 ப்ரதே3 தே3வி பு4க்தி முக்தி ப்ரதா3யினி |
மந்த்ர மூர்த்தே ஸதா3 தே3வி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || (4)
 
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்

ஆத்3யந்த ரஹிதே தே3வி ஆதி3 ச'க்தி மஹேஸ்வரி |
யோக3க் யோக3 ஸம்பூ4தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || (5)

ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்3ரே மஹாச'க்தி மஹோத4ரே |
மஹாபாப ஹரே தே3வி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || (6)
 
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்

பத்3மாஸன ஸ்தி2தே தே3வி பரப்3ரஹ்ம ஸ்வரூபிணி |
பரமேசி' ஜக3ன்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || (7)

ஸ்வேதாம்ப3ரத4ரே தே3வி நானாலங்கார பூ4ஷிதே |
ஜக3த்ஸ்தி2தே ஜக3ன்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || (8)
 
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்

நமஸ்தேத்ஸு மஹாமாயே ஸ்ரீபீடே2 ஸுரபூஜிதே |
ச'ங்கசக்ர க3தா3ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || (1)

நமஸ்தே கருடா3ரூடே4 கோலாஸுர ப4யங்கரி |
ஸர்வபாபஹரே தே3வி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || (2)

ஸர்வக்ஞே ஸர்வவரதே3 ஸர்வ து3ஷ்ட ப4யங்கரி |
ஸர்வ துக்க2 ஹரே தே3வி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || (3)

ஸித்3தி4 பு3த்3தி4 ப்ரதே3 தே3வி பு4க்தி முக்தி ப்ரதா3யினி |
மந்த்ர மூர்த்தே ஸதா3 தே3வி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || (4)

ஆத்3யந்த ரஹிதே தே3வி ஆதி3 ச'க்தி மஹேஸ்வரி |
யோக3க் யோக3 ஸம்பூ4தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || (5)

ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்3ரே மஹாச'க்தி மஹோத4ரே |
மஹாபாப ஹரே தே3வி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || (6)

பத்3மாஸன ஸ்தி2தே தே3வி பரப்3ரஹ்ம ஸ்வரூபிணி |
பரமேசி' ஜக3ன்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || (7)

ஸ்வேதாம்ப3ரத4ரே தே3வி நானாலங்கார பூ4ஷிதே |
ஜக3த்ஸ்தி2தே ஜக3ன்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || (8)

மஹாலக்ஷ்ம்யஷ்டகம் ஸ்தோத்ரம் ய : படே2த் ப4க்திமான் நர :
ஸர்வஸித்34திமவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா3 || (1)

ஏக காலே படே2த் நித்யம் மஹாபாப விநாச'னம் |
த்2விகாலம் ய : படே2த் நித்யம் த4ன தா3ன்ய ஸமன்வித: || (2)

த்ரிகாலம் ய படேத் நித்யம் மஹா ச'த்ரு விநாசனம்
மஹாலக்ஷ்மி ப4வேந்நித்யம் ப்ரஸன்னா வரதா3 சு'பா4 || (3)
 

ஓம் ஸ்ரீ ராமாய துப்4யம் நம:​

1a

பட்டாபிஷேக ராமனைத் தொழுதால்,
கிட்டும் உங்கள் மனோ அபிலாஷைகள்!


கூறுவதற்கு எளிதானதும் விரும்பும்
பேறுகளை அளிக்கவல்லதும் ஆன
ஸ்ரீ ராமனை வணங்கித் துதிக்க இதோ
ஸ்ரீ ராமாய துப்4யம் நம: சமர்ப்பணம்.
 

1. ஆபதா3மபஹர்தாரம்​

2a

ஓம் ஸ்ரீ ராமாய துப்4யம் நம :

ஆபதா3மபஹர்தாரம் தா3தாரம் ஸர்வஸம்பதா3ம் |
லோகாபி4ராமாம் ஸ்ரீ ராமம் பூ4யோ பூ4யோ நமாம்ஹாயம் || (1)


ஆபத்துக்களைப் போக்குபவனும், அனைத்து சம்பத்துக்களையும் அளிப்பவனும்,
அகில உலகும் போற்றுபவனும் ஆன ஸ்ரீ ராமபிரானை மீண்டும் மீண்டும் நான் நமஸ்கரிக்கின்றேன்.
 
3a

ஓம் ஸ்ரீ ராமாய துப்4யம் நம :

ஆர்த்தானாமார்த்திஹந்தாரம் பீ4தானாம் பீ4திநாச’னம் |
த்3விஷதாம் காலத3ண்டம் தம் ராமசந்த்3ரம் நமாம்யஹம் || (2)


துக்கப்படுகின்றவர்களின் துக்கங்களைப் போக்குபவனும்,
பீதி அடைந்தவர்களின் பீதியைப் போக்குபவனும்,
சத்ருக்களுக்கு காலனைப் போன்றவனும் ஆன
ஸ்ரீ ராமச்சந்திரனை நான் நமஸ்கரிக்கின்றேன்.
 

3. கோத3ண்ட3ஹஸ்தாய​

4a
ஓம் ஸ்ரீ ராமாய துப்4யம் நம:

நம: கோத3ண்ட3ஹஸ்தாய ஸந்தீ4க்ருதச’ராய ச |
க2ண்3டி3தாகி2ல தை3த்யாய ராமாயாபந்நிவாரிணே || (3)


கையில் கோதண்டத்தைப் பற்றியவனும்,
பூட்டிய பாணத்தை உடையவனும்,
அனைத்து அசுரர்களையும் சம்ஹாரம் செய்தவனும்,
அனைத்து ஆபத்துக்களையும் போக்குபவனும் ஆன
ஸ்ரீ ராமசந்திரமூர்த்திக்கு என் நமஸ்காரம்.
 

4. அக்3ரத:​

5a

ஓம் ஸ்ரீ ராமாய துப்4யம் நம :

அக்3ரத: ப்ருஷ்ட2தச்’சைவ பார்ச்’வதச்’ச மஹாப3லௌ |
ஆகர்ணபூர்ண த4ந்வாநௌ ரக்ஷேதாம் ராமலக்ஷ்மநௌ || (4)


முன்புறம், பின்புறம், மற்ற இரு பக்கங்களிலும் ராம லக்ஷ்மணர்கள் என்னைக் சுற்றி
நான்கு திக்குகளிலும் நாண் ஏற்றிய வில்லோடு ரட்சிக்க வேண்டுகின்றேன்.
 

5. ஸன்னத்3த4:​

6a

ஓம் ஸ்ரீ ராமாய துப்4யம் நம :

ஸன்னத்3த4: கவசீ க2ட்3கீ3 சாபபாணத4ரோ யுவா |
திஷ்டன்மமாக்3ராதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ்மண: || (5)


கச்சை கட்டி, கவசமணிந்து, கத்தியையும் வில் அம்பையும்
கைப்பற்றினவர்களாக என் முன் நின்று கொண்டிருக்கின்ற
யௌவனம் திகழும் ராம லக்ஷ்மணர்கள் என்னைக் காக்கவேண்டும்.
 

6. ராமாய ராமப4த்3ராய​

7a

ஓம் ஸ்ரீ ராமாய துப்4யம் நம:

ராமாய ராமப4த்3ராய ராமசந்த்3ராய வேத4ஸே |
ரகு4நாதா2ய நாதா2ய ஸீதாயா: பதயே நம : || (6)


வசிஷ்டர் முதலான ஞானிகளால் ராமன் என்றும்;
தசரத மன்னனால் ராமபத்திரன் என்றும்;
அன்னை கௌசல்யையால் ராமச்சந்திரன் என்றும்;
மகரிஷிகளால் வேதஸ் என்றும்;
நாட்டின் பிரஜைகளால் ரகுநாதன் என்றும்;
சீதையினால் நாதன் என்றும்;
சீதையின் தோழிகளால் சீதாபதி என்றும்
பலவிதமாக அழைக்கப்படும் உமக்கு என் நமஸ்காரம்.
 

7. ஸாகேதரத்னம்​

8a

ஓம் ஸ்ரீ ராமாய துப்4யம் நம :

ஸாகேதரத்னம் ஜக3தே3கரத்னம்
விதே3ஹஜா யௌவன பா4க்யரத்னம் |
ஸ்ரீ ராமரத்னம் முனிசேவ்ய ரத்னம்
ஸேவேநிசம் கோசலவம்ச’ரத்னம் || (7)


அயோத்யாபுரி ரத்தினம்; உலகினுக்கே முக்கிய ரத்தினம்;
சீதையின் யௌவனத்துக்கு உகந்த ரத்னம்;
முனிவர்கள் சேவிக்கும் ரத்தினம்;
கோசலவம்சத்தின் ரத்தினம் ஆகிய
ஸ்ரீ ராம ரத்தினத்தை நான்
எப்போதும் சேவிக்கின்றேன்.
 

8. ராமம் லக்ஷ்மண…​

9a

ஓம் ஸ்ரீ ராமாய துப்4யம் நம :

ராமம் லக்ஷ்மணபூர்வஜம் ரகு4வரம் ஸீதாபதிம் ஸுந்தரம்
காகுத்ஸ்தம் கருணார்ணவம் கு3ணநிதி4ம் விப்ரப்ரியம் தா4ர்மிகம் |
ராஜேந்த3ரம் ஸத்யஸந்த4ம் தச’ரததனயம் ச்’யாமலம் சா’ந்தமூர்த்திம்
வந்தே3 லோகாபி4ராமம் ரகு4குலதிலகம் ராக4வம் ராவணாரிம் || (8)


லக்ஷ்மணனுடைய தமையன்; ரகுகுலத்தின் சிரேஷ்டர்; சீதாதேவின் நாயகர்; அழகு மிகுந்தவர்; காகுத்ஸர்; கருணைக்கடல்; நற்குணங்களின் பொக்கிஷம்; அந்தணரிடம் அன்பு பூண்டவர்; தர்மநெறி பிறழாதவர்; சக்கரவர்த்தித்திருமகன்; உண்மையின் உறைவிடம்; தசரதராஜனின் மைந்தர்; பச்சை வண்ண மேனியர்; சாந்தமே உருவானவர்; காண்பவர் களுக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியைத் தருபவர்; ரகு குல திலகர்; ஸ்ரீ ராகவர்; ராவணனின் சத்ரு; ஆகிய ஸ்ரீ ராமரை நான் நமஸ்கரிக்கின்றேன்.
 

9. வைகுண்டே2​

10a

ஓம் ஸ்ரீ ராமாய துப்4யம் நம :

வைகுண்டே2 நக3ரே ஸுரத்3ருமதலே ஆனந்த3வரபராந்தரே
நானாரத்ன விநிர்மிதஸ்புடபடுப்ரகார ஸம்வேஷ்டிதே |
ஸௌதே4ந்தூ3 பலசே ஷதல்பலலிதே நீலோத்பலாச்சா2தி3தே
பர்யங்கேச’யினம் ரமாதி3ஸஹிதம் ராமம் ப4ஜே தாரகம் || (9 )


வைகுண்ட நகரத்தில், கற்பக மரங்களின் தலத்தில், ஆனந்தகரமான பிராகார நடுவில், பற்பல ரத்தினங்களால் அமைக்கப்பட்ட பிராகாரத்தால் சூழப்பட்ட உப்பரிகையில், சந்திரகாந்தமணி மேடை மீது சே ஷசயனத்தால் சுந்தரமானதும், நீலோத்பல மலர்கள் பரப்பப்பட்டதுமான மஞ்சத்தில் சயனித்தவரும், லக்ஷ்மி முதலியவர்களுடன் இருப்பவரான தாரக ராமரை நான் சேவிக்கின்றேன்.
 

10. வைதே3ஹீயுதவாமபா4க3ம்​

11a
ஓம் ஸ்ரீ ராமாய துப்4யம் நம :

வைதே3ஹீயுதவாமபா4க3மதுலம் வந்தா3ருமந்தா3ரகம்
ராமம் ப்ரஸ்துத கீர்த்திவாஸித தருச்சா2யானுகாரிப்ரப4ம் |
வைதே3ஹீ குசகுங்குமாங்கித மகோரஸ்கம் மஹாபூ4ஷணம்
வேதாந்தைருபகீ3யமா நமஸ்க்ருத்ஸீதாஸமேதம் ப4ஜே || (10)


ஸீதா தேவியைத் தன் இடப் பக்கத்தில் கொண்டவர்; ஸாமியமில்லாதவர்; தன்னை நமஸ்கரிப்பவர்களுக்கு கற்பக விருக்ஷம் போன்றவர்; ஸ்துதிக்கப்பட்ட கீர்த்தியால் விருக்ஷத்தின் சோபையை அனுசரித்த காந்தியை உடையவர்; சீதையின் ஸ்தனங்களின் குங்குமக் குறியை உடைய அகன்ற மார்பை உடையவர்; அணிகலன்களால் அலங்கரிக்கப் பட்டவர்; உபநிஷத்துக்களால் கொண்டாடப் படுபவர்; ஸீதா ஸமேதர் ஆகிய ஸ்ரீ ராமனை நான் நமஸ்கரிக்கின்றேன்.
 

11. வைதே3ஹஸ்ய​

13a

ஓம் ஸ்ரீ ராமாய துப்4யம் நம :

வைதே3ஹஸ்ய புரே விவாஹாஸமயே கல்யாணவேத்3யன்தரே
ஸாமோதே விமலேந்து3 ரத்னக2சிதே பீடே2 வஸந்தௌ சு’பே4 |
ஸ்ருண்வந்தௌ நிக3மாந்ததத்வவிது3ஷாமாஷீர்கிரஸ்ஸாத3ரம்
பாயாஸ்தாம் ஸுவதூ4வரௌ ரகு4பதி: ஸ்ரீ ஜானகி சாநிஷம் || (11)


மிதிலையில், விவாஹசமயத்தில், மங்களகரமான வேதிகையின் நடுவில், நறுமணம் உள்ளதும், நிர்மலமான சந்திரகாந்தமணிகளால் இழைக்கப்பட்டதும் ஆன அழகிய பீடத்தில் அமர்ந்துள்ள; வேதாந்த தத்துவங்களை அறிந்த வித்துவான்களின் ஆசீர்வசனங்களைக் கேட்கும்; அழகிய தம்பதியராகிய ரகுபதியும், சீதா தேவியும் சதா காத்தருள வேண்டும்.
 

12. வந்தே3 சா’ரத​

14a

ஓம் ஸ்ரீ ராமாய துப்4யம் நம :

வந்தே3 சா’ரதபூர்ணசந்த்3ரவத3னம் வந்தே3 க்ருபாம்போ4நிதி4ம்
வந்தே3 ச’ம்பு4பினாககண்ட3னகரம் வந்தே3 ஸ்வப4க்தப்ரியம் |
வந்தே3 லக்ஷ்மணஸம்யுதம் ரகு4வரம் பூ4பாலசூடா3மணிம்
வந்தே3 ப்3ரம்மபராத்பரம் கு3ணமயம் ச்’ரேயஸ்கரம் சா’ஸ்வதம் || (12)


சரத்கால பூர்ணசந்திரனை நிகர்த்த முகம் உடையவர்; கருணைக் கடல்; பினாகம் என்னும் சிவதனுஸை முறித்தவர்; தன் பக்தர்களிடம் அதீதப் பிரியமுடையவர்; லக்ஷ்மணனோடு கூடியவர்; ரகு வம்சத்தில் சிறந்தவர்; அரசர்களுக்குள் சூடாமணி போன்றவர்; பரப்ரம்ம ஸ்வரூபம் கொண்டவர்; நற்குணங்களின் உறைவிடம்; நன்மையே புரிபவர்; அழிவே இல்லாதவர்; இத்தகைய ஸ்ரீ ராமரை நான் நமஸ்கரிக்கின்றேன்
 

13. ஹே தா3ஸப்ரிய​

15a

ஓம் ஸ்ரீ ராமாய துப்4யம் நம :

ஹே தா3ஸப்ரிய ஹே த3யாஜலநிதே4 ஹே சம்பு4சாபவ்ருதே
ஹே தை3த்யாந்தக ஹே விபீ4ஷணத3யாபாரிண ஹே பூ4பதே |
ஹே வைதே3ஹஸுதா மனோக்ஞவிஹ்ருதே ஹே கோடிமாரக்ருதே
ஹே நவ்யாம்பு4ஜநேத்ர பாலய பரம் ஜானாமி ந த்வம் வினா || (13)


ஹே தாசப் ப்ரியனே! ஹே தயாசமுத்திரனே! சிவன் வில்லை முறித்தவனே! ராக்ஷசர்களை அழித்தவனே! விபீஷணுனுக்கு அருள் புரிந்தவனே! ஹே பூபதியே! சீதைக்கு மகிழ்ச்சி உண்டாகும்படி விஹாரம் செய்பவனே! கோடி மன்மதர்களுடைய அழகைக் கொண்டவனே! புத்தம் புதிய தாமரை மலர் போன்ற கண்களை உடையவனே! உன்னையன்றி வேறு தெய்வத்தை நான் அறியேன்! என்னைக் காத்தருள்வாய்!
 

14. கோத3ண்ட3மண்டி3த​

16a

ஓம் ஸ்ரீ ராமாய துப்4யம் நம:

கோத3ண்ட3மண்டி3தகராத் கமலாயதாக்ஷாத்
மார்தாண்ட3 வம்ச’ திலகான்மனுஜேந்த்3 வே ஷாத் |
ஸீதாமுகா2ப்3ஜ மது4பாத3கி2லாபி4ராமாத்
ராமாத் பரம் கிமபி தத்வமஹம் ந ஜானே || (14)


கோதண்டம் என்னும் வில்லினை ஏந்திய கரத்தை உடையவர்; செந்தாமரைப் பூப் போன்ற நீண்ட அழகிய கண்களை உடையவர்; சூரிய வம்சத்தின் திலகம் ஆனவர்; ராஜாவே ஷத்தைத் தரித்தவர்; சீதையின் முகம் என்னும் செந்தாமரைப்பூவுக்கு வண்டு போன்றவர்; அனைத்து உலகுக்கும் இனிமையானவர் ஆன ஸ்ரீ ராமச்சந்திரனைத் தவிர வேறு ஒரு தத்துவத்தை நான் அறியேன்.
 

15. ஸ்ரீ ராமசந்த்3ர​

18a

ஓம் ஸ்ரீ ராமாய துப்4யம் நம :

ஸ்ரீ ராமசந்த்3ர கருணாகர தீ3னப3ந்தோ4
ஸீதாஸமேத ப4ரதாக்3ரஜ ராக4வேச’ |
பாபார்த்திப4ஞ்சன ப4யாதுரதீ3னப3ந்தோ4
பாபாம்பு3தௌ4 பதிதமுத்3த4ர மாமனாத2ம் || (15)


ஹே ராமச்சந்திரா! கருணைக்கடலே! ஏழைப்பங்காளனே! சீதையுடன் கூடி இருப்பவனே! பரதனின் தமையனே! ராகவா! ஈசவரனே! பாபம், துக்கம் இவற்றை நீக்குபவனே! பீதியால் பீடிக்கப்பட்ட தீனர்களுக்குக் கைகொடுக்கும் உறவினனே! பாவக்கடலில் வீழ்ந்துள்ள அனாதையான என்னை ரட்சிப்பா
 

16. மங்களம்​


19a

மங்களம் கோஸலேந்த்3ராய மஹனீய கு3ணாப்3த4யே |
சக்கரவர்த்தி தநூஜாய ஸார்வ பௌ4மாய மங்க3ளம் || (16)

வேத3வேதா3ந்தவேத்3யாய மேக4ச்’யாமளமூர்த்தயே |
பும்ஸாம் மோஹனரூபாய புண்யச்’லோகாய மங்க3ளம் || (17)

ஆஸாத்3ய நக3ரீம் தி3வ்யாமபி4ஷிக்தாய ஸீதயா |
ராஜாதி4ராஜராஜாய ராமப4த்3ராய மங்க3ளம் || (18)


கோசலதேசத்துக்கு அதிபதி; நற்குணங்களின் கடல்; சக்கரவர்த்தித் திருமகன்; பூவுலகு முழுமைக்கும் அரசன்; வேத வேதாந்தங்களை அறிந்தவர்; கார் மேகம் போன்ற கருத்த மேனியர்; காண்பவரை மோஹம் கொள்ளச்செய்யும் அழகிய வடிவினர்; கீர்த்தி பொருந்தியவர்; சீதையுடன் அயோத்தியை அடைந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டவர்; அரசர்களின் தலைவர்களுக்கு எல்லாம் பேரரசன் ஆன ஸ்ரீ ராமபத்ரனுக்கு மங்களம்.

ஸ்ரீ ராமாய துப்4யம் நம: || சி’யாவர ராமசந்த்3ர கீ ஜெய்! ||
 

Latest ads

Back
Top