ஞாபக மறதி நோயால் கருணாநிதி அவதி:
இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது?
அவர் நம்பாத எல்லாம் வல்ல இறைவன் அவருக்குப் பேச்சுத்திறன், நினைவாற்றல் ஆகியவற்றைக் கொடுத்து அவருடைய இயல்பு நிலையான கடவுள் மறுப்ப, ........... வெறுப்பு ஆகிய எல்லாவற்றையும் திரும்ப வழங்கி நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
செய்தி:
ஞாபதி மறதி, பேச்சு திறன் இன்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, 'ஸ்பீச் தெரபி' சிகிச்சை அளிக்கப்படுகிறது
தி.மு.க., தலைவர் கருணாநிதி, சில மாதங்களுக்கு முன், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க, தொண்டையில் துளையிட்டு, 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, அவர் கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்; மருத்துவ சிகிச்சை தொடர்கிறது. மூன்று டாக்டர்கள், செவிலியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கருணாநிதியை பார்க்க விரும்புவோருக்கு, கண்ணாடி கதவு வழியாக பார்க்க, அனுமதி வழங்கப்படுகிறது. பார்க்க வரும் கட்சி பிரமுகர்களின் பெயர், அங்குள்ள வருகைபதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது.