அம்ச சக்கிர விவரம்.
மொத்தம் 27 நக்ஷத்திரங்கள். 12 ராசிகள். ஒரு ராசிக்கு இரண்டேகால் நக்ஷத்திரங்கள். அதாவது அசுவதி நக்ஷத்ரம் 4 பாதங்கள்; பரணி 4 பாதங்கள், க்ருத்திகை முதல் பாதமும் உள்ளது ஒரு ராசி.
இதையே அம்சம் கட்டத்தில் அசுவதி 4 பாதங்களுக்கு அம்ச கட்டத்தில் 4 ராசிகளில் போடவேண்டும், அடுத்து பரணி 4 பாதங்களுக்கு அம்ச கட்டத்தில் அடுத்த 4 ராசிகளில் வரும் 9 ஆவது ராசி கட்டத்தில் கார்த்திகை ஒன்றாம்
பாதம் வரும். இம்மாதிரியே 108 பாதங்களும் திரும்ப திரும்ப வரும்..முதலில் மேஷத்தில் ஆரம்பிக்கிறது .மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம். முடிய 4 பாதம். பூரட்டாதி நக்ஷத்ரம் உ.த்ரட்டாதி நக்ஷத்திரம்
சிம்மம், கன்னி, துலாம். வ்ருச்சிகத்தில் முடியும்..
ரேவதி நக்ஷத்திரம் தனுசு, மகரம், கும்பம் மீனத்தில் முடியும்..
ராசி கட்டத்தில் மீனத்தில் புதன் உங்கள் ஜாதகத்தில் இருந்தால் புதன் நீசம்.
ஆனால் அம்சத்தில் புதன் தனுசு, மகரம், கும்பம், மீனம் ஏதோ ஒன்றில் இருந்தால் புதன் ரேவதி நக்ஷத்திரத்திந் காலில் ஓடுகிறது.
ஆயில்யம், கேட்டை ரேவதி புதனின் நக்ஷத்திரம் . . புதன் தன் சொந்த காலில் ஓடுவதால் புதன் நீசம் இல்லை.. அம்சத்தில் வேறு கட்ட்த்தில் இந்த புதன் இருந்தால் புதன் நீசம் என்று தீர்மானித்து பலன் சொல்ல வேண்டும்.
சொந்தா காலில் ஓடினால் புதன் நீசமில்லை என்று தீர்பானித்து பலன் சொல்ல முடியும். அம்சத்தை பார்த்து புரிந்து கொள்ள முடியும்.
அம்சத்தில் உச்சத்தில் ஒரு கிரகம் இருந்தால் , அதுவே ராசியில் நீசத்தில் இருந்தாலும் நற்பலன்கள் அதிக மாக எடுத்து சொல்லலாம். ராசி சக்ரத்திலும் அம்ச சக்ரத்திலும் ஒரு கிரஹம் ஒரே வீட்டில்
இருந்தால் அந்த கிரஹத்தின் நற்பலன் அதிகம்.ஆகிறது வர்கோத்தமம் என்று இதற்கு பெயர்.
. ராசி சக்ரத்தில் ஒரு கிரகம் உச்சத்திலிருந்து அம்சம் சக்கரத்தில் அதே கிரகம் நீசத்தில் வந்து விட்டால் நற்பலன் குறைகிறது..
குரு ராகு நக்ஷத்திர காலில் ஒரு ஜாதகத்தில் அமைந்து விட்டால் ராகு நக்ஷத்திரம் குருவை நல்லது செய்ய விடாது.
அம்ச சக்கிரம் இவைகளுக்கு பயன் படுகிறது.