லக்னத்திலிருந்து பத்தாவது வீடு தொழில் உத்யோகம் கர்ம ஸ்தானம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.. இதற்கு காரகன் சூரியன். புதன், குரு,சனி. சூரியன்,சனி =சம்பாத்ய காரகன்; சூரியன், செவ்வாய்= அரசு வேலை காரகன்.
மூன்றாம் இடம்; ஆள் அடிமை ஸ்தானம்; குரு,சந்திரன்= அரசு பணி அளிக்கும் வாய்ப்பு.
சூரியன் =ஆத்ம காரகன்; குரு= புத்ர காரகன்; புதன்= வித்யா காரகன்; சனி= விரய காரகன்; கேது= ஞான காரகன்; சுக்ரன் ராகு=போககாரகன்; சுக்ரன்= களத்ர காரகன்; செவ்வாய்= சத்ரு காரகன் சந்திரன்= மாத்ரு காரகன்.உடல் காரகன்.
லக்னத்திலிருந்து பத்தாம் வீடு ஜீவன ஸ்தானம், கர்ம ஸ்தானம்;
லக்னமும் பத்தாம் வீடு இரண்டும் கெட்டு விட்டால் மாத சம்பளமும் கிடைக்காது. சுய தொழிலிலும் ஒன்றும் கிடைக்காது.ஆடிட்டர்= புத்தியை உபயோகித்து தொழில் செய்வது குருவும், புதனும் ஜாதகத்தில் நன்றாக அமைந்து இருக்க வேண்டும். மார்கெட்டிங்,
புஸினெஸ்=சூரியன், சந்திரன், செவ்வாய் நன்றாக இருக்க வேண்டும். கலை ஆதாரமாக செய்யும் தொழில்= சுக்கிரன் நன்றாக அமைந்து இருக்க வேண்டும். புதன் வியாபாரத்தை குறிக்கும் கிரஹம். சூரியன்= உடல் உழைப்பு அதிகம் தேவை யாகும். சந்திரன்= மன பலம் அதிகம் வேண்டும்; செவ்வாய்= மார்கெட்டிங், ராணுவம், போலிஸ்; புதன் குரு= ஆசிரியர். லெக்சரர்; லக்னத்திற்கும் 5 ம் இடத்திற்கும் ஏதோ ஒரு
ஸம்பந்தம் இருந்தால் ஜோதிடத்தில் சம்பாத்யம் இருக்கும்.
பத்தாம் அதிபதி நிற்கும் நவாம்ச அதிபதி; பத்தில் நிற்கும் கிரஹம் பத்தாம் வீட்டை பார்க்கும் கிரஹம்இவைகளின் சார பலம் இவைகளை பார்த்து தான் பலன் சொல்ல முடியும். இரண்டாம் வீடு, இரண்டாம் வீட்டுக்காரன் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.இது பைனான்சியல்
ஸ்டேடஸ் பற்றி கூறும்.
பத்துக்குடையவன் சூரியனாக அமைந்து இவன் நவாம்சத்தில் மிதுனம் அல்லது கன்னியிலோ அதே ஜாதகத்தில் அமைந்தால் ஆசிரியர் தொழில் சிறக்கும்.லக்னம் நீர் ராசியாக அமைந்து பத்தாமிடம் நீர் ராசியாக அமைந்து பத்தாம் அதிபதியும் நல்ல பலமுள்ளதாக அமைந்தால்
மருத்துவம் படிக்க முடியும்.இரண்டாம் இடம் பலமுள்ளதாகவும், இரண்டாம் இட அதிபதி நன்றாக அமைந்தால் உயர் பதவி கிடைக்கும். இல்லாவிட்டல் கீழ் பதவி தான் கிடைக்கும்.லக்னாதிபதி கெட்டு விட்டாலும் மிக அதிக மாக அடிக்கும்.
ஜைமினி சூத்திரப்படி ஆத்ம காரகன் , தொழில் பார்க்க உபயோக படுத்தி சரியாக சொல்ல முடியும் . ராசியை விலக்கி கூடுதல் பாகை பெறும் கிரஹம் எது என்று பார். அது தான் ஆத்ம காரகன், இவன் நவாம்சத்தில் நீசம் பெற்றுவிட்டால் தொழில் இல்லை. தனுசு, மீனம் = இதன் வீட்டுக்காரன் குரு = வங்கி, ஆயுள் காப்பீடு, ட்ரேடிங் நன்றாக இருக்கும்..ஆத்ம காரகன் நவாம்சத்தில் செவ்வாய் வீட்டில் இருந்தால்
ரானுவ உத்யோகம்.
பத்தில் கேது இருந்தால் எப்போதும் தொழிலில் சிக்கல் இருந்து கொண்டே இருக்கிறது. கோச்சார ரீதியாக பத்தில் கேது, ராகு, சனி வந்தாலும் தொழிலில் பிரச்னை வந்து விடும்.
பத்தாமிடத்தில் இரண்டு அல்லது மூன்று கிரஹம் இருந்தால் திடீரென்று வேலையை விட்டு விடுவார்கள்.
ஒன்பதில் சந்திரன் வெளி நாட்டு பயணம் உண்டு. நல்லது.ஒன்பதில் சந்திரன் சுக்கிரன் சேர்ந்து கெட்டும் போய் விட்டல் வெளி நாடு போய் கெட்டு விடுவார்கள்.
ஒன்பதில் செவ்வாய். தைரியம். வேலைகள் சரியாக செய்வார்கள். ஒன்பதில் புதன்= படிப்பு; கல்வி; ஆராய்ச்சி மையத்தில் நல்ல வேலை; வெளி நாட்டில் ஆசிரியர் வேலை; ஒன்பதில்குரு நல்லது. அதே கெட்டு போயிருந்தால் வெளியே ஆன்மீகம் பேசுவான். உள்ளே கெட்டவன். ஒன்பதில் சுக்ரன் நல்லது.ஒன்பதில் சனி லோன்லி லைப்; ஒன்பதில் ராகு கஞ்சன். தகப்பனாருக்கும் பையனுக்கும் கருத்து வேற்றுமை அதிகம் இருக்கும்.
பத்தாம் வீட்டுக்கு உடையவன் ஆறு, எட்டு, பன்னிரண்டு ஆகிய ஏதோ ஒரு வீட்டில் மறைந்து விட்டால் எங்காவது சுடு காட்டில் தொழில் செய்யுமிடம் அமையும் சுமுக மான சூழ் நிலை இருக்காது. தலை குனிவு தொழிலில் ஏற்படும். வழக்கு தூண்டி விட்டு சம்பாதித்தல் சிண்டு முடித்துவிட்டு காசு வாங்கல். இம்மாதிரி அமைகிறது
.
இரண்டாம் வீட்டுக்குடையவன் 6,8.12 ல் மறைந்தால் பணத்தட்டுபாடு அதிகம் இருக்கும்.
பதினொன்றாம் வீட்டுக்காரன் பன்னிரண்டாம் வீட்டில் அமைந்து விட்டால் வருகிற பணம் எல்லாம் விரய செலவில் சென்று விடும். கையில் ஒன்றும் இருக்காது. புதன்= தொலை தொடர்பு. கம்ப்யூட்டர்; பத்துக்குடையவன் இரண்டில் இருந்தால் தரகர் தொழில். ;,வக்கீல்; மர வியாபரம்-செவ்வாய்
கடிகாரம்= சனி; புத்தக்கடை-புதன்; ப்ளாஸ்டிக்=ராகு .
பத்தாம் வீடு., பத்தாம் வீட்டுக்கதிபதி; ஜீவன காரகன் இவர்கள் நிலை, பார்க்கும் கிரஹங்கள், பத்தாம் வீட்டில் உள்ள கிரஹங்கள். சார பலம். அம்சத்தில் அவர்கள் நிலை. லக்னம், இரன்டாம் வீடு, மூன்றாம் வீடு, 9.11.12 வீட்டின் நிலை. பாப கர்த்திரி யோகம். கேந்திர
கோணங்களில் உள்ள கிரஹங்கள் இவைகளை ஆராய்ந்து தான் ஜீவனத்தை பற்றி சொல்ல முடியும். . .