Quotable Quotes Part II


"Treat your kid like a darling for the first five years.

For the next five years, scold them.

By the time they turn sixteen, treat them like a friend

Your grown up children are your best friends.

Chanakya

 
[h=1]தமிழை என்னுயிர் என்பேன்[/h]
[h=2]கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனிய என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.[/h]
பாரதி தாசன்
 
காண்பதெல்லாம் இன்பமப்பா!

விதியென்னும் குழந்தை கையில்
உலகந்தன்னை
விளையாடக் கொடுத்துவிட்டாள்
இயற்கையன்னை - அது
விட்டெறியும் உருட்டிவிடும்
மனிதர் வாழ்வை
மேல் கீழாய்ப் புரட்டிவிடும்
வியந்திடாதே

மதியுண்டு கற்புடைய
மனைவியுண்டு
வலிமையுண்டு வெற்றி தரும்
வருந்திடாதே
எதிர்த்து வரும் துன்பத்தை
மிதிக்கும் தன்மை
எய்திவிட்டால் காண்பதெல்லாம்
இன்பமப்பா
 
[h=1]சோகக் கதை[/h]
சுகவாழ்வும் ஒருநாளில்
பாதாளம் போகுமெனில்
பாரறிந்த உண்மையன்றோ?

சொல்ல முடியாத துன்பக் கதை
சூதாடி மனிதரின் சோகக் கதை
நல்ல மனிதரும் வஞ்சகராகி
கள்ள வேலைகள் செய்த கதை - சிலர்
கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்
உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை (சொல்ல)

அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்
அரசு உரிமையை இழந்ததும்
அழகு பாஞ்சாலி அம்மையாருடன்
அனைவரும் காட்டில் அலைந்ததும்
அன்பு மேலிடும் நளன் தமயந்தி
அல்லல் சுமந்து வருந்தியதும்
அரிய காதலைப் பிரிய நேர்ந்ததும்
ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே (சொல்ல) :noidea:
 
[h=1]ஒளி வேண்டுமா? இருள் வேண்டுமா?[/h]
உருண்டோடும் நாளில்
கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா?
இருள் வேண்டுமா? (உருண்டோடும்)

திருந்தாத தேகம்
இருந்தென்ன லாபம்
இது போதுமா?
இன்னும் வேண்டுமா?
ஓய்... ஓய்... ஓய்.... (உருண்டோடும்)

விரும்பாத போதும்
விருந்தாக மேவும்
குணம் வேண்டுமா?
விஷம் வேண்டுமா? (உருண்டோடும்):horn:
 
மழை!

முன்னமே சிநேகம்தான்

என்றாலும் நேற்று
நீ நனைந்தபின்
இன்னும் சிநேகமாகிப்போனது
மழை!

:smow:
 
தமிழை என்னுயிர் என்பேன்


கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனிய என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.



பாரதி தாசன்

அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து

என்ற வேகமாகச் சொல்லும்போது

தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் என்ற கேட்குமே!!!

அதனால் தான் தமிழில் இத்தனை இனிமையோ???
 
காண்பதெல்லாம் இன்பமப்பா!

விதியென்னும் குழந்தை கையில்
உலகந்தன்னை
விளையாடக் கொடுத்துவிட்டாள்
இயற்கையன்னை - அது
விட்டெறியும் உருட்டிவிடும்
மனிதர் வாழ்வை
மேல் கீழாய்ப் புரட்டிவிடும்
வியந்திடாதே

மதியுண்டு கற்புடைய
மனைவியுண்டு
வலிமையுண்டு வெற்றி தரும்
வருந்திடாதே
எதிர்த்து வரும் துன்பத்தை
மிதிக்கும் தன்மை
எய்திவிட்டால் காண்பதெல்லாம்
இன்பமப்பா

ஆனந்தமே மனிதனின் ஸ்வபாவம் ஆனால்

அது எங்கே எப்போது மாறிப்போனது???


முதல் முதல் பெண் முதல் முதல் ஆணை

ஆப்பிள் உண்ணச் செய்தபோதா ???
 
Back
Top