Hi,
That is it. Your quotes all by chanakya are good. பாம்பின் கால் பாம்பு அறியும். ஓகே.:first::fencing:
தமிழை என்னுயிர் என்பேன்
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனிய என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.
பாரதி தாசன்
காண்பதெல்லாம் இன்பமப்பா!
விதியென்னும் குழந்தை கையில்
உலகந்தன்னை
விளையாடக் கொடுத்துவிட்டாள்
இயற்கையன்னை - அது
விட்டெறியும் உருட்டிவிடும்
மனிதர் வாழ்வை
மேல் கீழாய்ப் புரட்டிவிடும்
வியந்திடாதே
மதியுண்டு கற்புடைய
மனைவியுண்டு
வலிமையுண்டு வெற்றி தரும்
வருந்திடாதே
எதிர்த்து வரும் துன்பத்தை
மிதிக்கும் தன்மை
எய்திவிட்டால் காண்பதெல்லாம்
இன்பமப்பா