Quotable Quotes Part II

ஒய்யாரகொண்டையிலே தாழம்பூவாம் அதன் உள்ளே இருப்பதெல்லாம் ஈறும் பேணாம் .
 
கொண்டுவந்தாலும் கொண்டு வராவிட்டாலும் தாய் கொண்டுவந்தால் தகப்பன்
சீர் கொண்டுவந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் மனைவி .

குறிப்பு: தயவு செய்து மேற்கண்டதை தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்..சமூகத்தில் அம்மாதிரியான பெண்களும் இருக்கிரார்கள் அல்லவா .இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா (9-12-13)
பக்கம் 3 ல் woman arrested for killing husband என்ற தலைப்பின் கீழ் உள்ள செய்தியை படித்துபாருங்களேன் .எவ்வளவு உண்மை என்று தெரியும் .சகோதரி விசாலாட்சி கோபப்படக்கூடாது .
 
1426705_624320690966789_661907704_n.jpg
 
I know already that

All men are not evil! :nono:

All women are NOT angels!!!:nono:

I will not get angry if you speak the truth!!! :nono:
 
ஒய்யாரகொண்டையிலே தாழம்பூவாம் அதன் உள்ளே இருப்பதெல்லாம் ஈறும் பேணாம் .

People ARE NOT what they want seem to be!

That is precisely what i wrote as

Crooked claws in velvet gloves

on concealed nails in velvet paws as in a cat!
 
உ டல் பொய் யுறவாயின் உண்மையுற வாகக்
கடவாரார் தண்ணருளே கண்டாய்.
தாயுமானவர்.

உடல் ஓயாது மாறிக் கொண்டே இருக்கிறது.
ஒரு நாள் இருந்ததுபோல் மறுநாள் இருப்பது இல்லை.

திடமுற்று இருக்கும்போது அது நல்ல உறவு ஆகிறது.
நோய்வாய்ப் படும்போது அது ஒரு பெருந் தடை ஆகிறது.

மாறிக் கொ ண்டே இருக்கும் அதன் உறவைப் பொய் என்று அறிதல் வேண்டும்.
என்றும் மாறாதே இறைவனின் உறவை மெய்யென்று உணர்தல் வேண்டும்.
 
தணலில் நெருப்பு இருக்கிறதா என்று அறிய பெரிய குரங்கு குட்டி குரங்கின் வாலை வைத்து பார்க்குமாம்.
 
நிஜமாக தூங்குபவனை எழுப்பிவிடலாம் ஆனால் தூங்குபவன் போல் பாசாங்கு செய்பவனை எழுப்பமுடியாது..
 
தணலில் நெருப்பு இருக்கிறதா என்று அறிய பெரிய குரங்கு குட்டி குரங்கின் வாலை வைத்து பார்க்குமாம்.

வாலைத் தொட்ட உடனேயே
வீ ல் என்று அலறிக் கொண்டு
சூடு பட்டது போல ஓடிவிடும்
குட்டி ஸ்மார்டாக இருந்தால்! :bolt:
 
நிஜமாக தூங்குபவனை எழுப்பிவிடலாம் ஆனால் தூங்குபவன் போல் பாசாங்கு செய்பவனை எழுப்பமுடியாது..
[h=1]இருவகைத் துயில்[/h]
உறங்குவதில் உண்டு இரு வகைகள்;
அறி துயில், அசல் துயில் என்ற இரண்டு.
பார்ப்பதற்கு ஒருபோலத் தோன்றினாலும்,
பலப்பல வேறுபாடுகள் உண்டு இவற்றில்!

திருமாலின் அறி துயில், உலகளாவிய
பெருமை பெற்றது என்பதை அறிவோம்;
திருமாலுக்குச் சற்றும் சளைக்காமல்,
பெறுவார் அறி துயில் மனிதருள் பலர்!

விழித்த கண்களோடு சிலர் உறங்குவர்;
வாயை மூடாமலேயே சிலர் உறங்குவர்;
சிம்ம கர்ச்சனையோடு சிலர் உறங்குவர்;
சிந்தித்தால் இவைகள் அறிதுயில் அல்ல!

வெளியே நடப்பவைகளை நன்கு அறிந்தும்,
வெளிப் பார்வைக்கு நன்கு உறங்குவதுபோல்,
பாசாங்கு செய்வதே அறிதுயில் ஆகும்;
பாடு படுத்தினாலும் அவர் கண் திறவார்!

தூங்குபவரை எழுப்பிவிடலாம்; ஆனால்
தூங்குவது போல் நடிப்பவரை அல்லவே!
பாசாங்கும் நல்ல பயன் அளித்திடும்,
பேசாமலே நாம் இருக்க விரும்பினால்!

தூங்கும் ஒரு சிங்கத்தை இடருவதும்,
தொங்கும் ஒரு புலி வாலை இழுப்பதும்,
அறி துயில் கொண்ட ஒருவரைச் சென்று
அறியாமல் நாம் எழுப்புவதும் சரி சமமே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
அட்டாங்க யோகமும் ஆதாரம்
ஆறும் அவத்தை ஐந்தும்
விட்டேறிப்போன வெளிதனிலே
வியப் பொன்று கண்டேன்
வட்டாகிச் செம்மதிப் பாலூறல்
உண்டு மகிழ்ந்திருக்க
எட்டாத பேரின்பம் என்னை
விழுங்கி இருக்கின்றதே.
பட்டினத்தார்

தெய்வீகப் பண்பு மனிதண்டம் மறைந்து கிடக்கிறது.

அதை வெளிக் கொண்டு வருவதே நல்ல வாழ்வு ஆகும்.

நம் எண்ணங்கள், சொற்கள், செயல்கள் அனைத்துமே

நம்முடைய தெய்வீகப் பண்பை வெளிக் கொண்டுவர வேண்டும்.
 
அட்டாங்க யோகமும் ஆதாரம்
ஆறும் அவத்தை ஐந்தும்
விட்டேறிப்போன வெளிதனிலே
வியப் பொன்று கண்டேன்
வட்டாகிச் செம்மதிப் பாலூறல்
உண்டு மகிழ்ந்திருக்க
எட்டாத பேரின்பம் என்னை
விழுங்கி இருக்கின்றதே.
பட்டினத்தார்

தெய்வீகப் பண்பு மனிதனிடம் மறைந்து கிடக்கிறது.

அதை வெளிக் கொண்டு வருவதே நல்ல வாழ்வு ஆகும்.

நம் எண்ணங்கள், சொற்கள், செயல்கள் அனைத்துமே

நம்முடைய தெய்வீகப் பண்பை வெளிக் கொண்டுவர வேண்டும்.
 
வாலைத் தொட்ட உடனேயே
வீ ல் என்று அலறிக் கொண்டு
சூடு பட்டது போல ஓடிவிடும்
குட்டி ஸ்மார்டாக இருந்தால்! :bolt:

குட்டி ஸ்மார்ட்டாக இருந்து ஓடிவிட்டால் சரி .இல்லை என்றால் பெரிசு நெருப்பு இருப்பதை தெரிந்துகொள்ளும் இல்லையா.அப்போது எது
ஸ்மார்ட்டு .அதைத்தான் இப்போதும் பல தில்லுமுல்லு பேர்வழிகள் செய்கிறார்கள்.நாம் ஸ்மார்ட்டாக இல்லை என்றால் .என்ன நான் சொல்வதும் சரிதானே .:scared::llama:
 
Back
Top