Correct time for Sankramana Tharpanam

17-07-2026 ஆடி மாதம் பாம்பு பஞ்சாங்கப்படி காலை 6-34 மணிக்கு பிறக்கிறது. காலை 6 மணிக்குள் ஸ்னானம், ஸந்தி காயத்ரி ஜபம் செய்து முடித்து விட்டு காலை 6 மணி முதல் 6-20க்குள் மாத பிறப்பு தர்ப்பணம் செய்ய வேண்டும். பிறகு 10-30 மணிக்கு மாத்யானிகம், ப்ருஹ்மயக்யம் செய்ய வேண்டும். காலை 5-56 மணிக்கு தான் ஸூர்ய உத்யம். இதற்கு முன் தர்ப்பணம் செய்ய கூடாது.

திருக்கணித பஞ்சாங்கபடி 16-7-2026 இரவு 11-30 மணிக்கு ஆடி மாத பிறப்பு வருவதால் வியாழக்கிழமை காலை 10-30 மணிக்கு மாத்யானிகம் முடித்து விட்டு தர்ப்பணம் செய்து விட்டு ப்ருஹ்ம யக்யம் செய்ய வேண்டும். பிறகு தேவ பூஜை செய்ய வேண்டும்.
 
But DakshiNaayanNa PuNya Kaala TarpaNam should be done in uttararaayaNa Kaalam itself. So, should not people who follow paambu panchaangam also, SangramaNa tarpaNam should be done on 16 July 2026 itself?
 
சித்திரை மாதம் மாத பிறப்பு நேரத்திற்கு முன்பும் பின்பும் 4 மணி நேரமே புண்ணிய காலமாகும். இந புண்ய கால நேரத்தில் தான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

வைகாசி மாதம் மாத பிறப்பு நேரத்திற்கு முன்பும் பின்பும் 6 மணி 24 நிமிடம் முன்பும் பின்பும் புண்ணிய கால நேரமாகும்.

ஆனி மாதம்:- பின்பு 24 மணி நேரம் புண்ணிய காலமாகும்.

ஆடி மாதம் முன்பு 8 மணி நேரம் புண்ணியகாலமாகும்.

ஆவணி மாதம் முன்பும் பின்பும் 6 மணி 24 நிமிடம் புண்ணீய காலமாகும்.

புரட்டாசி பின்பு 24 மணி நேரம் புண்ணிய காலமாகும்.

ஐப்பசி முன்பும் பின்பும் 4 மணி நேரம் புண்ணிய காலமாகும்.

கார்த்திகை முன்பும் பின்பும் 6 மணி 24 நிமிடம் புண்ணிய காலமாகும்.

மார்கழி பின்பு 24 மணி நேரம் புண்ணிய காலமாகும்.

தை பின்பு 8 மணி நேரம் புண்ணிய காலமாகும்.

மாசி முன்பும் பின்பும் 6 மணி 24 நிமிடம் புண்ணிய காலமாகும்.

பங்குனி பின்பு 24 மணி நேரம் புண்ணிய காலமாகும்.
 
ஆதலால் பாம்பு பஞ்சாங்கபடி காலை 6-34க்கு ஆடி மாத பிறப்பு. காலை 6 மணிக்குள் ஸ்னானம் , ஸந்தியா வந்தனம் செய்து முடித்து விட்டு (அன்று காலை ஸூர்ய உதயம் 5-56 மணிக்கு) 6 மணிக்கு தர்ப்பணம் செய்ய ஆரம்பிக்கவும். 6-15க்குள் தர்ப்பணம் உத்தராயண காலத்தில் முடிந்து விடும். பிறகு மாத்யானிகம் , பிரஹ்மயக்யம் 10-30 மணிக்கு செய்யலாம். உத்தியோகத்திற்கு செல்பவர்கள் 8-30 மணிக்கே மாத்யானிகம், ப்ருஹ்மயக்யம் செய்யலாம். ஜுலை 16ம் தேதி மாத பிறப்பு புண்ணிய காலம் இல்லாததால் தர்ப்பணம் செய்ய வில்லை என்று தான் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
 
Back
Top