Quotable Quotes Part II

[h=2]ஆசை..[/h]
சீதனம் வாங்கி - என்னை
சிறைப்பிடித்த கணவருக்கு
பெண் பிள்ளைகளாகவே
பெற்றுக்கொடுக்க ஆசை....
 
[h=2]உன் நினைவுகள் தோழா[/h]
நட்பால் ஆனது உறவு
பிரிவால் போனது மறைவு
நினைவால் நீண்டது கனவு
ஏக்கம் தந்து விட்டு
தூக்கமாய் போகின்றாய்
ஏங்கித் தவிக்கின்றோம்
எழுந்திடாத உறக்கத்தில் நீ
 
[h=2]ஆச்சி சொன்ன அறிவுரை[/h]மாட்டுவண்டி ஏறி மைல் பத்து
செல்ல முன்பே..
ஏரோப்பிளேன் ஏறி இங்கிலாந்தில்
இறங்குதுகள் – கட்டுமரம் ஏறி
கரைதேட பலகாலம் - இப்போ
கண்மூடி முளிக்க முன்னே – உலக
கரையொன்றில் நிக்குதுகள்
வேகத்தை விரும்புகின்ற - எம்
விஞ்ஞான பிள்ளைகளை
பழய காலத்துக்குள் இழுத்து, இழுத்து
பாழ் அடிக்க வேண்டாமே.....
 
[h=2]கையுக்குள் கணணி..![/h]பரந்து விரிந்த உலகம்-இப்போது
ஒவ்வொருவர் கைக்குள்ளும்..
ஒடுங்கி அடங்கி சிரிக்கிறது-எனி
தேடவேண்டியது தேசங்கள் இல்லை
மனிதர்களின் மனங்களையே....!
 
[h=2]மன உறுதி.....[/h]பெய்கின்ற மழையை
நில் என்று சொன்னால் நிற்குமா
ஆனால் நனையாமல் இருக்க முடியும்
புறம் பேசும் மனிதர்களை
நிறுத்த முயல்வது நடக்காத காரியம்
ஆனால் நீ நீயாக இருக்க முடியும்..
 
[h=2]சமையலில்…[/h]வெங்காயம்…..
கண்ணீர்க்காவியம்
எழுதப்பட்ட மண்ணில்
கிடைத்த ஏடு.

உள்ளி…….
வாய்க்கு வெளியே
உள்ள பற்கள்
வாய்வின் எதிரி
வயிற்றின் நண்பன்.

மிளகாய்…….
சீன வெடி வெடிக்கும்
சில்லித்தாய்.

கடுகு……
உலகத்தை விடப்பெரியது
உருட்டி,உள்ளிருக்கும்
விடயம்.

கருவேப்பிலை……….
அறு சுவை- அடிக்கும்
மூலிகைச்சென்று.

மிளகு………
கா(ர)ர் இருளின்
குளிர்ச்சி.
 
[h=2]என் தங்கை!....[/h]ஆயிரம் சண்டைகள்
போட்டாலும்...
அடுத்த நொடியே
அகம் மகிழ
அண்ணா என்றழைத்து
அழகாய் சிரிக்கும்
செல்ல தேவதை
என் தங்கை!...
 
[h=2]பாடசாலை விடுமுறை....[/h]அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
பாடசாலை விடுமுறை
 
[h=2]செருப்பு...[/h]பலருடைய வாழ்கையில்
பல பொருத்தங்கள்
பல நெருக்கங்கள்
இருந்த போதும்
இதன் பொருத்தம் போல்
இருப்பதில்லை!...
 
1390845836175286.jpg

Who needs Wi-fi when you are in Nature's lap???
 
செருப்பு...

பலருடைய வாழ்கையில்
பல பொருத்தங்கள்
பல நெருக்கங்கள்
இருந்த போதும்
இதன் பொருத்தம் போல்
இருப்பதில்லை!...

பழகும் பொழுது அதுவும் பாவம்

தேய்ந்தோ மாய்ந்தோ சாய்ந்தோ

நமக்குத் தோதாக மாறி விடுகிறது.

புதுச் செருப்பு??? உஷார்!!!

நாயை விட நன்றாகக் கடிக்கும்! :wof:
 
வெப்பம் தணிய…...

அப்பா, அம்மா எரிமலையாய்
கொதிக்கின்ற போதெல்லாம்
எண்ணை மழை கொட்டாதீர்கள்
ஐஸ் மழை பொழியுங்கள்

பாரதியாரின் விசிறி நான் !
தெரியாது ஐஸ் வைக்க!! :smow:

தெரிந்திருந்தால் நான் இப்படியா

இருந்திருப்பேன் சொல்லுங்கள்!!!


 
ஆசை..


சீதனம் வாங்கி - என்னை
சிறைப்பிடித்த கணவருக்கு
பெண் பிள்ளைகளாகவே
பெற்றுக்கொடுக்க ஆசை....

ததாஸ்து! :amen:


பழிக்குப் பழி. :fencing:

சீதனத்துக்குச் சீதனம்! :popcorn:

வரன் பெண்ணுக்கு ஸ்ரீதனம் கொடுக்கும் காலம் வரும் முன்பே

நிறைவேற்றிக் கொள்ளுங்கள் உங்கள் திட்டத்தை!:thumb:
 
உன் நினைவுகள் தோழா


நட்பால் ஆனது உறவு
பிரிவால் போனது மறைவு
நினைவால் நீண்டது கனவு
ஏக்கம் தந்து விட்டு
தூக்கமாய் போகின்றாய்
ஏங்கித் தவிக்கின்றோம்
எழுந்திடாத உறக்கத்தில் நீ

தோற்றம் என்று ஒன்று இருந்தால்
மறைவு என்றும் ஒன்று இருக்கும்!
தப்பாது!! தப்பவும் முடியாது!! :(
 
ஆச்சி சொன்ன அறிவுரை

மாட்டுவண்டி ஏறி மைல் பத்து
செல்ல முன்பே..
ஏரோப்பிளேன் ஏறி இங்கிலாந்தில்
இறங்குதுகள் – கட்டுமரம் ஏறி
கரைதேட பலகாலம் - இப்போ
கண்மூடி முளிக்க முன்னே – உலக
கரையொன்றில் நிக்குதுகள்
வேகத்தை விரும்புகின்ற - எம்
விஞ்ஞான பிள்ளைகளை
பழய காலத்துக்குள் இழுத்து, இழுத்து
பாழ் அடிக்க வேண்டாமே.....

காலம் மாறி விட்டது! :car:

காலம் மாறுகிறது!!:plane:

காலம் மாறும்!!!:high5:
 
கையுக்குள் கணணி..!

பரந்து விரிந்த உலகம்-இப்போது
ஒவ்வொருவர் கைக்குள்ளும்..
ஒடுங்கி அடங்கி சிரிக்கிறது-எனி
தேடவேண்டியது தேசங்கள் இல்லை
மனிதர்களின் மனங்களையே....!

மண்டைக்குள் இருந்தது கணிணி!:laser:

பின்ன வாய்ப்பாடுகள் ஒன்றாவது

யாருக்காவது தெரியுமா இப்போது ??? :tsk:


மண்டையில் இருந்த கணிணி கைக்கு


இறங்கி இருக்கிறது இப்போது!!! :rolleyes:
 
மன உறுதி.....

பெய்கின்ற மழையை
நில் என்று சொன்னால் நிற்குமா
ஆனால் நனையாமல் இருக்க முடியும்
புறம் பேசும் மனிதர்களை
நிறுத்த முயல்வது நடக்காத காரியம்
ஆனால் நீ நீயாக இருக்க முடியும்..

குடை கையில் இருக்க வேண்டும் :rain:

அல்லது வாத்தின் சிறகு போல

ம் மேலேயே இருக்க வேண்டும்!

சிலிர்த்து உதறித் தள்ளிவிட்டு
ப்

போய்க்கொண்டே இருக்கலாம்! :bowl:
 
சமையலில்…

வெங்காயம்…..
கண்ணீர்க்காவியம்
எழுதப்பட்ட மண்ணில்
கிடைத்த ஏடு.

உள்ளி…….
வாய்க்கு வெளியே
உள்ள பற்கள்
வாய்வின் எதிரி
வயிற்றின் நண்பன்.

மிளகாய்…….
சீன வெடி வெடிக்கும்
சில்லித்தாய்.

கடுகு……
உலகத்தை விடப்பெரியது
உருட்டி,உள்ளிருக்கும்
விடயம்.

கருவேப்பிலை……….
அறு சுவை- அடிக்கும்
மூலிகைச்சென்று.

மிளகு………
கா(ர)ர் இருளின்
குளிர்ச்சி.



[h=1]காயம், வெங்காயம்![/h]
உரிக்கும் போது உள்ளே ஒரு ரகசியம்
உள்ளது போலத் தோன்றும்; ஆனால்
உரித்த பின் நம் முகத்தில் வழியும்,
ஊர் முழுகிவிடும் அளவுக்கு அசடு!

வெங்காயமும் நம் காயமும் பல வித
வேறுபாடுகள் கொண்டவை அல்ல!
ஒற்றுமைகளே மிக அதிகம் அன்றி
வேற்றுமைகள் அல்ல என அறிவீர்!

ஒன்றாய் மறைந்து நிற்கும் நம் ஆத்மா;
இரண்டாய் இருக்கும் அறிவும், மனதும்;
மூன்றாய் இருக்கும் நமது சரீரங்கள்;
பௌதிக, காரண, சூக்ஷ்ம சரீரங்கள்!

ஐந்தாய் இருக்கும் பஞ்ச பிராணன்கள்;
ஆறு ஆக இருக்கும் அறிவுத் திறன்கள்;
ஏழு ஆக இருக்கும் சப்த தாதுக்கள்;
ரத்தம், மஜ்ஜை, மாமிசம் முதலியன.

பத்து ஆக இருக்கும் இந்த்ரியங்கள்;
கால், கை, வாய், மல ஜல துவாரங்கள்,
கண், நாசி, நாவு, செவி, தோல் எனவும்
கர்ம, ஞான இந்த்ரியங்கள் விளங்கும்.

“இது அல்ல, இதுஅல்ல” என்று கூறியபடி,
இவற்றை ஒன்று ஒன்றாக விலக்கினால்;
உரித்த வெங்காயத்தில் உள்ள உண்மைபோல்
உள்ளே ஒளிந்திருக்கும் ஆத்மா வெளிப்படும்!

ஆத்மாவும், ஜடமும் கலந்த காயத்தை,
அன்னப் பறவை போலப் பிரிக்கக் கற்று,
ஆத்மாவை நன்றாக உணர்ந்திடுவோம்;
ஜடத்தை மொத்தமாக விலக்கிடுவோம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
என் தங்கை!....

ஆயிரம் சண்டைகள்
போட்டாலும்...
அடுத்த நொடியே
அகம் மகிழ
அண்ணா என்றழைத்து
அழகாய் சிரிக்கும்
செல்ல தேவதை
என் தங்கை!...

தேவதைத் தங்கையின் வயது <10 !!!சரியா??

வயது >10 என்றால் ஈகோவும்

வளர்ந்திருக்கும் விருக்ஷமாக!
 
பாடசாலை விடுமுறை....

அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
பாடசாலை விடுமுறை

பரீட்சை = எல்லோருக்கும் தலைவலி

லீவு = பெற்றோருக்குத் தலைவலி

ஆனால் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம்
 
பணம்...

இல்லாவிட்டாலும் பிரச்சனை
இருந்தாலும் பிரச்சனை
பணம்...

இல்லாவிட்டால் இல்லாமை ஒன்றே பிரச்சனை

இருந்து விட்டாலோ காப்பாற்றுவது பிரச்சனை.
 
Back
Top