ஆணும், பெண்ணும்.
"ஆணும், பெண்ணும் சரி சமமே!" என்று
ஆணித்தரமாகப் பேசுகின்றவர்களுக்கு!
உடல் ரீதியாக மட்டுமின்றி அவர்கள்
உள ரீதியாகவும் மாறுபடுகின்றனர்.
"ஒரு ஆணின் மனோபாவத்தைப் பெறும் பெண்
ஒரு பதிதை ஆகின்றாள்."
"ஒரு பெண்ணின் மனோபாவத்தைப் பெறும் ஆண்
ஒரு மகான் ஆகின்றார்."
"தேவையில்லாத பிரச்சனைகளை எழுப்புமோ
பாவையர், ஆடவர் பற்றிய இந்தக் கூற்று?"
தெள்ளத் தெளிவாக அனைவரும் தத்தம்
உள்ளக் கருத்துக்களைக் கூறிவிட்டதால்;
என்றோ, எங்கோ, நான் படித்த முதுமொழி.
இன்று, இங்கே, இப்போது வெளிவருகின்றது!