• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Performance of Sandhyavandanam

Status
Not open for further replies.
I got a copy of the book - Om, Gayatri & Sandhya today - but realised that my parents have taken panchapatram-uthhrani to hometown !
Will do with a non-echal glass but will do.
 
Also, regarding parent influencing children - my cousin used to do Sandhi very regularly. He will not sit for breakfast before his Prathah Sandhi is done. Now of course he has become a bit lax (with the evening Sandhi due to school timings), but still does it on far many occassions than any of us/ all of us put together. My mami was instrumental in his training since age 7 or 8 when he was initiated.
 
Last edited:
I used to do it Namesake for good number of years, but since last two years I do it twice everyday with proper understanding. I feel once you understand the importance, and significance of Sandhya you will never miss.

Thanks,
Shriharsha
 
I used to do it Namesake for good number of years, but since last two years I do it twice everyday with proper understanding. I feel once you understand the importance, and significance of Sandhya you will never miss.

Will you please influence some of your friends of your age to follow you.
With expectations and warm regards Thatha Renganathan.
 
Dear sri Harsha ashirvadhams.Thank you .Sow the seed let it grow into a large Banyan tree and lakhs can enjoy the shadow.
 
“வாடா அம்பி, எங்கே உன்னை ரொம்ப நாளாக் காணோம்? ”

“ஒரு மாசமா யோகா கிளாசுக்குப் போயிண்டிருந்தேன் தாத்தா. நேத்தியோட தான் முடிஞ்சுது.

“யோகா கிளாசுலே என்ன கத்துண்டே? ”

“ஆசனம் , பிராணாயாமம், பிஸிகல் எக்ஸர்ஸைஸ், பஜன் எல்லாம் சொல்லிக் கொடுத்தா. ”

“யோகான்னா என்னன்னு தெரிஞ்சுண்டயா? ”

“யோகான்னா ஒண்ணு சேர்க்கிறதுன்னு அர்த்தம். ”

“எதையும் எதையும் ஒண்ணு சேர்க்கிறது? ”

“நம்ம ஸோலையும் காஸ்மிக் ஸோலையும் ஒண்ணு சேர்க்கிறது தான் யோகா. ”

“இந்த வழி தான் உனக்கு முதலிலேயே சொல்லிக் கொடுத்திருக்கே, அதையே மறுபடியும் இப்பக் காசு கொடுத்து வேறே கத்துண்டு வந்தியாக்கும்”

“இதுக்கு முன்னாடி நான் இதைக் கத்துக்கல்லியே, தாத்தா”

உனக்குப் பூணூல் போட்டாச்சோன்னோ, ஸந்தி பண்றியா?

“அம்மா என்னை தினமும் ஸந்தியாவந்தனம் செய், செய்னு நச்சரிக்கறா, எனக்கு அதில ஈடுபாடு இல்லே. எதுக்காக ஸந்தி செய்யணும்? ”

“முதல்லே இதுக்குப் பதில் சொல். வாழ்க்கையில் உன் லட்சியம் என்ன? ”

“இப்போதைக்கு எனக்கு ஒரு வேலை வேணும். அது தான் லட்சியம்.”

“அதுக்கப்பறம் பதவி உயர்வு வேணும், மனைவி வேணும், குழந்தை வேணும், அது வேணும், இது வேணும்னு உன் லட்சியங்கள் மாறிண்டே போகுமில்லயா? ”

“ஆமாம். தாத்தா. ”

“வாழ்க்கையின் முடிவான லட்சியம்னு ஒண்ணு வேணுமில்லையா? மிருகங்கள் போல உணவு தேடித் தின்னு, பாமரர்கள் போல வீண் கதைகள் பேசி முடியறது தான் வாழ்க்கையா? மனுஷனாய்ப் பிறந்ததுக்கு நமக்குக் கிடைச்ச அறிவைப் பயன்படுத்தி முடிவான லட்சியம் பத்திச் சிந்திக்க வேண்டாமா? ”

“எனக்குப் புரியல்லை, தாத்தா. ”

“சரி. தெளிவா சொல்றேன். சந்தோஷம்கிறது என்ன? ஆனந்தம்கிறது என்ன? ”

“சந்தோஷம் வேற, ஆனந்தம் வேறயா தாத்தா? ”

“சந்தோஷம்கிறது நம்ம துன்பம் நீங்கறதனால ஏற்படற உணர்ச்சி. பசிச்சவனுக்கு சாப்பிட்ட பின்னும், தாகமா இருக்கறவனுக்குத் தண்ணி குடிச்ச பின்னும், புகழுக்கு ஏங்கறவனுக்குப் பலர் புகழும்போதும் ஏற்படும் உணர்ச்சி தான் சந்தோஷம். ”

“சரி.”

“உடலிலோ மனசிலோ ஏற்படற குறை நீங்கறதால ஏற்படற இந்த சந்தோஷம் எதிர்மறையானது. இப்படி இல்லாம தானாவே பிற பொருள்களோட உதவியில்லாம ஏற்படறது தான் ஆனந்தம். ”

“அப்படி ஒரு நிலை இருக்க முடியுமா? ”

“சின்னஞ் சிறு குழந்தையைப் பார். தானாகவே சிரிக்கறது. பசிக்கறத்தே சித்த அழும். மத்த நேரமெல்லாம் கவலையில்லாம சிரிச்சிண்டே இருக்கு. அது தான் ஆனந்தம். குழந்தையைப் பார்த்தால் நமக்கும் ஆனந்தம் தொத்திக்கிறதோன்னோ? ”

“நாம் குழந்தைகள் போல் ஆகணுமா? ஆக முடியுமா? ”

“ஆமாம். இழந்த ஆனந்தத்தை மீண்டும் அடையறது தான் வாழ்க்கையின் இறுதி லட்சியம். குழந்தைப் பருவத்தின் இந்த ஆனந்தத்தை வயசான பிறகு இழந்துட்டு, பொன்னை, உயர்வை, புகழைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு கவலைக்கும், பயத்துக்கும், ஏமாத்தத்துக்கும் ஆளாகி ஏதோ வாழறோம். எத்தைத் தின்னா பித்தம் தெளியும்கிற மாதிரி, போதை மருந்துகளேயோ, சாமியார்களையோ, கோவில்களையோ, ஜெம்மாலஜிஸ்ட், நேமாலஜிஸ்ட் இவாளைச் சுத்தி வந்து அது வேணும், இது வேணும்னு யாசிக்கிறோம் இல்லயா? ”

“கோவிலுக்குப் போறதும் சாமியார்களைத் தரிசிக்கிறதும் கூடத் தப்பா, தாத்தா? ”

“தப்பு இல்லே. அங்கே போய்ப் புகழ் வேணும், பணம் வேணும்னு யாசிக்கறது தான் தப்பு. முயற்சி செய்து பணம் தேடறது தப்பில்ல. அதிகமா ஆசைப்படறது தான் நம்ம மன அமைதியைக் கெடுக்கறது. ”

“ஸந்தியாவந்தனம் ஏன் செய்யணும்னு கேட்டா ஏதேதோ தத்துவங்களைச் சொல்லிக் குழப்பறேளே, தாத்தா. ”

“சரி. சுருக்கமா சொல்லிடறேன். வாழ்க்கையின் இறுதி லட்சியம் ஆனந்தம். இது உலகப் பொருள்களால வராது. ஈசனோட, அதான் நீ சொல்றியே, அந்த காஸ்மிக் ஸோலோட ஒண்ணுபடறதில தான் ஆனந்தமும் அமைதியும் கிடைக்கும். இவ்வாறு ஒண்ணாறதுக்குப் பேர் தான் யோகம். இந்த யோக நிலையை அடையப் பயிற்சி தான் ஸந்தியா வந்தனம். போதுமா? ”

ரொம்பவும் சுருக்கிட்டேளே. ஸந்தியாவந்தனம் எப்படி யோகமாகும்? ”

“எனக்கு ஸந்தி பண்ண நேரமாச்சு. பாக்கியை நாளைக்குச் சொல்றேன். ”
 
“ஸந்தியாவந்தனம் எப்படி யோகம் ஆகும்? சொல்லுங்கோ தாத்தா. ”

“மனசு இறைவனோட ஒன்றிப் போறது இறுதி நிலை. அதுக்கு மனசு கட்டுப்படணும். அதன் துர்க்குணங்கள் நீங்கினாத் தான் அது கட்டுப்படும். இப்படி மனசைத் தூய்மைப்படுத்தி வழிக்குக் கொண்டுவர நாலு முறைகளை நம்ம பெரியவா சொல்லியிருக்கா.

“முதலாவது, அறிவினால் சிந்திச்சு நம்ம மனசுக்குள்ளே இருக்கற ஸ்வாமியை உணர்றது. இது ஞானயோகம்.

“ரெண்டாவது, பகவான் கிட்டே முழுசா சரண் அடைஞ்சு என் செயலால ஆறது ஒண்ணுமில்லே என்கிற மன நிலையை அடைஞ்சு வாழறது, பக்தி யோகம்.

“மூணாவது, என்கடன் பணி செய்து கிடப்பதேன்னு பொது நலத் தொண்டுகள்ல ஈடுபட்டுத் தன்னை மறக்கறது கரும யோகம்.

“நாலாவது, மூச்சுப் பயிற்சி, ஆசனம் முதலான கிரியைகள் மூலமா உடலுக்குள்ளே உறங்கிண்டிருக்கிற குண்டலினி சக்தியை எழுப்பி, சமாதி நிலைங்கிற, ஈசுவரனோட ஒன்றும் நிலையை அடையறது, ராஜயோகம். ”

“இதில ஸந்தியாவந்தனம் எந்த வகையைச் சேர்ந்தது. ”

“ஸந்தியாவந்தனம் இந்த நாலு முறைகளோட கலவையின் முதல் படி. இது எல்கேஜி பாடம் போல. எல்கேஜி குழந்தை எப்படி ஆசிரியர் மேல் நம்பிக்கை வெச்சு சொன்னதைத் திருப்பிச் சொல்கிறதோ அது போல பெரியவா சொன்னபடி நீ ஸந்தியாவந்தனம் செஞ்சுண்டு வந்தா படிப்படியா மேலே உசந்து யோக நிலை என்ற டாக்டரேட்டை அடையலாம். ”

“கர்மா சித்த சுத்தி செய்றதுன்னும், சித்தம் சுத்தி ஆய்ட்டா கர்மா அவசியமில்லைன்னும் தெய்வத்தின் குரலிலே படிச்சேன். என் மனசிலே ஆசை, கோபம், பொறாமை முதலான துர்க்குணம் எதுவும் இல்லே. சுத்தமாத் தான் இருக்கு. நான் இந்தக் கர்மாவைச் செய்யணுமா? ”

“நம்ம மனசு சுத்தமா இருக்குன்னு நமக்கு நாமே சர்ட்டிபிகேட் கொடுத்திண்டா அது சுத்தம் ஆயிடாது. சுத்தமான மனசுக்கு அடையாளம் எண்ணங்கள் இல்லாமல் இருக்கறது தான். உன்னால எதையும் எண்ணாம ஒரு நிமிஷம் இருக்க முடியறதா? ”

“இல்லை. ஏதாவது ஒரு எண்ணம் மாற்றி ஒரு எண்ணம் வந்திண்டு தான் இருக்கு, கடல் அலை போல.”

“இந்த எண்ண ஓட்டத்தை அமைதிப்படுத்தி, ஈசுவரனோட ஒன்றச் செய்யறது தான் இறுதி லட்சியம். இறுதி நிலை அடையறதுக்கு முதல் படியா மனசுக்கு சின்ன சின்ன எளிமையான சேர்க்கும் பயிற்சி கொடுக்கணும். அதைத் தான் சந்தியாவந்தனம் செய்யறது. பாக்கியை அப்புறமா சொல்றேன்.”
 
“நீங்க சொன்ன நாலு யோகத்திலே ராஜ யோகத்தை மட்டும் தானே இப்போ யோகான்னு சொல்றா?”

“பிரதிபலனை எதிர்பார்க்காம தொண்டு செய்யற கர்மயோகக்காரர் ஊருக்கு ஒத்தர் அபூர்வமா இருப்பார். உபநிஷத் முதலானதுகளைப் பேசிண்டிருக்கிற ஞான யோகக்காராளும் கொறச்சலாத் தான் இருப்பா. பக்தி யோகத்தைப் பிரசாரம் பண்ணற பஜனை, உபந்யாஸக்காரா நிறையப் பேர் இருக்கா. இது எல்லாத்தையும் விட ராஜயோகம் பிரபலமானதுக்குக் காரணம் என்ன தெரியுமா? அதிலே உடனே ரிலாக்ஸேஷன் கிடைக்கும். நவீன யுகத்திலே டென்ஷன் தானே பெரிய ப்ராப்ளம். இதைக் கடவுள் நம்பிக்கை இல்லாதவாளும் பயிற்சி பண்ணலாம். அதனாலே மேலை நாடுகள்ல இது பிரபலம் ஆயிடுத்து. அதனாலே நம்மூரிலேயும் இது பாஷன் ஆயிடுத்து.”

“ஆமாம் தாத்தா. உடனே ரிலாக்ஸேஷன் கிடைக்கிறது வாஸ்தவம் தான்.”

“மாஸ்டர் பேசும்போது உன்னையறியாமலேயே தூங்கியிருப்பியே?”

“ஆமாம், தாத்தா. நீங்களும் இதுக்குப் போயிருக்கேளா?”

“நான் உன் வயசிலே இருந்தபோது எல்லா தினுசான யோகாவையும் பரிட்சை பண்ணிப் பாத்தேன். ஒத்தர் ஒரு மந்திரத்தை ரகசியமா சொல்லிக் குடுத்து இதை மூச்சுக்கு மூணு தடவை சொல்லுன்னார். மனசு போரடிச்சுப் போயி தூங்கிப் போயிடறது. அதை ரிலாக்ஸேஷன்னு நினைச்சு சந்தோஷப்பட்டுண்டேன்.

“இன்னொருத்தர் முதுகு அடியிலேருந்து கையாலே தடவி புருவ மத்தியிலே கொண்டு முடிச்சார். நெத்திலே குருகுருன்னுது. ஆ! உனக்கு குண்டலினி கிளம்பிடுத்து. நீ யோகியாயிட்டேன்னார். நெசம் தான்னு நம்பினேன். பின்னாலே பதஞ்சலி யோகம் பத்திப் படிச்ச அப்பறம் தான் தெரிஞ்சுது, குண்டலினியைக் கிளப்பறது அவ்வளவு சுலபமில்லே, அதுக்கு முன்னாடி யமம், நியமம்னு நெறையா ஸ்டெப் இருக்குன்னு. குறுக்கு வழியிலே நான் யோகியாயிட்டேன்னு பீத்திக்கலாம். அது உண்மையில்லேன்னு தெரிஞ்சிண்டேன்.

"இன்னொரு இடத்திலே பத்து நாள் கேம்ப். வேளா வேளைக்கு ஃப்ரீயா சாப்பாடு போட்டா. சிவனேன்னு உக்காரு. உன் மூச்சையே கவனிச்சிண்டிருன்னா. அதிலேயும் தூக்கம் தான் வந்தது.

"இன்னொருத்தர் உரக்க நாமாவளி சொல்லு. குதி. பக்கத்திலே இருக்கறவாளைக் கட்டிப் பிடிச்சிண்டு கூத்தாடு. இது தான் ரிலாக்ஸேஷன் டெக்னிக்ன்னார்.

"இன்னொருத்தர் எல்லாரையும் கூட்டமா உக்காத்தி வைச்சு கண்ணை மூடிக்கோ. ஆகாசத்தை கற்பனை பண்ணிக்கோ, பூமியை நினைச்சுக்கோ, எட்ட இருந்து வர சத்தத்தைக் கவனி, கிட்ட உள்ள சத்தத்தைக் கவனி, கால் கட்டை விரலை நினைச்சுக்கோ, படிப்படியா மேலை வான்னார். அவர் பேசிண்டிருக்கும்போதே அத்தனை பேரும் எப்போ தூங்கினோம்னு தெரியாம தூங்கிப் போயிட்டோம்.”

“சாதாரணமா நாம தூங்கறதை விட இதிலே அதிகமா ரிலாக்ஸேஷன் கிடைக்கிறதுன்னா தூங்கறதிலே என்ன தப்பு, தாத்தா?”

“மனசு போரடிச்சுப் போயோ, அவா சொன்னபடி கேட்டிண்டே இருப்பதானாலேயோ தூக்கம் வந்ததுன்னா அது யோகா இல்லே. மெஸ்மரிஸத்திலே கூட அந்த மாதிரித் தான் பண்றா. இந்த மாதிரித் தூக்கம் எல்லாம் ஒத்தத் தலைவலிக்கு ஸாரிடான் சாப்பிடறாப்பல. அப்போதைக்கு கேக்கும். கவலை மறக்கும். மனசு லேசாகும். போதை மாத்திரையும் அதைத் தான் பண்றதுன்னு சொல்றா.

“உண்மையான யோகான்னா மனசு முழிச்சிண்டு இருக்கணும். வந்த கவலை போறது மட்டுமில்லாம இனி மேற்கொண்டு கவலைப்படாம இருக்கும்படி மனசை வலுப்படுத்தணும்.”

“அது ஸந்தியாவந்தனத்தாலே சாத்தியம்னு சொல்றேளா?”

“ஆமாம்.”

“மூணு நாளா என்னென்னவோ சொல்றேளே தவிர ஸந்தியாவந்தனம் எப்படி யோகாவாகும்னு சொல்லல்லியே.”

“ஏண்டா அம்பி, போரடிக்கிறேனா? அப்படி இருந்தா சொல்லிடு. நான் சொன்னதிலே ஏதாவது தப்பிருந்தாலும் நீ சொல்லலாம்.”

“நீங்க பேசறதிலே தப்பு இருக்காது தாத்தா.”

“அப்படி சொல்லாதே. நான் என் அனுபவத்திலேருந்து சொல்றேன். இந்தக் காலத்துக் குழந்தைகள் எல்லாம் நெறையா படிக்கிறேள். பல பேருடைய அனுபவத்தோட எஸன்ஸ் தானே படிப்பு. அதனாலே எனக்குத் தெரியாதது உனக்குத் தெரிஞ்சிருக்கலாம். தயங்காம கேளு. நாளைக்குப் பார்ப்போம்.”
 
Shri Vikrama,

Pl continue the posts.A nice way of presenting to the younger generation.

Regds
 
Dear Sriharsha,
I am not that fluent in English as to write such long articles. Anyway I will try after I finish the present series.
 
“மேலே சொல்லுங்கோ தாத்தா”

“இன்னிக்கும் முன்னுரை தான் சொல்லப் போறேன். முதல்லே இதுக்குப் பதில் சொல்லு. எந்தத் துறையிலே புகுந்தாலும் பிராமணன் ஷைன் பண்றானே ஏன் தெரியுமா? ”

“அவா ஜீன்ஸ்லே புத்திசாலித்தனம் நிறைய இருக்கு.”

“தப்புடா, குழந்தே. எல்லா ஜாதியிலேயும் பத்துப் பேர் அதிபுத்திசாலியாவும் பத்துப் பேர் அதிமண்டுவாவும் இருப்பா. மத்த 80 பேரும் நடுத்தரம் தான். ”

“வெஜிடேரியன் சாப்பாடு சாப்பிடறதனாலே இருக்குமோ? ”

“அதுவும் தப்பு. மாடு பன்னி குதிரைன்னு ஒண்ணு விடாம சாப்பிடறவாள்ளேயும் மகா புத்திசாலிகள் இருக்கா. பிராமணன் ஷைன் பண்றதுக்கு அவன் வளர்ந்த சூழ்நிலை தான் காரணம். ந்ம்ம குடும்பங்கள்ல சடங்குகள் ஜாஸ்தி. அதனாலே பல விதமான கட்டுப்பாடுகளும் ஜாஸ்தி. இந்தச் சடங்குகள், கட்டுப்பாடுகள் எல்லாம் நமக்குள்ளே ஒரு சிரத்தையை வளர்க்கறது. இந்த சிரத்தை தான் மத்தவாள்லேருந்து பிராமணனை வேறுபடுத்தறது. பிராமணன் கிட்டே ஒரு வேலையைக் குடுத்தா அவன் அதை சிரத்தையா செஞ்சு முடிப்பான். அவனுக்குத் தெரியாவிட்டாலும் எப்படியாவது தெரிஞ்சிண்டு முடிக்கணும்னு நினைப்பானே தவிர விட்டுவிட்டுப் போக மாட்டான்னு தெரிஞ்சு தான் செட்டிகளாகட்டும் முஸ்லீம்களாகட்டும் தன் கடைகள்லே பிராமணக் கணக்குப் புள்ளையை வெச்சிண்டிருந்தா. இந்த சிரத்தை வளர்ந்ததுக்குக் காரணம் நம்ம குடும்பத்திலே நடக்கிற ஸம்ஸ்காரங்கள் தான். பொறந்ததிலேருந்து சாகற வரைக்கும் நாப்பது வகையான ஸம்ஸ்காரங்கள் வெச்சிருந்தா. அதிலே பாதிக்கு மேல நாம இப்போ பண்றதில்லே. இருக்கிறதையும் ஏனோ தானோன்னு தான் பண்றோம். அப்படி இருந்தும் இந்தச் சடங்குகள் இன்னிக்கும் நமக்கு சிரத்தையை வளர்த்திண்டு தான் இருக்கு.”

“சடங்குகள் எப்படி சிரத்தையை வளர்க்கிறது ? சிரத்தைன்னா என்னன்னு டிஃபைன் பண்ணுங்கோ.”

“சிரத்தைங்கிறதிலே நாலஞ்சு அம்சம் இருக்கு. முதல்லே லட்சியம் பத்தின தெளிவு. ஒரு காரியம் செய்யும் போது இதை எதுக்காக செய்யறோம். இதனுடைய லட்சியம் என்னங்கிறதைத் தெளிவா உணரணும். பாஸ் பண்ணணும்னு லட்சியம் இருந்தாத் தான் படிப்பிலே சிரத்தை வரும்.

“ரெண்டாவது, அந்த லட்சியத்தை அடையற வழியைத் தெரிஞ்சுக்கணும்.

“மூணாவது, அந்த லட்சியத்தை அடையறதுக்கு என்னென்ன சாதனங்கள் உண்டோ அத்தனையும் ஒண்ணு விடாம கடைப்பிடிக்கணும். சின்ன விஷயம் தானேன்னு எதையும் அலட்சியம் பண்ணக் கூடாது.

“நாலாவது, அந்த லட்சியத்துக்கு இடையூறா இருக்கற எந்தக் காரியத்தையும் செய்யாம இருக்கணும். இதிலேயும் சின்ன விஷயம் தானேன்னு அலட்சியம் கூடாது.

“வழிமுறைகள் என்ன, எப்படி எப்படிச் செயல்படணும், எதை எதைச் செய்யக் கூடாது என்கிற விஷயமெல்லாம் அனுபவஸ்தாளைக் கேட்டோ, பார்த்தோ அல்லது அவா அனுபவத்தைப் பத்திப் படிச்சோ தெரிஞ்சுக்கணும். அதுக்கு முக்கியமா அந்த அனுபவஸ்தா மேலே நம்பிக்கை இருந்தாத் தான் இதெல்லாம் தெரிஞ்சுக்க முடியும். இவ்வளவும் சேர்ந்தது தான் சிரத்தை.

“ஒரு சிராத்தம்னு எடுத்துக்கோ. அதுக்கு எத்தனை தினுசு விதிமுறைகள் வெச்சிருக்கா. இலையினுடைய நீள அகலத்திலேருந்து இன்னின்ன கறிகாய் தான் சேர்த்துக்கலாம், இன்னின்ன சேர்த்துக்கக் கூடாது, இந்த மாதிரித் தான் வேஷ்டி புடவை கட்டிக்கணும், யாருக்கு முதலிலே பரிமாறறது அப்படின்னு நூத்துக் கணக்கா டூஸ் ஓண்ட் டோண்ட்ஸ் இருக்கில்லையா ? இதுக்கு விரோதமான காரியங்கள்னு பெரியவா சொல்றது எதையும் செய்யாம ஜாக்கிரதையா இருக்கோம். இதிலே பழகிப் பழகி நமக்கு எந்தக் காரியத்தைச் செய்யறதா இருந்தாலும் முதல்லே அதை எதுக்காகச் செய்யறோம், எப்படிச் செய்யணும், என்னென்ன செய்யக் கூடாதுங்கறதைத் தீர்மானம் பண்ணிக்கறது வழக்கமாயிடறது. சைக்காலஜிலே இதை ட்ரான்ஸ்ஃபர் ஆஃப் லேர்னிங்னு சொல்லுவா.

“சிரத்தைக்கு இந்த டெஃபனிஷன் புதுசா இருக்கு, தாத்தா ”

“ஸம்ஸ்காரங்கள்னா டூஸ் அண்ட் டோண்ட்ஸ், கட்டுப்பாடுகள். இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் ஆம்புளைகளுக்குத் தான் அதிகமா இருக்கு. இந்தக் கட்டுப்பாட்டிலே வளர்ந்த புள்ளைகளைப் பார்த்தா அம்மாஞ்சி மாதிரி இருக்குன்னு அவாளைப் புடிக்காம, சுதந்திரமா இருக்கற புள்ளை வேணும்னு விரும்பி சில பொண் குழந்தைகள் வேறே ஜாதியிலே கல்யாணம் பண்ணிக்கிறதுகள். கொஞ்ச நாள் கழிச்சு, தப்புப் பண்ணிட்டோமோன்னு எண்ணம் வரது. தன் குழந்தைகளுக்குக் கல்யாணம் பண்ண நினைக்கும் போது ‘என் குழந்தை ப்ராமின் கல்சர்லே வளர்ந்தது. இதுக்கு பிராமணக் குடும்பத்திலே சம்பந்தம் வேணும்’னு விளம்பரம் பண்றதுகள். அசடுகள், வந்திண்டு போயிண்டுன்னு பேசறது தான் ப்ராமின் கல்சர்னு நினைக்கிறதுகள். ஸம்ஸ்காரங்கள்லே ஈடுபட்டு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வளர்ந்தாத் தான் ப்ராமின் கல்சர் வரும்.”

“சரி, இதுக்கும் ஸந்தியா வந்தனத்துக்கும் என்ன சம்பந்தம் தாத்தா ?”

“கிழம் ஏதோ சம்பந்தா சம்பந்தமில்லாம உளறிண்டிருக்குன்னு நினைக்கறயோடா குழந்தை. சம்பந்தம் இருக்கு. மத்த ஸம்ஸ்காரங்களை எல்லாத்தையும் விட்டுட்டாக் கூட ஸந்தியா வந்தனம் ஒண்ணு செஞ்சிண்டு இருந்தால் சிரத்தை வளரும். ஏன்னா 10 நிமிஷம் பண்ற ஸந்தியா வந்தனத்திலே நூறு டூஸ் அண்ட டோண்ட்ஸ் இருக்கு. இது மனசை டிஸிப்ளின் பண்ணும். செய்யற காரியங்களை எல்லாத்திலும் இந்த டிஸிப்ளின் உதவும்.

“இந்த சிரத்தைலே என்ன விசேஷம் தெரியுமா ? சிரத்தை இருந்தால் தான் சிரத்தை வளரும்.”

“இது என்ன புதிர் தாத்தா? பணம் இருந்தாத் தான் பணம் வளருமா ? அறிவு இருந்தாத் தான் அறிவு வளருமா ?”

“ஆமாம். முதல்லே கொஞ்சூண்டு சிரத்தையோட காரியம் செய்ய ஆரம்பிச்சேன்னா அதுவே உன்னோட சிரத்தையை வளர்த்து விடும். ஒரு விதை இருந்தாத் தானே நூறு விதையை உண்டாக்க முடியும் ! ஜீரோ நூறு ஆகாது. பணமும் அப்படித் தான். அறிவும் அப்படித் தான். உபநயனம் பண்றச்சே கடைசிலே ஒரு உபஸ்தான மந்திரம் சொல்லுவா. ‘ஸௌபாக்யம் உண்டாகக் காரணமான சிரத்தா தேவியே, உலகத்திலே இன்பம் தேடற அத்தனை பேருக்கும் இன்பத்தைக் கொடு. உன்னை நான் மூணு வேளையும் அழைக்கறேன். எனக்கு சிரத்தை உண்டாகும்படி செய்’னு அதுக்கு அர்த்தம். சிரத்தா தேவியை வணங்கினாத் தான் சிரத்தை வளரும். ப்ராமணனுடைய ஹால் மார்க்கே சிரத்தை தான். அப்ராமணாளும் ஸந்தியாவந்தனம் பண்ணலாம். அதனாலே சிரத்தையை வளர்த்துக்கலாம். ஷைன் பண்ணலாம்.

“கடைசியா ஒரு ஹோம் ஒர்க். சிரத்தை என்கிற வார்த்தையினுடைய இப்போ சொன்ன முழு அர்த்தமும் உள்ளடக்கின தமிழ் அல்லது இங்கிலீஷ் வார்த்தையைத் தெரிஞ்சிண்டு வந்து நாளைக்குச்சொல்லு.”
 
Dear Shriharsha,
Here is a synopsis of the previous posts. I will try to give such a synopsis to my subsequent posts.

Yoga means joining, merging. It refers to the merging of individual soul with the cosmic soul. There are four varieties of yoga. Of these Rajayoga is more popular nowadays than the other. It relaxes mind and gives relief from tensions. Some yoga techniques lull the mind to sleep and cause relaxation.

Sandhya vandanam is better than Rajayoga in that it not only provides relaxation but the mind is kept awake. It also develops one’s sraddha.

What is sraddha?
It has five constituents.
1 you must be very clear of your goal.
2 you must gather information as to how to reach the goal.
3 you must leave no stone unturned to reach your goal.
4 you must not do anything that would least impede in your reaching the goal.
5 you must have faith in the person who teaches you the ways and means to reach the goal.

This sraddha is the hallmark of Brahmins. This, in the past, made them efficient and shine in whatever sphere they entered. Even mediocre people can come up if they develop sraddha. This is not a hereditary trait. It is inculcated by the rituals in the families. There are 40 rituals or samskaras prescribed to be performed in each life. We have given up most of them. Even the other we are performing only perfunctorily. Even then the samskaras do inculcate sraddha.

Rituals prescribe many do’s and don’ts. By scrupulously following them we acquire the skill of being clear about the goal, following the procedures without fail and avoiding scrupulously the forbidden things. This skill is available to us in our day to day life also, by a process known as transfer of learning.

The peculiarity of sraddha is that if you perform a ritual with a little sraddha, it grows up. Even in the absence of other Samskaras, Sandhya vandanam, develops sraddha. It provides the basic training to merge actions with words, which leads on step by step to the final goal of merging the atma with the paramatma
 
Dear Shriharsha,
Here is a synopsis of the previous posts. I will try to give such a synopsis to my subsequent posts.

Yoga means joining, merging. It refers to the merging of individual soul with the cosmic soul. There are four varieties of yoga. Of these Rajayoga is more popular nowadays than the other. It relaxes mind and gives relief from tensions. Some yoga techniques lull the mind to sleep and cause relaxation.

Sandhya vandanam is better than Rajayoga in that it not only provides relaxation but the mind is kept awake. It also develops one’s sraddha.

What is sraddha?
It has five constituents.
1 you must be very clear of your goal.
2 you must gather information as to how to reach the goal.
3 you must leave no stone unturned to reach your goal.
4 you must not do anything that would least impede in your reaching the goal.
5 you must have faith in the person who teaches you the ways and means to reach the goal.

This sraddha is the hallmark of Brahmins. This, in the past, made them efficient and shine in whatever sphere they entered. Even mediocre people can come up if they develop sraddha. This is not a hereditary trait. It is inculcated by the rituals in the families. There are 40 rituals or samskaras prescribed to be performed in each life. We have given up most of them. Even the other we are performing only perfunctorily. Even then the samskaras do inculcate sraddha.

Rituals prescribe many do’s and don’ts. By scrupulously following them we acquire the skill of being clear about the goal, following the procedures without fail and avoiding scrupulously the forbidden things. This skill is available to us in our day to day life also, by a process known as transfer of learning.

The peculiarity of sraddha is that if you perform a ritual with a little sraddha, it grows up. Even in the absence of other Samskaras, Sandhya vandanam, develops sraddha. It provides the basic training to merge actions with words, which leads on step by step to the final goal of merging the atma with the paramatma

I really appreciate your effort, and thankful. Even if you give the gist of it, that would give some means to understand more.
 
Paramatma is abstract. It is not even to possible to conceive it. Atma is also similarly inconceivable. To try to merge these two vague abstracts is impossible. So the attempt should be made step by step, from concrete to abstract.
The first step is to merge words and actions. In the next stage, we merge breath with action. Then we try to merge mind with breath. Finally we try to merge mind with paramatma.
Sanhdya vandanam provides such training.
The achamanam merges action with words. Every mantra pronounced has a corresponding physical action.
Sraddha is very important in performing this. With sraddha, even non-brahmins can attain the benefits of this ritual. Atheists can also practise this.
5 “ கடவுள் நம்பிக்கை இல்லாதவா யோகா பண்ணி பலன் அடையலாம்னு சொன்னேள். அது போல அவா ஸந்தியா வந்தனம் பண்ணிப் பலன் அடைய முடியுமா, தாத்தா?”

“நிச்சயமா. அடையலாம். தான் ஒழுங்கா ஸந்தி பண்ணி பலன் அடைஞ்சு இப்படி இப்படி செய்யணும்னு மத்தவாளுக்குச் சொல்ற அனுபவஸ்தா மேலே நம்பிக்கை இருந்தா போதும். கடவுள் நம்பிக்கை இல்லாமல் ஸந்தி பண்ணினாலும் பலன் உண்டு.”

“நீங்க பொய் சொல்ல மாட்டேள். எனக்கு நல்லதைத் தான் சொல்வேள்ங்கிற நம்பிக்கை எனக்கு உங்க மேலே இருக்கு.”

“ அது போதும். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒண்ணு சேர்றது தான் யோகம்னு நீ கத்திண்டிருக்கே. பரமாத்மாவைக் கண்ணாலே பாத்தவாளும் இல்லே. காதாலே கேட்டவாளும் இல்லே. அறிவினாலே ஆராய்ஞ்சும் அறிய முடியாது. மனசாலேயும் உணர முடியாது. அது மனோ வாக் கோசரங்களுக்கு அப்பால் பட்டதுன்னு சொல்றா.

“ஜீவாத்மா, அதான் நமக்குள்ளே ஒரு ஆத்மா இருக்குன்னு சொல்றாளே, அதையாவது பார்க்க கேட்க முடியுமா ? அது உடம்பும் இல்லே, உசிரும் இல்லே, அறிவும் இல்லே, மனசும் இல்லே. இதெல்லாம் இல்லாத ஒண்ணுன்னு சொல்றா.

“இப்படி ரெண்டுமே அப்ஸ்ட்ராக்டா இருக்கச்சே இதை எப்படி மெர்ஜ் பண்றது ? அதுக்கு முந்தின படியா அதை விட குறைச்சலான அப்ஸ்ட்ராக்டா இருக்கற மனசை அதைவிட ஸ்தூலமா இருக்கற மூச்சோட இணைக்கணும். அதுக்கும் முந்தின படியா, இன்னும ஸ்தூலமா இருக்கற சொல்லை இணைக்கணும். அதுக்கும் முன்னாடி சொல்லையும் செயலையும் இணைக்கறதிலே ஆரம்பிச்சு ப்ராக்டீஸ் பண்ணணும். அது எப்படின்னு படிப்படியா சொல்றேன்.

“இப்பொ பாடத்தை ஆரம்பிக்கலாமா ? முதல்லே ஆசமனம். இதிலே தான் சொல்லும் செயலும் இணையற பால பாடம் ஆரம்பமாறது. “ஒரு டம்ளர்லே ஜலம் எடுத்துக்கோ.”

“அதுக்கும் முன்னாடி ஸ்னானம் பண்ணணும், விபூதி இட்டுக்கணும்னு சொல்வேளா ?”

“அது உன் சௌகர்யம். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான கட்டுப்பாடுகளை நீயா விரும்பி ஏத்துக்கறியோ அவ்வளவுக்கு அவ்வளவு மெண்டல் டிசிப்ளின் நன்னா ஏற்படும். அதுக்காக இன்னிக்கு எனக்கு ஸ்நானம் பண்ண முடியல்லே. அதனாலே ஸந்தி பண்ணல்லேன்னு ஆகக் கூடாது. முக்கியமானது யோகப் பயிற்சியை சிரத்தையோட பண்றது தான்.

“அச்சுதாய நமஹன்னு சொல்லி ஒரு உத்தரணி ஜலம் குடி. அனந்தாய நமஹன்னு சொல்லி ஒரு உத்தரணி, கோவிந்தாய நமஹன்னு சொல்லி ஒண்ணு.”

“ இதுக்கு என்ன அர்த்தம் தாத்தா ?”

“அச்யுதன்னா இடத்தை விட்டு அசையாதவன்னு அர்த்தம். நாம் தத்தளிக்கும் போது உறுதியா இருக்கற பொருளைப் பிடிச்சிண்டாத் தானே நமக்குப் பாதுகாப்பு. அனந்தன்னா முடிவில்லாதவன். நம்மைப் போல பொறந்து செத்துப் போறவனை நம்பறதை விட, முடிவில்லாத ஒத்தனை நம்பறது விசேஷம் இல்லையா ? கோவிந்தன்னா உசிர்களைக் காப்பாத்தறவன். பகவான் உறுதியா முடிவில்லாத இருக்கறதோட எல்லா உசிர்களையும் காப்பாத்தற கருணை உள்ளவன்ங்கிறது மனசுக்கு ஆறுதலா இருக்கும்கிறதுக்காக இதை சொல்றோம்.”

“நாஸ்திகன் எப்படி இந்த மாதிரி சாமி பேரை எல்லாம் சொல்வான்?”

“நம்பிக்கை இருந்தா சொல்லட்டும், இல்லாட்டா ஹிரண்யாய நமஹ, ராவணாய நமஹ, சிசுபாலாய நமஹன்னு சொல்லிக்கட்டுமே. சொல்லும் செயலும் இணையணும். அது தான் முக்கியம்.

“அப்புறம் பகவானோட 12 பேர்களைச் சொல்லி உடம்பிலே குறிப்பிட்ட பாகத்தைத் தொடணும். நாஸ்திகனாயிருந்தா இந்தப் பேர்களுக்குப் பதிலா தன் பொண்டாட்டி பேரு புள்ளை பேருன்னு 12 பேரைச் சொல்லிக்கட்டும்.

“கேசவ - கட்டை விரலால் வலது கன்னம்.
நாராயண – கட்டை விரலால் இடது கன்னம்.
மாதவ – மோதிர விரலால் வலது கண்.
கோவிந்த – மோதிர விரலால் இடது கண்.
விஷ்ணு – ஆள்காட்டி விரலால் வலது மூக்கு.
மதுசூதன – ஆள்காட்டி விரலால் இடது மூக்கு.
த்ரிவிக்ரம - சுண்டு விரலால் வலது காது.
வாமன - சுண்டு விரலால் இடது காது.
ஸ்ரீதர - நடு விரலால் வலது தோள்.
ஹ்ரிஷீகேச - நடு விரலால் இடது தோள்.
பத்மநாப - ஐந்து விரலாலும் வயிறு.
தாமோதர - ஐந்து விரலாலும் தலை.”

“யாரும் அப்படிச் செய்யறதா தெரியல்லையே. அவசரம் அவசரமா மூஞ்சிக்கு நேரே கையை இங்கேயும் அங்கேயும் ஆட்டறாளே தவிர மந்திரத்தோட செயலை இணைக்கறதா தெரியவில்லையே. ”

“இணைக்கறது தான் யோகம். அப்படிப் பயிற்சி செய்தா தான் பலன் உண்டு. நாளைக்கு தொடருவோம்.”
 
To prevent any obstacle that might occur while performing Sandhya Vandanam, we make a special prayer. We think of god as wearing white dress, having a clean white body, available everywhere for help, ready to help with four hands, that is, with double skill and having a pleasant countenance. Thinking of a pleasant face delights our minds and we are endowed with the ability to face obstacles. While saying this sloka, knock with both your fists on your forehead. This exercise aims at joining word and action.

Then comes Pranayama. Inhale for about three seconds through left nostril, retain for 12 seconds, then exhale for six seconds. Say the mantra during this exercise. This helps in merging breath with words.

“ஸந்தியாவந்தனம் பண்ண உக்காந்தா அப்போ தான் டெலிபோன் அடிக்கும், யாராவது வாசலிலே கூப்பிடுவா, இந்தக் கேஸ் சிண்டரை மாத்திக் குடுடான்னு உங்கம்மா கூப்பிடுவா. செய்து முடிக்கற வரைக்கும் இந்த மாதிரி விக்னம் ஏதுவும் வரக்கூடாதுன்னு வேண்டிக்கறோம். அதுக்குத் தான்

சுக்லாம்பர தரம் விஷ்ணும்
சசி வர்ண்ம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசாந்தயே.

இதன் பொருள்- வெள்ளை ஆடை அணிந்தவரும் எங்கும் பரவி உள்ளவரும் சந்திரன் போன்ற நிறம் உடையவரும் நான்கு கைகளை உடையவரும் ஆக இருப்பவரை,எல்லா இடையூறுகளும் நீங்குவதற்காக தியானிக்கிறேன்.

“இதுலே புள்ளையார் பேரே வரலை பாத்தியா. சில மனுஷாளை நினைச்சா நமக்கு சந்தோஷம் வரது. சில பேர் மூஞ்சி ஞாபகத்துக்கு வந்தாலே நமக்குப் பத்திண்டு வரது. சாதாரணமா, தூய வெள்ளை ஆடை அணிஞ்சா நமக்கே மன அமைதி உண்டாகும் . அப்படிப்பட்டவாளைப் பார்த்தாலும் அவாளை நினைச்சாலும் அமைதி உண்டாகும். அவர் எங்கேயும் பரவி இருக்கார்னா அவர் இல்லாத இடம் இல்லை, அவர் நம் பக்கத்திலேயும் இருக்கார்னு ஆறுதல் உண்டாகும். சந்திரன் போன்ற நிறம் அவரோட குளிர்ந்த அருளை நினைவூட்டறது. நாலு கைங்கிறது அவரோட பெரும் செயல் திறமையைக் குறிக்கறது. இந்த மாதிரி உள்ளவாளை நினைச்சாலே மனசில தெம்பு உண்டாகும். இடையூறுகளை எதிர் கொள்ள வலிமை உண்டாகும்..

“இந்த சுலோகத்திலே நாலு பாதம் இருக்கில்லையா. ஒவ்வொரு பாதம் முடியும் போதும் ஒரு தடவை நெத்திலே ரெண்டு கையாலேயும் குட்டிக்கணும்.
இதுவும் சொல் செயல் இணைப்புப் பயிற்சி தான்.

“அடுத்தது ப்ராணாயாமம், மூச்சை இடது மூக்காலே இழுத்து கொஞ்ச நாழி வெச்சிருந்து வலது மூக்காலே விடணும். ஒரு பங்கு நேரம் இழுக்கணும், நாலு பங்கு நேரம் வெச்சுக்கணும், ரெண்டு பங்கு நேரம் விடணும்னு சொல்லுவா. கடிகாரத்தைப் பாத்துண்டு இதைச் செய்யறதை விட இந்த மந்திரத்தை அளவு கோலா வெச்சுண்டா சொல்லையும் மூச்சையும் இணைக்கற பயிற்சியும் கிடைக்கும்.

“1 ஓம் பூஹு 2 ஓம் புவஹ 3 ஓகும் ஸுவஹ – இந்த மூணும் சொல்லும் போது இடது மூக்காலே மூச்சை இழு.

“4 ஓம் மஹஹ 5 ஓம் ஜநஹ 6 ஓம் தபஹ 7 ஓகும் ஸத்யம் 8 ஓம் தத்ஸ
9 விதுர்வரேணியம் 10 பர்க்கோ 11 தேவஸ்ய 12 தீமஹி 13 தியோயோநப்
14 ப்ரசோதயாத் 15 ஓம் ஆபஹ - இதுவரைக்கும் மூச்சை அடக்கி வெச்சுக்கோ.

“16 ஜ்யோதீ 17 ரஸஹ 18 அம்ருதம் 19 ப்ரம்மா 20 பூர்ப்புவஸ் 21 ஸுவரோம் – இதைச் சொல்லும்போது மூச்சை வலது மூக்காலே மெதுவா விடு.

“இது ஒரு உத்தேசமான கணக்குத் தான். உன் சௌகர்யத்துக்கு இதிலே கொஞ்சம் கொஞ்சம் மாத்திக்கலாம். மூச்சு விஷயத்திலே வலுக்கட்டாயம் பண்ணக்கூடாது.
இது மூச்சையும் சொல்லையும் இணைக்கற பயிற்சி.”
 
7
Next comes Sankalpa. We tell it to ourselves what we are going to do and with what purpose. This emphasizes the fact that we should be clear of our goal in every act, this being the first requirement of Sraddha.

It says that through removal of our sins we propitiate God. Simply by praying to God, our sins do not vanish. Through karmas, our sins are removed. Then only God is pleased with us.

When the mind is entrusted with a routine work, it tends to escape from the drudgery. Either it goes to sleep or it ruminates on the past or dreams of future. It never lives in the present. While doing Sandhya vandanam, the mind should be awake. So it is designed in such a way as to avoid routineness now and then.

So far, every word accompanied a different action. Now during the entire Sankalpa, there is only one action.

Secondly, one has to be aware whether it is morning, midday or evening and add the relevant word in the Sankalpa.

“அடுத்தது ஸங்கல்பம். எந்த வேலை செய்யறதாயிருந்தாலும் என்ன செய்யப் போறோம், எதுக்காக செய்யறோம்னு மனசிலே தீர்மானம் பண்ணிக்கணும். நமக்கு நாமே ஞாபகப்படுத்திக்கணும். அதுக்காகத் தான் இந்த ஸஙகல்பம்.”

“மமோபாக்தன்னு ஆரம்பிக்கறதே, அதுவா?”

“அது மமோபாத்த ன்னு சொல்லணும். மம உபாத்த ன்னு சொன்னா என்னாலே அடையப்பட்ட ன்னு அர்த்தம்.

“என்னாலே அடையப்பட்ட எல்லாப் பாவங்களும் நீங்கறது மூலமா பரமேஸ்வரனை அல்லது நாராயணனைப் ப்ரீதி பண்றதுக்காக இதை நான் பண்றேன்னு அர்த்தம்.”

“மாத்திச் சொல்றேளா தாத்தா? பாவம் நீங்கறது மூலமா பகவானை ப்ரீதி பண்றதா, பகவானை ப்ரீதி பண்றது மூலமா பாவம் நீங்கறதா?

“சரியாத் தான் சொன்னேன். நம்ம பாவம் நீங்கினா பகவான் சந்தோஷப்படறார். வெறுமனே பகவானை ஸ்தோத்ரம் பண்ணினா பாவம் நீங்காது. கர்மாக்களைப் பண்ணி பாவத்தைப் போக்கிண்டா பகவான் ப்ரீதியாயிடறார். இது தான் அதுக்கு அர்த்தம். இது சம்பந்தமா நெறைய தெரிஞ்சுக்கணும்னு ஆசையிருந்தா இந்த லிங்க்லே 19வது பக்கம் பாரு.

“இந்த மனசு இருக்கே, இது எப்பவும் கடந்த கால நினைவுகளை அசை போட்டுண்டு இருக்கும். இல்லாட்டா, வருங்காலத்தைப் பத்திக் கனவு கண்டுண்டு இருக்கும். அது நிகழ்காலத்திலே இருக்கறது ரொம்ப அபூர்வம் தான். புதுசா எதையாவது செய்யும்போது மனசு நிகழ்காலத்திலே இருக்கும். பழக்கமாகிப் போன விஷயங்களைச் செய்யும்போது அது அந்த வேலையை ஆட்டோ பைலட் கிட்ட ஒப்படைச்சுட்டு தூங்கப் போயிடும் அல்லது மேயப்போயிடும்.

“ஸந்தியாவந்தனம் பண்ணும்போது அந்த மாதிரி நடக்காம, முழுக் கவனத்தோட மனசு இருக்கணும்கிறதுக்காக பெரியவா ஒரு ஏற்பாடு செஞ்சிருக்கா. ஒரே மெக்கானிக்கலா இல்லாம அங்கங்கே ஒரு மாறுதலை ஏற்படுத்தியிருக்கா.

“இது வரைக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு செயல்னு வந்துதா? இப்போ ஸங்கல்பம் முடியற வரைக்கும் கை அசையாம மடிமேலேயே இருக்கணும்.

“அப்பறம் இன்னொண்ணு, இப்போ என்ன வேளைங்கிறது நினைவிலே இருக்கணும். ப்ராதஸ் ஸந்த்யாம் உபாசிஷ்யே, மாத்யான்னிகம் கரிஷ்யே, ஸாயம் ஸந்த்யாம் உபாசிஷ்யே அப்டிங்கறதிலே அந்தந்த வேளைக்குத் தகுந்தாப்பல சொல்லணும். மனசு முழிச்சிண்டு இருந்தாத் தான் அதை சரியா சொல்ல முடியும்.
 
Madam,
Bhavan's book on Sandhyavandhanam is a good book with word by word meaning. A couple of years back it was Rs.30 per copy. The best gift we can give whenever we are invited to upanayanam.
Recently I got book on this topic by Shringeri Sarada Peetam, excellant publication with detailed Tamil meaning and purpose of each slokas.
As you correctly told parents have to encourage.
When Christians regularly attend Sunday prayer and muslims their namaz why not we make it as an habit?

Rajan
Ernakulam, Kerala
 
8
Next comes sprinkling of water on the head with uttering of mantra accompanying. Three vedic mantras split into nine parts is used here. One sprinkling for every part. During the eighth part we touch both our knees. This is to keep us awake without giving ourselves to machine like routine.

The meaning of the mantras are:- O waters, you are the source of our happiness. Bestow on us energy for beholding great things. Whatever is auspicious in you, let me partake of it since you are as loving as mothers. To the home you are going to speedily, let us also hasten and let us be born afresh.

Heaven or sky called Dhaus in Vedas is the home of the waters. They come down with motherly affection to enable the creatures to live. They go down and down till they reach the sea. Though they have reached a very low place they aspire to come up and reach the sky in the form of vapour.

We must also not lose heart when we are pushed to a low level. We should continue to aspire loftily and shine like a star. Instead of lamenting on our past miseries, let us feel that we are born afresh.

The performer of Sandhya Vandanam says it to himself as an auto suggestion which takes him higher and higher.

“அடுத்தது, மார்ஜனம். அதாவது ப்ரோக்ஷணம் பண்ணிக்கறது. இதிலே வரது வேத மந்திரம். இதிலே காயத்ரீ சந்தஸ்லே அமைஞ்ச மூணு மந்திரம் இருக்கு. ஒவ்வொண்ணுக்கும் மூணு பாதம். ஆக ஒம்பது பாதம் இருக்கு. ஒவ்வொரு பாதம் சொல்லும்போதும் ஒரு தடவை ப்ரோக்ஷணம் பண்ணிக்கணும். எட்டாவது பாதம் வரும்போது மட்டும் முழங்கால் ரெண்டையும் தொடணும்னு வெச்சிருக்கா. இது எதுக்கு தெரியுமா? ”

“ரொட்டீன்லே மனசு தூங்கிப் போயிடாம இருக்கறதுக்காக இந்த முடிச்சு.”

“சரியா சொன்னே. இதுக்கு அர்த்தம் சொல்றேன் கேளு. ஜலம்கறது உயிர் வாழ அத்யாவசியமான பொருள் இல்லையா ? அநதத் தண்ணியை ஒருதெய்வமா வேதம் கொண்டாடறது. ’ஜலமே, நீங்க எங்களோட சுகத்துக் காரணமா இருக்கேள். அப்பேர்ப்பட்ட நீங்க எனக்கு பெரிய விஷயங்களைப் பார்க்கிறதுக்கு சக்தியைக் குடுக்கணும். உங்களிடத்திலே எது சிறந்த அம்சமோ அதிலே, அம்மாக்கள் மாதிரி அன்பாயிருக்கற நீங்க, எனக்கும் கொஞ்சம் பங்கு குடுங்கோ. நீங்க யாரோட வீட்டுக்கு வேகமாப் போயிண்டிருக்கேளோ அங்கே நாங்களும் வேகமா வரோம். உங்களை மாதிரி எங்களையும் புதுசாப் பொறக்க வைங்கோ’ ன்னு வேண்டிக்கிறது இந்த மந்திரம்.”

“புரியல்லியே தாத்தா”

“சுத்த ஜலத்தோட வீடுங்கறது ஆகாசம் தான். அந்த ஆகாசத்திலேருந்து கருணையோட மழை பெய்யலேன்னா பூமியிலே புல் பூண்டு எதுவும் முளைக்காது. எந்த ஜீவராசியும் வாழமுடியாது. பூமியிலே இருக்கற ஜலமெல்லாம் வேக வேகமா, தாழ்ந்த இடமான கடலை நோக்கிப் போறது. அங்கே போய் உப்புத் தண்ணியா ஆயிட்டாலும் மறுபடியும் சுத்தமாகி ஆவியா ஆகாசத்துக்குப் போயிடறது. வேதம் ஆகாசத்தை அப்பா ன்னும் பூமியை அம்மா ன்னும் சொல்லும். ஜலம் சமுத்ரத்திலே சேரற மாதிரி நாம கீழ் நிலையை அடஞ்சாலும் மேலே போகறதை லட்சியமா வெச்சுக்கணும். ஆகாசத்திலே துருவ நட்சத்திரம் மாதிரி ப்ரகாசிக்கணும். அல்ப விஷயங்களை லட்சியமா வெச்சுக்காம இந்த மாதிரி பெரிய லட்சியத்தைத் திடமாப் பிடிச்சிண்டு இன்னிக்குப் புதுசாப் பொறந்திருக்கோம்னு நினைச்சு உத்ஸாஹத்தோட வேலையைக் கவனிக்கணும். இதை தினமும் மூணு வேளையும் நமக்கு நாமே ஆட்டோ சஜஷன் மாதிரி சொல்லிண்டா எல்லோரும் ஷைன் பண்ணலாம். ”

“இதிலே இவ்வளவு இருக்கா? அம்மாவுக்குப் பயந்துண்டு நான் ஸந்தி பண்ணின காலங்களிலே இது என்ன சுத்த போர்னு தோணவே தான் விட்டுட்டேன். ”

“அர்த்தம் தெரியாம பண்ணினாலும் யோகத்தோட பலன் உண்டு. அதைத் தான் மஹா பெரியவா தெய்வத்தின் குரல்லே சொல்றா- பொன்மலர் நாற்றமுடைத்துன்னு சொல்றாப்பல, அர்ததம் தெரியாம பண்ணினாலும் வேத மந்திரங்களுக்குப் பலன் உண்டு. அதுக்கு ஒசந்த அர்த்தம் இருக்குங்கறது அதிகப்படியான விசேஷம்னு.”

“அது சரி. என்னவோ காயத்ரீ சந்தஸ்னு சொன்னேளே, அது என்ன? ”

“சந்தஸ்னா செய்யுள் வகை. முதல்லே சொன்ன சுக்லாம்பரதரம்ங்கிற ஸ்லோகம் எட்டு எட்டு எழுத்து கொண்ட நாலு பாதம், ஆக 32 எழுத்து உள்ளது. அது அநுஷ்டுப் சந்தஸ்னு பேரு. காயத்ரீ சந்தஸ்னா எட்டு எட்டு எழுத்து கொண்ட மூணு பாதம் ஆக 24 எழுத்து இருக்கும். ”
 
9
The next is Prasanam. We take a little water in our right palm and saying the mantra swallow it. The mantra says that whatever sin we might have committed with our mind, speech or limbs let them all be removed. We pray to the goddess of night in the morning and to the goddess of day in the evening.

This does not mean that there are so many gods and goddesses. God is one and it is called by many names and it has many forms. It is immanent in everything, whether sentient or insentient. When we tune our minds to see god in everything then there would be no anger, jealousy, fear or hatred.

The mantra further says, let me be merged into the radiance of Sun/ Satyam. What you think of, you would become is an adage. By constantly thinking of the radiance of the sun one becomes radiant. By thinking about darkness your face will become dark. Vedas speak of Rakshasas having dark faces. They did not believe in the worship of devas, that is luminous beings. So Rakshasa is not the name of a race. One becomes a Rakshasa or Brahmana by virtue of his character and conduct.

“அடுத்தது ப்ராசனம். அதாவது உள்ளங்கையிலே ஒரு சொட்டு ஜலம் எடுத்துண்டு மந்திரத்தைச் சொல்லி முடிச்சப்பறம் அதை வாயிலே விட்டுக்கறது. நாம தெரிஞ்சோ தெரியாமலோ ராத்திரி மனசாலே வாக்காலே கை கால் மத்த உறுப்புகளாலே எத்தனையோ பாபங்கள் செய்திருப்போம். அதையெல்லாம் போக்கச் சொல்லி ராத்திரி தேவதை கிட்ட வேண்டிக்கறது இந்த மந்திரம். ஸாயங்கால ஸந்தியிலே பகல்லே செஞ்ச பாபாங்களைப் போக்கச் சொல்லி பகல் தேவதை கிட்ட வேண்டிக்கறோம்.”

“ராத்திரி தேவதை, பகல் தேவதை, ஜல தேவதைன்னு எத்தனை தேவதை தாத்தா? ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலின்னு அதனாலே தான் பாரதியார் பாடினாரோ?”

“அதே பாரதி சூழ்ந்தெல்லாம் கடவுள்னு வேதம் சொல்றதா சொல்றாரே, கவனிச்சியா? மேலும் பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன், பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம். அப்படின்னும் சொல்லியிருக்கார். கடவுள் ஒண்ணு தான். வெவ்வேறே நாம ரூபங்களோட இருந்தாலும் எல்லாப் பொருள்களிலேயும் எல்லா உயிர்களிலேயும் தெய்வத்தைப் பார்க்கற மனோபாவம் வந்துடுத்துன்னா உலகத்திலே சண்டை சச்சரவு, போட்டி பொறாமை கோப தாபங்கள் இருக்காது. அதானாலே ராத்திரி தேவதை வேறே பகல் தேவதை வேறே இல்லே. பேர் தான் வேறே.

“இந்த மந்திரத்திலே கடைசிலே அமிர்தத்தின் பிறப்பிடமாகிய சூர்ய ஜோதிலே என்னை நான் ஹோமம் பண்ணிக்கறேன்னு சொல்றோம். ஸாயங்காலம் இதையே கொஞ்சம் மாத்தி ஸத்யத்தின் ஜோதியிலேன்னு சொல்றோம். நம்மை நாமே ஹோமம் பண்ணிக்கறதுன்னா தீக்குளிக்கறதுன்னு அர்த்தமில்லே. நம்மையும் ஜோதி மயமா ஆக்கிக்கிறோம்னு அர்த்தம். இது என்ன பைத்தியக்காரத்தனம்னு அறிவாளிகள் கேப்பா. இதெல்லாம் சைக்காலஜி சம்பந்தப்பட்ட விஷயம். அறிவு பூர்வமா பார்க்கப்படாது. யத்பாவம் தத் பவதின்னு சொல்வா. எதை நினைக்கிறோமோ அதுவாவே நாம ஆயிடறோம். இதுவும் ஒரு ஆட்டோ சஜஷன் தான். சூரியனை மனசிலே நினைச்சுண்டு த்யானம் பண்ணினா சூரிய தேஜஸ் முகத்திலே உண்டாகும். அடுப்புக்கரியை நினைச்சிண்டிருந்தா மூஞ்சி அந்த நிறமாத்தான் ஆகும். இந்த ஒளி வழிபாட்டிலே நம்பிக்கை இல்லாதவாளைத் தான் வேதம் ராக்ஷஸன்னு சொல்றது. ராக்ஷஸன்னா அவன் ஒரு தனி இனம் இல்லே. இதைப் புரிஞ்சுக்காம வெள்ளைக்காரன் சொன்னான்னு கேட்டுண்டு சில பேர் கறுப்பா இருக்கறவன் எல்லாம் ராக்ஷஸன். அதனாலே அது திராவிடர்களைக் குறிக்கறதுன்னு சொல்லிண்டிருக்கா. அப்படி இருந்தா விஸ்ரவஸ்ங்கிற ப்ராமணனோட புள்ளையான ராவணனை எப்படி ராக்ஷஸன்னு சொல்றோம்? செம்படவப் பொண்ணு வயத்திலே பொறந்த வியாசரை எப்படி ப்ராமணன்னு சொல்றோம்? ப்ராமணன் அப்ராமணன்னு சொல்றதெல்லாம் அவாவா குணத்தையும் செயலையும் வெச்சுத் தான்.”
 
10
In Madhyahniham, we pray for removing the sins caused by eating prohibited foods and by receiving gifts from unworthy fellows.
Argyam is an ancient system of welcoming elders. It is done by giving a little water in the palm of the guest. Padyam is washing the feet of the guests. In Sandhya vandanam we welcome Surya with argyams. Then we perform Deva and navagraha tharpanam.

In all these the process of merging actions with words takes place. This prepares the mind to go to the next stage of merging breath with words in Pranayamam. Then we become fit for merging action of counting with hands, words and breath in gayatri Japam. The Gayatri mantra is split into five parts so that we may not fall asleep by repeated actions of the same kind. The five parts vary in length and demand our attention.

“மத்யான்ன ப்ராசனத்திலே ஜலம் பூமியைச் சுத்தமாக்கறது. பூமி என்னைச் சுத்தமாக்கறது. எனக்கு மந்திரம் சொல்லிக் குடுத்த குருவை சுத்தமாக்கி என்னையும் சுத்தப்படுத்தறது. நான் ஏதாவது சாப்பிடக்கூடாததையோ எச்சிலையோ தெரியாம சாப்பிட்டிருந்தாலும் தப்பா நடந்திருந்தாலும் அஸத்துக்கள் கிட்டே தானம் வாங்கியிருந்தாலும் எல்லாத்தையும் புனிதப்படுத்தணும்னு வேண்டிக்கறோம்.

“அடுத்தது அர்க்யம். இது பழங்காலத்து வரவேற்பு முறை. இப்போ நாம் கை கூப்பி வரவேற்கிறோம், அல்லது கை குலுக்கி வரவேற்கிறோம். சில பேர் கட்டித் தழுவி வரவேற்கறா. முன் காலத்திலே கையிலே ஜலம் குடுத்தா அது அர்க்யம் ங்கிற மரியாதை. கால்லே ஜலம் விட்டா அது பாத்யம் ங்கிற மரியாதை. இப்போ நாம் சூரிய பகவானுக்கு மரியாதைக்காக அர்க்யம் குடுக்கறோம். இதிலேயும் நாம முழிச்சுண்டு இருக்கணும்கிறதுக்காக ஒரு முடிச்சு இருக்கு. காலம்பற 3, மத்யான்னம் 2, சாயங்காலம் 3ன்னு வெச்சிருக்கா.

“அதுக்கு அப்புறம் தேவ நவக்ரஹ தர்ப்பணம். இது வரைக்கும் எல்லாத்திலும் ஒவ்வொரு சொல்லுக்கு ஒரு செயல், ஒவ்வொரு செயலுக்கு ஒரு சொல்னு இணைக்கக் கத்துண்டோம். மந்திரம் இல்லாத தந்திரம் இல்லை. தந்திரம் இல்லாத மந்திரம் இல்லை. அதை அதை அதற்குரியதோட இணைக்கறதை மறக்காம, அவசரப்படாம செய்யணும்.

“இது வரைக்கும் ஒழுங்காச் செஞ்சாத் தான் அடுத்த ஸ்டேஜான மூச்சையும் சொல்லையும் இணைக்கற ப்ராணாயாமம் சரியா வரும்.

“காயத்ரி ஜபம்னு வரச்சே மூச்சு, சொல் இத்தோட கூட கை விரலாலே எண்ணற வேலையும் சேர்ந்துக்கும். இப்படி படிப்படியா யோகத்தை வளர்க்கறது தான் ஸந்தியா வந்தனம்.

“காயத்ரி பண்ணும் போது அஞ்சு பாகமாப் பிரிச்சு பண்ணணும்னு சொல்லியிருக்கறது எதுக்காகத் தெரியுமா? முன்னே சொன்னா மாதிரி மெக்கானிக்கலாப் போகப்படாது. மனசு முழிச்சிண்டு இருக்கணும்கிறதுக்குத் தான்.”

“சரி தாத்தா. புரிஞ்சுண்டுட்டேன். இன்னிக்கே ஸந்தியாவந்தனம் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.”

“க்ஷேமமா இருப்பே. போய்ட்டு வா.”
 
Dear RV,

I just posted an Avani Avittam manual link that also contains step by step instruction (with pictures/postures) on how to do Sandyavandanam. Hope it helps!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top