Mantra to chant while climbing Tirupati Hill

praveen

Life is a dream
Staff member
திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல பெருமாளுக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி மலையேறினால் நம் வேண்டுதல்கள் நிச்சயமாக நிறைவேறும்.

ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ
தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம
க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ
த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே

பொருள் :

பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வேங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான ஹே மலையே! தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே! அதனால் ஏற்படும் எனது பாபத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீ வெங்கடேசனை தாங்கள் எனக்கு தரிசனம் செய்து வைத்து அருள வேண்டும்.
 
Back
Top