• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Maha ganapathy and navagraha homam details.

33 கலச ஸ்தாபனம்;

நடுவில் ம்ருத்யஞ்சயர் தெற்கே ப்ருஹ்மா; ம்ருத்யஞ்சயர்க்கு மேற்கே விஷ்ணு; ம்ருத்யஞ்சயர்க்கு வடக்கே ருத்ரன்;; ருத்ரனுக்கு வடகிழக்கு மார்கண்டேயர்.;எட்டு திக்குகளுக்கும் எட்டு திக் பாலகர்கள்;;

ம்ருத்யஞ்சயர், ப்ருஹ்ம, ருத்ரணுக்கு மேலே ஸம்வத்ஸர தேவதை, நக்ஷத்ர தேவதை, ஆயுர் தேவதை; இம்மூண்றிர்க்கும் மேலே நவகிரஹங்களுக்கு ஒன்பது கலசங்கள்;;ப்ருஹ்மாவிற்கு தெற்கேயும் விஷ்ணுவிற்கு மேற்கேயும் ஏழு
சிரஞ்சீவி கலசங்கள் அமைக்கவும்.

60 கலச ஸ்தாபனம்.

நடுவில் ம்ருத்யஞ்சயர்; தெற்கே ப்ருஹ்மா; ம்ருத்யஞ்சயருக்கு வடக்கே ருத்ரர்;ம்ருத்யஞ்சயருக்கு மேற்கே விஷ்ணு; ருத்ரனுக்கு வடக்கே மார்கண்டேயர்; எட்டு திக்குகளிலும் எட்டு திக் பாலகர்கள்; ம்ருத்யுஞ்சய,ர்;, ப்ருஹ்மா ருத்ரருக்கு ; கிழக்கே ஒன்பது நவகிரஹங்கள்; ப்ருஹ்மாவிற்கு தெற்கேயும் விஷ்ணுவிற்கும் மேற்கேயும் ஏழு சிரஞ்சீவி கலசங்கள், ;ப்ருஹ்மாவிற்கு தென் கிழக்கே ஆயுர் தேவதை,

மார்கண்டேயருக்கும் வடக்கு திக் பாலகருக்கு மத்தியில் கிழக்கிலிருந்து மேற்காக பதிநான்கு நக்ஷத்திர கலசங்களையும், தெற்கு திக் பாலகருக்கும் சிரஞ்சீவி கலசங்களுக்கும் நடுவில் பதிநான்கு நக்ஷத்திர கலசங்களயும் வைக்கவும்.

125 கலசங்கள் வைத்து வழிபட 60 வர்ஷங்களுக்கு 60 கலசங்களும்; ஸப்த ரிஷிகளுக்கு ஏழு கலசங்களும் மேற்கண்ட 60 கலங்களுடன் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

சைவாகமோக்த உக்ர ரத சாந்திக்கு 279 கலசங்கள் வைத்து வழிபடுவோரும் உண்டு. உத்ராயனம், தக்ஷினாயனம் 2; ருது-6; மாதங்கள் 12; ராசிகள் 12; யோகம் 27; கரணம் 11; கிழமை 7; வசுக்கள் 9; ருத்ரர் 11;திதிகள் 16.

துவாதச ஆதித்யர் 12; மருத் கணம் 7; நவ துர்கா 9; கணபதி;; க்ஷேத்ர பாலர்; வாஸ்து; பஞ்ச ப்ருஹ்மம்;5 வருணன்4; ஆகாசம்; பூமி;; அபயங்கரர்; மஹி தேவதா; சஹ சித்ரம்; ம்ருத்யஞ்சயருக்கு அதி தேவதை; ப்ரதி அதிதேவதை மேற்கண்ட 125 கலசங்களுடன் சேரும்.
 
லிங்க புராணம் புத்தகத்தில் 334 ம் பக்கத்தில் அபிஷேக வரிசை கொடுக்க பட்டுள்ளது.

1. வாசனை கலந்த எண்ணைய்.2. பஞ்ச கவ்யம். 3. பஞ்சாம்ருதம். 4. பசும்பால். 5. பசும் தயிர். 6. பசும் நெய். 7.தேன். 8. கருப்பஞ்சாறு. ( வெல்ல தூள்) 9. பழ ரஸங்கள். 10. இளநீர். 11. சந்தனம் . 12. பஞ்ச கலசத்தால் நன்னீர் அபிஷேகம்.

ஒவ்வொருவகை அபிஷேகம் முடிந்ததும் பகவானுக்கு தீப ஆராதனை காட்டுவதும் அதன் பின்னர் சுத்த நீரால் அபிஷேகம் செய்வதும் அவசியம்.
 
மஹா ம்ருத்யஞ்ச ஹோமம்.

செளனகர் கூறுகிறார்.:--தீவிர வ்யாதியினாலும் , மற்றவர்களால் செய்யப்பட்ட ஆபிசார ப்ரயோகத்தினாலும்,நவகிரஹ நிலையினாலும் ஏற்படும் ச்ரமங்களுக்கும், பெரிய ஆபத்துக்களால் அவதியுரும் போதும்


மரண பயம் சூழும் போதும் மிகப்பெரிய நோய்கள் அச்சுறுத்தும் போதும்,
ஜாதகப்படி கிரஹ கோளாறுகளால் உபாதைகள் ஏற்படும்போதும்,வயிற்றுப்
போக்கு, அம்மை போட்டுதல், ஏற்படும் போதும் , கர்ப்ப காலத்தில்

வியாதிகள் ஏற்பட்டு அல்லல் படும் போதும், மே\ற்கூறியவற்றால் பணவிரயம் ஏற்படும்போதும் கெட்ட தசா புக்திகளால் கெடுதல்கள் ஏற்படும்
போதும் வீட்டிலும், நாட்டிலும் சுபிக்ஷம் குறைவு படும்போதும்,

கொடுமையான தரித்ர நிலையிலிருந்து விடிவு காலம் பிறக்கவும், சாஸ்வதமான ருத்ர லோக ப்ராப்தி கிடைப்பதற்கும்,,தனக்கு வந்துற்ற மற்ற
தோஷங்களிலிருந்து நிவாரணம் பெறவும், அமங்களமான அச்சம் ஏற்படும் போதும், (போதாயனரும் கூறுகிறார்.)

ம்ருத்யுஞ்சயருக்கு ப்ரீதிகரமான ,எல்லாவிதமான ம்ருத்யு பயத்தையும் அகற்ற வல்லதான இந்த சாந்தியை தனது சக்திக்கேற்றவாறு செய்தால் பலன் ஸித்தியாவது நிச்சயம்.

வருஷ ஜன்ம நக்ஷத்திர நாளிலும், மாதா மாதம் வரும் ஜன்ம நக்ஷத்திர நாட்களிலும் , ஸூர்ய// சந்திர கிரஹண நாட்களிலும்,மஹா ம்ருத்யுஞ்சய
ஹோமம் செய்யலாம்

ஸப்த திரவ்ய பக்ஷ மஹா ம்ருத்யஞ்சய ஹோம பத்ததி.

சீந்தில் கொடி, ஆலம்மொக்கு, ஹவிஸ், கறுப்பு எள், அறுகம் புல்,
பால், பசு நெய், பாயஸம். பாலை த்ரிமதுரம் ஆக்க வேன்டும் எள்ளுடன் நெல் அல்லது அரிசி 1:4 என்ற விதிப்படி கலக்க வேண்டும்.

கறுப்பு எள்ளை தனியாக அக்னியில் ஆஹூதி கொடுப்பதில்லை.. நெல்
நாலு பங்கும் கறுப்பு எள் ஒரு பங்கும்ஆக கலந்து திலம்-வ்ரீஹியாக
ஆஹூதிகள் அளிக்கப்படுகினறன.

ப்ரபஞ்ச ஸார ஸார ஸங்கிரஹம் என்ற நூலும் இம்மாதிரியே கூறுகிரது.

இல்லத்தின் ஈசான பாகத்தில் பசுஞ்சாணியால் மெழுகி கோலம் போடவும்.
வேதிகை நிர்மாணிக்கவும். காலையில் ஸ்நானம் செய்து, மடிசார், //பஞ்சகச்சம் கட்டிக்கொள்ளவும். நெற்றிக்கு இட்டுக்கொள்ளவும். ஸந்தியாவந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாசனம் செய்து முடிக்கவும்.

பூஜை அறையிலுள்ள ஸ்வாமியிடமும், வீட்டிலுள்ள பெரியோர்களிடமும் , குழுமியுள்ள வேதியர்களிடமும் அனுக்ஞை பெற்றுக்கொள்ளவும் ..விக்நேஸ்வர பூஜை செய்யவும். ஸங்கல்பம் : கோத்ரம்---------;

----------நக்ஷத்ரே ராஸெள------ஜாதஸ்ய ------------சர்மண: மம----------------நிவ்ருத்யர்த்தம் --------------ஸித்யர்த்தம்
களூச்யாதி ஸப்த திரவ்யை: ஆசார்ய முகேன ருத்விக் முகேன ச

செளனகோக்த ப்ரகாரேண ஸஹ போதாயநோக்த ப்ரகாரேண மஹா ம்ருத்யஞ்ச ஹோமம் கரிஷ்யே.

விக்நேஸ்வரர் யதாஸ்தானம். கிரஹ ப்ரீதி தானம். ஹிரண்ய ரூப நாந்தி சிராத்தம், புண்யாஹ வசனம். ஆசார்ய வரணம். ருத்விக்குகள் வரணம். குறந்த பக்ஷம் ஆறு பேர். . ஆசாரியர் ஒருவர். மொத்தமேழு பேர்.

ஆசாரியர் ஸங்கல்பம். ஸ்வ ஸூத்ரப்படி அக்னி கார்யம் செய்வதாக..
ப்ரணீதா வரை அக்னி குண்ட கார்யங்கள். ; 336 அருகம்புல் ஸமித்தும்.

336 சீந்தில் கொடி ஆறு அங்குல நீளத்தில். ;; 336 ஆல மர மொட்டுகள்
அதற்கேற்றவாறு மற்ற ஹோம திரவ்யங்களும் சேகரித்து வைத்துகொண்டு
புனித படுத்திக்கொள்ளவும்.

ஒரே நாளில் ஏழு திரவ்யங்களால் ஹோமம் செய்யும் போது ஹோம திரவ்யங்களை அதற்கேற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். நீக்க வேண்டிய உடல் உபாதிக்கு தகுந்தவாறு ஹோம திரவ்யம் மாற்றிக்கொண்டு அவற்றை எடுத்து வைத்து கொள்ளவும்.

அக்னி குண்டத்திற்கு கிழக்கே கும்ப ஸ்தாபனம். அலங்கரணம். ம்ருத்யஞ்சர் ப்ரதிமை வைத்து பூஜித்தல். கும்ப ஜலத்தில் வருணன் ஆவாஹனம்.

ப்ரதிமையில் அம்ருத ம்ருத்யஞ்சயர் ஆவாஹனம். ; த்ரயம்பஹம் யஜாமஹே ---------சுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருகமிவ பந்த்னான் ம்ருத்யோர் முக்ஷீய மா அம்ருதாத்.

அல்லது ஆ த்வா வஹந்து ஹரயஸ்ஸ சேதஸ: ஸ்வேதை: ரஸ்வைஸஹ கேதுமத்பிஹி. வாதாஜிதைர் பலவத்பிர் மனோஜவை: ராயாஹி சீக்ரம் மம ஹவ்யாய சர்வோம்.என்ற மந்திரம்.

ஆவாஹனம் செய்த மந்திரத்தாலேயே கடைசியில் உத்வாஸனம் செய்யவும்.
கும்பத்திற்கு ஷோடச உபசார பூஜை; ப்ரதிமைக்கு ஷோடச உபசார பூஜைகள்.
ப்ராண ப்ரதிஷ்டை, முத்திரை காண்பித்தல். , ஆஸனாதி பூஜைகள்.

ஆசாரியன் கும்பத்தை தர்பையால் தொட்ட வண்ணம் இருந்து மற்ற ருத்விக்குகளோடு ஜபம் செய்தல். ஜப மந்திரங்கள்__:- நான்கு வேதங்கள்,
108 ஆவ்ருத்தி த்ரயம்பகம் யஜாமஹே; ஶ்ரீ ருத்ரம், சமகம்.

புருஷ ஸூக்தம் 3 அனுவாஹம்; ரக்ஷோக்ன அநுவாஹம். ஹிரண்ய வர்ணா சுசய பாவாகா:; பவமான: ஸுவர்ஜன: ப்ருஹ்ம ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம்,ருத்ர ஸூக்தம், வருண ஸுக்தம். ம்ருத்யு ஸூக்தம், ஶ்ரீ ஸூக்தம்.

பூ ஸூக்தம், துர்கா ஸூக்தம். க்ருத ஸூக்தம், முஞ்சாமித்வா அத்யாயம்.
ததித்பதம் மூன்று முறை ; ஸத்யோஜாதாதி 5 மந்திரங்கள்; பஞ்ச சாந்தி.
கோஷ சாந்தி; பரிதாநீயம்.

ப்ருஹ்ம வரணம்; அக்னி கார்யம்—ஹவிஸ் (சரு) தயாரித்து கொள்ளவும்.
ம்ருத்யவே த்வா ஜுஷ்டம் நிர்வபாமி.என்ற மந்திரத்தால் மூன்று முறை சருவை அக்னியில் காட்டவும்.

மந்திரமில்லாமல் நான்காவது முறை.. ம்ருத்யவே த்வா ஜுஷ்டம் ப்ரோக்ஷ்யாமி. என்ற மந்திரத்தால் மூன்று முறை ப்ரோக்ஷணம். மந்திரமில்லாமல் ஒரு தடவை ப்ரோக்ஷணம்.

ம்ருத்யவே த்வா ஜுஷ்டம் ச்ரபயாமி. என்ற மந்திரத்தால் மீன்டும் மூன்று தடவை அக்னியில் காட்டவும்.மந்திரமில்லாமல் நான்காவது முறை..

ஸ்ருவத்தினால் நெய் எடுத்துக்கொண்டு ம்ருத்யவே த்வா ஜுஷ்டம் அபிகாரயாமி என்ற மந்திரத்தை சொல்லி சருவில் சிறிது நெய் விடவும். ஸ்ருவத்தில் மீதமுள்ள நெய்யை அக்னியில் விடவும்.

மீன்டும் கீழே வைக்கப்பட்டுள்ள சருவில் நெய் விடவும்.

ஆஜ்ய ஸம்ஸ்காரத்தை பூர்த்தி செய்யவும்.சருவையும் சேர்த்துக்கொண்டு ஆஜ்ய ஸம்ஸ்காரம். (த்ரி:பர்யக்னிகரணம் ) செய்ய வேண்டும்.

அக்னி முகாந்தம் பூர்த்தி செய்தல்.

அக்னி முகத்தின் நிரைவாக பக்வ ஹோமம் செய்யவும். (யாஜ்யா புரோநுயாஜ்யா ஹோமம் செய்ய வேண்டும்.

அம்ருத ம்ருத்யஞ்சயரை அக்னியில் ஆவாஹனம் செய்ய வேண்டும்.

அக்னீயில் ம்ருத்யஞ்சயரை பூஜை செய்தல்.
த்ரயம்பகம் மந்திரம் சொல்லி (யாஜ்யா புரோநுவாக்யத்துடன்) ஒரு ஆஜ்ய ஆஹூதி.

பரிதிக்குள் ஸ்விஷ்டக்ருதம் எடுத்து வைத்தல்.
ம்ருத்யஞ்சய மந்திரங்களால் ஆஹூதிகள்.
அந்ந ஆஹூதிகள்.:- அபைது ம்ருத்யு+சீபதோம். பரம் ம்ருத்யோ+ சீராந் ஸ்வாஹா .ம்ருத்யவே இதம் ந ம்ம. புநரவதாய (திரும்பவும் முன் சொன்னப்படி சருவை எடுத்துக்கொண்டு அடுத்த ஹோமம்.)

ஹரிகும் ஹரந்த: + க்ரமஸ்வோம். மாசிதோ ம்ருத்யோ + விதேம ஸ்வாஹா. ம்ருத்யவே இதம் ந மம.

ஆஜ்ய ஆஹூதிகள்;- பின் வருமாறு பஞ்ச மஹா வ்யாஹ்ருதிகளை கூறி நெய்யினால் ஐந்து ஹோமங்கள்.

பூரக்னயே ச ப்ருதிவ்யை ச மஹதே ச ஸ்வாஹா. அக்னயே ப்ருதிவ்யை மஹத இதம் ந மம.

புவோ வாயவே ச அந்தரிக்ஷாய ச மஹதே ச ஸ்வாஹா. வாயவே அந்தரிக்ஷாய மஹத இதம் ந மம.

ஸுவராதித்யாய ச திவே ச மஹதே ச ஸ்வாஹா. மஹதே ச ஸ்வாஹா.ஆதித்யாய திவே மஹத இதம் ந மம.

பூர்புவஸ்ஸுவஸ் சந்த்ரமஸே ச நக்ஷத்திரேப்யஸ்ச திக்ப்யச்ச மஹதே ச ஸ்வாஹா. சந்த்ரமஸே நக்ஷத்ரேப்யோ திக்ப்யோ மஹத இதம் ந மம.

ஓம் பூர்புவஸ் ஸுவஸ் ஸ்வாஹா. ப்ரஜாபதயே இதம் ந மம.

சிறப்பு த்ரவ்ய ஹோமம். ஒவ்வொரு மந்திரத்தாலும் 16 ஆஹூதிகள்.
சிறப்பான ஏழு திரவ்யங்கள்.. 1. சீந்தில் கொடி ஸமித்து (களூசி)2. ஆலமொக்கு
3.எள்;4. பால்;5. பாயசம். 6. அறுகம்பில். 7. நெய்.

ஒரு சீந்தில்கொடி சமித்தையும் மும்மூன்று அறுகம்பில்லையும் பாலில் நனைத்து ஹோமம் செய்ய வேண்டும்.

ஆசாரியன் ,ருத்விக்குகளோடு இணைந்து , ஒவ்வொருவரும் ஒவ்வொரு த்ரவ்யத்தை , பின் வரும் 21 மந்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் ஹோமம் செய்தல்.

ஒவ்வொரு முறையும் உத்தேச த்யாகத்தோடு மந்திரங்களை சொல்ல வேண்டும்.ஒவ்வொரு மந்திரத்தின் நிறைவாகவும் ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்தத்தாம் என்ற மந்திரத்தை அனுஷங்கமாக சேர்த்து கொள்ள வேண்டும்.

1.அபைது ம்ருத்யு ரம்ருதந்ந ஆகந் வைவஸ்வதோ நோ அபயங்க்ருநோது. பர்ணவ்வநஸ்பதே –ரிவாபி: நச்சீயதா கும்ரயிஸ் ஸசதான் நச்சசீபதி .:ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்த்ததாகும் ஸ்வாஹா ம்ருத்யுவ இதம் ந மம.

2. பரம் ம்ருத்யோ அநுபரேஹி பந்தாயகும் யஸ்தே ஸ்வ இதரோ தேவயாநாத். சக்‌ஷுஷூஸ்மதே ச்ருண்வதே தே ப்ரவீமி மா ந: ப்ரஜாகும் ரீரிஷோ மோத வீராந். ம்ருத்யோர் நச்யது ஆயுர்வர்த்ததாகும் ஸ்வாஹா. ப்ருஹஸ்பதயே அச்விப்யாம் அக்னயே ச இதம் ந மம..

3. வாதம் ப்ராணம் மநஸாந்வார பாமஹே ப்ரஜாபதியோ புவனஸ்ய கோபா: ஸ நோ ம்ருத்யோஸ் த்ராயதாம் பாத்வகும்ஹஸோ ஜ்யோக்ஜீவா ஜரா மசிமஹி. ம்ருத்யுர் நச்யது. ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. ப்ருஹஸ்பதயே அச்விப்யாம் அக்னயே ச இதம் ந மம.

4. அமுத்ரபூயா தத யத்யமஸ்ய ப்ருஹஸ்பதே அபிசஸ்தேரமுஞ்ச; ப்ரத்யெளஹதா –மச்விநா ம்ருத்யு-மஸ்மாத் தேவாநாமக்னே பிஷஜா சசீபி: : ம்ருத்யுர் நச்யது. ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா.
ப்ருஹஸ்பதயே அச்விப்யாம் அக்னயே ச இதம் ந மம.

5.ஹரிகும் ஹரந்த –மநுயந்தி தேவா விச்வஸ் யேசாநவகும் வ்ருஷபம் மதீனாம், ப்ருஹ்ம சரூப மநு . மேத மாக தயனம் மாவி வதிர் விக்ரமஸ்வ ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்த்ததாகும் ஸ்வாஹா ப்ரஹ்மண இதம் ந மம
 
6. சல்கைரக்னி ரக்னி மிந்தான உபெள லோகெள ஸநேமஹம். உப்யோர் லோகயோர் ருத்த்வா அதிம்ருத்யுன் தராம்யஹம் ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. ம்ருத்யுவ இதம் ந மம..

7. மாசிதோ ம்ருத்யோ மாவதிர்மா மே பலவகும் விவ்ருஹோ மா ப்ரமோஷீஹி. ப்ரஜாம் மா மே ரீரிஷ ஆயுருக்ரந் ருசக்‌ஷஸ்ந்த்வா ஹவிஷா விதேம ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா ம்ருத்யுவ இதம் ந மம.

8 .மா நோ மஹாந்த முத மாநோ அர்பகம் மா ந உக்‌ஷந்த –முத மாந உக்‌ஷிதம். . மாநோ வதி: பிதரம் மோத மாதரம் ப்ரியா மாநஸ் தநுவோ ருத்ர ரீரிஷ: ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. ருத்ராய இதம் ந மம.

9. மா நஸ் தோகே தநயே மா ந ஆயுஷி மாநோ கோஷு மானோ அஷ்வேஷூ ரீரிஷ:. வீராந் மாநோ ருத்ர பாமிதோ வதிர் ஹவிஷ்மந்தோ நமஸா விதேமதே. ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. ருத்ராய இதம் ந மம.

10. ப்ரஜாபதே நத்வ தேதாந் உஅன்யோ விஸ்வா ஜாதானி பரிதாப்பூவா. யத் காமாஸ்தே ஜுமஸ்தன்னோ அஸ்து வயகும் ஸ்யாம பதயோ ரயீணாம். ம்ருத்யுர் நஸ்யது. ஆயுர்வர்த்தாகும் ஸ்வாஹா. ப்ரஜாபதயே ந மம..

11. யத இந்த்ர பயாமஹே த்தோ நோ அபயங்க்ருதி. மகவஞ்சக்தி தவ தந்ந ஊதயே வித்விஷோ விம்ருதோ ஜஹி. ம்ருத்யுர் நச்யது. ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. இந்த்ராய பகவத இதம் ந மம.

12. ஸ்வஸ்திதா விசஸ்பதிர் வ்ருத்ரஹா விம்ருதோ வசீ. வ்ருஷேந்த்ர; புர ஏது நஸ் –ஸ்வஸ்திதா அபயங்கர: ம்ருத்யுர் நச்யது. ஆயுர் வர்த்தாகும் ஸ்வாஹா. இந்த்ராய அபயங்கராய இதம் ந மம..

13. த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம், உர்வாருகமிவ பந்தநாந் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்.ம்ருத்யுர் நச்யது. ஆயுர் வர்த்தாம் ஸ்வாஹா,
த்ரயம்பகாய இதம் ந மம.

14.அபம்ருத்யுமபக்‌ஷுதம் அபேதஸ்ஸ பதஞ்ஜஹி . அதாநோ அக்ன ஆவஹ.
ராயஸ்போஷாகும் ஸஹஸ்ரிணகும் ஸ்வாஹா. ம்ருத்யுர் நச்யது. ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. அக்னய இதம் ந மம..

15. யே தே ஸஹஸ்ர மயுதம் பாசா ம்ருத்யோ மர்த்யாய ஹந்தவே. தான் யஜ்ஞஸ்ய மாயயா சர்வாநவயஜாமஹே. ம்ருத்யூர் நச்யது. ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. ம்ருத்யவ இதம் ந மம.

16. ஜாதவேதஸே ஸுநவாம ஸோம மராதீயதோ நிதஹாதி வேத: ஸ ந பர்ஷத்தி துர்காணி விச்வா நாவேவ ஸிந்துந் துரிதாத்யக்னி; ம்ருத்யுர் நச்யது. ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. அக்னயே ஜாதவேதஸே இதம் ந மம.

17. பூர்புவஸ்ஸுவ: ஓஜோ பலம். ப்ருஹ்மக்ஷத்ரம் யசோமஹத்.ஸத்யந்தபோநாம ரூப மம்ருதம். சக்‌ஷுஸ்ஸ்ரோத்ரம் . மந ஆயு: விச்வய்யசோ மஹ. ஸமந்தபோ ஹரோபாஹா. . ஜாதவேதா யதி வா பாவக்கோஅஸி. . வைஸ்வாநரோ யதி வா வைத்யுதோஅஸி. சம் ப்ரஜாப்யோ யஜமாநாய லோகம். ஊர்ஜம் புஷ்டிந்தததப்யாவ வ்ருத்ஸ்வஸ் ஸ்வாஹா.
ஜாதவேதஸே வைஸ்வாநராய இதம் ந மம.

18. ம்ருத்யுர் நஸ்யது. ஆயுர் வர்ததாம் பூ; ம்ருத்யுர் நஸ்யது, ஆயுர் வர்ததாம் ஸ்வாஹா. அக்நய இதம் ந மம.

19. ம்ருத்யுர் நஸ்யது, ஆயுர் வர்ததாம் புவ: ம்ருத்யுர் நஸ்யது. ஆயுர் வர்ததாம் ஸ்வாஹா. வாயவ இதம் ந மம.

20. ம்ருத்யுர் நஸ்யது. ஆயுர் வர்ததாம் ஸுவ: ம்ருத்யுர் நஸ்யது. ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. ஸூர்யாய இதம் ந மம.

21. ம்ருத்யுர் நஸ்யது, ஆயுர் வர்ததாம். பூர்புவஸ்ஸுவஹ ம்ருத்யுர் நஸ்யது. ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. ப்ரஜாபதயே இதம் ந மம.

இவ்வாறு 21 மந்த்ரங்களையும் கொண்டு 16 ஆவ்ருத்திகள் ஹோமம் செய்ய வேன்டும்.21x16 =336 ஆஹூதிகள்..

பிறகு ஆசாரியன் , ம்ருத்யவே ஸ்வாஹா என்ற மந்திரத்தால் எட்டு முறை ஆஜ்ய ஆஹூதி அளிக்க வேண்டும். . ஆஹூதிகளை பிறித்தும் சேர்த்தும் (மொத்தம் 4 ஆஹூதிகள்).( பூ; புவ;. ஸுவ:. பூர்புவஸ்ஸுவ ) பிறகு

ஸ்விஷ்டக்ருதமாக வைக்கப்பட்டுள்ள சருவை எடுத்துக்கொண்டு , ஹவய வாஹம், --ஸ்விஷ்டக்ருதம் --- ஆகிய இரன்டு (யாஜ்யா புரோநுயாஜ்யா)
மந்திரங்களால் ஸ்விஷ்டக்ருத் ஹோமம் செய்ய வேண்டும். அக்னயே ஸ்விஷ்ட க்ருத இதம் ந மம

ஜயாதி ஹோமம் செய்யவும். பரிசேஷனம் வரை செய்யவும். பின்னர் ப்ரஸாதமாக உட்கொள்ள கொஞ்சம் அன்னம் எடுத்து வைத்து கொண்டு

மீதமுள்ள அன்னத்தை பலியாக , அக்னிக்கு வெளியே ஈசானத்தில் பரப்பி வைக்கப்பட்டுள்ள அருகம் பில் மீது கீழ் கண்ட இரு மந்திரங்களையும் சொல்லி இடவும்..

ஸர்வோ வை ருத்ரஸ் தஸ்மை ருத்ராய நமோ அஸ்து.. புருஷோ வை ருத்ரஸ்ஸந்மஹோ நமோ நம: விச்வம் பூதம் புவநம் சித்ரம் பஹுதா ஜாதம் ஜாயமாநம் ச யத்.. ஸர்வோ ஹ்யேஷ ருத்ரஸ்தஸ்மை ருத்ராய நமோ அஸ்து..

கத்ருத்ராய ப்ரசேதஸே மீடுஷ்டமாய தவ்யஸே. வோசேம சந்தமகும் ஹ்ருதே. ஸர்வோஹ்யேஷ ருத்ரஸ் தஸ்மை ருத்ராய நமோ அஸ்து..

பிறகு ப்ரணீதா ப்ரோக்ஷனம். ; ப்ருஹ்ம உத்வாஸனம்.

அக்னியிலிருந்து ஸ்வாமியை கலசத்துக்கு ஸம்யோஜனம்.

பிறகு ஆயுர்தா அக்னே ஹவிஷோ ஜுஷாணோ க்ருதப்ரதீகோ க்ருதயோநிரேதி. க்ருதம் பீத்வா மது சாருகவ்யம் பிதேவ புத்ரமபி ரக்ஷதாதிமம். என்ற மந்திரத்தால் அக்னிக்கு ஸமித்து இட்டு

ஜாதவேதா யதி வா பாவகோஅஸி . வைஸ்வாநரோ மதி வா வைஹ்யுதோஅசி. சம்ப்ரஜாப்யோ யஜமாநாய லோகம். ஊர்ஜம் புஷ்டிம் ததத
ப்யாவ-வ்ருத்ஸ்வ. என்ற மந்திரத்தால் அக்னியை னுபஸ்தானம் செய்யவும்.

பிரகு ப்ரஸாதமாக உட்கொள்ள எடுத்து.வைத்துள்ள மீதமுள்ள சருவில், மீதமுள்ள ஆஜ்யத்தை விட்டு , அதை தொட்டவாறு ஜபம் செய்யவும்.

ஜபம்:--ஆக்னிராயுஷ்மாந்த்ஸ- வநஸ்பதி பிராயுஷ்மான் தேந்த்வா ஆயுஷஆயுஷ்மந்தம் கரொமி.. ஸோம ஆயுஷ்ந்த்ஸ ஓஷதிபி-ராயுஷ்மான்

தேந் த்வா ஆயுஷஆயுஷ்மந்தம் கரொமி.. யஜ்ஞ் ஆயுஷ்மாந்த்ஸ தக்ஷிணாபி
ராயுஷ்மான் தேன த்வா ஆயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி.

ப்ரமாயுஷ்மத் த்த்ப்ராஹ்மணை-ராயுஷ்மத் தேன த்வா ஆயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி.தேவா ஆயுஷ்மந்தஸ்தேஅம்ருதேனா ஆயுஷ்மந்தஸ்தேன த்வா ஆயுஷாஸாயுஷ்மந்தம் கரோமி. என்ற ஐந்து மந்திரங்களை முதலிலும் முன் கூறிய 21 மந்திரங்களை அடுத்த்தாகவும் இம்மாதிரி நான்கு முறை ஜபம் செய்யவும்.

ப்ராசனம்:--ஆயுரஸி விச்வாயுரஸி ஸர்வாயுரஸி ஸர்வமாயுரஸி சர்வம் மே
ஆயுர்பூயாத் சர்வம் ஆயுர்கோஷம். என்ற ம்ந்திரத்தை கூறி ப்ரசாத அன்னத்தை ப்ராசனம் செய்யவும். பிறகு ஆசமன்ம்.

யத இந்த்ர பயாமஹே த்தோ நோ அபயங்க்ருதி மகவ்ஞ்சக்தி தவ தன்ன ஊதயே வித்விஷோ விம்ருதோஜஹி.

ஸ்வஸ்திதா விசஸ்பதிர் –வ்ருத்ரஹா விம்ருதோ வசீ. வ்ருஷேந்த்ர: புர ஏது நச்ச்வஸ்திதா அபயங்கர: ஆகிய இரு மந்திரங்களால் நாபியை கையால் தொடவும்.. மஹாவிஷ்ணுவை த்யானித்துக் கொள்ளவும்.

கலசத்துக்கு புனர்பூஜை.; கலச தேவதைகளுக்கு யதாஸ்தானம். ன்ப்ரோக்ஷணம். அபிஷேகம்.. யஜமானருக்கு மந்திரங்கள் உச்சரித்த வண்ணம் அபிஷேகம்..

யஜமானன் சுத்த வஸ்திரம் உடுத்தி ., நெற்றிக்கு இட்டுக்கொண்டு வந்த பிறகு வெங்கலம் அல்லது பித்தளை பாத்திரத்தில் ஆஜ்ய நிரீக்ஷணம் .
தானம்..

பின்னர் இரும்பு தண்டமும் , பஞ்சும் தானம்.. தொடர்ந்து தச தானம்.. ப்ராஹ்மண போஜனம். ஆசீர்வாதம். ருத்விக் ஸம்பாவனை. ஆசார்ய ஸம்பாவனை.

அம்ருத ம்ருத்யஞ்சயர் மூல மந்திரம். ஓம் வம் ஜூம் ஸஹ.. அம்ருத ம்ருத்யஞ்சர் ப்ரதிமை அல்லது அம்ருத ம்ருத்யஞ்யர் யந்திரம் அவசியம் வைக்க வேண்டும்.அல்லது மெல்லிய தங்க//வெள்ளி/ செம்பு தகட்டில் வரைந்து வைக்கலாம்..

12 ப்ராஹ்மணர் போஜனம் ப்ராயஸ்சித்த கர்மாவாக சொல்லப்பட்டுள்ளது.
பத்தாயிரம் முறை காயத்திரி ஜபம் செய்தலும் ப்ராயஸ்சித்தமாக சொல்லப்பட்டுள்ளது.

கடலில் கலக்கும் நதியில் ஸ்நானம் செய்ய வேன்டும், எனவும் சொல்லப்பட்டுள்ளது.

படி தாண்டிய அன்னம் பூஜனத்துக்கு உதவாது. .உணவு ஒப்பந்த காரரோடு பேசி உணவு வெளியில் இருந்து கொண்டு வந்து ,நிவேதனமோ ப்ராஹ்மண போஜனமோ செய்வதால் ப்ரயோஜனமில்லை.

வீட்டிலேயே அல்லது ஹோமம் செய்யும் இடத்தில் சமையல் காரர் சமையல் செய்து ப்ராஹ்மண போஜனம் செய்விக்க வேண்டும்.

சாந்தி குஸுமாகரம் பூர்வ பாகம். அத்தியாயம்-59.
 
Whatever homam you plan to perform it is better to do ganapathi homam first...so that all the obstacles will be removed...it is mandatory to do ganapathi homam before doing anyother homam for better results....
 
If learned members of this forum could give the significance of chanting Mantra Pushpam at the end of pooja,it would be highly informative.The mantras in this section only praise the water and then why it is chanted at the end of pooja ritual ?
 
HI this is dr karthick. sir please tell me the difference between ganapathy homam and raja ganapathy homam or both are same one in procedures? one of our relative has been advised to do DEVI MAHATMIYAM parayanam by pundits in her home.is DEVI MAHATMIYAM is just recital of goddess durga from markandeya purana or should be done along with yagna? when it should be done ?please tell anybody know pundits who are perfect in it so that we can get his help in krishnagiri district.
 
I had once performed Shri Raja Ganapathy Homam in our house. The details collected by me at that time is as follows:

Shri Raja Ganapathy fulfills the desires of devotees to live a healthy, wealthy, happy and prosperous life. Shri Raja Ganapathy homam is a suitable for eliminating hurdles in marriage life, if any. It also provides procedures or ways for curing prolonged illness to a broader extent. This homam makes feasible ways for ensuring material prosperity by reducing unnecessary bottlenecks. Besides, childless couples are largely benefitted by this homam to beget a child quickly.

Above all, the benefits are :
Anyone who wants to improve their knowledge and wisdom can choose this homam for reaching high levels in their career. Besides, it is possible to increase the education skills with this homam. The ill effects of planets in a horoscope can also be cleared with Shri Raja Ganapathy homam to attain peace of mind by coming out from negative effects. In addition, one would be able to recover from doshas and karma problems in a fruitful way.
 
1. Ramabadran sar - Without any disrespect to the Ghanapadigals book you have refered (have not read the book, will buy and read), the fact is there is lot of conflicting views. Let me put it this way, ideal would be to do it seperately but if that is not possible, do not see any harm in both be combined on the same day. Fyi for grah prevasam 5 homams are done on the same day.

2. Gopalan sar and balasubramaniam sar lot of details/information especialy the website which is very helpful, thank you, though would add that it is better to learn the mantras before trying to do homa by oneself. Since i have learnt the mantras , this site is extremly usefull for me.
 
sir, you can perform in the evening at your home during sankashti chathurthy. separate homam for sankasty chathurthy is there.
 
Kanakaapishekamkkகனகாபிஷேகம்

சாந்தி குசுமாகரம் பூர்வ பாகம் அத்யாயம் 99 .சைவாகம ப்ரோக்தம்
ஸீமந்த புத்ரனின், ஸீமந்த புதரனுக்கு பிறந்த ஸீமந்த புத்ரனை காண்பவருக்கு இந்த கனகாபிஷேகம் செய்ய படுகிறது. ஸீமந்த புத்ரனல்லாத இரண்டாவது புத்ரனின் பேரனை காண்பவருக்கும் இந்த கனகாபிஷேகம் இல்லை.

முதல் கர்பம் ஸீமந்ததிற்கு முன்பு கலைந்துவிட்டாலும் பிறகு பிறந்த குழந்தையின் பேரனை கண்டாலும் இந்த கனகாபிஷேகம் கிடையாது. சதாபிஷேகம் மட்டும் உண்டு.
இவ்வாறான ஒரு பாக்கியம் கிடைப்பது மிகமிக அரிது.

ஜன்ம நக்ஷத்திரம், சுப நக்ஷத்ரம், சுப தினத்தில் மனைவியும், புத்ரனும், பேரனும் ,கொள்ளு பேரனும் உடனிருக்க இதை செய்ய வேண்டும்.
கர்த்தா காலையில் எண்ணை ஸ்நானம் செய்து, சந்த்யாவந்தனம், காயத்ரி ஜபம் ஒளபாஸனம், செய்து முடித்து விட்டு, சாந்த குணமுள்ள கல்வி அறிவு மிக்க வேத அத்யயனம் நன்றாக செய்துள்ள , மந்திர தந்திரங்களில்

வல்லுநர் ஆன நல்ல பரம்பரையில் வந்த குடும்பஸ்தராக உள்ள ஒருவரை ஆசாரியராக வரித்துக்கொள்ளவும் .இம்மாதிரியே ருத்விக்குகளும் வரித்து கொள்ளவும் .மண்டபம் ஏற்பாடு செய்யவும். அதை தங்கத்தூண், ரத்ன மாலைகளால் அலங்கரிக்கவும்..

ஐந்து த்ரோண அளவிற்கு தான்யங்களை குவித்து ஸ்தண்டிலம் தயாரிக்கவும்.

நாந்தி சிராத்தம் புண்யாகவசனம் செய்யவும்.
ப்ரதான கலசத்தில் லக்ஷிமி நாராயணர், அருகிலுள்ள இரு கும்பங்களில் சூரியன் சந்திரன். ஆவாஹனம். ப்ருஹ்மா அதி தேவதை ப்ரதி அதி தேவதை குறைந்த பக்ஷம் 9 கலசங்கள் . சதாபிஷேகம் மாதிரி .,தங்க பதுமைகளை கலசம் மேல் வைத்து 16 உபசார பூஜை செய்யவும்.

. மேற்கு பக்கத்தில் ஹோம குண்டம். ப்ரதிஷ்டை அக்னி முகாந்தம்
.., செய்து ப்ரதான ஹோமம் செய்யவும்.ஆவாஹன மாகியுள்ள தேவதைகளுக்குள்ள மந்திரங்களால் 1008 ஆஹூதிகள் அளிக்கவும். விஷ்ணு

காயத்ரி சொல்லி அரசு சமித்தால் ஹோமம். நவகிரஹ ஹோமம் செய்யவும் .ஜயாதி ஹோமம் பூர்ணாஹூதி உத்தராங்கம் செய்து முடிக்கவும்..

பின்னர் இரண்டு பசுக்களை தானம் செய்யவும். பின்னர் ப்ராஹ்மணர்களை கொண்டு ருத்ரம், சமகம், ஸ்ரீ ஸூக்தம் சொல்லி ஸ்வர்ணாபிஷேகம் செய்யவும்.
பிறகு பலிகள்; புனர்பூஜை.. பிறகு கலச புனர்பூஜை. கலச தண்ணீர் அபிஷேகம். கர்த்தாவிற்கு.. . பிறகு இலுப்பை சட்டியில் நெய் விட்டு கர்த்தாவும் கர்த்தா மனைவியும் முகம் பார்த்து தானம்.

புது வஸ்த்ரம் தரித்து யஜமானன் ப்ரதிமையை நிறைய தக்ஷிணையுடன் தானம் செய்யவும். தச தானம், பூரி தானம் செய்யவும். பசு மாடு தானம் செய்யவும்.
அனைவருக்கும் பழம் தாம்பூலம் சாப்பாடு போடவும்.
சதாபிஷேகம் செய்வது போல் அனைத்தும் இதில் இருக்கிறது. ஸ்வர்ண அபிஷேகம் இதில் மட்டும் உள்ளது.

இது யஜுர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ர காரர்களுக்கு. மற்ற ருக், ஸாம, போதாயன காரர்களுக்கு .. வித்தியாசம் உள்ளது.,
 
Kanakaapishekamkkகனகாபிஷேகம்

சாந்தி குசுமாகரம் பூர்வ பாகம் அத்யாயம் 99 .சைவாகம ப்ரோக்தம்
ஸீமந்த புத்ரனின், ஸீமந்த புதரனுக்கு பிறந்த ஸீமந்த புத்ரனை காண்பவருக்கு இந்த கனகாபிஷேகம் செய்ய படுகிறது. ஸீமந்த புத்ரனல்லாத இரண்டாவது புத்ரனின் பேரனை காண்பவருக்கும் இந்த கனகாபிஷேகம் இல்லை.

முதல் கர்பம் ஸீமந்ததிற்கு முன்பு கலைந்துவிட்டாலும் பிறகு பிறந்த குழந்தையின் பேரனை கண்டாலும் இந்த கனகாபிஷேகம் கிடையாது. சதாபிஷேகம் மட்டும் உண்டு.
இவ்வாறான ஒரு பாக்கியம் கிடைப்பது மிகமிக அரிது.

ஜன்ம நக்ஷத்திரம், சுப நக்ஷத்ரம், சுப தினத்தில் மனைவியும், புத்ரனும், பேரனும் ,கொள்ளு பேரனும் உடனிருக்க இதை செய்ய வேண்டும்.
கர்த்தா காலையில் எண்ணை ஸ்நானம் செய்து, சந்த்யாவந்தனம், காயத்ரி ஜபம் ஒளபாஸனம், செய்து முடித்து விட்டு, சாந்த குணமுள்ள கல்வி அறிவு மிக்க வேத அத்யயனம் நன்றாக செய்துள்ள , மந்திர தந்திரங்களில்

வல்லுநர் ஆன நல்ல பரம்பரையில் வந்த குடும்பஸ்தராக உள்ள ஒருவரை ஆசாரியராக வரித்துக்கொள்ளவும் .இம்மாதிரியே ருத்விக்குகளும் வரித்து கொள்ளவும் .மண்டபம் ஏற்பாடு செய்யவும். அதை தங்கத்தூண், ரத்ன மாலைகளால் அலங்கரிக்கவும்..

ஐந்து த்ரோண அளவிற்கு தான்யங்களை குவித்து ஸ்தண்டிலம் தயாரிக்கவும்.

நாந்தி சிராத்தம் புண்யாகவசனம் செய்யவும்.
ப்ரதான கலசத்தில் லக்ஷிமி நாராயணர், அருகிலுள்ள இரு கும்பங்களில் சூரியன் சந்திரன். ஆவாஹனம். ப்ருஹ்மா அதி தேவதை ப்ரதி அதி தேவதை குறைந்த பக்ஷம் 9 கலசங்கள் . சதாபிஷேகம் மாதிரி .,தங்க பதுமைகளை கலசம் மேல் வைத்து 16 உபசார பூஜை செய்யவும்.

. மேற்கு பக்கத்தில் ஹோம குண்டம். ப்ரதிஷ்டை அக்னி முகாந்தம்
.., செய்து ப்ரதான ஹோமம் செய்யவும்.ஆவாஹன மாகியுள்ள தேவதைகளுக்குள்ள மந்திரங்களால் 1008 ஆஹூதிகள் அளிக்கவும். விஷ்ணு

காயத்ரி சொல்லி அரசு சமித்தால் ஹோமம். நவகிரஹ ஹோமம் செய்யவும் .ஜயாதி ஹோமம் பூர்ணாஹூதி உத்தராங்கம் செய்து முடிக்கவும்..

பின்னர் இரண்டு பசுக்களை தானம் செய்யவும். பின்னர் ப்ராஹ்மணர்களை கொண்டு ருத்ரம், சமகம், ஸ்ரீ ஸூக்தம் சொல்லி ஸ்வர்ணாபிஷேகம் செய்யவும்.
பிறகு பலிகள்; புனர்பூஜை.. பிறகு கலச புனர்பூஜை. கலச தண்ணீர் அபிஷேகம். கர்த்தாவிற்கு.. . பிறகு இலுப்பை சட்டியில் நெய் விட்டு கர்த்தாவும் கர்த்தா மனைவியும் முகம் பார்த்து தானம்.

புது வஸ்த்ரம் தரித்து யஜமானன் ப்ரதிமையை நிறைய தக்ஷிணையுடன் தானம் செய்யவும். தச தானம், பூரி தானம் செய்யவும். பசு மாடு தானம் செய்யவும்.
அனைவருக்கும் பழம் தாம்பூலம் சாப்பாடு போடவும்.
சதாபிஷேகம் செய்வது போல் அனைத்தும் இதில் இருக்கிறது. ஸ்வர்ண அபிஷேகம் இதில் மட்டும் உள்ளது.

இது யஜுர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ர காரர்களுக்கு. மற்ற ருக், ஸாம, போதாயன காரர்களுக்கு .. வித்தியாசம் உள்ளது.,
hi


gopalan sir
,,
.இவ்வாறான ஒரு பாக்கியம் கிடைப்பது மிகமிக அரிது......



உங்கள் போல இருப்பரவர்களால் தான் எல்லோருக்கும் தெரியும் அறிவு கிடைத்துள்ளது......உங்கள்

விளக்கங்கள் மிகவும் உதவும் படியாக உள்ளது ......உங்களை போன்ற சிறந்த மனிதர்களால் தான்

இந்த தமிழ் பிராமண forum மிகவும் சிறப்பாக உள்ளது.....உங்களுக்கு என்னுடைய கோடி கோடி

நமஸ்காரங்கள்......
 
உக்கிரரத சாந்தி


செளநகோக்தஉக்கிர ரத சாந்தி 59 முடிந்து60 ம் ஆண்டு பிறக்கும்தமிழ் வருட மாத நக்ஷத்திரநாளில் தந நாசம் தான்ய நாசம்புத்ர நாசம்போன்ற உப்த்ரவங்கள்விலக வேன்டியும் நம் காலமுடிவு ந்மக்கு தெரியாததனாலும்நெருங்கிய உறவினர்கள் காலமுடிவும் தெரியாது ஆதலால்உக்கிர ரத சாந்தி செய்து கொள்ள


வேண்டியிருக்கிறது கூஷ்மாண்ட ஹோமம் செய்யலாம்பஞ்ச கவ்யம் சாப்பிடலாம் 18கலசங்கள் வீட்டின்ஈசான மூலையில் ஸ்தன்டிலம்அமைத்து கோதுமை 4கிலோ2 கிலோ அரிசி 1கிலோ கருப்பு உளுந்து500கிராம் கருப்புஎள் வைக்க வேண்டும்ஸ்தண்டிலத்ஹ்டிற்குஹோம குண்டம்




ஸ்தன்டிலத்திற்கு மத்தியில் பெரிய பித்தளைகுடம் உக்ர ரத ம்ருத்யுஞ்சயருக்கு


ப்ரதிமைவெள்ளீயில் ம்ருத்யுஞ்சயருக்கு வைக்கவும் மற்ற சொம்புகள்1 லிட்டர்பிடிக்கும் அளவுக்கு பித்தளைசொம்புகள்


ப்ரதானகலசத்திற்கு தெற்கே ப்ரஜாபதிக்கு வடக்கே யமனுக்கு அஷ்ட திக்பாலகர்களுக்கு அவரவர் திக்கில்ஒரு கலசம் அல்லது ஒரே கலசம்கிழக்கில் நவகிரஹங்களுக்குவடக்கே ஒரு கலசம் 7புண்ணிய நதிகளுக்கு


தெற்கேஒரு கலசம் 7சிரஞ்சீவிகளுக்குவடக்கே ஒரு கலசம் 9துர்கைகளுக்கு தென் மேற்கே ஒரு கலசம் மஹாகனபதிக்கு மேற்கே ஒரு கலசம்அதன் பக்கத்தில் வருணனுக்கு ஒன்று அதன் பக்கத்தில்விஷ்ணுவிற்கு ஒன்று


கலசங்களுக்கு நூல் சுற்றப்பட்டு நீர்நிரப்பி வாசனை திரவ்யங்கள்போட்டு சந்தன குங்குமம் இட்டுமாலை வஸ்திரம் சாற்றி கூர்ச்சம் தேங்காய் வைத்து அலங்காரம்செய்ய வேண்டும்


கர்த்தாவும்அவரது தர்ம பத்னியும் பஞ்சகச்சம் மடிசார் கட்டி கொண்டுசபையினரிடம் பர்மிஷன் பெற்றுக்கொண்டு கணபதி பூஜை ஸங்கல்பம் செய்து கொள்ளவேண்டும்


கணபதியதா ஸ்தானம் கிரஹ ப்ரீதிக்ருச்சரம் நாந்தி சிராத்தம் வருண பூஜை புண்யாவசனம் ஆசார்யவரணம் ருத்விக் வரணம் அந்தந்தகலசங்களில் ஆவாஹனம் ப்ராணப்ரதிஷ்டை புருஷ ஸூக்தவிதானப்படி


16 உபசாரபூஜை மந்திர ஜபங்கள் ருத்திரம் சமகம் புருஷ ஸூக்தம் ஸ்ரீஸூக்தம் துர்கா ஸூக்தம் ப்ருஹ்ம ஸூக்தம் ருத்ர ஸூக்தம்விஷ்ணு ஸஹஸ்ரநாமம் நான்குவேத ஆரம்ப வரிகள் பாராயணம் சாந்தி பஞ்சக


மித்யாதிஓம் நமோ ப்ருஹ்மணே மூன்று தடவை
பிறகுஸமித்து அன்னம் நெய் ஹோமம் அஷ்டவாக்கியம் சொல்லிநக்ஷத்திர ஹோமம் ஜயாதி ஹோமம் உத்திராங்க ம்




புனர்பூஜை தூப தீப நைவேத்யம் கற்பூரநீராஞ்சனம் மந்திர புஷ்பம்ப்ரதக்ஷிண நமஸ்காரம் யதாஸ்தானம் கலச அபிஷேகம் தானங்கள்
பூரிதானம் பல தானம் ஆசார்ய ருத்விக்சம்பாவனை நிரீக்ஷித ஆஜ்யதானம்


தசதானம் ஹாரத்தி ப்ராஹ்மண போஜனம் கர்த்தாவும் தர்மபத்னியும் உறவினர்களுக்கு ஆசிரவாதம்செய்வதும் பரிசு பொருட்கள்பெறுவதும் கொடுப்பதும் வழக்கம்
 
sathaapisheekam more details. yajur vedam aapasthampa suthram.

sadhapishekamசதாபிஷேகம்பல விளக்கங்கள்
போதாயனமஹரிஷி சொல்கிறார் சதாபிஷேகம்செய்துகொண்டவர் தனக்கு முந்தி பிந்திதனக்கும் பத்து தலைமுறையினறையும்புண்ய புருஷர் ஆக்குகிறார்என்று


உத்திராயணமாகஇருந்தால் சதாபிஷேகம் செய்துகொள்ள முடியாத பக்ஷத்தில்அடுத்த நக்ஷத்திரத்தில்செய்து கொள்ளலாம் தக்ஷிணாயணமாகஇருந்து விட்டால் உத்திராயணம்வந்த பிறகு சுக்ல பக்ஷத்தில்அல்லது தனது ஜன்ம அநுஜன்மத்ரி ஜன்ம நக்ஷத்திரத்தில்தாரா பலம் சந்திர பலம் உள்ளநாள் பார்ர்த்து செய்துகொள்ளலாம் இது சிஷ்டாசாரம்


சதாபிஷேகத்திற்குஅங்கமாக மாங்கல்ய தாரணம்விதிக்க பட வில்லை இது சிஷ்டாசாரபழக்கம் செளநக மஹரிஷி சொல்லிசென்ற படி கடைபிடிக்கபட்டுவருவது இங்கு விவரிக்கபடுகிறது சதாபிஷேகம் நடக்க போகும்இடத்தை பசுஞ்சா ணியால் மெழுகுமாவு கோலம் இட்டு காவி இட்டுகுலை வாழை மாவிலை தோரணம் கட்டவேண்டும்


ஈசானமூலையில் சதுரமான ஸ்தண்டிலம்அமைக்கவும் ஸ்தண்டிலத்திற்குமேற்கே ஹோம குண்டம் அமைக்கவேண்டும் புதிய கலச பாத்திரங்கள்உபயோக படுத்த வேண்டும்


கீழேகோதுமை பரப்பவும் அதன் மேல்இலை அல்லது பழைய நியூஸ் பேப்பர்போட்டு அதன் மேல் அரிசி பரப்பிஅதன் மேல் இலை போட்டு கருப்புஉளுந்து பரப்பி அதன் மேல்இலை போட்டு கருப்பு எள்ளுபரப்பி அதன் மேல் மத்தியபாகத்தில் ப்ரதான கலசமாகியபித்தளை குடத்தை வைக்கவும் இதில் ப்ரும்மாவை ஆவாஹனம்செய்ய வேண்டும்


இதற்குகிழக்கே சொம்பு கலசத்தில்ப்ரஜாபதி மேற்கே சதுர்முகர்தெற்கில் பரமேஷ்டி வடக்கில்ஹிரண்ய கர்பர் சொம்பு கலசங்கள்வைக்கவும்


பத்தாம்நம்பர் நூல் கண்டு வாங்கிகலசங்களில் சுற்றவும் கலசத்தில் நீர் நிரப்பவும்நீரில் பச்சை கற்புரப்பொடிஏலக்காய் பொடி கிராம்பு ஜாதிபத்ரி வெட்டி வேர் விளாமிச்சைவேர் போடவும் வெள்ளி தங்கம்ரத்தினங்கள் போடலாம்


கலசத்தின்மேல் மாவிலை கொத்து வைக்கவும்அதன் மேல் தேங்காய் வைக்கவும்தர்பை யிலான கூர்ச்சம் வைக்கவும்கலச பக்கங்களில் சந்தனம்குங்குமம் பொட்டு வைக்கவும்


கலசங்களுக்குவஸ்த்ரம் சாத்த வு ம்தொடுத்தபுஷ்ப மாலை சாற்றவும் குடத்திற்குமாலை சாற்றவும் பட்டு வஸ்த்ரம்முடிந்தால் சாற்றலாம் நவகிரஹஹோமம் செய்யும் பழக்கமுண்டு


சதாபிஷேகத்திற்குமுதல் நாள் ஓடும் நதிக்குசென்று சங்கல்ப ஸ்நானம்செய்யலாம் அகமர்ஷண சூக்தம்சொல்லிக்கொண்டே ஸ்நானம்செய்யலாம் ருத்திர ஏகாதசினிசெய்யலாம் அல்லது கூஷ்மாண்டஹோமம் செய்யலாம் அருணம்சூர்ய நமஸ்காரம் அரச மரப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்


சதாபிஷேகமன்றுகாலை ஸ்நானம் செய்து நெற்றிக்குஇட்டுகொண்டு ஸந்தியா வந்தனம்காயத்ரி ஜபம் ஒளபாசனம் செய்துவிட்டு பஞ்சகச்சமும் மடிசாறுடனும்இருவரும் கலச ஸ்தாபன மண்டபத்திற்குவர வேண்டும் பஞ்ச கவ்யம்சாப்பிட வேன்டும் மற்ற எல்லோரும்ருத்விக்குகளும் பஞ்ச கவ்யம்சாப்பிடலாம்



புதுபூணல் போட்டு கொள்ள வேண்டும் மஞ்சள் தடவிய இரு தேங்காய்களைவைத்து ஸ்வாமியிடமும் மற்றபெரியோர்களிடம் நமஸ்கரித்துஆசி பெறுதல் பிறகு சபையினரிடம்அனுக்க்ஞை ஆசி பெறுதல்சதாபிஷேகம் செய்து கொள்ளபர்மிஷன் கேட்டல்


விக்னேஸ்வரபூஜை 16 உபசாரபூஜை பிள்ளையாருக்கு ப்ரார்த்தனை
ப்ரதானஸங்கலபம் சுக்லாம்பரதரம்ப்ராணாயாமம் மமோபாத்தப்ரீத்யர்த்தம் சுபே சோபனேமுஹூர்த்தே சுபதிதெள பரமேஸ்வரப்ரீத்யர்த்தம் நக்ஷத்ரே ராசெள


சர்மணஹ அஷ்ட மாஸாதிக அசீதி வயஸ்கஸ்ய மம ஜன்ம ப்ரப்ருதி ஏதத் க்ஷணபர்யந்தம் ஐஹீக ஆமுஷ்மிக பலவிரோதினாம் மநஸா வசஸா கர்மணாச புத்தி பூர்வம் அபுத்திபூர்வம்ச க்ருதானாம் ஸர்வேஷாம்பாபானாம் அந்ததோ நிவ்ருத்தித்வாரா மம ஐஹிக ஆமுஷ்மிக ஸகலஸுக ஸித்தியர்த்தம் மோக்ஷஸாம்ராஜ்ய ஸித்தியர்த்தம்ஸதாபிஷேகாக்யம் கர்ம செளணகோக்தப்ரகாரேண ஆசார்ய முகேன ருத்விக்முகேன ச அத்ய கரிஷ்யே


தத்ஆரம்ப முஹூர்த்தே லக்னாபேக்ஷயாஆதீத்யாதீனாம் நவாநாம்க்ரஹானாம் ஆநுகூல்ய ஸித்யர்த்தம்க்ரஹ ப்ரீதி தாநம் கரிஷ்யே தத் அங்கம் ஹிரண்ரூபேணஅப்யுதயம் நாந்தி சிராத்தம்கரிஷ்யே தத் அங்கம் புண்யாஹவாசனம் ச கரிஷ்யே


விக்னேஸ்வரர்உபஸ்தானம் க்ரஹ ப்ரீதி தாநம்க்ருச்சராசரணம் நாந்திசிராத்தம் புண்யாஹாவசனம் கலச ஸ்தாபனம் வருணன் ஆவாஹனம்16 உபசாரபூஜை புண்யாஹவசனம் புண்யாஹவசனம்தீர்த்தம் ப்ரோக்ஷித்தல்சாப்பிடுதல்


ஆச்சார்யர்மற்றும் ருத்விக்குகள்குறைந்தது 6 பேர் வரித்தல் ரித்விக்குகள்ஸங்கல்பம் கலச பூசை ஒவ்வொருகலசத்திலும் ஆவாஹனங்கள் ப்ருஹ்மா ப்ரஹ்மஜஜ்ஞானம் ப்ரஜாபதி பிதாவிராஜா பரமேஷ்டீ ப்ருஹ்மதேவாந் சதுர்முகர் அந்தரஸ்மின் ஹிரண்யகர்பர் ஹிரண்ய கர்ப சிலர் இப்போதுநவகிரஹ கலச ப்ரதிஷ்டை ஆவாஹனம்செய்வர்


ப்ராணப்ரதிஷ்டா ந்யாஸம் த்யானம் முத்ரா காண்பித்தல் தேன்கலந்த பால் நிவேதனம் புருஷசூக்த விதானப்படி 16உபசாரபூஜை அர்ச்சனை இங்கு தஸ்மாதஸ்வாஎன்ற ருக்கிற்கு பின் செய்யவேண்டிய அர்ச்சனையின் போது வருணனுக்கு அர்ச்சனை மற்றதேவதைகளுக்கு அர்ச்சனைப்ருஹ்மாவிற்கு 108 அர்ச்சனை நவகிரஹங்களுக்கு அவர்களின்அதி தேவதை ப்ரதி அதி தேவதைஅர்ச்சனை தூபம் தீபம் நைவேத்யம் கற்பூரம் ப்ரதக்ஷிண நமஸ்காரம்


பிறகுருத்விக்குகள் ஜபம் வேதாதீன் க்ருணுஷ்வபாஜ அநுவாஹம் ப்ரஜாபதே நத்வ ரயீணாம் அக்நேயசஸ்விந் ஸ்லோகோ அஸ்து பத்ரம்பஸ்யந்தஹ ஸர்வே ப்ருஹ்மகாயத்ரீ வேதாத்மநாய வித்மஹே 108 முறை ப்ருஹ்மாத்மந் வதஸ்ருஜதஅநுவாஹம்


அல்லதுபூர்புவஸுவரிதிவா பஸிமாவஹந்தி ஹிரண்யகர்பஹ ஸமவர்தஹ ஹவிஷா விதேம் 8 ருக்குகள் வருண ஸூக்தம் ஆபோஹிஷ்டா ததிக்ராவ்ணோ ஹிரண்ய வர்ணஹாஅநுவாஹம் பவமான ஸூக்தம்அநுவாஹம் யாவாமிந்த்ராவருணா


யோவாமிந்த்ராவருணா மமாக்னே அக்னேர்மந்வே ப்ரதராந்த ஆயூஹு அநுவாஹம் ஆயுஸ்ஸிஸாநஹ அநுவாஹம் நக்ஷத்ர அஷ்ட வாக்கியங்கள் ருத்ரம் நமகம் சமகம் புருஷஸூக்தம் 3 அநுவாஹம் விஷ்ணு துர்கா ஸ்ரீசூக்தங்கள் பூஹ் ஸூக்தம் பாக்ய ஸூக்தம்ம்ருத்யு ஸூக்தம் முஞ்சாமித்வா க்ருத ஸூக்தம் ஆயுஷ்ய ஸூக்தம் பஞ்ச சாந்தீ ருசாம் ப்ராசிதிக் பாலகர் மந்திரங்கள்நவகிரஹ மந்திரங்கள் கோஷசாந்தி


ஏகஸ்மைஸ்வாஹா ப்ரஸ்நம் முடிய ஸத்யோஜாதாதி 5 மந்திரங்கள் ஓம் நமோ ப்ருஹ்மணே மூன்றுமுறை ஆபிர் கிர்பிஹி


பிறகுஹோமம்


லெளகீகாக்னிப்ரதிஷ்டை உல்லேகனம் அக்னிப்ரதிஷ்டை ப்ரோக்ஷணீ ஸம்ஸ்காரம் ப்ரணீதா ஸம்ஸ்காரம் ப்ருஹ்மவரணம் ஆஜ்ய ஸம்ஸ்காரம் தர்வீஸம்ஸ்காரம் பரிதி நிதாநம் பரிசேஷனம் இத்மம் ஆதானம் அக்னி முகாந்தம்


பிறகுஅப்லிங்கம் ஹிரண்ய வர்ணாம் பவமானம் நமோ ப்ருஹ்மணே ஆகியமந்திரங்களால் கலசத்தில்ஆவாஹனம் ஆகியுள்ள தேவதைகளுக்கு மார்ஜனம் செய்துஹவிஸை நிவேதனம் செய்யவும்


பக்வாஹூதிஹிஆயுஷ்டே விஸ்வதோ ஆயுர்தா அக்னே ச்விஷ்டக்ருதத்தைஎடுத்து அக்னிக்கு வடக்கேபரிதிக்குள் வைக்கவும்


கீழ்கண்ட உபஹோமங்கள் செய்யவும்ப்ருஹ்ம ஸூக்தம்6 ருக்கு108 அக்னிராயுஷ்மாந்5 ருக்கு 108 க்ருதஸூக்தம் 6 ருக்கு108 யோப்ருஹ்மநா ப்ருஹ்ம ண ஆயுஷ்யஸூக்தம் 8 ருக்கு இவை தவிர வழக்கத்தில் உள்ளஹோமங்கள் ஜன்ம நக்ஷத்ர அஷ்டவாக்கிய


ஹோமம் யஜமான தம்பதியினர் அவர்கள்குடும்பத்தினரின் ஜன்மநக்ஷத்திரம் ஒவ்வொன்றிர்கும்ஒரு ஸமித் அன்னம் ஆஜ்யம் ஹோமம் ஸ்வஷ்ட க்ருத் ஹவ்ய வாஹன ஜயாதி ஹோமம் 58 ஆஹுதி


லேபகார்யம் பலி போடுதல் அக்னிக்குவட கிழக்கு மூலையில் அருகம்பில்லைபரப்பி அதன் மேல் பலி இடவும்மந்திரம் ஆயுஷ்ட மற்றும்ஆயுர்தா அக்னி உபஸ்தானம் கலசங்களுக்கு புனர் பூஜை தூபம் தீபம் நைவேத்யம் தாம்பூலம்


கற்பூரஹாரத்தி ரக்ஷா தாரணம் மந்திரபுஷ்பம் ப்ரதக்ஷிணம் நமஸ்காரம் கலச தேவதை யதாஸ்தானம் கும்பஜல ப்ரோக்ஷணம் சாப்பிடுதல்யஜமான தம்பதியருக்கு மாத்திரம்அபிஷேகம் கோலமிட்ட பலகையில்கர்த்தாவும் மனைவியும் கிழக்குபார்த்து


அமர்ந்துஇருக்க வேண்டும் யா ஸுகந்தா ரஸா வர்ணா என்ற 4 ருக்குகள்சொல்லி அபிஷேகம் பெண்கள்கெளரி கல்யாணம் பாடுவார்கள்


அபிஷேககால ஸ்லோகம் ஸுராஸ்த்வாமபிஷிஞ்சந்து ப்ருஹ்ம விஷ்ணு மஹேஸ்வராஹா வாசுதேவோ ஜகன்நாதஸ்ததாஸங்கர்ஷ்ணோ விபுஹு
ப்ரத்யும்நஸ்சாநிருத்தஸ்சபவந்து விஜயாய தே ஆகண்டலோக்நீர் பகவான் யமோ வை நிர்ருதிஸ்ததா


வருணஹபவநைஸ்சைவ தனாத்யக்ஷஸ்ததாசிவஹ ப்ருஹ்மணா ஸஹிதாஸ்ஸர்வேதிக்பாலாஹா பாந்து தே ஸதா


கீர்திர்அக்ஷ்மீர் த்த்ருதீர் மேதாஹா புஷ்டி சிரத்தா க்ரியா மதிஹி புத்திர் லஜ்ஜா வபுஸ்சாந்திஹிகாந்திஸ் துஷ்டிஸ்ச மாதரஹ


ஏதாஸ்த்வாமபிஷிஞ்சந்து தேவபத்ந்யஸ்ஸமாகதாஹாஆதித்யஸ் சந்திரமா பெளமோ புதஜீவஸிதார்கஜாஹா


க்ரஹாஸ்த்வாமபிஷிஞ்சந்துராஹு கேதுஸ்ச தர்பிதாஹா தேவதாநவ கந்தர்வ யக்ஷ ராக்ஷஸபந்நகாஹா


ருஷயோமுனியோ காவோ ததேவ மாதர ஏவசதேவபத்ந்யோ த்ருமா நாகாதைத்யாஸ்சாப்ஸரஸாம் கணாஹா


அஸ்த்ராணிஸர்வ சஸ்த்ராணி ராஜாநோ வாஹநாநிச ஒளஷதானி ச ரத்ணானி காலஸ்யாவயவாஸ்சயே


ஸரிதஸ்ஸாகராஸ்சைலாஹாதீர்த்தாநி ஜலதா நதாஹா ஏதேத்வாமபிஷிஞ்சந்து ஸர்வகாமார்த்த ஸித்தயே


விக்னேசக்ஷேத்ரயோ துர்கா லோகபாலாநவகிரஹாஹா ஸர்வகாம ப்ரதாநித்யம் யஸ்சந்து தவ மங்களம்


கங்காநதீ மஹாபுண்யா ஸரயூ கண்டகீததா கோமதி தூத பாபா ச பாஹுதாச ஸரஸ்வதீ


கோதாவரிபீமரதீ க்ருஷ்ணவேணீ குமுத்வதீச தாம்ர பர்ணீ துங்கபத்ரா சகாவேரீ ச கெளசிகீ


நத்யஸ்வாமபிஷிஞ்சந்து தோயைஹி பாதக நாசனைஹி


ருக்வேதாஅத யஜுர் வேதஹ ஸாமவேதஹ ததைவச அதர்வ வேதஸ் சத்வாரஹஅப்யபிஷிஞ்சந்து புண்யதாஹா


லவணக்ஷீர தோயேன ச க்ருத மண்டோகதஸ்ததாததி மண்டோகதஸ்சைவ ஸுரோதஸ்சாபிஸாகரஹ


ததைவேக்ஷூரஸோதஸ்சததஹ ஸ்வாதூதகஸ்ச யஹ ஏதேத்வாமபிஷிஞ்சந்து ஸாகராஹாபுண்யவாரிபிஹி


மஹாகல்பஸ்ச கல்பஸ்ச மந்வந்த்ர யுகாநிச ஸம்வஸ்த்ராஸ்ததா ஸர்வேததைவாய நயோர்த்வயம்


ருதவஸ்சததா மாஸாஹா பக்ஷெள ராத்ர்யஹநீததா சந்த்யாஸ்ச திதயஸ்சைவமுஹுர்தாஹா கரணானிச ஏதேத்வாமபிஷிஞ்சந்து காலஸ்யாவயவாஸ்ஸுபாஹா


ஆசார்யன்ப்ரதான பித்தலை குடம் நீரில்பாதியை கொண்டு கர்த்தாவிற்குஅபிஷேஹம்
4 ருக்குகள் யா ஸுகந்தா ரஸா வர்னா பலஞ்சநிஹிதே உபே தாம ஆபசிவாஸ்ஸந்துதுஷ்க்ருதம் ப்ரவஹந்து மே


யாஊர்ஜமமபிஷிஞ்சந்தி தேவேன்ப்ரேஷிதா மஹி ம் தாம ஆபஸ்பரிவாஸ்ஸந்துதுஷ்க்ருதம் ப்ரவஹந்து மே


யாஸாம் நிஷ்க்ருமணே ஸர்வந்தமிதம்ஜாயதே ஜகத் தாம் ஆபஸ்சிவஸ்ஸந்துதுஷ்க்ருதம் ப்ரவஹந்துமே


யாஸாமிமே த்ரயோ வேதாஸ்தேஜஸாயசஸாவ்ருதாஹா தாம ஆபஸ்சிவாஸந்துதுஷ்க்ருதம் ப்ரவஹந்து மே


பிறகுகிழக்கிலிருந்து தொடங்கிமற்ற கலச நீரினால் அந்தந்த்ருத்விக்குகள் அபிஷேகம்
மந்த்ரங்கள் கிழக்கு யா ப்ராசி ரேவதீராபஸ்ஸ்ரவ்ந்தி சுக்ராஹா தாமஆபஸ்சிவாஸந்து துஷ்க்ருதம்ப்ரவஹந்து மே

தெற்கு யா தக்ஷிணா ரேவதீராபஸ் சிரவந்தி சுக்ராஹா தாம ஆபஸ்சிவாசந்துதுஷ்க்ருதம் ப்ரவஹந்துமே




மேற்கு யா ப்ரதீசீரேவதீராபஸ் சிரவந்தி சுக்ராஹா தாம ஆபஸ்சிவாசந்துதுஷ்க்ருதம் ப்ரவஹந்துமே

வடக்கு யா உதீசீ ரேவதீராபஸ் சிரவந்தி சுக்ராஹா தாம ஆபஸ்சிவாசந்துதுஷ்க்ருதம் ப்ரவஹந்துமே

மீதியுள்ளபித்தளை குட நீரினால் தற்போதுஆசார்யன் அபிஷேகம்


யாஊர்த்வாஹாரேவதீராபஸ் சிரவந்தி சுக்ராஹா தாம ஆபஸ்சிவாசந்துதுஷ்க்ருதம் ப்ரவஹந்துமே ரேவதீர் மதுமதீ என்ற அநுஷங்கம்உப்யோகிக்க வேண்டும்

அருகில்ஒரு பெரிய காலி பாத்திரம்வேன்டும் அதில் அபிஷேகம்செய்து மீந்த தண்ணீரை ஆசார்யரும்ருத்வி


க்குகளும்கொட்டுவார்கள் அதை எடுத்துஉறவினர்களும் நண்பர்களும்கர்த்தாவிற்கு அபிஷேகம்செய்ய வேண்டும்


கர்த்தாவும்மனைவியும் புது வஸ்த்ரம்உடுத்தி காலல்ம்பி நெற்றிக்குஇட்டுக்கொண்டு ஆேசமனம் செய்துவிட்டு ீழ் கண்ட மந்திரங்கள்சொல்லி செய்ய வேண்டும்


உத்வயந்தமஸஸ்பரி உதுத்யம் சித்ரம் தச்சக்ஷுஹு யா உதகாத் பிறகு ஹவிஸ் சாப்பிடவேண்டும்


சிஷ்டாச்சாரப்படிமாங்கல்ய தாரணம்


வஸ்த்ரதானம் தங்கம் அல்லது வெள்ளிஅல்லது செம்பு அல்லது வெண்கலபாத்திரத்தில் நெய் விட்டுதங்க நாணயம் போட்டு ரூபம்ரூபமிதி யா அலக்ஷ்மீஹி என்றமந்திரங்கள் சொல்லி தம்பதிகள்முக தரிசனம் செய்து விட்டுதக்ஷிணையுடன் தானம்

சங்கல்பம்செய்து கொண்டு கலசம் கலசவஸ்த்ரம் ப்ரதிமைகள் தானம் தச தானம் பூரி தானம் பல தானம்


ஹோமம்செய்த பஸ்மம் இட்டு கொள்ளுதல் காயேன வாசா ஆசீர்வாதம்


யானைஅல்லது குதிரை பூட்டிய ரதத்தில்தம்பதிகள் உட்கார்ந்துதுந்துபி போன்ற வாத்தியகோஷத்துடன் ஸூக்த பாராயணத்துடன்க்ராம ப்ரதக்ஷிணம்


வீடுதிரும்பியவுடன் ஆரத்தி


பலதானம் புண்யாஹ வாசனம் ப்ராஹ்மணபோஜனம் வீட்டிலேயே சமையல்செய்து ப்ராஹ்மணர்களுக்குசாப்பாடு போடவும் மற்றவர்களுக்குமுடிந்தால் மனமிருந்தால்மார்க்கமுண்டு வீட்டு சாப்பாடு அல்லது வெளியே இருந்து வந்தசாப்பாடு போடவும்


கோவிந்தநாம ஸ்மரணம் சொல்லிக்கொண்டேஇருக்க வேண்டும் வந்தஉறவினர்களுக்கு
ஆசீர்வாதம்பரிசு பெற்றுக்கொள்ளுதல் பரிசு அளித்தல் சுபமஸ்துமங்களம்
 
அருகம் புல் மாலை மட்டும் தான் சாற்ற வேண்டும். பித்தம், வாதம், கபம் என்னும் முக்குணம் குறைக்கும் வெற்றிலை சாற்ற வேண்டாம். வாதத்தை குறைக்கும் அருகம் புல் மட்டும் சாற்ற வேண்டும்.
 
very nice thread.Ganapathi is one of my favorite god. Maha Ganapathi homam is a powerful one which helps to live a healthy, wealthy and prosperous life.
 
punyaha vachanam audio or video required

Dear tamilbrahmins,
very useful information, especially for the present generation.
Has anybody have punyaha vachanam audio or video?. I am in US and need this to perform for my grand daughter. thanks.
 
ruththira aekaadasini.

ருத்திர ஏகாதசினி.


எவர் அளித்த அன்னம் வேத பாராயணத்தின் போது ருத்விக் வயிற்றில் ஜீரணமாகிறதோ அவரது குலத்தினர் ஆயிரங்கோடி வருடங்கள் ப்ருஹ்ம லோகத்தில் வசிப்பர் எங்கிறது தர்ம சாஸ்திரம். ஆதலால் மிதமான உணவு உண்ட பின்னும் வேத பாராயணம் செய்யலாம் என்று சொல்லலாம்.


பால் போன்ற திரவ உணவு கூட அருந்தாது செய்யும் தேவ பூஜையும் பித்ருக்களுக்கு ப்ரீதி கரம் எங்கிறது சாஸ்திரம்.பால் போன்ற திரவ பதார்த்தமாக அருந்தி 6 மணி நேரம் ஆகும் ருத்திர ஏகாதசினி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது.


ஆதலால் சத்துமாவு, கோதுமை கஞ்சி;பழங்கள், பால், இளநீர், சுக்கு, ஜீரகம் போட்டு காய்ச்சிய வென்னீர், வால் மிளகு, கல்கண்டு,போன்றவை கொடுக்க கர்த்தா ஏற்பாடு செய்ய வேண்டும்.


லெளகீக விருந்தினர்க்கு அளிக்கும் உணவு வைதீகர்களுக்கு அளிப்பது அவர்கள் சிரத்தையுடன் ஜபம் செய்வதற்கு உள்ள சூழ் நிலையை அமைத்து தராது.வைதீகர்கள் கர்த்தாவிற்கு தேவையான பலனை வேத பாராயணம் செய்து ஈட்டி தருகிறார்கள்.


11 ருத்விக்குகள் 11 தடவை ருத்திர ஜபம் செய்வதே ருத்திர ஏகாதசினி. ஒவ்வொரு ஆவர்த்திக்கு பிறகு ஏகாதச ருத்திரனுக்கு உபசாரம், அர்க்கியம், உபாயன தானம், ப்ரார்த்தனை விதிக்க பட்டுள்ளது. ஆதலால் ருத்துவிக்குகளை தனித் தனியே ஒவ்வொரு கலசத்துக்கு என


முதலிலேயே வரித்து தீர்த்த பாத்திரம், அக்ஷதை, புஷ்பம், தூப, தீப நைவேத்யங்களுக்கு தேவையானவைகளை கொடுக்க வேண்டும். கடைசியில் அவர்களை கொண்டே அபிசேகம் செய்ய செய்வதால் பூஜா பலன் பூரணமாக கிடைக்கிறது


. 11 ருத்விக்குகளும் தாம்தமாக வராமல் சீகிரமாக வந்து ஆரம்பிக்க வேண்டும். ஒருவர் வராவிட்டாலும் அவருக்காக காத்திருந்து எல்லோரையும் சேர்த்து ஒவ்வொரு கலசத்திற்கும் வரிக்க வேண்டும்.


ஸர்வா தேவதா ஆபஹ; ஆபோ வை ஸர்வா தேவதாஹா என்ற வேத வாக்கியப்படி அனுசரித்து ஸ்வாமி கடத்திலேயே ஏகாதச ருத்திரர்களையும் ஆவாஹானம் செய்யலாம்.
பூர்வாங்கத்தில் ஆகம முறைப்படி ஸ்தாபனம் செய்தால் உத்ராங்கத்திலும் ஆகம முறைப்படி யதாஸ்தானம் செய்யவும்.


வைதீக முறைப்படி பூர்வாங்கத்தில் ஸ்தாபனம் செய்த கடங்களிலிருந்து உத்த்ராங்கத்தில் வைதீக முறைப்படி யதாஸ்தானம் செய்ய வேண்டும்.பிறகு அபிசேகம் செய்ய வேண்டும்.


ஹோமத்திலும் பூர்வாங்க உத்திராங்க முறைகள் உண்டு. ஹோமாக்னியிலிருந்து ஸ்வாமியை கலசத்திற்கு ஸம்யோஜனம் செய்ய வேண்டும். கட ஸ்தாபனம் , ஹோமம் இரண்டும் வைதீக முறைப்படி அல்லது ஆகம முறைப்படி ஒறே மாதிரி செய்ய வேண்டும்.



ஜபம், பூஜை, ஹோமத்திற்கு பயன்படுத்த படும் பாத்திரங்கள் , கரண்டி, தாம்பாளம், விளக்கு
போன்றவைகள் எவர் சில்வரில் வேண்டாம்.செப்பு, பித்தளை, வெண்கலம்,மரம் போன்றவைகளில் இருப்பதே நலம்.


ஆம்ப்ளிப்பயர் மைக் கில் ஒருவர் கனத்த குரலில் சொல்ல மற்றவர்கள் அவர்களுடன் சேர்ந்து சொல்ல குரல் ஒருங்கிணைந்து ஒலித்தால் தான் வேத நாதம் ப்ரகாசிக்கும். ருத்ர ஜபம் நடந்து கொண்டிருக்கும் போது கர்த்தா அதி சிரத்தையுடன் , அமைதியாக வேத நாதத்துடன் ஒன்றுபட்டு அனுபவிக்க வேன்டும். வேத த்வனி, மற்ற ஒலி சேர்க்கை கலப்பினால் மாசு படுத்த படாமல் இருந்தால் தான் பூரணமான வேத நாத சக்தி முழு பலனை தரும்.


ருத்விக்குகள் மனம் ஒன்றி ஜபம் செய்து கொண்டிருக்கும் போது , கர்த்தா அதற்கு தரும் மதிப்பை கண்டு ருத்விக்குகள் ஒறே த்வனியில் உற்சாகமாக வேதம் ஓதுவார்கள். இது தான் கர்த்தாவிற்கு கிடைக்கும் பாக்கியம்.


நிகழ்ச்சிக்கு வருகை தரும் உறவினர்கள், நண்பர்கள் கர்த்தா செய்து கொள்வது ஒரு மஹா ப்ராயஸ்சித்த கர்மா.இங்கு லெளகீக பேச்சே பேசாமல் வேத த்வனியில் மெய் மறந்து இருக்க வேண்டும். கர்த்தாவின் செய்கைக்கு இடையூராக இருக்க கூடாது


.ருத்விக்குகள் வேதம் ஓதும் போது இங்கு வந்திருக்கும் எல்லோருக்கும் நற்கதிக்கான வழிகாட்டியாக அமைகிறார்கள்.இங்கு உரத்த குரலில் லெளகீக பேச்சு பேசுபவர்கள் அடுத்த பிறவியில் தவளை களாக பிறப்பார்கள் என பழமொழி உண்டு.இது ருத்விக்குகளை அவமதிப்பதாகும் என அறிய வேண்டும்.


ஒரு சடங்கினை செய்யும் விதிகளை படிபடியாக விரிவாக கூறும் வாக்கியங்களுக்கு காரிகை என்று பெயர்.ஒரு சடங்கை செய்யும் போது மந்திரங்களுக்கு இடையே வரும் காரிகை வாக்கியத்தையும் உரக்க கூற வேண்டும்.


வேத த்வனி உங்கள் வீட்டிலேயே இருப்பது நல்லது. ஆதலால் உங்கள் வீட்டிலேயே ருத்ர ஏகாதசினி செய்வது நல்லது. வீட்டுவாயிற்படி தாண்டி வரும் உணவு பொருட்கள் சுவாமி நைவேத்யத்திற்கோ, ருத்விக்குகள் சாப்பிடவோ உதவாது. ஆதலால் ருத்விக்குகள்


சாப்பிடவும், நைவேத்யதிற்கும் வீட்டிலேயே சமையல் செய்து கொள்ள வேன்டும். மற்ற உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கேட்டரர் மூலம் டிபன், காபி, சாப்பாடு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.


ஒரு பேப்பரில் உங்கள் நக்ஷத்திரம், ராசி, சர்மா, உறவு முறை மற்ற உங்கள் உறவினர்கள் பெயர்களயும் முன் கூட்டியே எழுதி வாத்தியாரிடம் கொடுத்து விட்டால் ஸங்கல்பம்செய்யும் போது ஒன்று கூட விட்டு போகாமலும் சீக்கிரமாகவும் முடிந்து விடும்.


உங்கள் உறவினர்களுக்கு நீங்கள் வாங்கி கொடுக்க விரும்பும், வேட்டி, சட்டை, துண்டு, பேண்ட், புடவை, சுடிதார், ரவிக்கை துண்டுகள், முன்னதாக வாங்கி வைத்து கொள்ளவும்,
gift article தேவையானவற்றை வாங்கி வைத்து கொள்ளவும். தாம்பூல பை, அதில், , போட


பழம் அல்லது தேங்காய், வெற்றிலை பாக்கு, பக்ஷண வகைகள், தேவையானவற்றை வாங்கி வைத்து கொள்ளவும்.சுமங்கலிகளுக்கு மஞ்சள், கும்குமம், ஐ டெக்ஸ்; மருதானி பெளடர்,
வளையல், கண்ணாடி, சீப்பு---தேவையானவைகளை வாங்கி வைத்து கொள்ளவும்.
 
ருத்திர ஏகாதசினிக்கு சாஸ்திரிகளுக்கு தேவையானவைகள்.


மஞ்சள் தூள் 100 கிராம்; உருண்டை மஞ்சள் 100 கிராம், குங்குமம்-50 கிராம்; சந்தன பவுடர்-100 கிராம்; பாக்கு-200 கிராம்; வாசனை பாக்கு தூள்-100 கிராம்;

ஊதுபத்தி-2 பாக்கெட்; கற்பூரம்-2 பாக்கெட்; பச்சை கற்பூரம், குங்கும பூ; ஏலக்காய்; வெட்டி வேர்; விளாமிச்சை வேர் -பொடித்து கலசங்களில் போட;

சுண்ணாம்பு-1 டப்பி; கற்கண்டு-200 கிராம்; கோரோஜனை-1 பாட்டில்; வெண் கடுகு -100 கிராம்;சக்கரை-1 கிலோ;


வெற்றிலை-100+100, பூவன் பழம்-30+20., தேங்காய்-15+8; மாவிலை கொத்து-15; உதிரி புஷ்பம்-2 கூடை, எலுமிச்சம் பழம்-4;
ஆப்பிள், ஆரஞ்ச்; மாதுளை; பன்னீர் திராக்ஷை; மாம்பழம்; பலாசுளை; வகைக்கு ஒரு கிலோ;


ஹாரம்-2+2; தொடுத்த புஷ்பம்-15+15 முழம்; கத்தி; கத்திரிக்கோல்;கண்ணாடி; சீப்பு; குங்கும சிமிழ்;


சிராய் தூள்-10 கிலோ; விராட்டி-50; விசிறி-1; நெய்- 3 கிலோ; ஹோமத்திற்கு.


ஸ்ரீ சக்ரம்- அபிஶேகத்திற்கு பால்- 1லிட்டர்; தேன்- 100 கிராம்; இளநீர் 5; பன்னீர்- 1 பாட்டில்; வெல்ல சக்கரை-100 கிராம்; தயிர்-500 மில்லி லிட்டர்; பஞ்ச கவ்யம்; பஞ்சாம்ருதம்;சந்தனம்.


பஞ்ச கவ்யம் செய்ய- ஒரே பசுமாட்டின் பால், தயிர், நெய், மூத்திரம், சானி.

நவகிரஹங்களுக்கு- ஸமித்து-1 ஸெட், ஆடை-1 ஸெட்; தானியம்-1 ஸெட்;


9 புது பித்தளை கலசம் ஒரு லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அளவிற்கு; ஒரு பித்தளை குடம்; பத்தாம் நம்பர் நூல் கண்டு-2; குத்து விளக்கு-2; இதற்கு தேவையான திரி, எண்ணய், தீபெட்டி;
கர்பூர தட்டு; ஆரத்தி தட்டு; தாம்பாளம்/டிரே-5; கிண்ணங்கள்-6; பித்தலை டபரா-4; சமித்து-4


கட்டு; தடுக்கு-15 நம்பர்; ஹோம குண்டம்-1; அல்லது செங்கற்கள்-20; மணல்- 1 சட்டி; மணி-1


கோதுமை-5+3 கிலோ; பச்சரிசி-5+3 கிலோ; கருப்பு உளுந்து-1+1 கிலோ; கருப்பு எள்ளு-500 கிராம். பழைய ந்யூஸ் பேப்பர்2 +2; நுனி வாழை இலை-6.+4


எவர் சில்வர் டப்பி-1; அதில் விட நெய்- 250 கிராம்; முகம் பார்த்து தக்ஷணையுடன் தானம்.


தச தானம்:- மட்டை தேங்காய்-2; சந்தன கட்டை-1; வெள்ளி; தங்கம்; ஒன்பது ஐந்து வேஷ்டி-1
நெய்-100 கிராம்; தானியம்- 1 கிலோ; வெல்லம்-1 கிலோ; கல் உப்பு- 1 கிலோ; கருப்பு எள்ளு-100 கிராம்; ருத்திர ஏகாதசினி முடிந்த வுடனும் தானம் உண்டு--அதற்கு தான் மட்டை தேங்காய்-2 போடபட்டது.


பஞ்ச தானம்:- பித்தளை விளக்கு எண்ணய், திரியுடன் ஏற்றி கொடுக்க வேண்டும்; 9/5 வேட்டி-1; பித்தளை சொம்பு-1; புத்தகம்-1; மணி-1;


ஆசமனம்; குரு வந்தனம்; வேதியர்களை வலம் வருதல்.வேதியர்கள் வேதம் ஒத அவர்களை வலம் வருதல். கையில் தாம்பாளத்தில் தாம்பூலம், பழம், புஷ்பம், தேங்காய் வைத்து கொண்டு கணவன் பின்னால் மனைவி வர மற்ற உறவினர்களும் அதிக வயதுள்ளவர்கள் முதலிலும் குறைந்த வயதுள்ளவர்கள் பின்னாலும் வரலாம்.


பிறகு மஞ்சள் தடவிய இரு தேங்காய்களை ஸ்வாமி படம், குல தெய்வ படம் முன் வைத்து வணங்கி பிறகு வயதில் மூத்தோர் கையில் கொடுத்து நமஸ்கரித்து ஆசி பெற்று பிறகு பூஜை நடக்கும் இடத்திற்கு வந்து கிழக்கு முகமாக நின்று பவித்ரம் பெற்று வலது கையில்


ருத்த்யாஸ்ம ----மந்திரம் சொல்லி கையில் அணிந்து பாக்கி அக்ஷதையை தன் தலையிலும் தன் மணைவி தலையிலும் போட வேண்டும்.


அனுக்ஜை:--பர்மிஷன்--எவ்வளவு ஆஹூதிகள் கொடுத்து ஹோமம் செய்ய போவதாக முதலில் தீர்மானித்தபடி சொல்லிக்கொள்ளவும்.


விக்னேஸ்வர பூஜை; மஹா ஸங்கல்பம்;விக்னேஸ்வரம் யதா ஸ்தானம்; க்ருஹ ப்ரீதி;
நாந்தி சிராத்தம்; வைஷ்ணவ சிராத்தம்; கோ தானம்; தச தானம்; க்ருச்சராசரணம்;ஆசார்ய ருத் விக் வரணம்; ஸ்தண்டிலத்தில் கலச ஸ்தாபனம்; வருண ஆவாஹணம்; பூஜை




புண்யாஹ வசனம்; பஞ்சாங்க ருத்ர ந்யாஸம்; பஞ்ச முக ந்யாஸம்;கேசாதி பாதாந்த ந்யாஸம்; தசாங்க ந்யாஸம்; பஞ்சாங்க ந்யாஸம்; ஹம்ஸ காயத்ரி ஜபம்; திக் ஸம்புட ந்யாஸம்; ஶோடச அங்க ரெளத்ரீகரணம்; ஶடங்க ந்யாஸம்;ஆத்ம ரக்ஷா; ஶிவ சங்கல்பம்;


பாராயணம்:- புருஷ ஸூக்தம்;உத்திர நாராயணம்; அப்ரதிரதஹ; ப்ரதிபூருஷம்;ஶத ருத்ரியம்; பஞ்ச அங்க ஜபம்; அஷ்ட அங்க ப்ரணாமம்--எட்டு நமஸ்காரங்கள்; ஸ்ரீ ருத்ர லகு ந்யாஸம்;


கலசங்களுக்கு ஶோடச உபசார பூஜை;ப்ராண ப்ரதிஷ்டை; ஆவாஹனம்; ருத்ர விதான ஶாம்ப பரமேஸ்வர ஶோடச உபசார பூஜை, ருத்ர த்ரிசதி அர்ச்சனை;ப்ரதக்ஷிணம்; பதிமூன்று நமஸ்காரங்கள்; ப்ரார்த்தனை;


ஸ்ரீ ருத்ர ஜப பூர்வாங்கம்-- தேவதா ந்யாசம்; பீஜ சக்தி கீலக ந்யாசம்;ருத்ர ஜப அங்க ந்யாசம்; கவசம்; அஸ்த்ரம்;பூரவாங்க த்யானம்; பஞ்ச பூஜை;கணபதி த்யானம்; ஶாந்தி பாடம்; ருத்திர ஜபம்; 11 அனுவாஹங்கள் சொல்லிய பிறகு சமகம் முதல் அனுவாகம் முடித்த பிறகு 6 உபசாரம்; கற்பூரம்; ப்ரார்த்தனை;

அர்க்கியம்; பல தானம்;ஆசீர்வாதம்;இம்மாதிரி ஒவ்வொரு முறையும் 11 அனுவாகங்கள் சொல்லி முடிந்தவுடன் செய்து பின் ருத்ர ஹோமம் செய்ய செல்ல வேண்டும்.


கலசங்களுக்கு புனர்பூஜை; யதாஸ்தானம்;ப்ரோக்ஷணம்; ப்ராசனம்; அபிஷேகம்;
நிகழ்ச்சியின் நிறைவாக மீண்டும் வைஷ்ணவ சிராத்தம்; தச தானம்; கோ தானம் செய்ய வேண்டும். ரக்ஷை; ருத்விக்குகளுக்கு கலச வஸ்த்ர தானம்; ஆர்த்ரா வஸ்த்ர தானம்; ருத் விக்


ஸம்பாவனை; ஆசார்ய ஸம்பாவனை;ஆசீர் வாதம்;பலஶ்ருதி; ஹாரத்தி. ருத்விக்குகள் மாத்யானிகம் செய்வர். -இப்போது ரித்விக்குகள் அவர்களுக்காக ஒரு தடவை ருத்ர ஜபம் செய்வர்; பிறகு மாத்யானிகம் செய்து விட்டு சாப்பிட வருவர்; த்ரிஸுபர்ண மந்திரங்கள் ஓதுவர்;


மறு நாள் 60 அல்லது 70 அல்லது 80க்குள்ள ஜப ஹோமங்கள்.
 

Latest ads

Back
Top