முக்கால் ரூபாயை எக்காலமும் மறவேன்!
கல்லூரி ஆண்டு விடுமுறையின் போது
இல்லத்துக்கு என்னை அழைத்துச் செல்வார்
அப்பாவின் compounder மாமாவோ அல்லது
அப்பா, அம்மாவோ, எங்கள் hostel இல் இருந்து.
அது இறுதி ஆண்டு! இறுதித் தேர்வு!
அக்கா திருமணம் fix ஆகியிருந்தது!
அப்பா புதுவீடு கட்டிக்கொண்டிருந்தார்.
தம்பி medical college admission busy.
என்னை அழைத்துச் செல்லுவதற்கு
யாருக்கும் அன்று வசதிப்படவில்லை!
"நானே வந்து விடுகின்றேன்!" என்று
நானே சாமான்களுடன் புறப்பட்டேன்.
பஸ் டிக்கெட் வாங்கிய பிறகும் என்
பர்சில் ஐந்து ரூபாய் பாக்கியிருந்தது!
ஐந்து ரூபாய் என்றால் வெறும் தூசு அல்ல!
அரை கிராம் தங்கம் அன்று நாலு ரூபாயே!
அம்மாவுக்கு ஸ்பெஷல் கதம்பம் நிறைய!
இரண்டு ரூபாய்க்கு வாங்கி அமர்ந்தேன்.
கண்டக்டர் லக்கேஜுக்கு தரச் சொன்னார்
என்னிடம் மூன்றே முக்கால் ரூபாய் மட்டும் !
இருந்த மூன்று ரூபாயைக் கொடுத்தால்,
"இறங்கும் போது முக்கால் ரூபாயைக்
கொடுத்து விட்டு luggage எடுத்துக்கொள்!"
சொல்லிவிட்டு சீட்டுக்குப் போய்விட்டார்.
பஸ்ஸில் தெரிந்தவர் யாரும் இல்லை!
பஸ் ஸ்டாப்புக்கும் யாரும் வரமாட்டார்!
மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்தேன்.
முடிவில் தீர்மானம் செய்தேன் ஒரு வழியாக!
"குதிரை வண்டிக்காரனிடம் வாங்கி இங்கே
கொடுத்துவிட்டு, அத்தான் மாமியிடம் வாங்கி
அவனுக்குக் கொடுத்துவிட்டு, அத்தான் மாமிக்கு
அப்பா அம்மாவிடம்வாங்கிக் கொடுத்துவிடலாம்!"
இறங்கியவுடன் ஸ்டைலாக வண்டிக்காரனிடம்,
"ஒரு ரூபாய் சில்லறை கொடுங்கள் இப்போது!
வீட்டுக்குப் போனவுடன் சேர்த்துக் கொடுக்கின்றேன்!"
வாயெல்லாம் பல்லாகக் கூறினான் என்னிடம் அவன்,
"ரூபாயைக் கொடு அம்மணி. ஒரே நிமிஷத்தில் நான்
சில்லறை மாற்றித் தரேன்!" இது எப்படி இருக்கு?
"சாமான்களை இறக்கியவர்களுக்கு கால் ரூபாய்,
luggage க்கு முக்கால் ரூபாய்" விளக்கியபிறகு
தன் நண்பனிடம் ஒரு ரூபாய் கடனாக வாங்கி வந்து
என் மானத்தைக் காப்பாற்றினான் அந்த நல்ல மனிதன்!
அத்தான் மாமியிடம் வாங்கி அவனுக்குக் கொடுத்து,
அத்தான் மாமிக்கு அப்பாவிடம் வாங்கிக் கொடுத்து,
பெரிய business transaction முடிந்தது போலிருந்தது!
பெரிய பாராட்டும் கிடைத்தது என் அப்பாவிடமிருந்து!
" இனி உன்னை பற்றிய கவலை எனக்கு இல்லை!
எங்கே இருந்தாலும் நீ பிழைத்துக் கொள்ளுவாய்!
பணம் இருந்து வேறு எது இல்லாவிட்டாலும்,
வாங்கிக் கொள்ள முடியும் பரவாயில்லை! :rain:
பணம் இல்லாமல் வேறு எது இருந்தாலும்,
நிச்சயமாக மாட்டிக்கொள்வோம் எங்காவது! :fear: