மிருதங்கம் மணி.
A. I. R. Artist. பந்தா பார்ட்டி!
நிறைய மாணவர்கள் உண்டு.
Rehearsal என்றாலே பிடிக்காது!
"rehearsal எனக்குத் தேவையில்லை!"
ஒரே பதில் தான் வரும் எப்போதுமே!
ஒருவேளை வந்தாலும் பீஸ் உண்டு!
பாட்டுக்கு அவர் வாசிப்பதற்கும்,
நாட்டியத்திற்கு வாசிப்பதற்கும்,
உள்ள வேறுபாடுகளை என்னால்
உணரவைக்கவே முடியவில்லை
சொந்தச் சரக்கு ஜொலிக்கும்
இசைக்கச்சேரிகளில் என்றும்!
நாட்டியத்திலோ மிருதங்கம்,
நாட்டிய ஜதிகளுடன் கலந்து,
அல்வாத் துண்டுகள் போல,
அனுபவிக்க எளிதாக்க வேண்டும்.
ஜதியை எழுதிக் கொடுத்தால்,
ஜம்பமாகக் கடாசி விடுவார்.
பாடும் போது, முத்தாய்ப்பு
முடியும் வரையில் பாடகர்,
புன்சிரிப்புடன் அமரலாம்;
அதில் எந்த தவறும் இல்லை.
திடீர் முத்தாய்ப்புகள் வாசித்தால்,
நடனமணிகள் வெறுமனே,
மேடையில் சிரித்துக் கொண்டு,
பேசாமல் நிற்க முடியுமா?
இந்த வேறுபாடுகளை அவர்
புரிந்து கொள்ளவே இல்லை.
நிறைய rehearsal செய்வோம்!
பாடாவிட்டால் கூட மாணவிகள்
பாங்காக ஆடி விடுவார்கள்!
Puncture ஆக மாட்டார்கள்!