கூட்டணியின் நாட்டிய நாடகம்!
அனிதா, ஜீபா என்று இரு அழகிய
ஸ்நேக் டான்ஸ் super specialists!
கராத்தே மாணவிகள் இருவருமே!
கண்டிஷனில் இருக்கும் உடல்வாகு!
சிட்டிபாபுவின் சிவலீலா விலாசம்
சிறந்த நாட்டிய நாடகமாயிற்று,
மூவர்களின் கூட்டு முயற்சிகளால்!
மூவரில் இருவரை நீங்கள் அறிவீர்கள்!
இடைவெளித் துளியும் இல்லாமல்
அரை மணி செல்லும் வீணை இசை!
அதையே நாட்டிய நாடகம் ஆக்கி
அளித்தோம் HUSBAND'S DAY அன்று!
ராஜி ராமுக்கு இரட்டை வேடம்!
கௌரியும் அவளே! சபிக்கப் பட்ட
கங்கையின் தோழியும் அவளே!
கங்கை நான் நான் நானே தான்!
உயரமான, சுறுசுறுப்பான, தோழி
ஷீலா எங்களுடைய சிவபெருமான்!
கடைசி ஐந்து நிமிடங்களே வந்தாலும்
மேடையில் தூள் பறக்கும் தாண்டவம்!
முதலிலிருந்து கடைசிவரை உண்டு
கங்கைக்கு வேலை மேடையின் மேலே !
ராஜியோ மூன்றே நிமிடங்களில் உருமாறி
கௌரியாகவேண்டும் தோழியிலிருந்து!
"என்ன ஆடிவிடப்போகின்றாகள்!" என்று
சின்ன வியப்புக் கூட இல்லாது அமர்ந்தவர்,
முற்றுகை இட்டனர் எங்கள் கிரீன் ரூமை
முற்றுப் பெற்ற நடன நிகழ்ச்சிக்குப் பின்னர் !
ஆடையை மாற்றிக் கொண்டு நாங்கள்
மேடையிலிருந்து இறங்கும் வரையில்,
பொறுமை இல்லாது போயிற்று, எங்கள்
அருமையான நடனத்தைக் கண்டபின்னர்!
மூன்று முறை வேண்டி விரும்பிக்
கேட்டனர் அதே நிகழ்ச்சியை அவர்கள்!
சென்னைக்கு மூவரில் இருவர் சென்றதால்
பின்னர் சிதறிவிட்டது எங்கள் கூட்டணி!.
என் மகன்களை விட வயதில் இளைய
இரு சஹோதரிகளுடன் நான் மட்டும்
மீண்டும் சில முறை சிவலீலா விலாசம்
வேண்டிக்கொண்டவர்களுக்காக ஆடினேன்!
"ராதா மாதவம்" என்னும் ஒரு அற்புத
ராக மாலிகைத் தொகுப்பையும் ஒரு
நாட்டிய நாடகம் ஆக்கிப் படைத்தேன்,
நாட்டியமே கற்காத சிறுமிகளை வைத்து!
ஓணம், சங்கராந்தி,கிருஸ்த்துமஸ், நியூ இயர்!
ஓடிவிடும் மாதங்கள் மிகவும் விரைந்து!
வேண்டும் புதிய பாடல்களுக்கு நடனம்!
வேண்டும் தெலுங்குக் கீர்த்தனைகளே!
இரவும், பகலும் ஓடிக்கொண்டே இருக்கும்;
இஞ்சின் போல ஜாதிக்கோர்வை மனதில்!
படித்ததை மீண்டும் வாந்தி எடுப்பது போல
படிப்பிப்பதில் எனக்குச் சம்மதம் இல்லை!
"வழுவூர் பாணியா, தஞ்சாவூர் பாணியா?
கலாக்ஷேத்ரா பாணியா?" என்று கேட்டால்
நான் ரஜினி போலக் கூறுவேன் அவர்களிடம்,
"என் பாணி தனிப்பாணி!' எனத் தன்னம்பிக்கையுடன்!
(தொடரும்)