# 112. ஆவக்காயின் கதை.
"ஆந்த்ரா special ஆவக்காய் ஆயிற்றே!" என்று
ஒரு முறை கொண்டு வந்து கொடுத்தேன்!
வகையாக மாட்டிக் கொண்டேன்!! :whoo:
ஒவ்வொரு முறையும், ஒவ்வொருவரும்,
ஒவ்வொரு பாட்டில் எதிர்பார்த்தனர்.
"பெரிய பாட்டில் கிடைக்குமா?" என்றனர்.
"இவள் இரண்டு குட்டிக் குழந்தைகளையும்,
அனவைரின் luggage + food +water
எப்படி manage செய்கின்றாள்?"
என்று யாரும் யோசிப்பதேயில்லை.
குழந்தைகளை நடக்க வைத்து,
லக்கேஜைக் கூலியிடம் கொடுத்து,
மாங்காய் பாட்டில்களை மட்டும்
நானே சுமக்க வேண்டும் தவறாமல்!
உடையாமல் வந்து சேரவேண்டுமே!
12 அரைக் கிலோ பாட்டில்கள் என்றால்
12 கிலோ ஊறுகாய் இருக்கும் அல்லவா?
என் முட்டி தேய்ந்ததில் என்ன அதிசயம்!
ஒரு முறை ஊறுகாயை வாங்கிக்கொண்டு
வீட்டில் இருந்த மூன்று பேர்களும் இளிப்பு! :becky:
தாங்க முடியாமல் போகவே நானும்
அதன் காரணத்தைக் கேட்டேன்!
ஒரு கதையில் படித்தார்களாம்!
மடியாகப் போட்டால் மட்டும் தான்
ஆவக்காய் கெடாமல் இருக்குமாம்.
அவர்கள் பாஷை எனக்குத் தெரியும்.
"மடிக் குழந்தை" என்றால் அது :baby:
எந்த ஆடையும் அணியாத குழந்தை!
Acid பாட்டிலை என் மீது
வீசியது போல இருந்தது!
மொண்ணைக் கத்தியை வைத்து
முத்தின மாங்காயை வெட்டியதும்,
பக்கெட் நிறைய ஊறுகாயைக்
கைகள் வலிக்க கிளறியதும்,
பன்னிரண்டு பாட்டில்கள்
விலைக்கு வாங்கியதும்,
தோள் பட்டை வலிக்கக்
கால் கடுக்க அவற்றைச்
சுமந்து வந்ததும்...
சீ! சீ! இதற்காகவா? :doh:
அன்றிலிருந்து நான் ஆவக்காய்
போடுவதையே நிறுத்தி விட்டேன்.
என்னிடம் கேட்டவர்களிடம் சொன்னேன்,
'கடையில் கிடைக்கிறது வாங்கிக் கொள்ளுங்கள்!"