• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
# 348. Circus in the National Highway.

அன்று Vizag to சென்னைப் பயணம் - நான் மட்டும் தான்.

ரயில்நிலயத்துக்குச் செல்லும்போது பார்த்தோம்

முன்னே சென்ற அத்தனை இரு சக்கர வாகனங்களும்

ஒரு பெரிய வட்டம் அடித்து விட்டுப் பின் சரிந்து விழுந்ததை!

அதே இடத்தில், அதே போல, அத்தனையும் விழுந்தன!

பிறகு கவனித்ததில் தெரிந்தது சாலையில் இருந்த

ஒரு லாரியின் சக்கரம் விடுத்த அடையாளத்தில்

செல்லும்போது

அந்த வண்டிகள் வட்டம் அடித்து விழுந்தன என்று.

இவரிடம் சொன்னேன், "அந்த கறுப்புக் கோட்டின் மேல்

போகாதீர்கள்!"

சொல்லும் போதே அதே கோ
ட்டின் மீது சென்று, அதே போல

வட்டம் அடித்து, நட்ட நடு ரோட்டில் இருவரும் விழுந்தோம்.

உடல் எல்லாம் கீறல்கள்.

புது nylex சாரி எங்கெல்லாமோ கிழிந்து....!

வீட்டுச் சென்று மாற்றிக் கொள்ள நேரம் இல்லை.

"பகவான் விட்ட வழி!" என்று முன்னே சென்றோம்.

ரயிலில் செல்லும்போதே நல்ல ஜுரம் வந்து விட்டது.

புடவையையும் மாற்றிக் கொள்ள முடியவில்லை.

வீங்கிய முகமும், கிழித்த புடவையும்,

சிவந்த கண்களும், கொதிக்கும் உடம்புமாக

ஊர் போய்ச் சேர்ந்தேன் தனியாக!

அத்தனை பேர் அங்கேயே விழக் காரணம்....?

மீன்களை ஏற்றிச் சென்ற லாரியில் இருந்து கசிந்த

எண்ணை + தண்ணீர் + preservatives கலவை தான்.

அன்று மட்டும் அந்த சாலையில் எத்தனை பேர்

விழுந்து இருப்பர்களோ தெரியாது!

பின்னால் ஒரு லாரி வந்திருந்தால்....? :scared:

 
# 349. White at night!

அமாவசையன்று
இரவில் வெள்ளை உடையில் சென்ற

ஒரு ஆசிரியரை
ப் பார்த்து ஜன்னி வந்துவிட்டது ஒருவருக்கு.

காரணம் அந்த ஆசிரியரின் நிறம் மை இருட்டு!

ஆடைகள் மட்டும் நடப்பது போலத் தோன்றி இருக்கிறது!

ஜன்னி வரை இந்தக் காரணம் போதாதா? :faint:

இரவில் வெள்ளை உடை அணிவது நல்லது தான்.

அது சிலசமயம் நம் உயிரையும் காக்கும்.

சிக்னலில் இறங்கி நடக்கச் சொல்லுவது,

லெவல் crossing இல் இறங்கி நடக்கச் சொல்லுவது

ரொம்பவும் பிடிக்கும் இவருக்கு! எத்தனை ரிஸ்க் அது!

அன்று சிக்னலில் இறங்கி நடந்து அடுத்த பக்கம்

போய் நிற்கச் சொன்னார் என்னிடம்.

தட தட வென்று யமஹா யமன் போல வந்தது. :scared:

தூக்கியடித்து எங்கோ போய் விழப் போகிறேன்!

முருகன் பெயரைச் சொன்னால் மோக்ஷம் கிடைக்கும்.

"முருகா! முருகா!" என்று ஜபம் செய்யத் தொடங்கினேன்.:pray:

அவ்வளவு அருகில் வந்து வண்டியை நிறுத்தினான் அவன்.

நான் நடந்து வந்ததை அவன் பார்த்து இருக்க முடியாது.

அங்கே அவ்வளவு விரைவாக வரவேண்டிய அவசியம்?

அன்று நான் உடுத்தி இருந்தது வெள்ளை நிற ஆடைகள்

அவையே அன்று என் உயிரைக் காத்தன போலும். :hail:

 
These days many Toddy shops have been opened particularly for the people to
enjoy their life in the evenings after their day long hard work, perhaps it is the
purpose of their life which gives great happiness to them and they do forget themselves
at times about indigestible stuff served along with the Nasha.

Balasubramanian
Ambattur
 
# 350. மறக்க முடியாத ஆன்ட்டீ !

அவர்கள் கிரௌண்ட் ஃப்ளோரில் குடி இருந்தனர்.

அந்த ஆன்ட்டீ தன் மகன்களுடன் தங்கி இருந்தார்.

பெரிய மகனின் பெண் வயதிலேயே இவருக்கும் ஒரு மகன்.

அவன் என் மகன்களின் நல்ல நண்பன். :grouphug:

இவர்களோடு இருப்பான்.

எங்கள் வீட்டிலே சாப்பிடுவான்.

வேறுபாடு பார்ப்பதில்லை.

அந்த ஆன்ட்டீயின் வயிற்றில் ஒரு நீர்க்கட்டி.

அது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக

வளரத் தொடங்கியது. எவ்வளவு பாரமாக இருந்ததோ?

எவ்வளவு வலித்ததோ தெரியாது. பாவம்! :tsk:

ஒரு நாள் ஒரு தடவை கூட அலுத்துக் கொண்டதோ

சலித்துக் கொண்டது கிடையாது அதைப் பற்றி. :hand:

நடன நிகழ்சிகள் அவருக்கு மிகவும் பிடிக்கும்

என் மாணவிகளின் நடன நிகழ்ச்சி என்றால்

அதைத் தவறவிடவே மாட்டார்.

முதல் வரிசையில் அமர்ந்து பார்த்து மகிழ்வார்.

எத்தனையோ பிரச்சனைகள், நோய்கள், வலிகள் வந்தாலும்

அதைப் பொறுத்துக் கொள்ளும் அவரது மனோபாவமும்

மனோ பலமும் என்னால் என்றுமே மறக்கமுடியாது!
:clap2:
 
# 351. "நீயே செக் பண்ணு!"

என் நண்பியின் மாமியார் எது வாங்கினாலும்,

"நீயே செக் பண்ணு!" என்ற அவளிடம் கூறுவார்.

"போணி பண்ணுங்க!" என்று

என்னிடம் சிலர் வருவது உண்டு

வாங்காவிட்டால் விடவே மாட்டார்கள்.

அதுவும் அவர்கள் சொல்லும் விலைக்கே வாங்க வேண்டும்.

அது ஒரு வகை அன்புத் தொல்லை.

இதுவும் அதோ போன்ற ஒரு அன்புத் தொல்லை

என்றே நான் எண்ணிக் கொண்டு இருந்தேன்.

மாமியாருக்கு மாட்டுப் பெண்ணிடம்

இவ்வளவு அபிமானமா? :love:

அன்று காஸ் ஸ்டவ் ரிப்பேர் ஆகி வந்தது.

வழக்கம் போல "நீயே செக் பண்ணு!" என்றார் மாமியார்.

"நீங்களும் செக் பண்ணலாமே மாமி.

அவளே தான் எல்லாம் செய்யவேண்டுமா?"

கேட்டேன் நான்.

உடனே உண்மையான பதில் வந்தது....:heh:

"ஹும்! அது வெடிச்சு நான் செத்து போனேன்னா??" :shocked:

என்ன தாராளம் எவரோ பெற்ற மகள் போகலாமாம்!

இந்தக் கிழம் மட்டும் சாஸ்வதமாக இருக்க வேண்டுமாம்!

"நீயே பண்ணு!" என்று எப்போதும் முன்னுரிமை அளிப்பது

தன்னைக் காத்துக் கொள்ளவே. அறியுங்கள் பெண்களே!:horn:

 
wow, that is scary, your near accidents.. be careful please, You are right, you should wear a yellow or white based sari or salwar when traveling at night.. specially if you are on a two wheeler or walking.. god bless you.. :)
 
dear subha,
I guess I am accident-prone! :llama:
But God has been very kind to me :hail:
and makes me bounce up safely every time I fall down, :)
without breaking any bones or joints! :pray:


 
Life is the sum total of ups and downs. Some have inferiority complex, perhaps
it is their own thought process but one cannot make another person inferior without his/her
knowledge.

Balasubramanian
Ambattur
 
God is Heaven's bell boy. :angel:

You only have to ring the bell to get his help. :pray:

I have seen and felt the manifestation of God in many forms and ages.

Surely is He were to appear wielding the gadha, conch and discuss,
we will give up the ghost out of sheer excitement.

So He appears in a human form, helps and again disappears. :roll:

"Daivam maanusha roopeNa." :hail:

I am glad that god is watching you, so he protects you at the right time.. :) I am happy he is.. :)
 
# 352. சிக்கன் குனியா.

சரியான (தவறான???) சமயத்தில் வந்தது

சிக்கன் குனியா எங்கள் இருவருக்கும்.

இளைய மகனின் கல்யாணம் நெருங்குகையில்

கல்யாண வேலைகளை பாதிப்பதற்கென்று!

முதலில் இவருக்கு திடீரென வந்தது.

சில மணி நேரம் கழித்து திடீரென எனக்கு.

உடலைப் பிழிவது போல ஒரு செமை வலி.

பிழிந்தால் ஜூஸ் போல வலி வழிந்திருக்குமோ என்னவோ?

ஒரு வேலையும் செய்ய முடியவில்லை.

பற்பசையைக் கூட பிதுக்க முடியவில்லை.

சமய சஞ்சீவியாக அக்கா வந்து தங்கி உதவினார்.

இல்லை என்றால் வீடும், நாங்களும்

என்ன ஆகி இருப்போமோ? :scared:

பிறகு குடும்பவாத்தியார் நலம் விசாரித்தார்.

அவர் சொன்னார், "நீங்கள் எவ்வளவோ தேவலை.

அங்கே ஒரு மாமி கையைக் கூட இறக்க முடியாமல்

ரொம்பவும் கஷ்டப் படுகிறார் பாவம்!"

நான் கேட்டேன், "மாமியுடன் யார் யார் இருக்கிறார்கள்?"

"மொத்தப் பரிவாரமும், மாட்டுப்பெண் உட்பட!"

"அவர் கை என்றைக்குமே கீழே வராது!

அதற்கு அவசியமும் இராது!" என்றேன்.

வேலை செய்ய மாட்டு
ப் பெண் இருந்தால்

வாழ்நாள் முழுவது சிக்கன் குனியாவைப் பற்றி

வாய் கிழியப் பேசியே காலத்தைக் கழித்துவிடலாமே!

வேலை செய்யவும் சொல்லமாட்டார்கள்.

வேலை செய்யவேண்டும் என்று

யாரும் எதிர்பார்க்கவும் மாட்டார்கள்!


ஹாய்! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
icon3.png


தெலுங்கில் ஒரு பழமொழி சொல்வார்கள்.

"kodalu raagaane mancham ekkindhi" :couch2:

"மாட்டுப் பெண் வந்தவுடனேயே

படுத்த படுக்கை ஆகிவிட்டாள்!"

இப்போது புரிகிறதா எப்போது தப்பாமல்

மாட்டுப் பெண் = மாட்டிய பெண் என்று

நான் ஏன் சொல்கின்றேன் என்று? :rolleyes:

 
Last edited:
# 353. உபவாசம்?

உபவாசம் என்றால் உண்மையில் என்ன???


இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதிச் செய்யுஞ் சாதனை.

விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல்

அல்லது உணவை விடுத்தல் என பொருள்படும்.

உபவாசம், நோன்பு என்பன தொடர்புடைய சொற்களாகும்.

உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல்

என்ற அழகிய பொருளைத் தரும். :angel:

மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு,

உணவை விடுத்தெனுஞ் சுருக்கியேனும்

மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும்

கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதமாகும்.

(ஆறுமுக நாவலர்)


எனக்குத் தெரிந்த சிலர் நன்றாக உண்பதே

உபவாசத்தின்போது மட்டும் தான்!

அடுக்கு நிறைய வெல்லம் போட்ட

பால் விட்ட பருப்புக் கஞ்சி. :hungry:

அடுக்கடுக்காக வெல்ல தோசைகள் :popcorn:

ஒரு மாதத்துக்குத் தாக்குப் பிடிக்கும்

அன்று ஒரு நாள் அவர்கள் உண்பது.

இதன் பெயர் உபவாசமா? :rolleyes:

 
# 354. நாகுலசதுர்த்தி.

ஆந்திராவில் மிகவும் பிரசித்தம் நகுல சதுர்த்தி.

முட்டை, பால், மஞ்சள், குங்குமம் போன்ற பொருட்களுடன்

பெண்கள் தேடிச் செல்வர் பாம்புப் புற்றுகளை. :flock:

எண்ணி எத்தனையோ
முறை அழைத்தும்

நான் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டேன்!

நம் தெய்வங்கள் அனைவரிடமும் உள்ளன நாகங்கள்.

விநாயகரின் இடுப்பில் கச்சையாக,

முருகனின் மயில் கால்களில் வளையமாக,

சிவன் கழுத்தில் அழகிய மாலையாக,

விஷ்ணுவின் முதல் முதல் ஃபோம் படுக்கையாக... :couch2:

இத்தனையையும் விடுத்துப் புற்றைத் தேடித் போவானேன்?

அந்தப் பெண்களிடம் தான் என்ன மன உறுதி.

வருடம் தவறாமல் சென்று வழிபடுவார்கள்.

விரதம் இருப்பார்கள், மயங்கி விழுவார்கள். :faint:

ஆனால் பூஜை செய்வதை நிறுத்த மாட்டார்கள். :nono:

 
# 355. சிவராத்திரி.

சிவராத்திரி கண் விழித்தால் மட்டும் போதாது.

அடுத்தநாள் ராத்திரி வரை தூங்கக் கூடாது.

ஆந்திராவில் கடைப் பிடிப்பார்கள் இதை.

அன்று பகல் பட்டினியுடன் சென்று

பெரிய Q வில்நின்று

மயங்கி விழுந்து, எழுந்து, :faint:

பூஜை செய்து, இராக் கண் விழித்து ...

அன்று விடிய விடிய திரைப் படங்கள்.

எல்லாம் கடவுள்களை பற்றியவை தாம்.

அவர்கள் எல்லோரும் கண் விழித்துப் பார்ப்பார்கள்.

அடுத்த நாள் எப்போதும் போல ஆபீஸ் செல்வார்கள்.

இது என்ன பெரிய அதிசயம்? :shocked:

அவர்கள் கல்யாண முஹூர்த்தமே நள்ளிரவில் தானே!

சாந்தி முஹூர்த்தத்துக்கு திருமண ஜோடி

அடுத்த நாள் இரவு வரை காத்திருப்பர்களா??? :rolleyes:

தெரிந்தவர்கள் சொல்லலாமே!
:welcome:
 
# 356. ஒரு விரதம் = ?

அவர் உடல் ஒரு சர்க்கரை தொழிற்சாலை.

மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் நாள் தவறாமல்.

அதற்கு முன்பு உணவு உண்ண வேண்டும்

வேளை தவறாமல். :hungry:

எல்லாம் தெரிந்திருந்தும் குருவாயூர் ஏகாதசி உபவாசம்.

துவாதசி பாரணையும் செய்ய வில்லை.

பலன்.... அரை மயக்கம், hypoglycemia. :faint:

ஆம்புலன்ஸ் வந்தால் ஏற மறுக்கிறார்!

ஆம்புலன்ஸ் சென்ற பிறகு

மறுபடி வரச் சொல்கிறார்.

ஒரு வழியாகக் கொண்டு நர்சிங்ஹோமில்

சேர்த்தினார்கள்.

மூன்று பாட்டில் க்ளுகோசு ஏற்றிவிட்டு

அடுத்தநாள் discharge செய்தனர்

பில் ஐயாயிரம் ரூபாய் பழுத்தது.

நான் சொன்னேன் அவரிடம்,

"விரதத்துக்குப் பதிலாக இந்தத் தொகையை

குருவாயூர் உண்டியில் போட்டிருந்தால்

எத்தனை நல்ல காரியங்களுக்குப் பயன்படும்!"

ஒரு விரதம் = ரூபாய் ஐயாயிரம்!!!
:shocked:
 
# 357. ஒரு உண்மைக் கதை.

அவர் பெயர் வித்தியாசமாகத் தோன்றியது

அதன் பின்புலக் கதை நிச்சயம் வித்தியாசமானது.

அவர் அன்னை பூரண கர்பிணி. :preggers:

கர்ப்பத்தில் இருந்தது சாக்ஷாத் நம் கதையின் ஹீரோவே தான்.

அன்று உறங்கும் அவர் தந்தைக்கும், அன்னைக்கும் இடையே

படுத்துக் குஷாலாக உறங்கியதாம் ஒரு பெரிய நாகம்!:sleep:

அடுத்தநாள் எந்தத் தீங்கும் செய்யாமல்

அது சென்றபோது அதைப் பார்த்த அவர்கள்

அதை வணங்கி வழிபட்டனர். :pray:

அதன் நன்றிக்கு அடையாளமாக அவர்கள்

அவருக்குப் இட்ட பெயர் நாகராஜன்!

பாம்புகள் cold blooded animals அல்லவா???

அதன் குளிர்ச்சியும், இவர்களின் சூடும்

ஒருவர் மற்றவருக்குத் தேவைப்பட்டதா?

பயத்தில் அந்தப் பெண்ணின் கர்ப்பம்

எப்படிக் கலங்காமல் இருந்தது???

கேட்
கும் எனக்கே மயிர்க்கூச்செறிந்தது!!! :scared:
 
Last edited:
Good news for a few ( who do not approve of these homilies) and bad news for those who want more and more of these.

This series "Sinthaiyil nirkkum vinathai manithargal" will be completed on 13th inst.

Thereafter the pondering and the wondering will be done in a single new thread "Think it over!"

Thank you for the continued support (and the opposition which works even better than the support as far as I am concerned) :pray2:
 
Last edited:
Copy+paste job from a forwarded email:

Forwarded email...

Ashok, a fresh computer graduate from a world-class University, goes for an interview in a software company.

The interviewer is Sunder, a grubby old man. And the first question he asks Ashok is, `Are you good at logic?'

`Of course,' replies Ashok.

`Let me test you,' replies Sunder. `Two men come down a chimney. One comes with a clean face and the other comes out with a dirty face. Which one would wash his face?'

Ashok stares at Sunder. `Is that a test in Logic?' Sunder nods.

`The one with the dirty face washes his face', Ashok answers wearily.

`Wrong. The one with the clean face washes his face. Examine the simple logic. The one with the dirty face looks at the one with the clean face and thinks his face is clean. The one with the clean face looks at the one with the dirty face and thinks his face is dirty. So, the one with the clean face washes his face.'

`Hmm. I never thought of that," says Ashok. `Give me another test.'

Sunder holds up two fingers, `Two men come down a chimney. One comes out with a clean face and the other comes out with a dirty face. Which one washes his face?'

`We have already established that. The one with the clean face washes his face.'

`Wrong. Each one washes one's face. Examine the simple logic. The one with the dirty face looks at the one with the clean face and thinks his face is clean. The one with the clean face looks at the one with the dirty face and thinks his face is dirty. So, the one with the clean face washes his face. When the one with the dirty face sees the one with the clean face washing his face, he also washes his face. So each one washes one's face.'


`I didn't think of that!' says Ashok. `It's shocking to me that I could make an error in logic. Test me again!'


Sunder holds up two fingers, `Two men come down a chimney. One comes out with a clean face and the other comes out with a dirty face. Which one washes his face?'

`Each one washes his face.'

`Wrong. Neither one washes his face. Examine the simple logic. The one with the dirty face looks at the one with the clean face and thinks his face is clean. The one with the clean face looks at the one with the dirty face and thinks his face is dirty. But when the one with clean face sees that the one with the dirty face doesn't wash his face, he also doesn't wash his face. So neither one washes his face.'

Ashok is desperate. `I am qualified for this job. Please give me one more test!'

He groans when Sunder lifts his two fingers, `Two men come down a chimney. One comes out with a clean face and the other comes out with a dirty face. Which one washes his face?'

`Neither one washes his face', Ashok replies, `I have learnt this logic.'

`Wrong, again. Do you now see, Ashok, why programming knowledge is insufficient for this job? Tell me, how is it possible for two men to come down the same chimney, and for one to come out with a clean face and the other with a dirty face? Don't you see the flaw in the premise?'"
 
Now I know why you were absconding!!!:bolt:

So you needed so many days to get this copy pasted??? :rolleyes:

But it is possible that the first man who is an XXL takes on all the soot on himself and the second fellow a lanky-panky with a pointed face comes in with a clean face.

But why did they have to come down the chimney??? :confused:

Once inside the house (for stealing or some other unlawful activity) why did they not attend to the job at hand and wasted time in washing their faces?
:crazy:
 
I had been wondering and pondering about the success of the series that will be completed soon
(fondly called as homilies by my opponents).

What was so special about it???

They were everyday events - may be with a moral or an insight into human mind.

Later it dawned on me!!!

In forum where a handful of people are willing to give their real name, real photo and real profile, it must have been very unusual to give one's JATAKAM as well life's true experiences.

It is the truth, the reality that had touched the hearts of people - much more than the morals or insights involved.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top