# 325. Feeding the baby.
Air hostess குழந்தைக்கு உணவு கொடுப்பதை வெறுத்தாள்.
வயிற்றில் ஒரு ஜிப் வைத்துக் கொடுத்திருந்தால்,
சந்தோஷமாக கலக்கிய உணவை உள்ளே கொட்டி,
ஜிப்பைப் போட்டுவிட்டு,
போய்க்கொண்டே இருந்திருப்பாள் போல!
தினமும் குழந்தை வீல் வீல் என்று அலறுவான். :Cry:
இவள் திட்டும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்கும்.
என்ன தான் நடக்கிறது என்று ஒரு நாள் சென்று பார்த்தால்,
தொடைக்கு அடியில் அவனை இடுக்கிக் கொண்டு,
அவன் மூக்கைப் பிடித்துக் கொண்டு
வாயில் ஊற்றி விழுங்க வைக்கிறாள். :scared:
ஒரு நாள் என்னிடம் வந்தாள்,
"இன்று மட்டும் நீங்கள் கொடுங்கள்!"
கையில் ஒரு பெரிய கிண்ணம் அல்லது சின்ன பௌல் .
அதில் பீட்ரூட் கலரில் மைதாப் பசைபோல ஒரு சாதனம்.
"இது என்ன?" என்றால் அவள் சொல்கிறாள்,
" காய்கறிகளை அரைத்து அதில் சோற்றையும் குழைத்தது!
நான் கேட்டேன் அவளிடம்,
"உன்னால் இதைச் சாப்பிட முடியுமா?"
'நான் என் இதைச் சாப்பிட வேண்டும்?" என்றாள்.
"உணவு உண்பது ஒன்று தான் ஆயுள் முழுக்க நடக்கும் ஒன்று.
அந்த நேரத்தை இனிமையானதாக, சுவையானதாக
enjoyable ஆக்க வேண்டும்" :dance:
என் வீட்டில் இருந்த சாதத்தில் பருப்பும் நெய்யும்
போட்டுப் பிசைந்து கொஞ்சம் தெளிவாக
ரசம் கலந்து கொடுத்தால் கபகப என்று உண்கின்றான்!
"நீங்களே இனி தினமும் சாப்பிட வைத்து விடுங்கள்!"
என்றாள்.
"உன் வேலையை நீதான் செய்ய வேண்டும் பெண்ணே!
அம்மா என்று அவன் உன்னிடமே உண்ண விரும்புவான்!"
அவளுக்கு மனதே இல்லை,
off load பண்ணலாம் என்று இருந்தாள்!
அப்பாவின் அறிவுரை நினைவுக்கு வந்தது!
"உதவி செய்யலாம் ஆனால் ஏமாளி ஆகக்கூடாது!" :nono: