Kedhara Gauri Viratham - Detailed Procedure explanation

பதினாறு பேறுகள் தரும் கௌரி வடிவங்கள் 25-10-2022

தீபாவளிக்கு மறுதினம் சுமங்கலிப் பெண்கள் “கேதார கௌரி விரதம்” அனுஷ்டிப்பது வழக்கம். மகாகௌரியான அம்பிகை சிவபெருமானின் முழு அருளையும் அன்பையும் பெற 21 நாட்கள் விரதம் மேற்கொண்டாள். அதுவே கேதாரீஸ்வரர் விரதம் அல்லது கேதார கௌரி விரதம் என்று போற்றப்படுகிறது.


அதன் பயனாக ஈசன் உடலில் சரிபாதியைப் பெற்றாள் அம்பிகை. இந்த விரதத்தை பெண்கள் மேற்கொண்டால் கணவனின் முழு அன்பைப் பெறுவதுடன், பதினாறு பேறுகளையும் பெற்று வாழலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. அம்பிகையை 16 வடிவங்களாகப் போற்றி, சோடசகௌரி வழிபாடு செய்தால் சகல பாக்கியங்களையும் பெறலாம் என்கிறது ஸ்கந்த புராணம்.

ஆதிபராசக்தியின் வழிபாடே உலகில் தோன்றிய முதல் வழிபாடாகும். ஆதியில் அன்னை, பரமசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளிபோல் வெண்மையான வடிவில் தோன்றி, பெண் வடிவில் திகழ்ந்தாள். பேரண்டங்களையும் உலகங்களையும், அவற்றில் உயிர்த் தொகுதிகளையும் உண்டாக்கினாள். உயிர்களுக்கு அருள்புரிய மலைகளின் மீது வந்து தங்கினாள். அவள் மெல்லிய பனி போன்ற வெண்மையான வண்ணத்துடன் இருந்ததாலும், மலை(கிரி)களில் வந்து தங்கியதாலும் “கெளரி என்று அழைக்கப் பட்டாள் (வெண்மை நிறத்தைக் கெளர வர்ணம் என அழைப்பர்).


ஸ்ரீ கெளரி தேவியை வழிபடுவது உலகிலுள்ள அனைத்து தேவ, தேவியர்களையும் வழிபடுவதற்குச் சமமாகும். அவள் சிவனிடம் உமையாகவும், திருமாலிடம் லட்சுமியாகவும், பிரம்மனிடத்தில் சரஸ்வதியாகவும் விளங்குகிறாள். இவ்வாறே வேளாண்மை செய்பவர்களிடம் செளபாக்ய கெளரி; வணிகர்களிடத்தில் சுவர்ண கெளரி; வீரர்களிடத்தில் ஜெயகெளரி, ஞானிகளிடத்தில் ஞானேஸ்வரி, அரசர்களிடத்தில் சாம்ராஜ்ய மஹாகெளரி என்று பல்வேறு வடிவங்கள் தாங்கி உலகெங்கும் நிறைந்திருக்கின்றாள்.



01 ஸ்ரீ ஞான கௌரி

“உலக உயிர்களுக்கு சக்தி கொடுப்பது நானே” என்று சிவபெருமானிடம் வாதிட்டாள் சக்திதேவி. உடனே சிவபெருமான் உலக உயிர்களின் அறிவை ஒரு கணம் நீக்கினார். அதனால் உலக இயக்கம் நின்று பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதைக்கண்ட தேவி, உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்பதை உணர்ந்து இறைவனைப் பணிந்தாள். பின்னர் இறைவன் மீண்டும் உலக உயிர்களுக்கு ஞானமளித்து, அறிவின் திறனை தேவி உணரும்படி செய்தார். தன் நாயகனிடம் வாதிட்டதால் ஏற்பட்ட தோஷம் நீங்க வன்னி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்தாள் அம்பிகை. அவளது தவத்தினைப் போற்றிய இறைவன், தன் உடலில் பாதியை அளித்து அறிவின் அரசியாக்கினார். எனவே ஞான கௌரி என்று போற்றப்பட்டாள். சிவாலயங்களில் அமைந்துள்ள அம்பாள் சந்நிதியில் அருள்புரியும் அம்பிகையை, ஞான கௌரியாக மனதில் நினைத்து வழிபட்டால் ஞானம் பெருகும், எண்ணியது நிறைவேறும். விஜயதசமியில் வழிபட கூடுதல் பலன் கிட்டும்.

02 ஸ்ரீ அமிர்த கௌரி


உலகில் வாழும் உயிர்களுக்கு வளமான வாழ்வையும் ஆயுளையும் தருவது அமிர்தம். மிருத்யுஞ்ஜயரான இறைவனின் தேவியானதால் கௌரிக்கு அமிர்த கௌரி என்று பெயர். இந்த தேவியை வழிபடுவதால் ஆயுள் மற்றும் வம்சம் விருத்தியாகும். இந்த கௌரி அருள்பாலிக்கும் தலம் திருக்கடவூர் ஆகும். திருக்கடவூர் அபிராமி “அமிர்த கௌரி” என்று போற்றப்படுகிறாள்.

03 ஸ்ரீ சுமித்ரா கௌரி


இறைவனின் உடலில் பாதி இடத்தைப் பிடித்த தேவி, அவரைப் போலவே உயிர்களுக்கு உற்ற தோழியாகத் திகழ்வதால் சினேகவல்லி என்று போற்றப்படுகிறாள். தேவகோட்டைக்கு அருகிலுள்ள திருவாடனைத் திருத்தலத்தில் அருள்புரியும் அம்பிகைக்கு “சினேகவல்லி” என்று பெயர். இந்த அன்னையை வடமொழியில் ஸ்ரீ சுமித்ரா கௌரி என்று போற்றுவர். இவளை வழிபட நல்ல சுற்றமும் நட்பும் கிட்டும்.

04 ஸ்ரீ சம்பத் கௌரி


வாழ்வதற்கு மிகவும் அவசியமானது உணவு, உடை, உறைவிடம். இவற்றை “சம்பத்” என்பர். அந்தக் காலத்தில் பசுக்களும் உயர்ந்த செல்வமாகப் போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்புரிபவள் ஸ்ரீ சம்பத் கௌரி. இந்த அம்பிகை பசுவாக உருவெடுத்து சிவபூஜை செய்த திருத்தலங்கள் உண்டு. எனவே கோமதி, ஆவுடை நாயகி என்றும் போற்றுவர். இந்த கௌரியை திருச்சிக்கு அருகில் உள்ள துறையூர் தலத்தில் சம்பத் கௌரி உடனாய நந்தீஸ்வரர் கோவிலில் தரிசிக்கலாம். மேலும், காசி ஸ்ரீ அன்ன பூரணியையும் மகாமங்கள கௌரி, சம்பத் கௌரி என்று போற்றுவர். இந்த தேவியை வழிபட செல்வ வளம் பெருகும்.

05 ஸ்ரீ யோக கௌரி


யோக வித்தைகளின் தலைவியாக ஸ்ரீ மகா கௌரி திகழ்கிறாள். இவளையே யோக கௌரி என்றும் போற்றுவர். யோகங்களை வழங்கும் அம்பிகை யோகாம்பிகை; யோக கௌரி எனப்படுகிறாள். திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோவிலில் எழுந்தருளியுள்ள கமலாம்பிகையே யோக கௌரி ஆவாள். திரிபங்க ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அற்புதமான திருக்கோலம். அங்கு அருள்புரியும் தியாகராஜரின் ரகசியங்கள் யோக வித்தை எனப்படுகின்றன. இந்த ரகசியங்கள் அனைத்தும் அறிந்தவள் யோக கௌரியான கமலாம்பிகை. இந்த தேவியை வழிபட யோகா, கல்வி, இசை சம்பந்தமான கலைகளில் சிறந்து விளங்கலாம்.

06 ஸ்ரீ வஜ்ரச்ருங்கல கௌரி


உறுதியான, ஆரோக்கியமான உடலை “வஜ்ரதேகம்” என்பர். அத்தகைய உடலை உயிர்களுக்குத் தரும் தேவியே ஸ்ரீ வஜ்ரச்ருங்கல கௌரி என்று போற்றப்படுகிறாள். கருட வாகனத்தில் பவனி வரும் இந்த கௌரி சக்கரம், கத்தி ஆகியவற்றுடன் நீண்ட சங்கிலியையும் கையில் ஏந்தியிருப்பாள். (“ச்ருங்கலம்” என்பதற்கு சங்கிலி என்று பொருள்.) வைரமயமான சங்கிலியைத் தாங்கியிருப்பதால் வஜ்ரச்ருங்கல கௌரி என்பர். சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூர் தலத்தில் அருள்புரியும் வடிவுடையம்மனே இந்த கௌரியாகத் திகழ்கிறாள். இந்த அன்னையை வழிபட உடல் உறுதியாகத் திகழும்; வலுவுடன் காட்சி தரும்.

07 ஸ்ரீ த்ரைலோக்ய மோகன கௌரி


மனதிற்கு உற்சாகத்தையும், உடலுக்கு தெய்வீக சக்தியையும் அளிக்கும் சக்தி கொண்டவள். காசியில் நளகூபரேஸ்வரர் கோவிலுக்கு மேற்குப் பக்கத்திலுள்ள குப்ஜாம்பரேசுவரர் சிவாலயத்தில் இந்த தேவிக்கு தனிச்சந்நிதி உள்ளது. தமிழகத்தில், திருநெல்வேலியிலுள்ள நவகயிலாயங்களுள் முதல் தலமான பாபநாசத்தில் அருள்புரியும் உலகம்மை எனும் விமலை சக்தியே த்ரைலோக்ய மோகன கௌரியாகப் போற்றப்படுகிறாள். கிரக தோஷங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை நீக்கி மகிழ்ச்சியைத் தருபவள். பெண்கள் தீர்க்கசுமங்கலியாக- மகிழ்வுடன் வாழ அருள்பவள்.

08 ஸ்ரீ சுயம்வர கௌரி


சிவபெருமானை தன் மணாளனாக எண்ணியவாறு நடந்து செல்லும் கோலத்தில் காட்சி தருபவள். மயிலாடுதுறை- திருவாரூர் வழியிலுள்ள திருவீழிமிழலை அம்மையை சுயம்வர கௌரிஎன்பர். இவளை வழிபட மனதிற்குப் பிடித்த மணாளன் அமைவார்.

09 ஸ்ரீ கஜ கௌரி


காசி அன்னபூரணி ஆலயத்தில் ஸ்ரீ கஜ கௌரிக்கு தனிச்சந்நிதி உள்ளது. தமிழகத்தில், ராமேஸ்வரத்தில் அருள்புரியும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அன்னையே கஜ கௌரியாகப் போற்றப்படுகிறாள். இந்த தேவியை வணங்கினால் குழந்தைச் செல்வம் கிட்டும்; வம்சம் விருத்தியாகும்.

10 ஸ்ரீ விஜய கௌரி


நற்செயலால் ஒருவன் பெரிய அந்தஸ்தை அடைந்திருந்தாலும், அதன் முழுப்பயனையும் அனுபவிக்கச் செய்பவள் ஸ்ரீ விஜய கௌரி. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் – ஸ்ரீ வண்டார்குழலி ஆலயத்தில் மகாகாளி அருள்புரிகிறாள். இத்தலத்திற்கு வருபவர்கள் முதலில் இந்த தேவியை வழிபட்ட பின்தான் இறைவனை வழிபட வேண்டும். இது இறைவன் தந்த வரம் என்பதால் இந்த காளி விஜய கௌரி எனப்படுகிறாள். இறைவனுடன் போட்டி நடனமாடிய இந்த தேவியை வழிபட்டால் எதிலும் வெற்றி கிட்டும்; பகைவர்கள் விலகுவர்.

11 ஸ்ரீ சத்யவீர கௌரி


கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர்களுக்கு உறுதுணையாக இருப்பவள் இந்த அன்னை. நாகை மாவட்டம் திருவெண்காட்டில், ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரருடன் இணைந்து அருள்புரிகிறாள் பிரம்ம வித்யாம்பிகை. இத்தேவியை வழிபட கொடுத்த வாக்கினைக் காப்பாற்றும் திறன் கிட்டும்; இந்த தேவியை வழிபட்டால் பூர்வஜென்ம பாவங்கள் நீங்கும்.

12 ஸ்ரீ வரதான கௌரி


வள்ளல் மனம் கொண்டவர்களுக்கு அருள்புரிபவள் இந்த அன்னை. பரந்தமனம் கொண்டவர்கள் விரும்பும் வரங்களை தானமாக வழங்குவதால் இவள் ஸ்ரீ வரதான கௌரி என்று போற்றப்படுகிறாள். திருவையாற்றில் அருள்புரியும் அறம்வளர்த்த நாயகியை வரதான கௌரி என்று போற்றுவர். இந்த தேவியை வழிபட்டால் கருமி கூட கொடைவள்ளல் ஆவான் என்பர்.


13 ஸ்ரீ சுவர்ண கௌரி

ஒரு பிரளய காலத்தின் முடிவில் கடலின் நடுவே சுவர்ணலிங்கம் தோன்றியது. இதனைக் கண்ட தேவர்கள் அதனைப் பூஜித்தார்கள். அப்போது அதிலிருந்து பொன்மயமாக ஈசனும், பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். எனவே, தேவியை சுவர்ணவல்லி என்று போற்றினார்கள். கும்பகோணம் ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலய மங்களாம்பிகையே சுவர்ண கௌரியாக விளங்குகிறாள். இவளை வழிபட குபேர வாழ்வு கிட்டும். குலதெய்வத்தின் அருளும் கிட்டும். இல்லத்தில் தங்க நகைகள் சேரும். தொழிலில் லாபம் கிடைக்க அருள்பவள்.


14 ஸ்ரீ சாம்ராஜ்ய மகாகௌரி

அன்பையும் வீரத்தையும் ஒருங்கே அருளும் தேவியாவாள். தலைமைப் பதவியைத் தரும் இவள் ராஜராஜேஸ்வரியாகவும் வழிபடப்படுகிறாள். இந்த தேவியின் அருள் இருந்தால் ராஜயோகம் கிட்டும். உயர் பதவிகள் தேடிவரும். மதுரை மீனாட்சியே சாம்ராஜ்ய மகாகௌரியாகப் போற்றப்படுகிறாள்.


15 ஸ்ரீ அசோக கௌரி

துன்பமற்ற வாழ்வைத் தருபவள் இவள். ஈரோடு மாவட்டம் பவானி திருத்தலத்தில் அருளும் வேதநாயகியே அசோக கௌரியாவாள் மகிழ்ச்சியான வாழ்வைத் தருவதால் அசோக கௌரி எனப்படுகிறாள். இந்த தேவியை வழிபட துன்பங்கள் நீங்கும்; சோகம் மறையும்; சுகமான வாழ்வு கிட்டும்.


16 ஸ்ரீ விஸ்வபுஜா மகாகௌரி

தீய சக்திகளை அழித்து நல்வினைப் பயன்களைத் தருபவள். தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, விருப்பங்களை நிறைவேற்றுவதால் மனோரத பூர்த்தி கௌரி என்றும் போற்றுவர். திருவிடைமருதூர் தலத்தில் விளங்கும் ஒப்பிலாமுலையாள் எனும் அதுல்ய குசலாம்பாள் அன்னையே மேற்சொன்ன கௌரியாகத் திகழ்கிறாள். இந்த தேவியை வழிபட்டால் வேண்டியது கிட்டும்.

“ஓம் ஸுபதாயை வித்மஹே

காம மாலின்யை தீமஹி

தன்னோ கெளரீ ப்ரசோதயாத்”


அம்பிகையான கௌரி பலவித திருப்பெயர்களில் எழுந்தருளியிருந்தாலும், பக்தியுடன் விரதம் மேற்கொண்டு மனதில் எண்ணி வழிபட்டாலே போதும்; பதினாறு செல்வங்களையும் தருவாள்





ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதாரகௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. இந்த விரதம் அனுஷ்டிப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதாரகௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. ஜோதிடவியலைப் பொறுத்த வரை ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது.

இந்த மாதம் முழுவதும் துலாம் ராசியில் சூரியன் நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பார். அதாவது தனது வலிமை முழுவதையும் இழந்த நிலையில் வாசம் செய்யும் காலம் இது.

சூரியனை தந்தைக்குரிய கிரகமாக பிதுர்காரகன் என்றும், சந்திரனை தாயாருக்கு உரிய கிரகமாக மாதுர்காரகன் என்றும் அழைப்பார்கள். சூரியனுக்குரிய பிரத்யதி தேவதை பரமேஸ்வரன். சந்திரனுக்குரிய பிரத்யதி தேவதை கௌரி.


நீசம் பெற்ற தந்தையாகிய சூரியனோடு தாயான சந்திரன் இணையும் காலம் ஐப்பசி அமாவாசை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக பலம் இழந்து நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கும் பிதுர்காரகன் சூரியனோடு சக்தியாகிய அன்னையின் அம்சமான சந்திரன் வந்து இணையும்போது சிவம் சக்தியைப் பெறுகிறது.

சிவசக்தி ஐக்கியமானது நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் கேதார கௌரி விரதத்தினைப் பூர்த்தி செய்து அன்னை பார்வதியானவள் சிவபெருமானின் உடம்பினில் சரிபாதியைப் பெற்று தனது உரிமையை நிலைநாட்டியதை புராணங்களின் வாயிலாக அறிகிறோம். சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும்.


அவ்வாறே குடும்பத்தில் கணவனின் வலிமை குறையும்போது மனைவியானவள் அவருக்குத் துணை நிற்க வேண்டும், அவ்வாறே கணவனும் தனது துணைவிக்கு சரிபாதி உரிமையைத் தரவேண்டும் என்பதை சூசகமாகச் சொல்வதே இந்த கேதார கௌரி விரதம்.

இதே கருத்தினையே தீபாவளிப் பண்டிகையும் அறிவுறுத்துகிறது. நாம் தீபாவளி கொண்டாடுவதன் அடிப்படை காரணமான நரகாசுர வதத்தினை எண்ணிப் பாருங்கள். கிருஷ்ண பகவான் நரகாசுர யுத்தத்தின் போது மூர்ச்சையாகிவிட்ட நிலையில்,

தேரை ஓட்டும் சாரதியாக உடனிருந்த பாமா (பூமாதேவியின் மறு அவதாரம் – நரகாசுரனின் தாய்) வில்லெடுத்து போரிட்டு நரகாசுரனை வதம் செய்கிறாள் அல்லவா… அதாவது தந்தையின் வலிமை குறையும்போது தாய் அப்பொறுப்பினை சுமந்து வெற்றி காண்கிறாள்.

குடும்பத்தில் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றியைக் காண இயலும் என்பதை புராணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. கேதார கௌரி விரதம் என்பதே கணவன்-மனைவி ஒற்றுமைக்காகவும்,

என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும். அதனை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நரகாசுர வதம் முந்த தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
 
கேதாரேஸ்வரர் விரதம்.:-





முதலில் ஆசமனம். விக்னேஸ்வர பூஜை செய்யவும். பிறகு ப்ரதான பூஜை.



வினேஸ்வர பூஜை;- சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபசாந்தயே.

ப்ராணாயாமம். ஸங்கல்பம்:- மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்ய மான கர்மண: நிர்விக்னேன பரி ஸமாப்தியர்த்தம் ஆதெள மஹா கணபதி பூஜாம் கரிஷ்யே.



பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையார் மீது புஷ்பம் போடவும். அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் மஹா கணபதிம் த்யாயாமி. ஆவாஹயாமி, ஆஸநம் ஸமர்ப்பயாமி; பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி. ஹஸ்தயோ: அர்க்கியம்

ஸமர்ப்பயாமி; ஆசமணியம் ஸமர்ப்பயாமி; மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி; பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்ப்பயாமி; ஸுத்தோதக ஸ்நானம் சமர்ப்பயாமி; ஸ்நானாந்திரம் ஆசமணியம் ஸமர்ப்பயாமி; வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி; உபவீதார்தம்

அக்ஷதான் ஸமர்ப்பயாமி; ஆபராணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி. கந்தாந்தாரயாமி; கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி; அக்ஷதான் ஸமர்ப்பயாமி; புஷ்ப மாலாம் ஸமர்ப்பயாமி; புஷ்பானி பூஜயாமி.



ஓம் ஸுமுகாய நம: ஓம் ஏக தந்தாயை நம: கபிலாய நம; கஜ கர்ணகாய நம;லம்போதரய நம: விகடாய நம: விக்ன ராஜாய நம:வி நாயகாய நம: தூம கேதுவே நம: கணாத்யக்ஷாய நம: பால சந்திராய நம: கஜானனாய நம: வக்ர துண்டாய நம:



ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம: மஹா கணபதயே நம: நா நா வித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி; தூப தீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.

நிவேதனம்:- ஓம் பூர்புவஸ்ஸுவ: ------தேவ ஸவி தப்ரஸவீ: ஸத்யம் த்வர்த்தேண பரிஷஞ்சயாமி; அம்ருதோபஸ் தரண மஸி. ப்ராணாயஸ்ஸுவா: அபானாயஸ்ஸுவா: வ்யானாயஸ்ஸுவாஹா; உதானாயஸ்ஸுவா: ஸமாணாயஸ்ஸுவா:



ப்ருஹ்மணேஸ்ஸுவாஹா ;கணபதயே நம: கதலி பலம் நிவேதயாமி. அம்ருதாபிதா நமஸி. பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லிர் தலைர்யுதம் கற்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். தாம்பூலம் ஸமர்ப்பயாமி; கற்பூர நீராஞ்சனம் ; மந்திர புஷ்பம் ஸமர்ப்பயாமி. ஸுவர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி; ஸர்வோபசாரான் ஸமர்ப்பயாமி.



வக்ர துண்ட மஹா காய ஸூர்ய கோடி ஸம ப்ரப அவிக்னம்குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.





ப்ரதான பூஜை.:-



ஶுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்சதுர்புஜம் . ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே.



ப்ராணாயாமம்.ஓம் பூ:; ஓம் புவ:; ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் ஸத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேயம், பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோயோன: ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸ: அம்ருதம் ப்ருஹ்ம ஓம் பூர்புவஸ்ஸுவரோம்.



ஸங்கல்பம்:- மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஶுபே ஶோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: தவிதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்ஶதீ தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூ த்வீபே



பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாஹன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே -------- நாம ஸம்வத்ஸரே -------- ருதெள -----------மாஸே----------பக்ஷே -------ஶுப திதெள-----------



-----------வாஸர யுக்தாயாம் ----------- நக்ஷத்ர யுக்தாயாம்------ சுப யோக சுப கரண யேவங்குண ஸகல விஶேஷேன விசிஷ்டாயாம் அஸ்யாம்--------- ஶுப திதெள அஸ்மாகம் ஸஹ குடும்பானாம்க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுர் ஆரோக்கிய ஐஸ்வர்யானாம் அபிவ்ருத்தியர்த்தம் தர்மார்த்த காம மோக்ஷ சதுர் வித பல புருஷார்த்த



ஸித்தியர்த்தம் புத்ரபெளத்ராதி அபிவ்ருத்தியர்த்தம் இஷ்ட காம்யார்த்த ஸித்தியர்த்தம் மனோவாஞ்சாபல ஸித்தியர்த்தம் கேதாரேஶ்வர வ்ரத புஜாம் கரிஷ்யே. அப உபஸ்பர்சியா.



விக்னேஸ்வரம் யதா ஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி. என்று கூறி மஞ்சள் பிள்ளையார் மீது புஷ்பம் அக்ஷதை சமர்ப்பித்து வடக்காக மஞ்சள் பிள்ளையாரை நகர்த்தி வைக்கவும்.



கலச பூஜை:- பஞ்ச பாத்டிர உத்திரிணி தீர்த்த பாத்திரதிற்கு சந்தனம், குங்குமம், அக்ஷதை ஆகிய வற்றால் அலங்கரித்து வலது கையால் மூடிக்கொண்டு கலஶஸ்ய முகே விஷ்ணு: கண்டே ருத்ர : ஸமாஶ்ரித:



மூலே தத்ர ஸ்திதோ ப்ருஹ்மா மத்யே மாத்ரு கணாஸ்ம்ருதா: குக்ஷெளது ஸாகரா: ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா. ருக் வேதோ அத யஜுர் வேதோ ஸாமவேதோ அப்யதர்வண . அங்கைஸ்ச ஸஹிதா ஸர்வே கலசாம்பு ஸமாஶ்ரிதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:



கங்கே ச யமுனேஸ் சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு. என்று ஜபித்து கலச தீர்த்தம் சிறிது எடுத்து பூஜா த்ரவியங்களையும், தன்னையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷணம் செய்து கொள்க.



சூலம் டமருகம் சைவ ததானம் ஹஸ்த யுக்மகே. கேதார தேவம் ஈசானம் த்யாயேத் த்ரிபுர காதினம். கேதாரேஸ்வரம் த்யாயாமி.

கைலாச சிகரே ரம்யே பார்வத்யா ஸஹித ப்ரபோ. அக்கச்ச தேவ தேவேஶ மத் பக்த்யா சந்த்ர சேகர. கேதாரேஸ்வரம் ஆவாஹயாமி.



ப்ராண ப்ரதிஷ்டை செய்யவும்.

ஸுராஸுர ஶிரோரத்ன ப்ரதீபித பதாம்புஜ. கேதார தேவ மத்தத்தம் ஆஸனம் ப்ரதிக்ருஹ்யதாம்.கேதாரேஸ்வராய ஆஸனம் ஸமர்ப்பயாமி.



கங்காதர நமஸ்தே அஸ்து த்ரிலோசன வ்ருஷத்வஜ. மெளக்திகாஸன ஸம்ஸ்தாய கேதாராய நமோ நம:கேதாரெஸ்வராய பாத்யம் ஸமர்ப்பயாமி.



அர்க்கியம் க்ருஹான பகவன் பக்த்யா தத்தம் மகேஶ்வர. ப்ரயஸ்சமே மனஸ்துஷ்டிம் பக்தானாம் இஷ்ட தாயக. கேதாரேஸ்வராய அர்க்கியம் ஸமர்ப்பயாமி.



முனிபிர் நாரதப்ரக்யைர் நித்யமாக்யாத வைபவ. கேதார தேவ பகவன் க்ருஹானா ஆசமனம் விபோ. கேதாரேஸ்வராய ஆசமனீயம் ஸமர்ப்பயாமி.



கேதாரதேவ பகவன் ஸர்வலோகேஸ்வர ப்ரபோ மதுபர்க்கம் ப்ரதாஸ்யாமி க்ருஹாணத்வம் ஶுபங்கர. கேதாரேஸ்வராய மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.



ஸ்நானம் பஞ்சாம்ருதைர் தேவ ஶ்ரிதம் ஶுத்தோதகைரபி. க்ருஹாண கெளரி ரமண த்வத் பக்தேன மயார்ப்பிதம். கேதாரேஸ்வராய பஞ்சாம்ருத ஸ்நானம் சமர்ப்பயாமி.



நதீ ஜலம் ஸமாயுக்தம் மயா தத்தமனுத்தமம்.ஸ்நானம் ஸ்வீகுரு தேவேச சதாசிவ நமோஸ்துதே.கேதாரேஸ்வராய ஸுத்தோதக ஸ்நானம் ஸமர்ப்பயாமி.



வஸ்த்ரயுக்மம் ஸதா ஶுப்ரம் மனோஹரமிதம் ஶுபம். ததாமி தேவ தேவேச பக்த்யேதம் ப்ரதிக்ருஹ்யதாம். கேதாரேஶ்வராய வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி.



ஸ்வர்ண யக்ஞோபவீதம் ச காஞ்சனம் சோத்தரீயகம். ருத்ராக்ஷ மாலயா யுக்தம் ததாமி ஸ்வீகுரு ப்ரபோ. கேதாரேஸ்வராய யக்ஞோபவீதோத்தரீயே ஸமர்ப்பயாமி.



ஸமஸ்த கந்தர்வபாணாம் தேவ த்வமஸி ஜன்மபூ: பக்த்யா ஸமர்ப்பிதம் ப்ரீத்யா மயா கந்தாதி க்ருஹ்யதாம்.கேதாரேஸ்வராய கந்தாந் தாரயாமி.



அக்ஷதோபி ஸ்வபாவேன பக்தானாமக்ஷதம் பதம். ததாஸி நாத . மத்தத்தை: அக்ஷதை: ப்ரீயதாம் பவான். கேதாரேஸ்வராய அக்ஷதான் ஸமர்ப்பயாமி.



கல்ப வ்ருக்ஷ ப்ரஸூனைஸ்த்வ மப்யர்ச்சிதப ஸுரை:குங்குமை: பார்த்டிவைரேபி:இதானீ மர்ச்சியதே மயா. கேதாரேஸ்வராய புஷ்பை பூஜயாமி.



இந்திராதி அஷ்ட திக் லோக பாலக பூஜை:-



ஒவ்வொரு பெயருக்கும் உண்டான மந்திரம் சொல்லி புஷ்பம் அக்ஷதை சேர்க்கவும்.





இந்திரன்-கிழக்கில்--ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் இந்திரம் திக்பாலகம் த்யாயாமி ஆவாஹயாமி.



அக்னி- தென் கிழக்கில்-

--ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம்அக்னிம் திக் பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.



யமன் தெற்கில் --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் யமம் திக் பாலகம் த்யாயாமி ஆவாஹ்யாமி.



நிருருதி தென் மேற்கில் --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் நிருருதிம் திக் பாலகம் த்யாயாமி ஆவாஹயாமி.



வருணன் மேற்கில் --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் வருணம் திக் பாலகம் த்யாயாமி ஆவாஹயாமி.



வாயு வட மேற்கில் --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் வாயும் திக் பாலகம் த்யாயாமி ஆவாஹயாமி.



குபேரன் வடக்கில் --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் குபேரம் திக் பாலகம் த்யாயாமி ஆவாஹயாமி.



ஈசானன் வட கிழக்கில் --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் ஈசானம் திக் பாலகம் த்யாயாமி ஆவாஹயாமி.



இந்த்ராதி அஷ்ட திக் பாலக தேவதாப்யோ நம: ரத்ன ஸிம்மாஸனம் ஸமர்ப்பயாமி; பாத்யம் ஸமர்ப்பயாமி; அர்க்கியம் ஸமர்ப்பயாமி; ஆசமணீயம் சமர்ப்பயாமி; ஸ் நாபயாமி; ஸ் நானாந்திரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி; வஸ்த்ர உத்தரீய யக்ஞோபவீத ஆபரணார்த்தம்



அக்ஷதான் ஸமர்ப்பயாமி; கந்தாந்தாரயாமி; கந்தஸ்யொபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி.அக்ஷதான் ஸமர்ப்பயாமி; புஷ்பானி ஸமர்ப்பயாமி; தூப மாக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; மஹா நைவேத்யம் கதலி பலம் நிவேதயாமி; தாம்பூலம் ஸமர்ப்பயாமி;



கற்பூர நீராஞ்சனம் ஸமர்ப்பயாமி; மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி; ஸர்வோபசாரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.



இந்திராதி அஷ்ட திக் பாலக தேவதா ப்ரஸாத ஸித்திரஸ்து.



பிறகு சிவபெருமானுக்கு தெற்கில் ப்ரஹ்மணே நம: என்று பிரம்மாவையும், வடக்கில் விஷ்ணவே நம: என்று விஷ்ணுவையும் நடுவில் கேதாரேஸ்வராய நம: என்று கேதாரேசுவரனையும் அக்ஷதை போட்டு த்யானிக்கவும்.



அங்க பூஜை:- மஹேஶ்வராயை நம: பாதெள பூஜயாமி; ஈஶ்வராய ஜங்கே பூஜயாமி; காம் ரூபாய நம: ஜானுனி பூஜயாமி; ஹராய நம: ஊரூ பூஜயாமி; த்ரிபுராந்தகாய நம: குஹ்யம் பூஜயாமி; பவாய நம: கடிம் பூஜயாமி; கங்காதராய நம: நாபிம் பூஜயாமி; மஹாதேவாய நம: உதரம் பூஜயாமி; பசுபதயே நம: ஹ்ருதயம் பூஜயாமி; பி நாகினே நம: ஹஸ்தான் பூஜயாமி;



ஶிவாய நம: புஜெள பூஜயாமி; ஶிதிகண்டாய நம: கண்டம் பூஜயாமி; விருபாக்ஷாய நம: முகம் பூஜயாமி, த்ரி நேத்ராய நம: நேத்ராணி பூஜயாமி; ருத்ராய நம: லலாடம் பூஜயாமி;

ஶர்வாய நம: ஶிர: பூஜயாமி; சந்திர மெளலயே நம: மெளலீம் பூஜயாமி; பஶுபதயே நம: ஸர்வாண் யங்கானி பூஜயாமி;



சிவ அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லி அர்ச்சனை செய்யவும்.



ஓம் ஶிவாய நம; ஓம் மஹேஸ்வராய நம: ஓம் ஶம்பவே நம: ஓம் பி நாகினே நம:

ஓம் சசி ஸேகராய நம: ஓம் வாம தேவாய நம: ஓம் விரூபாக்ஷாய நம: ஓம் கபர்தினே நம:



ஓம் நீல லோஹிதாய நம: ஓம் ஶங்கராய நம: ஓம் ஶூல பாணயே நம: ஓம் கட்வாங்கிணே நம: ஓம் விஷ்ணு வல்லபாய நம: ஓம் ஶிபிவிஷ்டாய நம: ஓம் அம்பிகா நாதாய நம:

ஓம் ஸ்ரீ கண்டாய நம: ஓம் பக்த வத்ஸலாய நம: ஓம் பவாய நம: ஓம் ஸர்வாய நம:



ஓம் த்ரிலோகேசாய நம: ஒம் ஶிதி கண்டாய நம: ஓம் ஶிவப்ரியாய நம: ஓம் உக்ராய நம: ஓம் கபர்தினே நம: ஓம் காமாரயே நம: ஓம் அந்தகாஸுர ஸூதனாய நம: ஓம் கங்காதராய நம: ஓம் லலாடாக்ஷாய நம: ஓம் கால காலாய நம: ஓம் க்ருபா நிதயே நம: ஓம் பீமாய நம;





ஓம் பரஶு ஹஸ்தாய நம: ஓம் ம்ருக பாணயே நம; ஓம் ஜடாதராய நம: ஓம் கைலாச வாஸினே நம: ஓம் கவசினே நம: ஓம் கடோராய நம: ஓம் த்ரிபுராந்தகாய நம: ஓம் வ்ருஷாங்காய நம: ஓம் வ்ருஷபாரூடாய நம: ஓம் பஸ்மோதூளித விக்ரஹாய நம:





ஓம் ஸாம ப்ரியாய நம: ஓம் ஸ்வர மயாய நம: ஓம் த்ரயீ மூர்த்தயே நம: ஒம் அநீஸ்வராய நம: ஓம் ஸர்வக்ஞாய நம: ஓம் பரமாத்மனே நம: ஓம் ஸோம சூர்யாக்னி லோசனாய நம:

ஓம் ஹவிஷே நம: ஓம் யக்ஞமயாய நம: ஓம் ஸோமாய நம: ஓம் பஞ்சவக்த்ராய நம:





ஓம் சதாசிவாய நம: ஓம் விஶ்வேஸ்வராய நம: ஓம் வீர பத்ராய நம: ஓம் கண நாதாய நம:

ஓம் ப்ரஜாபதயே நம: ஓம் ஹிரண்ய ரேதஸே நம: ஓம் துர்தர்ஷாய நம: ஓம் கிரீசாய நம;

ஓம் கிரிசாய நம: ஒம் அனகாய நம: ஓம் புஜங்க பூஷணாய நம: ஓம் பர்காய நம:





ஒம் கிரிதன்வனே நம: ஓம் கிரிப்ரியாய நம: அஒம் க்ருத்திவாஸஸே நம: ஓம் புராராதயே நம: ஓம் பகவதே நம: ஓம் ப்ரமதாதிபாய நம: ஓம் ம்ருத்யஞ்ஜயாய நம: ஓம் ஸூக்ஷ்ம தனவே நம: ஓம் ஜகத்வ்யாபினே நம: ஓம் ஜகத் குரவே நம: ஓம் வ்யோம கேசாய நம:





ஓம் மஹா ஸேன ஜனகாய நம: ஓம் சாருவிக்ரமாய நம: ஓம் ருத்ராய நம: ஓம் பூதபதயே நம: ஓம் ஸ்த்தாணவே நம: ஓம் அஹிர்புத்ன்யாய நம: ஓம் திகம்பராய நம: ஓம் அஷ்ட மூர்த்தயே நம: ஓம் அனேகாத்மனே நம: ஓம் ஸாத்வீகாய நம: ஓம் ஶுத்த விக்ரஹாய நம:





ஓம் ஶாஶ்வதாய நம: ஓம் கண்டபரஶவே நம: அஜாய நம: ஓம் பாஶவிமோசகாய நம: ஓம் ம்ருடாய நம: ஓம் பஶுபதயே நம: ஓம் தேவாய நம: ஓம் மஹாதேவாய நம: ஓம் அவ்வயாய நம: ஓம் ஹரயே நம: ஓம் பூஷதந்த பிதே நம: ஓம் அவ்யக்ராய நம: ஓம் ஹராய நம:





ஓம் தக்ஷாத்வரஹராய நம: ஓம் பக நேத்ரபிதே நம: ஓம் அவ்யக்தாய நம: ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம: ஓம் ஸஹஸ்ர பதே நம: ஓம் அபவர்க ப்ரதாய நம: ஓம் அனந்தாய நம: ஓம் தாரகாய நம: ஓம் பரமேஸ்வராய நம:



தோரக்ரந்தி பூஜை:-



ஶிவாய நம: ப்ரதம க்ரந்திம் பூஜயாமி; வாஹாய நம: த்விதீய க்ரந்திம் பூஜயாமி.

மஹா தேவாய நம: த்ருதீய க்ரந்திம் பூஜயாமி; வ்ருஷபத்வஜாய நம: சதுர்த்த க்ரந்திம் பூஜயாமி; கெளரீஶாய நம: பஞ்சம க்ரந்திம் பூஜயாமி; ருத்ராய நம; ஷஷ்டம க்ரந்திம் பூஜயாமி.







பஶுபதயே நம: ஸப்தம க்ரந்திம் பூஜயாமி; பீமாய நமள் அஷ்டம க்ரந்திம் பூஜயாமி.

த்ரியம்பகாய நம: நவம க்ரந்திம் பூஜயாமி; நீல லோஹிதாய நம: தசம க்ரந்திம் பூஜயாமி.

ஹராய நம: ஏகாதச க்ரந்திம் பூஜயாமி; ஸ்மரஹராய நம: த்வாதச க்ரந்திம் பூஜயாமி;





பவாய நம: த்ரயோதச க்ரந்திம் பூஜயாமி; ஶம்பவே நம: சதுர்தச க்ரந்திம் பூஜயாமி;

ஸர்வாய நம: பஞ்சதச க்ரந்திம் பூஜயாமி; ஸதாசிவாய நம: ஷோடதச க்ரந்திம் பூஜயாமி

ஈஶ்வராய நம: ஸப்ததச க்ரந்திம் பூஜயாமி; உக்ராய நம: அஷ்டாதச க்ரந்திம் பூஜயாமி.





ஸ்ரீ கண்டாய நம: ஏகோனவிம்ச க்ரந்திம் பூஜயாமி; நீலகண்டாய நம: விம்ஸதி தம க்ரந்திம் பூஜயாமி; கேதாரேஸ்வராய நம: ஏகவிம்ஶதிதம க்ரந்திம் பூஜயாமி.



கேதாரேஸ்வராய நம; நாநா வித பரிமள பத்ர புஷ்பானி ஸமர்ப்பயாமி.



தூபம்:- தஶாங்க தூபமுக்யஶ்ச அங்கார வினிவேஶித தூபஸ் ஸுகந்தை ருத்பன்னஹ த்வாம் ப்ரீணயது சங்கர கேதாரேஸ்வராய நம: தூபம் ஆக்ராபயாமி.



தீபம்:- யோகீனாம் ஹ்ருதயஷ்வேவ ஜ்ஞாத தீபாங்குரோஹ்யஸி பாஹ்ய தீபோ மயா தத்த: க்ருஹ்யதாம் பக்த கெளரவாத்.கேதாரேஸ்வராய நம: தீபம் தர்ஶயாமி.



நைவேத்யம்:- த்ரைலொக்யமபி நைவேத்யம் ந தே த்ருப்திஸ் ததா பஹி; நைவேத்யம் பக்த வாத்ஸல்யாத் க்ருஹ்யதாம் த்ரியம்பக த்வயா. கேதாரேஸ்வராய நம: மஹா நைவேத்யம் நிவேதயாமி.



தாம்பூலம்:- நித்யானந்த ஸ்வரூபஸ் த்வம் யோகிஹ்ருத் கமலேஸ்தித: கெளரீஶ பக்த்யா மத் தத்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கேதாரேஸ்வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி



அர்க்கியம் க்ருஹான பகவன் பக்த்யா தத்தம் மாஹேஸ்வர ப்ரயஸ்சமே ம நஸ்துஷ்டிம்

பக்தானாம் இஷ்ட தாயக. கேதாரேஸ்வராய நம: அர்க்கியம் ஸமர்ப்பயாமி.



கற்பூரம்:- த்வேஶ சந்திர ஶங்காஶம் ஜ்யோதி: ஸூர்யமிவோதிதம். பக்த்யா தாஸ்யாமி கற்பூர நீராஞ்சனம் இதம் சிவே. கேதாரேஸ்வராய நம: கற்பூர நீராஞ்சனம் தர்சயாமி.



பூதேச புவனாதீஸர்வ தேவாதிபூஜித ப்ரதக்ஷிணம் கரோமித்வாம் வ்ரதம் மே ஸபலம் குரு.



ஹர ஶம்போ மஹாதேவ விஶ்வேஶாமர வல்லப ஶிவ ஶங்கர ஸர்வாத்மன் நீலகண்ட நமோஸ்துதே. கேதாரேஸ்வராய நம நமஸ்காரான் ஸமர்ப்பயாமி.



ப்ரார்த்தனை:- அபீஷ்ட ஸித்திமே குரு ஶிவாவ்யய மஹேஸ்வர. பக்தானாம் இஷ்ட தானார்த்தம் மூர்த்திக்ருத களேபர. கேதார தேவ தேவேச பகவன் அம்பிகாபதே ஏக்விம்ஶத்தினே தஸ்மின் ஸூத்ரம் க்ருஹ்ணாம் யஹம் ப்ரபோ.



தோரத்தை எடுத்து அணிதல்:- ஆயுஶ்ச வித்யாம் ச ததா ஸுகம் ச ஸெளபாக்கிய ம்ருத்திம் குரு தேவ தேவ. ஸம்ஸார கோராம்புனிதெள நிமக்னம் மாம் ரக்ஷ கேதார நமோ நமஸ்தே.



வாயன ப்ரதிமா தானம்:- கேதார: ப்ரதிக்ருஹ்ணாதி கேதாரோவை ததாதி ச .கேதாரஸ் தாரகோபாப்யாம் கேதாராய நமோ நம: கேதார ப்ரதிமா யஸ்மாத் ராஜ்ய ஸெளபாக்கிய வர்த்தனி தஸ்மா தஸ்யா ப்ரதானேன மமாஸ்து ஸ்ரீரசஞ்சலா. தக்ஷிணை தாம்பூலத்துடன் கேதாரேஸ்வர ப்ரதிமையை அளித்திடவும்.



ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்ப்பணமஸ்து. ஆசமனம்.செய்யவும்
 
Back
Top