Hindu Tamil Quiz -3

Status
Not open for further replies.
dancsing+ganesh.gif


15 முதல் 20 மதிப்பெண்கள் பெற்றால் சிறப்புத் தேர்வு
10 முதல் 15 வரை- நல்ல மதிப்பெண்கள்
5 முதல் 10 வரை- பரவாயில்லை
ஐந்துக்கும் கீழே-- நிறைய புத்தகம் படித்துவிட்டு வாருங்கள்.


1.கணபதியின் பெயருடைய ஊர், பெரிய குடைவரை கணபதி உருவம் வழிபடப்படும் ஊர். அது எந்த ஊர்?

2.முருகனின் அறுபடை வீடுகள் எங்கே இருக்கின்றன?

3.மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி---------- என்ன?

4.மதுரை கோவிலில் தல விருட்சம் என்ன?

5.யானை சுற்றிவந்த நிகழ்ச்சியை பெயரிலேயெ உடைய ஊர் எது?

6.வேதத்தின் பெயரையுடைய ஊர்?

7.யானையும் சிலந்தியும் வழிபட்ட ஊர் எது?

8.ரமண மகரிஷி, அருணகிரிநாதர் ஆகியோருடன் தொடர்புடைய தலம் எது?

9.கோணியம்மன் பெயரில் உடைய ஊர்?

10.சனீஸ்வரனுக்கு பெரிய வழிபாடு நடக்கும் ஊர் எது?

11.தோணிபுரத்தின் தற்போதைய பெயர் என்ன?

12.குமரியில் கூடும் முக்கடல்கள் யாவை?

13.தமிழ்நாட்டில் பெரிய அனுமன் சிலைகள் உடைய 3 ஊர்களின் பெயர்கள் தெரியுமா?

14.துர்க்கைக்கு மிகவும் உகந்த பூ என்ன?

15.சிவனுக்கும் பெருமாளுக்கும் பிடித்த இலைகள் எவை?

16.பெரிய தங்கக் கோவில் உடைய தமிழ்நாட்டு நகரம் எது?

17.கும்பகோணத்தில் உள்ள குளத்தின் பெயரையும் திருவாரூரில் உள்ள குளத்தின் பெயரையும் சொல்லுங்கள்.

18.பழனியிலுள்ள முருகனுக்கு என்ன பெயர்?

19.கபாலீஸ்வரர் கோவில் எங்கே இருக்கிறது?

20.தமிழ்நாட்டில் வைஷ்ணவர்களும் சைவர்களும் கோவில் என்று அழைக்கும் சிறப்புடைய இரண்டு ஊர்கள் எவை?


Answers: விடைகள்: 1. பிள்ளையார்பட்டி 2. பழனி, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், திருச்சந்தூர், திருத்தணி, சுவாமிமலை 3. காசி விசாலாட்சி 4.கடம்ப மரம் 5.கரி வலம் வந்த நல்லூர் 6.வேதாரண்யம் 7. திருவானைக்கா 8. திருவண்ணாமலை 9. கோயமுத்தூர் 10. திருநள்ளாறு 11.சீர்காழி 12. இந்து மகா சமுத்திரம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் 13. சுசீந்திரம், நாமக்கல், நங்கநல்லூர்(சென்னை) 14. அரளிப் பூ 15. சிவனுக்கு வில்வ இலை, விஷ்ணுவுக்கு துளசி இலை 16. வேலுர் அருகில் ஸ்ரீபுரம் 17.கும்பகோணம்-மகாமகம், திருவாரூர்-கமலாலயம் 18.தண்டாயுதபாணி 19. மயிலாப்பூர், சென்னை 20.வைஷ்ணவர்களுக்கு ஸ்ரீரங்கம், சைவர்களுக்கு சிதம்பரம்
 
Status
Not open for further replies.
Back
Top