தொகுத்தவர் : ச. சுவாமிநாதன்
பத்து கேள்விகளுக்கு மேல் சரியான விடை தந்தால் மிகச் சிறப்பு
8 முதல் 10 பதில்- நல்ல மதிப்பெண்
5 முதல் 10 –பரவாயில்லை
ஐந்துக்குக் கீழே- வைஷ்ணவ நூல்களைப் படியுங்கள்
உங்களுக்கு ஆழ்வார்களைத் தெரியுமா?
1)பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒரே ஒருவர்தான் பெண். யார் அவர்?
2)முதல் மூன்று ஆழ்வார்களும் ஒரே இடத்தில் சந்தித்துப் பாடினார்கள். யார் அவர்கள்?
3)புளியமரத்துடன் தொடர்புடைய ஆழ்வார் யார்?
4)வாரணம் ஆயிரத்தை பாடியவர் யார்?
5)வைணவர்களுக்கு உணவளிப்பதற்காக வழிப்பறிகளில் ஈடுபட்ட ஆழ்வார் யார்?
6)“இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்” என்று கூறிய ஆழ்வார் யார்?
7)ராமாயண உபன்யாசத்தைக் கேட்டு மெய்மறந்து போய் உடனே தன் படைகளை அனுப்ப உத்தரவிட்ட ஆழ்வார் யார்?
8)மதுரை பாண்டிய மன்னருடன் தொடர்புடைய ஆழ்வார் யார்?
9)விப்ரநாரயணன் என்ற இயற் பெயருடைய ஆழ்வார் யார்?
10)பாணர் குலத்தில் வந்துதித்த ஆழ்வார் யார்?
11)சீடனை மன்னன் அவமதித்ததால் கோவிலிலிருந்து பெருமாளையே வெளியே போக வைத்த ஆழ்வார் யார்?
12)ஆழ்வார்களின் பாசுரங்கள் அடங்கிய நூலின் பெயர் என்ன?
13)தெலுங்கு மொழியில் ஆண்டாளின் கதையை எழுதிய மன்னன் யார்? அந்த நூலின் பெயர் என்ன?
14)நம்மாழ்வாரை ஆசாரியராக ஏற்ற ஆழ்வார் யார்?
விடைகள்:
1.ஆண்டாள் 2.பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
3.நம்மாழ்வார் 4.ஆண்டாள் 5.திருமங்கை ஆழ்வார் 6. தொண்டரடிப்பொடி ஆழ்வார் 7. குலசேகர ஆழ்வார் 8. பெரியாழ்வார் 9. தொண்டரடிப்பொடி ஆழ்வார் 10. திருப்பானாழ்வார் 11.திருமழிசை ஆழ்வார் 12. திவ்வியப் பிரபந்தம் 13. கிருஷ்ண தேவ ராயர்; நூலின் பெயர் ஆமுக்த மால்யதா 14.மதுரகவி ஆழ்வார்